Lord Siva

Lord Siva

Sunday, 1 April 2012

புடவையில் மின்னும் பெண்கள் அழகு..!!

Posted On April 01,2012,By Muthukumar


நம் அழகை பேணி காப்பதில் ஆடைக்கு முக்கிய பங்கு உண்டு.அதில் நமது பராம்பரிய புடவை யை சொல்ல வேண்டியதில்லை..ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வித ஆடை அவர்களை அழகு படுத்தும் ..

பொதுவாக ஒல்லியாக இருக்கும் பெண்கள் இருக்கமாக ஆடை அணியக்கூடாது ..புடவை கட்டும் போது ரவிக்கையும் இறுக்கமாக இல்லாமல் சற்றுத் தொளதொளவென்று அணிய வேண்டும். பருமனான உடல்வாகு கொண்டவர்கள் இறுக்கமாக உடை அணிவது பருமனைக் குறைத்துக் காட்டும்.

பருமனான உடல்வாகு கொண்டவர்களுக்கு புடவை இளவண்ணமுடையதாக இருந்தால் ரவிக்கை சற்று அடர் வண்ணம் உடையதாக இருப்பது நல்லது. புடவையின் வண்ணம் அடர்த்தியானதாக இருந்தால், ரவிக்கை மெல்லிய வண்ணத்தில் இருக்கும் மாறு பார்த்த கொள்ள வேண்டும்.

ஒரே நிறத்தில் புடவை, ரவிக்கை என்று பார்த்து வாங்குவதை விட, இவ்வாறு அணிவது அழகை மேம்படுத்திக் காட்டும்.சாதரணமாக ஷாப்பிங் போன்ற இடங்களுக்கு  போகும்போது சிறிய பூக்கள் போட்ட இளம் வண்ணம் கொண்ட  நைலான் புடவைகளையே பயன்படுத்துங்கள்.




கோவில், கடற்கரை போன்ற பொது இடங்களுக்குச் செல்லும்போது அடர்வண்ணம் கொண்ட காட்டன் புடவைகள் அழகை கூட்டும். உயரமாக உள்ள பெண்கள், தங்கள் உயரத்தைக் குறைத்துக் காட்ட குறுக்குக் கோடு போட்ட புடவைகளைத் தேர்ந்தெடுத்து அணிய வேண்டும்.

குள்ளமான பெண்கள், உயரத்தைச் சற்று அதிகரித்துக் காட்ட நேர்வாக்கில் கோடு போட்ட புடவைகளை அணிய வேண்டும்..

புடவை கட்டும் போது பார்டர், ப்ளீட்ஸ் போன்றவை உடல் வாகுக்குகேத்தவாறு எடுத்து கொள்ள வேண்டும்..நீங்களும் உங்களுக்கேத்த புடவை எடுத்து உங்களை அழகு படுத்துங்கள்..

No comments:

Post a Comment