Lord Siva

Lord Siva

Sunday 25 December 2011

காதல் பள்ளிக் கூடங்கள்


காதலை கற்றுத்தர தற்போது பல ஊடகங்கள் இருக்கின்றன. ஆனால், பழங்காலத்தில் இத்தகைய வச திகள் இல்லை. அதனால், கோவில்களில் காதலை கற்றுத் தரும் விதமாக சிலை கள் அமைத்தார்கள். இந்த வகையில் முழுக்க முழுக்க ஆண், பெண் உடலுறவு தொடர்பான விசயங்களை மட்டுமே கொ ண்டு சிலைகள் வடிவமைக்கப்பட்டன. இவற்றைதான் ‘காதல் பள்ளிக் கூடங்கள்’ என்று அழைக்கிறார்கள்.
மத்தியப்பிரதேசத்தின் ஒரு மூலையில் அமைந்துள்ள சிற்றூர் கஜூராஹோ. அந் த சின்ன ஊரின் கோவில் கற்களில் செது க்கப்பட்டிருக்கும் அழகிய சிற்பங்களை சிற்றின்ப கண்கொண்டு பா ர்ப்பதா அல்லது பேரின்ப உணர்வுடன் காண்பதா என்று விளங்கா மல் ஆன்மிகவாதிகளே திகைக்கிறார்கள். அந்த சிற்பங்கள் ஆண், பெண்ணின் பிறந்த மேனி, அங்க அழகுகளை அற்புதமாக சித்தரிக் கின்றன. போதாக்குறைக்கு ஆண், பெண் உடலுறவு காட்சிகளை வி தவிதமாக வகைவகையாக விள க்குகின்றன.
ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கஜூராஹோவில் சண்டெல்லா என்ற அரச பரம்பரையினர் ஆட்சி நடத்தி வந்தனர். அவர்கள் சிற்றி ன்பப் பிரியர்கள். பெண்ணிடம் இன்பம் காண்பதுதான் பிறவி எடு த்த தன் பெரும் பயன் என்று கருதியவர்கள். அவர்கள் காலத்தில் கோவில் பணிக்கென ஆயி ரக்கணக்கில் தாசிகள் இருந்தனர். ஆலய தாசிகள் என்றாலே அவர்கள் அரண் மனைக்கும் தாசிகளாதானே இருக்க முடியும். அவர்களுடன் கூடி பல விதங்களில் தாங்கள் அனு பவித்த இன்ப விளையாட்டுகளை நிரந்தரப்படு த்தி வைக்க வேண்டும் என்ற எண் ணத்தில் சண்டெல்லா வம்ச அரச ர்கள் இத்தகைய சிலை களை அமைத்தனர்.
இந்த சிற்பங்களைக் காண உலகெ ங்கிலும் இருந்து ஆயிரக்கணக்கா னவர்கள் தினமும் வந்த வண்ண ம் இருக்கிறார்கள்.ஒரிசா மாநி லத்தில் கொரைக் என்ற இடத்தில் அமைந்துள்ள அற்புதமான பழ ங்கால சிற்பங்கள் காணப்படுகின்றன. சிற்பங்கள் அமைந்திருக்கும் இந்த இடத்தை ‘காதல் பள்ளி’ என்று குறிப்பிடுகிறார்கள். அந்த சிற் பங்கள் அனைத்துமே ஆண், பெண் உடலுறவு கொள்ளும் காட்சி யை விதவிதமாக சித்தரிக்கின்றன.
கொரைக் சிலைகள் ஆபாசம் என்ற நினைவு எழாத வகையில் அற்புதமான கலை வளர்ச்சி மிளிர இந்த சிற்பங்களை அமைத்துள் ளனர். அந்த காலத்தில் காதலை கற்றுத் தரும் பள்ளிக் கூடங்களாக இந்த இரண்டு இடங்களும் அமைந்திருக்கின்றன.


No comments:

Post a Comment