Posted On April 02,2012,By Muthukumar
ரோஜா
மலரை விரும்பாதவர்கள் அபூர்வம். காதலிலும் காதலர் தினத்திலும் ரோஜா
முக்கியத்துவம் பெறுகிறது. அதிகமான காதலர்கள் ரோஜா மலரினூடாக தங்களது அன்பை
பகிர்ந்துக் கொள்கின்றார்கள்.
மஞ்சள் ரோஜா : மகிழ்ச்சி, நலம்
வெள்ளை ரோஜா: தூய்மை, அப்பாவித்தனம், அனுதாபம், ஆன்மீகம்
செம்மஞ்சள் ரோஜா: ஆர்வம், மதிப்பு
ஊதா ரோஜா: வசீகரம், ராஜகம்பீரம்,கண்டவுடன் காதல்
ஊதா
நிறமானது பாரம்பரியமாக ராஜகுடும்பத்துடன் தொடர்புடையதாக கருதப்பட்டு
வந்தது. இதன் அடிப்படையில் ஊதா நிற ரோஜாவானது வரவேற்பளித்தல், சிறப்பு
என்பனவற்றை குறிக்கிறது.
இந்த ரோஜாக்கள் பல நிறங்களில் அமைந்து பார்ப்போரை பரவசத்தில் ஆழ்த்துகின்றன.
அதேவேளை, ஒவ்வொரு நிற ரோஜாவும் வெவ்வேறு அர்த்தங்களை, சமிக்ஞைகளை வெளிப்படுத்துவதாக கொள்ளப்படுகிறது.
ரோஜாக்களின் நிறமும் அவற்றின் அர்த்தங்களும் பின்வருமாறு:
சிவப்பு ரோஜா : காதல்
சிவப்பு
நிற ரோஜா உண்மையான காதலை பிரதிநிதித்துவப்படுத்துகிறது. பிரபஞ்சத்தில்
மிகவும் பிரபலமான குறியீடுகளில் ஒன்றாக காதலை குறிக்கும் சிவப்பு ரோஜா
விளங்குகிறது. ஆனால் வரலாற்றில் பல கலாசாரங்ளில் அரசியல் மற்றும் மத
குறியீடாகவும் இது பயன்படுத்தப்பட்டுள்ளது.
மஞ்சள் ரோஜா : மகிழ்ச்சி, நலம்
வரலாற்றில்,
மஞ்சள் நிறமானது சூரியனுடன் தொடர்புடையதாகக் கருதப்பட்டு வந்துள்ளது.
மனிதர்களை உற்சாகமூட்டுவதற்கு மஞ்சள் நிற ரோஜா அனுப்பப்படுகிறது. இந்த
மஞ்சள் நிற மலரானது மற்றைய நிறங்களின் ரொமான்ஸ் அம்சம் இன்றி, பாலியலற்ற
நேசத்தை, நட்புணர்வை வெளிப்படுத்துவதாக உள்ளது. இந்த நிறம்
மகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் பிரதிபலிக்கின்றது.
இளஞ்சிவப்பு ரோஜா: காதல், நன்றி, மதிப்பு
இளஞ்
சிவப்பு நிறமானது கருணை, நேர்த்தி, அழகு என்பனவற்றுடன் தொடர்புடையது.
அத்துடன் இனிமையையும், கவித்துவமான காதலையும் அது பிரதிபலிக்கின்றது.
கடும்
இளஞ்சிவப்பு நிற ரோஜாவானது நன்றியையும், மதிப்புணர்வையும்
வெளிப்படுத்துவதுடன் நன்றி கூறுவதற்காக சிவப்பு நிற ரோஜாவை வழங்குவது சில
கலாசாரங்களில் ஒரு பாரம்பரியமாகவுள்ளது.
மிருதுவான
இளம் சிவப்பு நிறமானது சாந்தம், மதிப்பு என்பவற்றை வெளிப்படுத்துகிறது.
அதேவேளை, அனுதபாபத்தை தெரிவிப்பதற்கும் இளம் சிவப்பு நிற ரோஜா
பயன்படுத்தப்படுகிறது.
வெள்ளை ரோஜா: தூய்மை, அப்பாவித்தனம், அனுதாபம், ஆன்மீகம்
வரலாற்றின்
ஆரம்ப காலத்தில் இந்த வெள்ளை ரோஜாவை உண்மையான காதலின் குறியீடாக
பயன்படுத்தினர். பின்னர் அதன் இடத்தை சிவப்பு ரோஜா பிடித்துக்கொண்டது.
மணமகள் ரோஜா எனவும் இது குறிப்பிடப்படுகிறது. சில மதங்களில் மணமகளை வெள்ளை
ரோஜாவால் அலங்கரிப்பர். இந்த வகையில், ஐக்கியம், ஒழுக்கம், புதிய காதலின்
தூய்மை என்பனவற்றை வெள்ளை ரோஜா குறிக்கிறது.
அதேவேளை
கௌரவம், பெருமதிப்பு என்பனவற்றையும் வெள்ளை ரோஜா
பிரதிநிதித்துவப்படுத்துகிறது. எனவே பிரிந்து விடைபெற்றுச் செல்லும்
அன்புக்குரியவர்களுக்கு வெள்ளை ரோஜா வழங்கப்படுவதுண்டு.
செம்மஞ்சள் ரோஜா: ஆர்வம், மதிப்பு
மஞ்சளும்
சிவப்பும் கலந்த செம்மஞ்சள் ரோஜாவானது நட்பை குறிக்கும் மஞ்சள்
ரோஜாவுக்கும் காதலை குறிக்கும் சிவப்பு ரோஜாவுக்கும் இடையிலான பாலமாக
கருதப்படுகிறது.
ஆர்வத்தை இது வெளிப்படுத்துகிறது. 'நான் உங்களை மதிக்கிறேன்' என்பதை கூறுவதற்கு செம்மஞ்சள் ரோஜா அன்பளிப்புச் செய்யப்படுகிறது.
ஊதா ரோஜா: வசீகரம், ராஜகம்பீரம்,கண்டவுடன் காதல்
No comments:
Post a Comment