Lord Siva

Lord Siva

Tuesday, 27 September 2011

கொலஸ்டிராலும் இதய நோயும்








கொலஸ்டிராலைப் பற்றி தெரிந்து கொள்வதற்கு முன், லிப்பிட்ஸ் [lipids] என்றால் என்ன என்று பார்ப்போம்.நம் உடம்பில் உள்ள எல்லாவிதமான கொழுப்புகளுக்கும் பொதுவான ஒரு பெயர் தான் லிப்பிட்ஸ்[lipids].

எப்படி தண்ணீரும் எண்ணெய்யும் ஒன்றாக கலக்காதோ அது போல் லிப்பிட்ஸும்[எண்ணெய்],ரத்தமும் [தண்ணீர்] ஒன்றாக கலக்காது.அதனால் லிப்பிட்ஸ்புரதத்துடன்[protein]கலந்து லிப்போபுரோட்டீனாக[lipoprotein]மாறி ரத்ததில்கலந்துஅது தன்செயலைசெய்கறது.சரி.இப்ப,இங்கு,லிப்பிட்ஸுனாலும்,லிப்போபுரோட்டின் என்றாலும் ஒரே அர்த்தம் தான்.
இனி ரத்தத்தில் இருக்கும் லிப்பிட்ஸ் என்னென்ன என்று பார்ப்போம்.ரத்தத்தில் பல வகையான லிப்பிட்ஸ் இருக்கிறது.அதில் முக்கியமானதுஎன்றபார்த்தால்கொலஸ்டிராலும்.டிரைகிலிசரைட்ஸும்[triglycerides] தான்.முதலில் கொலஸ்டிராலைப் பற்றி தெரிந்து கொள்வோம்.
கொலஸ்டிரால் என்றால் என்ன? அது எங்கிருந்து வருகிறது என்று பார்ப்போம். கொலஸ்டிரால் என்பது ரத்தத்தில் கலந்திருக்கும் ஒரு வகை லிப்பிட்[lipid].இதை இரண்டு வகையாக பிரிக்கலாம்.முதலில் வருவது லோடென்சிட்டி லிப்போ ப்ரோட்டீன்[low density lipoprotein-LDL] அல்லது [bad ].இதுதான் நம் ரத்த குழாய்களில் படிந்து ஆத்திரோஸ்கிலிரோசிஸுக்கு [atherosclerosis] வழிவகுக்கிறது.
அடுத்து வருவது High density lipoprotein-[HDL]அல்லது .[GOOD CHOLESTEROL]இவ்வகை ,ரத்தக் குழாய்களில் கொழுப்பு படிவதை தடுத்து ஆத்திரோஸ்கிலிரோசிஸிலிருந்து நம்மை காக்கிறது.
கொலஸ்டிரால் எங்கிருந்து வருகிறது?
முக்கியமான திசுக்கள் மற்றும் ஹார்மோன்களின் உற்பத்திக்கு கொலஸ்டிரால் அதி முக்கியமாக தேவைப்படுகிறது. நம் உடலே கொலஸ்டிராலை உற்பத்தி செய்யும் திறன் பெற்றிருப்பதிலிருந்து இதன் முக்கியத்துவத்தை உணரலாம்.இப்படி நம் உடலினுள்ளே தயாராகும் கொலஸ்டிராலை endogenous கொலஸ்டிரால் என்கிறோம்.

வெளியிலிருந்து கிடைக்கும் கொலஸ்டிராலை ,அதாவது நம் உணவிலிருந்து கிடைக்கும் கொலஸ்டிராலை exogenous cholesterol என்கிறோம்.இவ்வகை முக்கியமாக வெண்ணெய்,நெய், மற்றும் பொருட்கள்,இறைச்சி வகைகள்,முட்டை[animal origin],மற்றும் தேங்காய்,எள்,கடலை,சூரியகாந்தி எண்ணெய் வகைகளிலிருந்தும் கிடைக்கிறது.[plant origin].

பொதுவாக நம் உடலின் ஆரோக்கியத்திற்கு கொழுப்பு சத்தானது சிறிதளவே தேவைப் படுகிறது.ஆனால் தவறான நமது உணவுப் பழக்க வழக்கத்தால் ,தேவைக்கு அதிகமான கொலஸ்டிரால் நம் ரத்தத்தில் கலந்திருக்கிறது. இந்த அதிகப்படியான கொலஸ்டிரால் தான் நம் ரத்தக்குழாய்களின் சிவர்களில் படிந்து,ஆத்திரோஸ்கிலிரோசிஸில் ஆரம்பித்து ,coronary artery disease ல் முடிந்து நமக்கு எமனாகிறது.

நம் ரத்தத்தில் கலந்திருக்கும் அதிகப்படியான கொலஸ்டிரால் நம் உணவிலிருந்து தான் வருகிறது.அதனால் நம் உணவில் கொழுப்புச்சத்தை குறைத்தால் ,நம் ரத்தத்தில் உள்ள கொலஸ்டிராலின் அளவும் குறைந்து ஆரோக்கியமான இதயத்துடன் வாழலாம்.

No comments:

Post a Comment