பொதுவாக
மொடாக்குடியர்கள் தங்களால், படுக்கையறையில் திறம்பட செயலாற்ற
முடியவில்லையே என துவண்டு போய் விடுவார்கள். ஆனால், அளவோடு மது
குடிப்பதால், பாலுறவு புணர்ச்சியில் தீவிரம் இன்பம் கொள்ள முடியும் என்று
ஆஸ்திரேலியாவில் நடத்தப்பட்ட ஆய்வில் தெரிய வந்துள்ளது.
அதே நேரத்தில் மது அருந்துவதால் உடல் நலத்திற்கு கேடு விளையும் என்றும் ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.
பொதுவாக குடிப்பழக்கம் உள்ள ஆண்கள் படுக்கை அறையில் துவண்டு போய்விடுவார்கள் என்பது உலகறிந்த உண்மை.
சுமார் ஆயிரத்து 580 ஆண்களின் செக்ஸ் வாழ்க்கை குறித்து ஆய்வாளர்கள் கேள்விகளை கேட்டு விவரங்களை சேகரித்துள்ளனர்.
குடிப்பழக்கமே
இல்லாதவர்களை விடவும் அளவோடு குடித்த ஆண்கள், படுக்கை அறையில் தங்களின்
வாழ்க்கைத் துணையை தீவிரமாக திருப்திப்படுத்தியது தெரிய வந்தது.
அளவுக்கு அதிகமாக மது குடிக்கும் மொடாக் குடியர்களின் செக்ஸ் வாழ்க்கைகூட திருப்திகரமாக இருப்பதாகத் தெரிய வந்துள்ளது.
என்றாலும், அதிகமாகக் குடிப்பது உடல் நலத்தைக் கெடுக்கும் என்று ஆய்வுக் குழுவின் தலைவர் கிம் சூ கூறியுள்ளார்.
குடிப்பழக்கத்தை
கைவிட்டவர்கள்தான் படுக்கை அறையில் அதிகம் துவண்டு விடுவதாக அந்த ஆய்வு
கூறுகிறது. நம்மால் முடியாது என்ற அச்சம் அவர்கள் மனதில் இருப்பதுதான் இந்த
நிலைக்கு காரணம் என்று ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது.
|
No comments:
Post a Comment