Lord Siva

Lord Siva

Thursday 8 December 2011

இயற்கையின் ஒரு அற்புதமான படைப்பு மனிதனின் கால்கள்


மொத்தம் 52 எலும்புகளின் ஒத்து ழைப்போடு கால்கள் செயல்பட்டு வருகின்றன. 33 மூட்டுக்கள் உள்ள ன. 38 தசைநார்கள் கால்களை இய க்க செயல்படுகின்றன.
*”மனிதனின் கால்கள் இயங்கும் விதம் ஆச்சரியமளிக்கிறது. அது இயற்கையின் ஒரு அற்புதமான படைப்பு’ என்று மருத்துவர்கள் கூறுவர்.
*கால்களை பொறுத்தவரையில் மொத்தம் இரண்டு லட்சத்து 50 ஆ யிரம் வியர்வை சுரப்பிகள் செயல் படுகின்றன. ஒரு மனிதன் ஒரு நாளைக்கு சராசரியாக 8 ஆயிரம் முதல் 10 ஆயிரம் முறை அடி எடு த்து வைத்து நடப்பதாக ஆய்வுகள் கூறி ஆச்ச ரியப்படுத் து கின்றன.
*தன் ஆயுள் காலத்தில் கால்களை பயன்படுத்தி ஒருவர் ஒரு லட்சத்து 85 ஆயிரம் கி.மீ., துரத் தை கடக்கிறார் என்பதும் கூடுதல் செய்தி.
*மனித உறுப்புகளிலேயே கால்கள் தான் அதிக மான எடையை எப்போதும் தாங்க வேண்டிய சூழ்நிலையில் உள்ளன. மனிதன் சுமக்கும் கூடு தல் எடைகளையும் கால்கள் மட்டுமே தாங்கிக் கொள்கின்றன.
*அதுமட்டுமல்லாமல், ஒரு மனிதனின் உடலி ல் ஏற்படும் நீரிழிவு, நரம்பு சம்பந்தப்பட்ட நோய் கள், ரத்த ஓட்டத்தில் குறைபாடு போன்றவை களுக்கு கால்களும் ஒரு காரணமாகவே உள்ளன.
*இப்படி பல்வேறு வகைகளில் முக்கியமான கால்களில் பிரச்னை ஏற் படுவது பொதுவானது. ஆனால், அவை பெரும்பாலான மக்களால் அலட் சியப்படுத்தப்படுகின்றன. கால்களை சரிவர பராமரிக்கா விட் டால் அது உடலில் பல்வேறு பாக ங்களை பாதிக்கும் என்று மருத்துவ குறிப்புகள் கூறுகின்றன. குறிப்பாக நீரிழிவு வியாதி உள்ளவர்களுக்குத் தான் பாதிப்பு அதிகம்.
*”உங்களுடைய கால்கள் ரணமா னால், உங்களுடைய உடம்பும் ரண மாகும்’ என்பது ஒரு மருத்துவ பழ மொழி. எனவே, கால்களை பராமரிக்க வேண்டியது மிக அவசியம்.
*பொதுவாக, கால்களில் வெடிப்பு, பூஞ்சாள பாதிப்பு, ஆணி, தட்டை க்கால், கொப்புளங்கள், உலர்ந்த தோல் போன்ற பாதிப்புக்கள்தான் அதிக மாக தென்படுகின்றன.
*ஈரப்பதம் குறைவாகும் காரணத்தால் கால்களில் உள்ள தோல் பகுதி யில் வறட்சி ஏற்படுகிறது. பாதங்களில் ஏற்படும் வெடிப்பு காரணமாக, பல்வேறு தொற்று நோய்கள் ஏற்பட வாய்ப்பு உண்டு. மேலும், வெடிப்பு காரணமாக தாங்க முடியாத வலியும் ஏற்படும்.
*கால் ஆணி என்பது அதிகமான உடல் அழுத்தம் காரணமாக உருவா கிறது. அளவு குறைந்த காலணி களை அணிவது உள்பட பல்வேறு அழுத் தங்களால் கால்களில் ஆணி ஏற்பட்டு, பெரும் துன்பத்தை தருகி றது.
