Lord Siva

Lord Siva

Friday, 9 September 2011

காஜலின் பல்டிக்கு கடுப்பான பத்திரிகை ஆசிரியர்!


   காஜலின் பல்டிக்கு கடுப்பான பத்திரிகை ஆசிரியர்!

E-mail
பிரபல பேஷன் பத்திரிகையான FHM-ன் செப்டம்பர் இதழுக்கு டாப்லெஸ் போஸ் கொடுத்து தென்னிந்திய திரையுலகை அதிர்ச்சியில் ஆழ்த்தினார் காஜல் அகர்வால். ஆனால் தற்போது
" FHM பத்திரிக்கைக்கு நான்அந்த மாதிரி போஸ் கொடுக்கவில்லை. அவர்களே என் போட்டோவை அப்படி மாதிரி மாற்றி இருக்கிறார்கள். அவர்கள் எனக்கு ஈமெயிலில் அனுப்பிய புகைப்படங்கள் என்னிடம் உள்ளன. அதில் எதிலுமே அந்த மாதிரி புகைப்படம் இல்லை. " என்று முழுப்பூசனிகாயை சோற்றில் மறைத்து பெரிய பல்டியாக அடித்துள்ளார்.
ஆனால் எஃப்.ஹெச்.எம் பத்திரிக்கையின் ஆசிரியர் கபீர் ஷர்மாவோ " எங்கள் பத்திரிக்கையில் வரும் பிரபலங்களின் புகைப்படங்கள் எதையும் நாங்கள் மாற்ற மாட்டோம். அப்படியே தான் வெளியிடுவோம். காஜல் அகர்வால் இப்படி மறுப்பது கூறியிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. ஆகஸ்ட் 18-ஆம் தேதி அந்த போட்டோ ஷூட் நடந்தது. அவர் மறுபடியும் மறுத்தால் அனைத்து புகைப்படங்களையும் இணையத்தில் வெளியிடுவோம் " என்று கடுப்பான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
தென்னிந்தியத் திரையுலகில் முன்னணி ஹீரோக்களுடன் நடித்து வருவதால் இந்த பிரச்னையால் தனது திரையுலக வாழ்க்கை பாதிக்குமோ என அச்சத்தில் இருக்கிறார் காஜல். பாலிவுட்டில் வாய்ப்புகளுக்கு தூண்டில் போடவே காஜல் டாப்லெஸ் டெக்னிக்கை கையிலெடுத்திருப்பதாக வறுத்து எடுக்கிறது பாலிவுட் மீடியா. தென்னிந்திய மீடியாவோ இதை பெரிதாக கண்டு கொள்ளவில்லை. இந்நிலையில் காஜல் இந்த அலங்கோலத்தைக் கேள்விப்பட்ட சூர்யாவும், அதன் இயக்குனர் கே.வி.ஆனந்தும் செம கடுப்பாகியிருகிறார்களாம்.
ஏற்கெனவே நான் வடக்கத்திப்பெண் என்னை தென்னிந்திய நடிகை என்று அழைக்காதீர்கள் என்று வம்புபேசி வாங்கி கட்டிக் கொண்டார். மாற்றான் படத்திலிருந்து காஜல் கடைசி நேரத்தில் மாற்றப்படலாம் என்கிறார்கள் சூர்யா வட்டாரத்தில்.
சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள அடடைப்படம்


No comments:

Post a Comment