குழந்தை மருத்துவம்: 3 முதல் 8 வயது வரை..
Posted on September 27, 2011 by muthukumar
கருவில் வளரும் குழந்தை சீராக வளர தாயின் உணவு மு றை சீராக இருக்கவேண்டும். அது போல் மனமும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும்.
மேலும்
குழந்தை பிறந்து அதற்கு தாய்ப்பால் கொடுக்கும் வரை தா யின் உணவு முறையைப்
பொறு த்தே குழந்தையின் ஆரோக்கியம் இருக்கும். ஆனால் குழந்தை வள ர்ந்து 3
வயது க்கு மேல் தான் உட ல் வளர்ச்சியும், மன வளர்ச்சி யும் அதிகரிக்க
ஆரம்பிக்கும். எலும்புகள் வலுவடைய ஏற்ற தருணமு ம் இதுதான்.
மூன்று வயதுக்கு மேல் தான் குழந்தைகண்ணால் காண்பதை உட்கிரகித்துக் கொள்ளும். நன்றாகப் பேசும் பருவமும் இது தான்.
இந்த வளரும் வயதில் உள்ள குழந்தைகள் எப்போதும் துறு துறுவென்று ஓடிக்கொ ண்டே இருக்கும். ஒரு இடத்தில் உட்கார வை த்து உணவு கொடுப்பது என்பது மிகவும் கடினமா னதாக இருக்கும்.
இதனால்
சில தாய்மா ர்கள் அந்த குழந்தையின் பின்னாடியே ஒடி வித விதமான விளையாட்டு
காட்டி, வாயில் உணவு வைப்பது அந்த குழந்தைக்குத் தெரி யாமல் ஊட்டி விடு
வார்கள்.
இது தவறான செயலாகும். இப்படியே பழக்கப்படுத்தி விட் டால், நாட்கள் செல்லச் செல்ல ஊட்டிவிட்டால்தான் சாப்பிட முடியும்
என்ற நிலை க்கு குழந்தை வந்துவி டும். எனவே, குழந் தையை அனைவரு டனும்
அமர்ந்து சாப்பி டும் பழக்கத் தைக் கொண்டு வர வே ண்டும். தனக்கு பசித்
தால் தானே வந் து அமர்ந்து உணவு கேட் கும் வகையில் குழந்தையை பழக்
கப்படுத்த வேண்டும்.
இந்த
நேரத்தில்தான் குழந்தைக்கு நிதானமான எல்லா முழு வளர்ச்சியும் உண்டாகும்.
குழந்தை ஓடியாடி விளையாடுவ தால் உடல் வளர்ச்சி நன்றாக இருக்கும்.
மேலும், இந்த நேர த்தில் குழந்தைகள் தனக்குப் பிடித்த உண வை தேர்ந்தெ டுத்து உண்ணுபவர்களாக இரு ப்பார்கள்.
அதற்காக
ஒரே வித மான உணவுகளை தினமும் கொடுக்கக் கூடாது. அது உணவி ன்மீது
குழந்தைகளுக்கு ஒருவித வெறுப்பை உண்டாக்கி விடும். விதவிதமான உணவுகள்
குழந்தைகளுக்கு உண் ணும் விருப்பத்தை உண்டாக்கும்.
எனவே, இக்காலத்தில் குழந்தைகளுக்கு கொடுக்கப்படும் உணவானது,
அவர்க ளுக்கு பிடித்தமானதாக வும், வளர்ச்சிக்குத் தே வையான சத்துகளைக்
கொடுக்கக் கூடியதாகவு ம், வயிறு நிறையும்படி யும் இருப்பது அவசி யம்.
சத்தான உணவு என்ற வுடன் சிலர் வைட்டமின் மாத்திரை, டானிக் என பலவற்றை வாங்கிக் கொடுக்கிறார் கள்.
இது முற்றிலும் தவறான நடவடிக்கை ஆகும். குழந்தை க்குத் தேவையான வைட்டமின், மினரல், தாதுப் பொருட்கள் அனைத்தும் உணவின் மூலம் கிடைத்தால் தா ன் பக்க வி ளைவுகள் ஏதும் இல்லாத நீண்ட ஆரோக்கியம் கிடைக் கும்.
இயற்கையாகக்
கிடைக் கும் கீரை, காய்கறிக ளில் இத்தகைய சத்துக் கள் நிறைந்துள்ளன.
இவற்றை தவறாமல் குழந்தை களுக்கு உணவாகக் கொடு த்து வந்தால் அவர்களின்
வளர்ச்சி சீராக இருக்கும்.
ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது என்ற பழமொழி யின்படி,
இந்த ஐந்து வயதில் சாப்பிடக் கூ டிய உணவுதான் ஐம்ப தில் ஆரோக்கியத்தை க்
கொடுக்கும். இதில் குறைபாடு கண்டால் ஐம்பதில் ஆரோக்கிய த்திற்கு கேடு
உண்டா கும் என அறியலாம். தினமும் மதிய உண வில் முருங்கைக் கீரை,
ஆரைக்கீரை, தண்டுக்கீரை, கரிச லாங் கண்ணிக் கீரை, மணத்தக்காளிக் கீரை,
இவற்றில் ஏதா வது ஒன்றைக் கொடு க்க வேண்டும்.
சிறு
குழந்தைகளுக்குமுளை கட் டிய பயறு வகைகளை அவி த்து க் கொடுப்பதுடன்,
உருளைக் கிழங் கையும் மசித்துக் கொடுப்பது நல் லது. அதுபோல் காய்கறி சூப்
செய் து கொடுப்பது நல்லது.
இந்த
வயதில் சில குழந்தைகள் எவ்வளவு சாப்பிட்டாலும், உடல் தேறாமல் நோஞ்சானாகக்
காணப் படுவார்கள். இன்னும் சில குழந் கைள் சோர்வாகவும் புத்திக் கூர் மை
இல்லா மலும் இருப்பார்கள்.
இவர்களுக்கு
ஆரைக்கீரை – 1 கைப்பிடி
கொத்தமல்லி – சிறிதளவு
மணத்தக்காளிக்கீரை- 1 கைப்பிடி
கறிவேப்பிலை – சிறிதளவு
பூண்டு – 2 பல்
மிளகு – 5
சின்ன வெங்காயம் – 3
சீரகம்- 1 ஸ்பூன்
சோம்பு – 1 ஸ்பூன்
சேர்த்து
நன்கு கொதிக்க வைத்து சூப்பாக்கி வாரம் இரு முறை கொடுத்து வந்தால் இளைத்த
உடல் தேறுவதுடன், குழந்தைகள் வயிற்றுப் பூச்சி நீங்கும்.
thanks to vidhai2virutcham
No comments:
Post a Comment