*இந்த கால் ஆணிகளுக்கு முறை யான சிகிச்சை அளிக்கப்படாவிட் டால் அவையே பின்னாளில் “அல் சராக’ மாறுவதற்கும் வாய்ப்பு உண் டு.
*ஒவ்வொருவரும் மற்ற உறுப்புக ளைப் போலவே கால்களையும் பாது காக்க வேண்டியது அவசியம். கால் களை பராமரிப்பதற்காக டாக்டர் ஸ்கூல்ஸ் என்ற வெளிநாட்டு நிபுணர் கூறிய சில “டிப்ஸ்’.
***
இதோ:
1. கால்களில் வலி ஏற்பட்டால் அது மற்ற நோய்க்கு அறிகுறி என்பதால் அதை அலட் சியப்படுத்தாதீர். உடனே மருத்துவரை பாரு ங்கள்.
2. தினமும் கால்களை வெதுவெதுப்பான நீரில் சோப் மூலம் சுத்தம் செய் யுங்கள். இந்த முறை யில் கால்களை நீரில் மூழ்க வைக்காதீர். அது வறட்சியை ஏற்படுத்திவிடும்.
3. ஈரமான கால்களை துடைக்கும் போது மறக் காமல் கால் விரல்களுக்கு இடையில் உள்ள பாகத்தையும் சுத்தப்படுத்துங்கள். அப்போது தான் பூஞ்ச காளான் பாதிப்பில் இருந்து கால் கள் தப்பிக்கும்.
4. துடைத்த பின்னர் விரல் இடுக்குகளை தவிர மற்ற இடங்கள் அனை த்திலும் ஈரப்பதம் தரும் கிரீம்களை தடவுங்கள். இது வெடிப்புக்கள், தோல் உலர்ந்து போதல் போன்ற பாதிப்புக்களை தடுக்கும்.
5. கால்களில் காய்ந்த பகுதிகள் ஏதேனும் தென்பட்டால் அதை பக்குவ மாக அகற்றி விடுங்கள். கால் ஆணி, கால் கட்டி போன்றவை தென் பட்டால் உடனே மருத்துவரை அணு கி அவற்றை அகற்றி விடு ங்கல்.
6. நீங்களாகவே இவற்றை அகற்றும் முயற்சியில் ஈடுபட வேண்டாம்; அது வேறு உபாதைகளுக்கு வழிவகுக்கும்.
7. குறிப்பிட்ட நாட்களில் கால் விரல் நகங்களை அகற்றுங்கள். இதற் காக பிளேடு, கத்தி போன்றவற்றை பயன் படுத்தாமல், “நெய்ல்கட்டர்’ களை மட் டுமே பயன்படுத்துங்கள்.
8. வெறும் காலில் நடப்பதை தவிருங்கள். புதிய காலணிகளை குறிப் பாக ஷக்களை வாங்கும் போது உங்கள் கால் அளவை விட கொஞ்சம் பெரியவையாக வாங்கி பயன்படுத்துங்கள்.
9. இறுக்கமான காலணிகள் அணிவதை தவி ருங்கள். காட்டன் “சாக்ஸ்’ களை மட்டுமே பயன்படுத்துங்கள். ஹீல்ஸ் காலணிகள் எப் போதும் ஏற்புடையதல்ல.
———————————————
பாதங்களைப் பாதுகாக்க பத்து கட்டளைகள்
1. காலணி அணியாமல் எங்கும் நடக்காதீர்கள். “எம்.சி.ஆர்.” காலணி களை அணிவது மிக நல்லது.
2. பாதங்களையும் விரலிடுக்குகளையும் தினமும் இருவேளை சோப்பு போட்டுக் கழுவி, ஈரம் போகத் துடைத் துச் சுத்தமாக வைத்துக் கொள் ளுங்கள். நன்கு உலர்த்திய பின் ஆலிவ், தேங்கா ய் எண்ணெய் தட வலாம்.
