Lord Siva

Lord Siva

Sunday 25 December 2011

பட்டின் கதை!

Posted On Dec 25,2011,By Muthukumar

பட்டுச் சேலை மீது நமது பெண்களுக்கு உள்ள மோகத்தை எதனுடனும் ஒப்பிட முடியாது. பட்டுச் சேலை அணிந்தாலே நம்மூர் பெண்களுக்குத் தனிப் பெருமிதமும், அழகும் வந்துவிடும்.
பெண்கள் மட்டுமின்றி, நாம் வணங்கும் தெய்வத்துக்கும் கூட பட்டாடை அணிவித்தே மகிழ்கிறோம்.
`மவுசு' காரணமாகத்தான் பட்டுச் சேலைகளின் விலை பல ஆயிரங்களில் எகிறுகிறது. அதிலும் நமது காஞ்சிபுரம் பட்டுச் சேலைகளுக்கு உலகெங்கிலும் பெருமதிப்பு உள்ளது அனைவரும் அறிந்ததே.
இந்தியாவின் பட்டு பற்றிய குறிப்புகள் வேத காலத்துக்கு முந்தியவை. கி.மு. 140-ல் சீனாவில் இருந்து இந்தியாவுக்குப் பட்டு அறிமுகமானது என்று கூறப்படுகிறது. கவுடில்யர் தான் எழுதிய `அர்த்தசாஸ்திரம்' என்ற நூலில் கி.பி. இரண்டாம் நூற்றாண்டிலேயே பட்டு பற்றிய செய்திகளைக் குறிப்பிட்டுள்ளார்.
கனிஷ்கர் காலத்திலேயே, அதாவது கி.மு. 58-ல் பட்டு இந்தியாவில் இருந்து பிரசித்தி பெற்ற ரோமாபுரிக்கு ஏற்றுமதியாகி வந்தது.
மத்திய ஆசிய நாடுகளுக்கும், தெற்கு ஐரோப்பிய நாடுகளுக்கும் பட்டு ஏற்றுமதி செய்வதில் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே கடும் போட்டி இருந்து வந்தது. கி.பி. 16, 17-ம் நூற்றாண்டுகளில் இந்தியாவில் பட்டு வளர்ப்பதை மொகலாய அரசர்கள் ஊக்கப்படுத்தி வந்தனர்.
மைசூரில் பட்டு வளர்ச்சிக்கு முதலில் வித்திட்டவர் திப்பு சுல்தான். கர்நாடகம் இன்றைக்கு நாட்டின் 70 சதவிகித கச்சாப் பட்டை அளிக்கிறது. உலகளவில் இன்று பட்டு உற்பத்தி செய்வதில் சீனா முதலிடம் வகிக்கிறது.
சீனாவுக்கு அடுத்தபடியாக அதிகமாகப் பட்டு உற்பத்தி செய்யும் நாடு இந்தியாதான். நம் நாட்டில் இருந்து பல்லாயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள பட்டு, வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. ஜப்பான் நாடும் பட்டு உற்பத்தியில் முன்னணியில் உள்ளது. இன்றைக்கும் ஜப்பான் அரச குடும்பத்தினர் பட்டுப் புழு வளர்ப்பில் தனிப்பட்ட ஆர்வம் செலுத்தி வருகின்றனர்.
பட்டு நூலைக் கண்டுபிடித்த கதை மிகவும் சுவாரசியமானது. கி.மு. 2700-ம் ஆண்டில் சீனாவில் ஒருமுறை மகாராஜா தனது அரண்மனை தோட்டத்தைச் சுற்றிப் பார்த்தார். அப்போது அங்குள்ள ஒரு தாவரத்தில் இலைகள் சிதைந்திருப்பதைக் கண்டார். அந்தத் தாவரம், மல்பெர்ரி எனப்படும் முசுக்கொட்டைத் தாவரம்.
உடனே அவர் தனது மகாராணியிடம், மல்பெர்ரி இலைகள் சிதைவதற்கான காரணத்தை அறியும்படி கூறினார். அந்த மகாராஜாவின் பெயர், ஹுவாங் டி. மகாராணி உற்றுக் கவனித்தபோது மல்பெர்ரி இலைகளை ஒருவித வெள்ளைப் புழுக்கள் கடித்துக் கொண்டிருப்பதையும், இலைகளில் சில இடங்களில் மட்டும் மின்னும் கூடுகள் இருப்பதையும் கண்டார். அந்த மின்னும் கூடுகளை வினோதப் பொருட்களாகச் சேகரித்து வைத்தார்.
ஒருநாள் மகாராணி தேநீர் அருந்தும் வேளையில் புழுக்கூடுகளை மேலே தூக்கிப் போட்டு விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது ஒரு கூடு தவறி தேநீர்க் கோப்பையில் விழுந்துவிட்டது.
உடனே ராணி அந்தக் கூட்டை வெளியே எடுத்தார். அப்போது அவரது கை விரல்கள் மின்னும் இழையைப் பற்றின. அவர் கையைத் தூக்கியபோது, மெல்லிய இழையும் மேலே வந்தது. இப்படித் தற்செயலாகப் பட்டு நூலைக் கண்டுபிடித்தார் அந்தச் சீனத்து ராணி. ஆக, பெண்களின் நன்றியெல்லாம் அவருக்கே உரித்தாக வேண்டும்.

No comments:

Post a Comment