Lord Siva

Lord Siva

Thursday 29 December 2011

வசீகரமான புன்னகையை இழக்க முக்கியக் காரணங்கள்


(( டாக்டர் எம்.எஸ். சந்திரகுப்தா அவர்களுடன் ஒரு பேட்டி – ஓர் இணையத்தில் வெளிவந்தது ))
பற்களில் குறைபாடு உள்ளவர்களால் நான்கு பேர் மத்தியில் சிரிக்கவே முடியாது. அது வும் பற் களில் குறிப்பாக முன் பற்களில் பிரச்சினைகள் ஏற்பட்டால் இயல் பாக புன்னகைக்க முடியாது.
வசீகரமான புன்னகையை நாம் இழப் பதற்கான முக்கியக் காரணங்கள் பற் காரை, பற்சொத்தை, பற்கள் உடைதல், பற்களில் ஏற்படும் நிறமாற்றம், பற்கள் இல்லாத நிலை, தெற்றுப் பற்கள் போன்றவை ஆகும்.
இந்தப் பிரச்சினைகளுக்கு தீர்வு கண்டாலே நாம் அழகாக, வசீகரமாக புன்னகைக்க முடியும். ஆனால் இந்தப் பிரச்சினைகளுக்கு எப்படி தீர்வு காண்பது?
கீழ்க்கண்ட முறைகளில் தீர்க்கலாம்.
ஸ்கேலிங்
பற்காரையினாலோ, உணவுப் பொருட் களா லோ பற்களின் வெளிப் புறத்தில் நிறமாற்றம் ஏற்பட்டால் ஸ்கேலிங் மூலம் நீக்கி விடலாம்.
வெனீரிங்
ல்லின் உட்புறத்தில் கறை காணப் பட்டால் அந்தப் பல்லின் வெளிப்பகுதியில் சிறிதளவு எனாமலை நீக்கிவிட்டு வெனீரிங் என்ற பல் மேற்புறப்பூச்சு செய்யலாம். ஆனால் இது ஒரு தற்காலிகமான முறை ஆகும்.
பல் நிற அடைப்பான்கள்
பற்களில் குறிப்பாக முன் பற்களில் சொத்தை ஏற்பட்டாலோ, விபத்தினால் பற்பகுதி உடைந்து விட்டாலோ, பல்லில் சிறு இடத்தில் நிறமாற்றம் இருந்தாலோ, பற்களுக்கு இடையே இடைவெளி இருந்தாலோ காம்போசைட் என்ற பல் நிற அடைப் பான்களைக் கொண்டு அடைக்கலாம்.
செயற்கை பற்சிகரம்
பற்சொத்தை ஆழமாகிவிட்டாலோ, விபத் தி னால் பற்பகுதி உடைந்து, நோய்த் தொற் றுதல் பற்கூழ்வரை சென்று இருந் தாலோ அந்த சூழ்நிலையில் இந்த அடை ப்பான்களை பயன் படுத்த இயலாது. அப் போது அந்தப் பல்லில் வேர் சிகிச்சை செய்து செயற்கை பற்சிகரம் பொருத்தப் படும். பல்லில் உட்புறக் கரை யிரு ந்தால் அப்போதும் இத்தகைய செயற்கை பற்சி கரத்தைப் பொரு த்தலாம்.
பற்கள் இல்லாத சூழ்நிலையில் கீழ்க்கண்ட சிகிச்சை முறை களை மேற் கொள்ளலாம்.
கழற்றி மாட்டக்கூடிய பற்கள்
இந்த வகை பல் செட்டுக்களை வாயில் ஒரு பல்கூட இல்லாத வர்களுக்கோ அல்லது பகுதி யளவு பற்களை இழந்தவர்களுக்கோ பொருத்தலாம். ஆனால் இவை எப்போதும் அசவுகரியமாக இருப்ப தோடு இவற்றை அடிக்கடி தூய்மைப் படுத்த வும் வேண்டியிருப்பதாலும் கைதவறி கீழே விழுந்து உடைந்துவிடும் வாய்ப்பு இருப்ப தாலும் பெரும்பாலான மக்கள் இத்தகைய பல் செட்டுக்களை விரும்புவதில்லை.
நிரந்தரமாக பொருத்தக்கூடிய பல்செட்
இத்தகைய பல் செட்டுக்க ளை அவ்வப்போது கழற்றி தூய்மை ப்படுத்த வேண்டு மென்ற அவசியமோ, உடை ந்துவிடும் என்ற பயமோ தேவையில்லை. அது மட்டு மின்றி இவை இயற்கைப் பற்களைப் போலவே இருப்ப தால் எந்த இடத்திலும் வாய் விட்டுச் சிரிக்கலாம். இத்த கைய பல்செட்டை பொருத் துவதற்கு அருகி லுள்ள இரு பற்களையும் ஆதாரமாக கொண்டு பொருத்துவார்கள்.
இம்ப்ளாண்ட்
இம்ப்ளாண்ட் என்பது தற்போது நடைமுறை ப்படுத்தப்பட்டுள்ள அதிநவீன சிகிச்சை முறை. இந்த முறையில் தாடையில் இம் ப்ளாண்ட் ஆணிகளை பொருத்தி அதை அடிப்படையாகக் கொண்டு செயற்கைப் பற்களைக் கட்டுவார் கள். இதுவும் இயற்கை ப்பற்களைப் போன்றே தோற்றமளிக்கும்.
ம்பி கட்டுதல்
பற்களுக்கு இடையே இடைவெளியிரு ந்தாலோ, பற்கள் வெளியில் துருத்தி க்கொண்டிருந்தாலோ தற்காலிகமாக வோ, நிரந்த ரமாகவோ கம்பி கட்டுதல் முறையில் தீர்வு காணலாம்.
ஈறு சிகிச்சை
பற்காரையினாலோ, மற்ற காரணங் களினாலோ ஈறுபகுதி வீக்க மாக காண ப்பட்டால், ஜிஞ்€சுவெக்டமி என்ற ஈறு சிகிச் சையை செய்யலாம்.
தாடை அறுவைச் சிகிச்சை
சிறு உதடு இருந்தால் சிரிக்கும் போது ஈறுபகுதி வெளியே தெரி ந்தாலோ, தாடை பெரியதாக வெளியே நீட்டிக் கொண்டிருந்தாலோ ஆஸ்டியோ ட்டமி என்ற தாடை அறுவைச் சிகிச் சை செய் யலாம்.
டிஸ்ட்ராக்ஷன்
பற்கள் ஒன்றையொன்று நெரு க்கி யடித்துக் கொண்டிருந்தால் முன் பெல்லாம் பற்களை எடு த்துவிட்டு கம்பி கட்டுவார்கள். தற்போது வந்துள்ள அதிநவீன டிஸ்ட்ரா க்ஷன் முறையில் தாடையை நீளச் செய்து பிறகு பற்களை சீரமை க்கலாம்.
இவ்வாறே, மேல்தாடை உள்ளே சென்று கீழ்த்தாடை வெளியே நீட்டிக் கொண்டிருந்தாலும், தாடையை வளரச் செய்து சிகிச்சைய ளிக்கலாம்.
இந்த முறைகளை தகுதியான பல் மருத்துவரிடம் சென்று மேற் கொண்டால் சிரிக்கத் தடையே இருக்காது.

No comments:

Post a Comment