3. குளிக்கும்போது பாதங்களில் ஏதேனு ம் மாற்றம் தென்படுகிறதா என்று தின மும் கவனிக்கவும்.
4. பாதங்களில் ஒத்தடம் கூடாது.
5. சரியான ஷூக்களை பருத்தி சாக்ஷூடன் அணியுங்கள்.
6. கால்ஆணி, தோல் தடிப்பு போன்றவற்றை வெட்டி எடுக்கக்கூடாது. மருத்துவரிடம் காட்டவும்.
7. நகங்களை வெட்டும்போது மிகுந்த கவனம் தேவை. குளித்த பின் நகம் வெட்டுவது நல்லது.
8. சர்க்கரை நோயாளிகள் தரையில் அம ரும்போது கால்களைக் குறுக்காக வை த்து அதிக நேரம் அமரக்கூடாது. நாற் காலியில் அமரும்போதும் கால்மேல் கால் போட்டு அமரக்கூடாது. அப்படி அமரும்போது நரம்புகள் மற்றும் ரத்தநாளங்கள் மீது அழுத்தம் அதிக மாகிவிடும்.
9. நடைப்பயிற்சி மிக முக்கியம்.
10. புகைபிடித்தலை அறவே விட்டு விடுங்கள்.
———————————————
கா‌ல்களை எ‌ப்போது‌ம் வற‌ட்‌சியா கவு‌ம் வை‌க்க‌க் கூடாது.பாத இடு‌க்கு க‌ள் தவிர மற்ற இடங்கள் அனைத் திலும் ஈரப்பதம் தரும் மரு‌ந்துக‌ள் அ‌ல்லது எ‌ண்ணெ‌யை தடவுங்கள்.
இது வெடிப்புக்கள், தோல் உலர்ந்து போ தல் போன்ற பாதிப்புக்களை தடு க்கும்.கால்களில் காய்ந்த பகுதிகள் ஏதேனும் தென்பட்டால் அதை பக்குவமாக அகற்றி விடுங்கள்.
காலணியை தேர்ந்தெடுக்கும் போது, அழகாக இருக்கிறதா என்று மட்டு ம் பார்க்காமல், தரமானதா என்றும் பார்த்து வாங்கவும். பிளாஸ்டிக், ரெக்சின் வகை காலணி களை அணிந்தால், கால்களில் தழும்பு உண்டாக லாம். எனவே, அவற்றைத் தவி ர்ப்பது நல்லது.
குளிக்கும் போது சொரசொரப்பான கல்லில் பாத ங்களை தேய்க்க வேண்டும். மிதமான சுடு நீரில் ஷாம்பு, டெட்டோல், வினிகர் ஆகியவற்றை சேர் த்து அரை மணி நேரம் ஊற வைத்து பின்னர் பாத ங்களை துடைத்து உலர வைத்து மொய்ச்சரைஸ் கிறீம் தடவ வே ண்டும்.
கால் ஆணி, கால் கட்டி போன்றவை தென்பட் டால் உடனே மருத்து வரை அணுகி அவற்றை அகற்றி விடுங்கள். நீங்களாகவே இவ ற்றை அகற்றும் முயற்சியில் ஈடுபட வேண் டாம்; அது வேறு உபாதைகளுக்கு வழி வகுக்கும்.
நகங்களை வட்டமாக வெட்டி னால், ஓரத்தில் அழுக்கு சேர்ந்து வலி ஏற்ப டும். சதுர வடிவில் வெ ட்டினால் அழு க்கு சேராது. சீராகவும் இருக்கும். தேன் அல்லது கிளிசரினை ஒரு அக ன்ற பாத்திரத்தில் ஊற்றி, அதில் நகங்கள் படுமாறு கால்களை வைக்க வும். இதனால் நகங் களை சுற்றி இருக்கும் தேவையற்ற சதைகள் நீங் கும்.

No comments:

Post a Comment