Posted On April 04,2012,By Muthukumar
கோடை
வெயிலினாலும், தூசுக்களினாலும் சருமம் அதிகம் பாதிப்பிற்குள்ளாகிறது.
கூந்தலும் மாசடைந்து வறண்டு விடுகிறது. சருமம், கூந்தல் பாதிப்பினால்
முகத்தில் கரும்புள்ளிகள் தோன்றுவதோடு பொலிவு குறைந்து காணப்படும். இழந்த
அழகை மீட்க வீட்டில் அன்றாடம் சமைக்கப் பயன்படுத்தப்படும் அடுப்பங்கறை
பொருட்களே போதுமானது. எலுமிச்சை, மஞ்சள், கடலைப் பருப்பு, பாசிப்பருப்பு
போன்ற பொருட்களை உபயோகப்படுத்தி முகத்தையும், சருமத்தையும் அழகாக்கலாம்
என்கின்றனர் அழகியல் நிபுணர்கள்.
கடலைமாவு மஞ்சள் பேஸ்ட்
தொன்று
தொட்ட முதியோர் காலத்திலிருந்து பாரம்பரியப் பொருனாக பயன்படுத்தப்படும்
பொருள் கடலைமாவு, மஞ்சள்தூள். இரண்டுமே உடல் ஆரோக்கியத்திற்கும், சரும
ஆரோக்கியத்திற்கும் அழகு தரக்கூடியவை. ஒரு கிண்ணத்தில் 2ஸ்பூன் கடலைமாவை
எடுத்துக் கொண்டு ஒரு சிட்டிகை மஞ்சள்தூள் சேர்த்து கலக்கவும். சிறிதளவு
தண்ணீர் ஊற்றி கலந்து முகத்தில் பூசி அரைமணி நேரம் கழித்து வெதுவெதுப்பான
நீரில் முகம் கழுகி வந்தால் சருமம் மென்மையாகும்.
வழுவழுப்புக்கு கடலைமாவு பேஷியல்
அழகை
பேணிக்காப்பதில் முக்கிய பங்கு வகிப்பது கடலைமாவு. கடலைமாவானது பொலிவிழந்த
சருமத்தை இளமையூட்டும். இரண்டு ஸ்பூன் கடலை மாவில் சிறிதளவு தண்ணீர்
விட்டு கெட்டியாக பிசைந்து கொள்ளவும். பின்னர் முகத்தில் நன்றாக தடவி
ஊறவிடவும். நன்றாக உலர்ந்த பின்னர் குளிர்ந்த நீரில் முகம் கழுவினால் பளிச்
என்று இருக்கும். அதேபோல் குளிக்கும் போது கடலைமாவு பூசி குளித்தால்
சருமம் வழுவழுப்பாகும். சுருக்கமின்றி இளமையோடு காட்சியளிக்கலாம்.
ரோஸ் வாட்டர் கடலைமாவு
இரண்டு
ஸ்பூன் கடலைமாவுடன், 4 ஸ்பூன் பால், 2 ஸ்பூன் ரோஸ் வாட்டர் சேர்த்து
கலக்கவும். பின்னர் கலவையை நன்றாக முகத்தில் பூசவும். பத்து நிமிடம்
கழித்து இதனை குளிர்ந்த நீரில் கழுவ சருமம் மென்மையாகும் இளமையோடு காட்சி
தரும்.
பருக்கள் நீங்க
கடலை
பருப்பு 1 டீஸ்பூன். ஒரு மிளகு இவற்றை எடுத்த ஒரு டீஸ்பூன் பாலில்
ஊறவையுங்கள். இதனுடன் கால் டீஸ்பூன் முல்தானி மட்டி பவுடரைச் சேர்த்து
கலக்குங்கள். பிறகு இதை முகத்தில் "பேக் ஆகப் போட்டு, உலர்ந்ததும்
குளிர்ந்த நீரில் கழுவ்வேண்டும். பருக்கள் இருந்த படிப்படியாக மறைந்து
போகும்.
பிசுபிசுப்பான சருமத்திற்கு
சருமம்
எண்ணெய் வழிந்து பிசுபிசுப்பாக இருந்தால் அதற்கு கடலைமாவுடன் தயிர்
சேர்த்து பேஷியல் போடுவது முகத்தை பொலிவாக்கும். ஒரு கிண்ணத்தில் கடலைமாவு
எடுத்து அதில் தயிர், எலுமிச்சை சாறு ஊற்றி நன்றாக கலந்து முகத்தில் அப்ளை
செய்யவும். சில நிமிடங்கள் ஊறவைத்து வெதுவெதுப்பான நீரில் கழுவவும். இதனால்
எண்ணெய் பசை நீங்கி முகம் பொழிவுபெறும்.
டல் முகம் பொலிவாக
தோலுடன்
இருக்கும் கடலைபருப்பு அரை கிலோ துளசி இலை 50 கிராம், வேப்பங்கொழுந்து 5
கிராம் இவற்றை நிழலில் உலர்த்தி. நன்றாக அரைத்துக் கொள்ளுங்கள். ஒரு
கிண்ணத்தில் இரண்டு ஸ்பூன் போட்டு அதில் இரண்டு துளி எலுமிச்சை சாறு
சேர்த்து முகத்துக்கு "பேக்" போட்டு ஐந்து நிமிடம் கழித்து வெதுவெதுப்பான
தண்ணீரால் முகத்தைக் கழுவுங்கள். வாரம் ஒரு முறை இதைச் செய்து வந்தால்,
பளபளவென்று முகம் பிரகாசிக்கும்.
No comments:
Post a Comment