பக்தியின் வகைகள்
Posted on September 3, 2011 by muthukumar
பல்வகையான
பக்தியின் மூ லம் முக்தியடைந்த அடியா ர்களின் வரலாற்றிலிருந்து நாம்
பக்தியின் மார்க்கங் களை அறியலாம். சாஸ்திர ங்களும் கடவுள் மீது நாம் கொள்ள
வேண்டிய பக்தி யை வகைப்படுத்தியுள்ளன. அவற்றை நாமும் தெரிந்து கொள்வோம்.
ச்ரவணம்: கேட்டல் அதாவது பல நிலைகளில் பல பெரியோர் களின் மூலம் இறைவனைப்பற்றி கேட்டு அறிந்து அவனிடம் பக்தி கொண்டொழுகுவது சரவணம் ஆகும்.
கீர்த்தனம்: இறைவனின் புகழ்பா டும் பொருட்டு கீர்த்தனங் களை உருவாக்கி அதன் மூலம் இறை புகழ் பாடித் தொழுவது கீர்த்தனம்.
ஸ்மரணம்: இறைவன் நம் மன தை படைத்த பயன் நிறை வேறும் வகையில் எப்போதும் அவனைப் பற்றி நினைத்துருகுவது ஸ்மர ணம்
பாதஸேவனம்: இறைவனின் திருவடிகளை விட்டு நீங்காது குற்றமற்ற தூய உணர்வுடன் கைங்கர்யம் செய்தல் பாதஸே வனமாகும்.
வந்தனம்:
இந்த சரீரம் இறைவன் கொடுத்தது எ னவே உடலோடு என் உள்ளத்தையும் உனக்
களித்தேன் எனும்படி கீழே விழுந்து சாஷ்டாங் கமாய் இறைவனை வண ங்கி எழுதல்.
தஸ்யம்: எப்போதும் இறைவனுக்கு தம்மை அடிமையாய் கருதி திருப்பணிவிடை செய்தல் தஸ்யம் ஆகும்.
ஸக்யம்: அடியவன் இறை வனை தம் தோழனாய், தம் அன்பிற்குரியவனாய் கருதி நேசத்துடன் பக்தி செய்வது.
ஆத்ம நிவேதனம்: இந்த ஆத் மாவை அவனுடையது என இறைவனுக்கு அன்ன மாய் நிவேதனம் செய்து பூஜிப்பது.
நன்றி- திருமதி உஷா ராம நாதன் அவர்கள்
No comments:
Post a Comment