Lord Siva

Lord Siva

Friday 30 December 2011

ஆண்கள் மட்டுமே ‘ஆரம்பிப்பது’ ஏன்?

Posted On Dec 30,2011,By Muthukumar
பெரும்பாலான ஆண்களுக்கு இந்தக் கவலை இருக்கும். 'எல்லாத்தையும்' நாமதான் ஆரம்பிக்கனும், நம்மாளு எதையுமே செய்வதில்லை என்ற கவலைதான் அது.
செக்ஸ் உறவின்போது பெரும்பாலான ஆண்களின் மனதில் தோன்றும் சலிப்புதான் இது. நான்தான் தொடங்க வேண்டும். அவங்க பாட்டுக்கு கம்முன்னு இருப்பாங்க, என்னிக்காச்சும் அவங்க ஆரம்பிச்சு வச்சுருக்காங்களா என்ற சலிப்பும் பல ஆண்களிடம் உள்ளது.
ஏன் பெண்கள் செக்ஸ் விஷயத்தில் 'லீட்' பண்ண மாட்டார்கள், அவரே ஆரம்பிக்கட்டும், முன்னேறட்டும் என்று காத்திருக்கிறார்கள்?. இதற்கு நிபுணர்கள் தரும் பதில் இது...
பெரும்பாலான ஆண்கள் என்றில்லை, கிட்டத்தட்ட அத்தனை ஆண்களுக்குமே இந்தக் கேள்வி மனதில் எழுவதற்கு வாய்ப்புள்ளது. காரணம், பெரும்பாலும் ஆண்கள்தான் செக்ஸ் உறவின்போது பிள்ளையார் சுழி போட்டு ஆரம்பித்து வைக்கிறார்கள். அதன் பிறகுதான் பெண்கள் டேக் ஓவர் செய்து கொள்கிறார்கள்.
சில சமயங்களில், நமது மனைவிக்கு செக்ஸ் பிடிக்கவில்லையா, இப்படி அமைதியாக இருக்கிறாரே என்ற சந்தேகம் கூட சிலருக்கு எழலாம். பலருக்கு ஒரு வேளை நமது 'மூவ்'கள் சரியாக இல்லையோ என்ற சந்தேகம் கூட எழலாம்.
முன் விளையாட்டுக்களில் மனைவிக்கு ஆர்வம் இருக்கிறதா, இல்லையா என்பது கூட பலருக்குப் புரிபடுவதில்லை. இப்படிப்பட்ட சிந்தனைகளால் பல ஆண்கள் குழம்பிப் போவது நிஜம்தான்.
ஆனால் இதெல்லாம் இந்த அளவுக்கு குழம்பிப் போக வேண்டிய பெரிய விஷயமில்லை. சாதாரணமானவைதான்.
பெண்கள் எதையும் ஆரம்பிப்பதில் தயக்கம் காட்ட சில காரணங்கள் உள்ளன. நாமே தொடங்கினால் நம்மவருக்கு ஏதாவது ஈகோ பிரச்சினை வந்து விடுமோ என்று பல பெண்கள் முதல் அடி எடுத்து வைக்க தயக்கம் காட்டுகிறார்களாம்.
நாமே முந்திக் கொண்டு போனால் நம்மைப் பற்றித் தவறாக நினைத்து விடுவாரா என்ற சந்தேகமும் பல பெண்களுக்கு எழுகிறதாம். நாம்தான் சரியான 'சிக்னல்' கொடுத்தாச்சே, புரிந்து கொண்டு களம் இறங்க வேண்டியதுதானே என்று பலர் நினைக்கிறார்களாம்.
நான் சரியான முறையில்தான், உறவுக்கு ரெடி என்பதை மறைமுகமாக உணர்த்துகிறேன். அவர்தான் சரியாக புரிந்து கொள்ளாமல் இருக்கிறார் என்று பல பெண்கள் புகார் பட்டியலுடன் உட்கார்ந்திருக்கிறார்கள்.
பட்டவர்த்தனமாக எப்படி பளிச்சென சொல்வது என்ற தயக்கம் ஏற்படுவதாக பல பெண்கள் சொல்கிறார்கள்.
ஆரம்பிப்பதில் அவர் தான் கில்லாடி, எக்ஸ்பர்ட், அதனால்தான் நான் மெளனம் காக்கிறேன் என்பதும் பல பெண்கள் சொல்லும் வாதமாக இருக்கிறது.
எனவே காதல் மற்றும் உறவில் ஈகோ என்பது பார்க்கப்படக்கூடாத ஒன்று. யார் ஆரம்பித்தால் என்ன, முடியும்போது அது சிறப்பாக, சந்தோஷமாக இருக்கிறதா என்பதுதான் முக்கியம்.
அந்த நான்கு சுவருக்குள் தனிமையில் இருக்கும்போது இருவருக்கும் இடையே எந்தவிதமான தயக்கமோ, வெட்கமோ, கெளரவம் பார்ப்பதோ இருக்கக் கூடாது. ஆடைகளுடன் சேர்த்து அவற்றையும் தூரப் போட்டு விட வேண்டும். அப்போதுதான் உறவு இனிக்கும், சிறக்கும்.
மேலும், பார்ட்னரிடமிருந்து வரும் 'சிக்னலை' சரியாக புரிந்து கொள்ள வேண்டியது இருவரின் கடமையுமாகும். சிக்னல் வந்து விட்டால், அடுத்தவர் வேலையை ஆரம்பிக்க வேண்டியதுதான். அதை விட்டு விட்டு, இல்லை, இல்லை வாயைத் திறந்து கேட்டால்தான் ஆச்சு என்று வறட்டுப் பிடிவாதமாக இருக்கக் கூடாது.
ஒரு வேளை கணவர் பிசியாக இருந்து கொண்டிருப்பார். அப்போது பார்த்து மனைவி அருகே வந்து கன்னத்தில் முத்தமிடலாம், கொஞ்சலாம். அதெல்லாம்தான் உறவுக்கு அழைப்பதற்கான 'சிக்னல்'கள். எனவே பிசியாக இருந்தாலும் கூட அந்த சமிக்ஞைகளை சரியாக புரிந்து கொண்டு செயல்பட்டால் பிரச்சினை இல்லை.
மனைவி ஆரம்பிக்கட்டும், அவரே எல்லாவற்றையும் தொடங்கட்டும் என்று நீங்கள் விரும்பினால் அதை தாராளமாக அவரிடம் வெளிப்படையாக சொல்லி விடலாம். அடுத்த முறை உங்களை அசத்த அவரும் தயாராக இருப்பார்.
மொத்தத்தில் அன்பைக் காட்டவும், அருகாமையை இனிமையாக்கவும் வெளிப்படையான மனதும், செயல்பாடுகளும் முக்கியம் என்பதைப் புரிந்து கொண்டால், 'ஸ்டார்ட்டிங் டிரபுள்' இருக்கவே இருக்காது.



No comments:

Post a Comment