Lord Siva

Lord Siva

Thursday 1 December 2011

காயத்ரி மந்திரத்தின் மூலம் சூஷ்ம சக்திகளை விழிப்பித்தல்



Posted On Dec 01,2011,By Muthukumar




மனிதன் தனது வாயால் உச்சரிக்கும் சொற்கள் மனதிலும் உடலிலும் மாற்றத்தினை உண்டு பண்ணுகிறது என்பதனை அனைவரும் அறிவோம். ஒருவனை கோபமாக ஏசும் போது மனமும் உடலும் கொந்தளிப்பு ஏற்படுவதனை அனைவரும் உணர்ந்திருப்பர். இதுதான் மந்திர சாஸ்திரத்தின் அடிப்படை. மந்திரங்கள் குறித்த சொற்கள் அட்சரங்கள் மூலம் மனதிலும் சூஷ்ம உடலிலும் சக்தி அதிர்வுகளை ஏற்படுத்தும் வண்ணம் உருவாக்கப்பட்டுள்ளன. காயத்ரி மந்திரத்திலுள்ள 24 எழுத்துக்கள் 24 வகையான பேறுகளை அளிக்கவல்லது. 
காயத்ரி மந்திரம் 24 அட்சரத்துடன்:
தத்/ ஸ/ வி/ துர்/ வ/ ரே/ ணி/ யம்/ பர்/ கோ/ தே/ வ / ஸ்ய/ தீ/ ம/ ஹி/ தி /யோ/யோ/ ந/ ப்ர/ சோ /த /யாத்
ஒவ்வொரு அட்சரமும் மனிதனில் விழிப்பிக்கும் குணங்கள் ஆற்றல்கள் கீழ்வரும் அட்டவணையில் தரப்பட்டுள்ளது. 
அட்சரம்
விழிப்படையும் குணம்
01
தத்
எடுத்த காரியத்தில் வெற்றியடைதல்
02
பராக்கிரமம்
03
வி
எதையும் பொறுப்புடன் பராமரித்தல்
04
துர்
நல்வாழ்வு
05
யோகம்
06
ரே
அன்பு/காதல்
07
ணி
பணம்
08
யம்
தேஜஸ்
09
பர்
பாதுகாப்பு
10
கோ
புத்தி/நுண்ணறிவு
11
தே
அடக்கம்
12
நிஷ்டை
13
ஸ்ய
தாரணா சக்தி வளர்ச்சி
14
தீ
பிராண சக்தி வளர்ச்சி
15
தன்னடக்கம்
16
ஹி
தாபோசக்தி
17
தி
வருங்காலமறியும் பண்பு
18
யோ
விழிப்புணர்வு
19
யோ
ஆக்கபூர்வமான மன நிலை
20
இனிமை
21
ப்ர
சேவை
22
சோ
ஞானம்
23
இலட்சியம்
24
யாத்
தைரியம்

இது எப்படியென இன்னும் விரிவாக பார்ப்போம். மனிதனுடைய வாழ்க்கையின் வெற்றிக்கு தோல்விக்கு, இன்ப துன்பங்களுக்கு உணர்ச்சிகள் பெரும் பங்காற்றுகின்றன. இவை பெரும்பாலும் நாளமில்லச்சுரப்பிகள் எனப்படும் Endocrine system களால் சுரக்கப்படும் ஹோமோன்களால் ஒழுங்குபடுத்தப்படுகின்றன. இந்த நாளமில்லாச்சுரப்பிகள் மனிதனுடைய சூஷ்ம உடற் செயற்பாடுகளுடன் தொடர்புடையவை. அதனால் தான் சூஷ்ம உடலில் காணப்படும் ஆறாதாரங்கள் என எமது தாந்திரீக நூற்களில் குறிக்கப்படும் ஆதாரங்கள் மேற்குறிப்பிட்ட இடத்தில் காணப்படும் தாமரைகளாக வர்ணிக்கப்படுகின்றன. கீழே காணப்படும் படத்தினைப்பார்க்கவும். 
ஒருவர் மந்திரத்தினை ஜெபிக்கும் போது இந்த கிரந்திகள் சூஷ்மமான அதிர்வுகளுக்கு உள்ளாகி பௌதீக உடலினையும் சூஷ்ம உடலினையும் சமனிலைப்படுத்துகிறது.அதேபோல் குறித்த மனதில் உணர்ச்சிகள் உண்டாகும் போதும் இந்த கிரந்திகள் செயற்பட்டு உடலில் மாற்றத்தினை உண்டு பண்ணும்.  இவ்விரண்டு உடல்களும் சரியான விகித்தில் பரிவுறும் போது மனிதன் தனது இன்ப துன்பங்களை அனுபவிக்கிறான். சாதாரணமாக எந்த மந்திரத்தினையும் ஜெபிக்கும் போது இந்த செயன்முறை நடைபெறும், வேறு மந்திர ஜெபத்தின் போது எமது மனம், உணர்ச்சி நிலைகள் முக்கியம். எண்ணம் உணர்ச்சி தவறாக இருப்பின் பலனும் தவறாக இருக்கும். இறுதியில் பாதிப்புத்தான் மிஞ்சும். 
ஆனால் காயத்ரி மந்திரத்தின் சிறப்பு இதில்தான் அடங்கியுள்ளது. மந்திரத்தின் பொருளே மனதிற்கு நல்ல நிலையினை தருமாறு விஸ்வாமித்திர மகரிஷி அமைத்துள்ளார். இதை வேறுவிதத்தில் விளங்கப்படுத்துவதானால், நீங்கள் வேறு மந்திர சாதனை (காளி, துர்கை, பகளாமுகி) செய்வதற்கு சரியான பக்குவம் தேவை, இல்லாமல் பீஜாட்சரங்களை ஜெபிக்கும் போது கோரிய பலன் கிடைக்காமல் பிரச்சனைக்குள்ளாகலாம், ஆனால் காயத்ரி ஜெபம் செய்யத்தொடங்கும் போது ஆரம்ப கால சாதனை உங்களில் மெது மெதுவாக பக்குவத்தினை உண்டு பண்ணும் பின்னர் சரியான பக்குவம் உருவான பின்னர் படிப்படியாக உயர்வடையச்செய்யும். இதன் செயன் முறையினை அடுத்த பதிவில் பார்க்கலாம்!
காயத்ரி சாதனை செய்வதற்கான பக்குவத்தினை பெற காயத்ரி சாதனை செய்வதுதான் ஒரேவழி! 

இந்த பக்குவம் பெற எம் அனைவரையும் குருதேவர், விஸ்வாமித்திரர், வஷிஸ்டர், பிரம்மா மகரிஷிகள் ஆசீர்வதிக்கட்டும்! 

No comments:

Post a Comment