Lord Siva

Lord Siva

Tuesday, 6 September 2011

சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு காயங்கள் சீக்கிரம் ஆறாதது ஏன்?

சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு காயங்கள் சீக்கிரம் ஆறாதது ஏன்?

பொதுவாகவே சர்க்கரை வியாதிக்காரர்களின் இரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிக மாகவும் அதிக நாட்களாக வும் இருந்தால் நுண்ணிய, மெல்லிய, சிறிய, பெரிய என இரத்தக் குழாயில் பல விதமா ன பாதிப்புகள் ஏற்படக்கூடும். இதனால் நரம்புகள், சிறுநீரக ங்கள், கண் கள் ஆகிய உறுப்புகள் பாதிப்படைகின்றன.
இதில் பெருமளவு பாதிக்கப்படுவது நரம்பு பகுதிகளே. தொடு உணர்வு, அழுத்துகின்ற உணர்வு, வெப்பமானது எது? குளிர் ச்சியானது எது? என அ னைத்துவிதமான உணர் வுகளையும் நமக்கு உண ரச் செய்யும் நரம்பு பகுதி கள் பாதிக்கப்படுவதால், சர்க்கரை வியாதிக்காரர் கள் உணர்விழந்த நிலை க்குத் தள்ளப்படு கின்ற னர்.
இதனால் அனைத்து வித மான உணர்வு பாதிப்புகளும் ஏற்பட ஆரம்பிக்கிறது. எனவே தான் டயாபடீஸ்காரர்களின் காலில் சிறிய கல்லோ, முள் ளோ குத்தி காயங்கள் ஏற்பட்டால் கூட வலியும் பாதிப்பும் உணர முடியாமல் போய் விடுகிறது. மேலும் இர த்தக் குழாயில் பாதிப்பு ஏற்பட்டு கால் பாதங்களு க்குப் போதுமான இரத் தம் செல்லாமல் தடைப ட்டு நிற்கும். இதனால் தான் சிறிய காயம் ஏற் பட்ட டயாபடீஸ்கார ருக்கு அதிகளவு சர்க்க ரை இரத்தத்தில் இருப்ப தால் கிருமி தயக்க மின்றி உள்ளே நுழைந்து உடனடி தாக்கு தலுக்கு ஆளாகின் றார்.
அதோடு, சர்க்கரை வியாதி க்காரர்களுக்கு நோய் எதிர் ப்புத் திறன் குறைந்து கொ ண்டே இருப்பதால் சிறிய கா யம் ஏற்பட்டாலும்கூட கிரு மிகளின் பாதிப்பு அதிகமாகி காயத்தையும் சீக்கிரம் ஆற விடாமல் செய்து விடுகி றது. இந்தப் பாதிப்பு ஆரம்ப த்தில் டயாபடீஸ்காரர்களுக் கு உணரமுடியாமல் இருந் தாலும் ‘காலை’யே கட் பண் ணி எடுக்கக்கூடிய அளவுக்கு கொ ண்டு போய் விட்டுவிடும். எனவே, டயாபடீஸ்காரர்கள் அவரவர் களுக்கு மருத்துவர் வழங்கிய ஆலோசனையின்படி உணவுக் கட்டுப்பாடு, உடற் பயிற்சி என இரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிக் காமல் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொண்டால் பிரச்சினை இல்லை. எனவேதான் டயாபடீஸ் காரர்கள் சிறிய புண்ணோ காயங்களோ ஏற்பட்டால் மருத்துவரை அணுகி ஆலோசனை பெறவேண்டும் என்று அறிவு றுத்தப் படுகின்றனர்.

No comments:

Post a Comment