Lord Siva

Lord Siva

Thursday, 22 September 2011

காமசூத்திரத்தில் சொல்லப்பட்டுள்ள காதல் மயக்கம் தரும் 5 வகைப் பூக்கள்

காமசூத்திரத்தில் சொல்லப்பட்டுள்ள காதல் மயக்கம் தரும் 5 வகைப் பூக்கள்

நமது முன்னோர்கள், எதைச் செய்தாலும் சாஸ்திர சம்பிரதாயங்கள் பார் ப்பதுண்டு என்று முந்தைய பகுதியி ல் அறிந்தோம். அது போலவே அவ ர்கள், தங்கள் மனதையும் நன்றாக ப் பழக்கி இருந்தார்கள். அதனால் செக்சைப் பொறுத்தவரையில், அதில் உள்ள நுணுக்கங்களையும் கற்று தேர்ந்திருந்தார்கள்.
காமசூத்திரத்தில் சொல்லப்பட்டுள் ள வசியச்சக்கரம், ஏ, ஐ, அ, இ, உ- என்ற 5 எழுத்துக்களைக்கொண்டது. மேற்படி எழுத்துக்கள் அடங்கிய சக்க ரத்தை ஒருவர் தன் கண்களால் கரும்பு வில் லாக பாவனை செய்ய வேண் டும். பாவனை செய்து நாயகியின் மார்பு, முலை, கண், உச்சி, நிதம்பம் போ ன்ற இடங்களில் முறையே ஒவ் வொரு எழுத்தாக எழுதி மனதா லே சாஸ்திரம் செய்து அம்பு எய்து வது போல எண்ணினால், நாயகி மனம் மகிழ்வாள்.
மன்மதனுக்கு 5 மலர் அம்புகள் உ ண்டு. அவை, தாமரை, மாம்பூ, அசோகம், முல்லை, நீலோற் பல ம். இதையே ஒரு பெண்ணின் நெஞ்சில் தாமரை இருப்பது போன்று ம், விழிகளில் அசோக மலர் இருப்பது போன்றும், தலையில் முல்லைப் பூ இருப்பது போன்றும் பாவனை செய் து, தனது கண்களாகிய அம்பால் எய்து வார் என, மதனநுல் ஆய்ந்தோர் கூறு வார்கள். இதனால் இந்த 5 மல ர்களும் மக்களை வருத்தும் என்பார் கள்.
மதனநூல் கற்றோர், தாமரைப் பூவா ல், பெண்களுக்கு இன்பம் ஏற்படும், மாம்பூவால் கண்களுக்கு துன்பம் ஏற் படும், முல்லைப்பூ மயக்கத்தை அளி க்கும் என்று கூறுவார்கள். நீலோற் பல மலர், உயிர் போவது போல தன் நிலையைக் கெடுத்து மயக்கம் தரும். அந்த 5 வகை அம்புகள் ஒன்றையொன்று மிஞ்சி மன்மத விகாரத் தை, ஆண், பெண்ணின் மனத்தில் எழுப்புத் தன்மை கொண்டதாகும் என வும் கூறப்படுகிறது.
இப்படியே காமன் தனக்குள் மலர் அம்புகள் எய்து கொண்டி ருப்பதாக எண் ணிக்கொண்டி ருந்தால், கணவன், மனைவி க்கு இன்பம் பெருகும் எனவும் காமசாஸ்திரம் கூறுகிறது. இதனால் சிறந்த மகப்பேறும் கிடைக்கும் எனவும் அது சொல்கிறது.

No comments:

Post a Comment