Lord Siva

Lord Siva

Thursday 29 December 2011

நொறுக்கு தீனி பிடிக்குமா உயிரணு பாதிப்பு வரலாம்

நொறுக்கு தீனி பிடிக்குமா உயிரணு பாதிப்பு வரலாம்

Posted On Dec 29,2011,By Muthukumar
டிரான்ஸ் ஃபேட் எனப்படும் கொழுப்பு அதிகமுள்ள நொறுக்கு தீனிகளை சாப்பிடும் இளைஞர்களுக்கு விந்தணு பாதிப்பு ஏற்படக்கூடும் என்று அமெரிக்கா, ஸ்பெயின் நாடுகளின் ஆராய்ச்சி எச்சரிக்கிறது. இதுகுறித்து ஹார்வேர்டு பல்கலைக்கழகம், ஸ்பெயினின் முர்சியா பல்கலைக்கழகம் ஆகியவை இணைந்து நடத்திய ஆய்வில் வெளியான தகவல் வருமாறு:
ஊட்டச் சத்து உணவை சாப்பிட்டு வந்த 18 முதல் 22 வயதுக்கு உட்பட்ட இளைஞர்களைவிட ஜங்க் புட் எனப்படும் நொறுக்கு தீனி, சாட் வகைகளை அதிகம் சாப்பிட்டு வந்த இளைஞர்களுக்கு உயிரணு எண்ணிக்கை குறைந்தது ஆய்வில் தெரிய வந்தது. நொறுக்கு தீனி, சாட் வகைகளை தொடாத இளைஞர்களைவிட அவற்றை சாப்பிடும் இளைஞர்களில் உயிரணுக்கள் சரியாக இருந்தவர்களுக்கும் அவற்றின் ஊர்ந்து சென்று கரு உண்டாக்கும் வேகம் (மொபிலிடி) குறைவாக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. சரியான உடல் எடை, உடற்பயிற்சி பழக்கத்துடன் இருந்தவர்களிடமும் இது ஏற்பட்டது தெரிந்தது.
இவ்வாறு அந்த ஆய்வில் கூறப்பட்டது. இதே விஷயத்தில் ஜப்பானில் நடந்த ஆய்வும் இதையே தெரிவித்துள்ளது. 215 இளைஞர்களிடம் நடந்த சோதனைகளில் இது நிரூபணமானது. இங்கிலாந்தில் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் விஞ்ஞானிகள் நடத்திய ஆய்வில் டிரான்ஸ் ஃபேட் எனப்படும் கொழுப்பு அதிகமுள்ள கேக், பீட்சா, பர்கர், சாக்கோ டிரிங்க், சிப்ஸ், கேண்டி ஆகியவற்றை அதிகம் சாப்பிடும் இளைஞர்களுக்கு உயிரணு எண்ணிக்கை பாதிக்கலாம் என்று எச்சரிக்கப்பட்டது. தினசரி உணவில் 2 கிராம் டிரான்ஸ் ஃபேட் போதுமானது. ஆனால், இந்த நொறுக்கு தீனி, சாட் வகைகளில் அவை கூடுதலாக இருப்பது இளைஞர்களிடம் மலட்டுத் தன்மையை ஏற்படுத்தும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment