Posted On April 05,2012,By Muthukumar |
விதவிதமான
சேனல்கள் கண்டு பிடிக்க முடியாத அளவுக்கு டி.வி.யில் ஏகப்பட்டவை
இருக்கின்றன. இடத்தை விட்டு நகராமல் பார்த்துக் கொண்டு இருக்ககூடாது. அது
கண்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். முதலில் தெரிந்து கொள்ளவேண்டியது.
நீங்கள் பார்த்து கொண்டிருக்கும் டி.வி.யின் அளவு எத்தனை அங்குலம் என்று. 9
அங்குலம் 12, 14, 19, 22, 24, 26, 32, 42, 50, 65, 103 ஏன் 160 அங்குலம்
வரை மிகப்பெரிய டி.வி மார்க்கெட்டில் விற்பனைக்கு இருக்கிறது. நீங்கள்
வீட்டில் எந்த அளவுள்ள டி.வி. வைத்திருக்கிறீர்களோ, அந்த டி.வி.யின்
ஸ்கிரீன் அளவு எத்தனை அங்குலம் என்று தெரிந்து வேண்டும்.
ஏழு முதல் பதினான்கு அங்குலம் டி.வி.
உங்கள்
டி.வி. ஸ்கீரின் அளவு சுமார் 7 மடங்கு இருப்பின் 4அடி தூரத்தில் தள்ளி
உட்கார்ந்துதான் டி.வி. பார்க்க வேண்டும். அதாவது உதாரணத்திற்கு 19
அங்குலம் ஸ்கிரீன் அகலமுள்ள டி.வி. நீங்கள் வைத்திருந்தால் 19 அங்குலம் X
7= 133 அங்குலம் அதாவது சுமார் 11 அடி தூரத்தில் உட்கார்ந்துதான் டி.வி.
பார்க்க வேண்டும்.
14
அங்கு டி.வி. என்றால் 98 அங்குலம் அதாவது சுமார் 8 அடி தூரத்தில்
உட்கார்ந்து டி.வி. பார்க்க வேண்டும். இந்த டி.வி. அகலம், அளவு கணக்கு
எல்லாம் தெரியவில்லை என்றால் கவலையே பட வேண்டாம். எந்த டி.வி.யாக
இருந்தாலும் குறைந்தது 3 மீட்டர் அதாவது 10 அடி தள்ளி உட்கார்ந்து டி.வி.
பாருங்கள். கண்களுக்கு பாதிப்பு ஏற்படாது.
சம உயரத்தில் உட்கார்ந்துதான் டி.வி. பார்க்க வேண்டும்.
ரூமுக்கு
ஏற்றபடிதான் டி.வி. வாங்க வேண்டுமே தவிர டி.வி.க்கு ஏற்றபடி ரூமை மாற்ற
முடியாது. ரூம் பெரியதாக ஆக இருந்தால் டி.வி.யும் பெரிதாக செலக்ட்
பண்ணலாம். டி.வி. பார்ப்பவரும் டி.வி.யும் தரையிலிருந்து ஒரே உயரத்தில்
இருக்க வேண்டும். டி.வி. அதிக உயரத்திலும், பார்ப்பவர் கீழேயும்
உட்கார்ந்து பார்க்கக் கூடாது. பெரும்பாலான குழந்தைகள் தரையில் உட்கார்ந்து
கொண்டோ, கட்டிலில் படுத்துக் கொண்டோதான் டி.வி. பார்ப்பார்கள் இது தவறு.
சம
உயரத்தில் உட்கார்ந்துதான் டி.வி. பார்க்க வேண்டும். டி.வி. மேலேயும்
பார்ப்பவர் கீழேயும் உட்கார்ந்து டி.வி.யை அதிக நேரம் பார்த்தால் கண்
சீக்கிரம் களைப்படைந்து விடும், கழுத்து தசைகள் எல்லாம் வலி எடுக்க
ஆரம்பித்துவிடும். எனவே சம உயரத்தில் உட்கார்ந்து டி.வி. பார்த்துப்
பழகுங்கள். அதிக நேரம் தொடர்ந்து டி.வி. பார்ப்பதைத் தவிர்க்க வேண்டும்.
2 நிமிடம் கண்களை மூடிக்கொண்டு அமரலாம்
ஒரு
திரைப்படத்தை தொடர்ந்துதான் பார்த்தாக வேண்டும். அதற்காக 21/2 மணி நேர
படத்தை ஒரு மணி நேரம் மட்டும் பார்த்துவிட்டு நடுவில் விட்டுவிட்டு வர
முடியாது. குறைந்தது, விளம்பரம் போடுகிற இடைவேளையிலாவது டி.வி. ரூமைவிட்டு
எழுந்து அடுத்த ரூமுக்கு போய் ஒரு சுற்று சுற்றிவிட்டு வந்து மறுபடியும்
படம் பார்க்க ஆரம்பிக்கலாம்.
அல்லது
2 நிமிடம் கண்ணை மூடிக்கொண்டு உட்கார்ந்திருந்து மறுபடியும் பார்க்க
ஆரம்பிக்கலாம். இந்த மாதிரி இடைவெளிவிட்டு மறுபடியும் டி.வி. பார்ப்பது
கண்களுக்கு நல்லது. டி.வி.யை தொடர்ந்து அதிக நேரம் பார்ப்பவர்களுக்கும்,
கம்ப்யூட்டரில் தொடர்ந்து அதிக நேரம் உட்கார்ந்து வேலை பார்ப்பவர்களுக்கும்
சில நேரங்களில் தலைவலி வர வாய்ப்புண்டு.
இடைவெளிவிட்டு அமர்வது நல்லது
இம்மாதிரி
தலைவலியை சந்திப்பவர்கள், கண்டிப்பாக கொஞ்சம் இடைவெளிவிட்டு அமர்வது
நல்லது. டி.வி. பார்க்கும் ரூமில் எல்லா விளக்குகளையும் அணைத்துவிட்டு
டி.வி.யை பார்ப்பது நல்லதல்ல, டி.வி. வெளிச்சம் போக அந்த ரூமில் ஏதாவது ஒரு
விளக்கு கண்டிப்பாக எரிய வேண்டும். சிலர் சினிமா தியேட்டரில் படம்
பார்க்கும், எபெக்ட்டை வீட்டில் உருவாக்கி விடுவார்கள்.
மொத்த
ஜன்னலையும் மூடி மொத்த ஸ்கிரீனையும் போட்டு எல்லா விளக்குகளையும் அணைத்து
ரூமை நன்றாக இருட்டாக்கி டி.வி. பார்ப்பார்கள். இது கண்ணுக்கு கெடுதி.
டி.வி.யிலிருந்து வரும் வெளிச்சமும் அந்த ரூமிலுள்ள வெளிச்சமும் ஒரே அளவில்
இருக்க வேண்டும். டி.வி.யிலிருந்து வரும் வெளிச்சம் அதிகமாகவும்,
ரூமிலுள்ள வெளிச்சம் குறைவாகவும் அல்லது டி.வி. வெளிச்சம் குறைவாகவும்,
ரூம் வெளிச்சம் அதிகமாகவும் இருக்கக்கூடாது.
கவனம் அவசியம்
இது
கண்களுக்கு நல்லதல்ல. டி.வி.க்கு பக்கத்திலோ, பின்னாலேயோ எங்கிருந்தோ
மறைமுகமாக ஒரு வெளிச்சம் அந்த ரூமில் இருக்க வேண்டும். அதே நேரத்தில்
ரூமிலுள்ள வெளிச்சம் டி.வி. ஸ்கிரீனில் பட்டு உங்கள் கண்ணுக்கு திருப்பி
வராமல் பார்த்துக் கொள்ள வேண்டும். டி.வி. ரூமைச் சுற்றி வெளிச்சம்
வைத்துக்கொண்டு டி.வி.யைப் பார்த்தவர்கள் பல பேருக்கு கண் அசதி குறையும்,
கண் சோர்வு குறைவும், கண் களைப்பு குறைவும், வெளிச்சத்தால் மூளை தூண்டுதல்
குறைவாக இருப்பதாகவும் `லைட் ரிசர்ச் சென்டர்` விஞ்ஞானி `யுகியோ அகாஷி'
கூறுகிறார்.
எனவே
டி.வி. பார்க்கும்போது கண்களின் நலனைப் பாதுகாக்க விரும்பினால்,
குறிப்பிட்ட தூரத்தில் இருந்து பார்ப்பதுடன், சிறிது இடைவேளை விட்டு டி.வி.
பாருங்கள்
No comments:
Post a Comment