Lord Siva

Lord Siva

Tuesday, 17 April 2012

மாரடைப்பைத் தடுக்கும் ரத்தப் பரிசோதனை

Posted On April 17,2012,By Muthukumar
நெஞ்சுப் பகுதியில் லேசாக ஒரு வலி வந்துவிட்டால் போதும். இது மாரடைப்பின் அறிகுறியாக இருக்குமோ, இதயத்தில் ஏதாவது பெரிய பிரச்சினை இருக்குமோ, இப்படி இருக்குமோ இல்லை அப்படி இருக்குமோ என்று உடல் முழுவதும் ஒரு கிலி பரவத் தொடங்கிவிடும். இந்தக் கிலியில் நெஞ்சு பகுதியில் வந்த வலி கூட மறைந்து போயிருக்கும். ஆனால், அந்த சிறிய வலி ஏற்படுத்திய, உளவியல் ரீதியிலான பாதிப்பின் அதிர்வுகள் மட்டும் தொடர்கதை ஆகிவிடும்.
இதயத்தில் ஒரு சிறு வலி வந்தால்கூட `ஐயய்யோ நமக்கு மாரடைப்பு வந்துவிடுமோ' என்ற பயத்தில் பதறிப்போகும் பலருக்கும் நிம்மதி தந்துள்ளது அமெரிக்காவின் ஸ்கிரிப்ஸ் டிரான்ஸ்லேஷனல் சயன்ஸ் இன்ஸ்டிடியூட்டில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்று.
`ஒருவருக்கு மாரடைப்பு ஏற்படும் ஆபத்து இருக்கிறதா?' என்பதை கண்டறிந்து சொல்லிவிடும் ஒரு புதிய ரத்தப் பரிசோதனையை இவர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
இதய மருத்துவத்துறையின் லட்சியமே மாரடைப்பு வருமுன் அறிந்து மரணத்தி
லிருந்து மனித உயிர்களை மீட்டுக் கொடுப்பதுதான். அந்த அதிசயத்தை அழகாக செய்து முடிக்கிறது இந்த ரத்தப் பரிசோதனை என்று சிலாகிக்கிறார் இந்த ஆய்வினை மேற்கொண்ட மூத்த ஆய்வாளர்களுள் ஒருவரான மருத்துவர் எரிக் டோபால். மேலும், இந்தக் கண்டுபிடிப்பு, இதய மருத்துவத்தின் எதிர்காலத்தையே மாற்றியமைக்க போகிறது என்கிறார் டோபால்.
அது சரி, இதய நோயாளிகளுக்கு மறுவாழ்வு அளிக்கும் இந்த அதிசய பரிசோதனை எப்படிச் சாத்தியமானது?
மாரடைப்பால் பாதிக்கப்பட்டு, அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட சுமார் 50 இதய நோயாளிகளின் ரத்தத்தில் உள்ள `சுழலும் எண்டோதீலியல் உயிரணுக்கள்' (circulating endothelial cells/CEC) உள்ளிட்ட 5 வெவ்வேறு உயிரணுக்கள் ஆய்வு செய்யப்பட்டன.
இந்த ஆய்வின் முடிவில், ஆரோக்கியமானவர்களுடன் ஒப்பிடுகையில் மாரடைப்பால் பாதிக்கப்பட்டவர்களின் ரத்தத்தில் உள்ள சுழலும் எண்டோதீலியல் உயிரணுக்களின் எண்ணிக்கை, வடிவம் மற்றும் இன்னபிற பண்பு நலன்கள் என அனைத்திலும் பல மாற்றங்கள் இருந்தது கண்டறியப்பட்டது. முக்கியமாக, சுழலும் எண்டோதீலியல் உயிரணுக்கள் அளவில் மிகவும் பெரியதாகவும், பல நியூக்லியஸ்களுடனும் இருந்தது குறிப்பிடத்தக்கது.
ரத்த ஓட்டத்தில் சுழன்று கொண்டிருக்கும், மிகவும் அரிதான, ரத்த நாளங்களின் தோலை உருவாக்கும் உயிரணுக்களையே சுழலும் எண்டோதீலியல் உயிரணுக்கள் என்கிறார்கள். `வாஸ்குலோ ஜெனிசிஸ்' என்றழைக்கப்படும் ரத்த நாளங்களின் வளர்ச்சிக்கு இந்த உயிரணுக்கள்தான் அடிப்படை என்பது குறிப்பிடத்தக்கது. இவை மாரடைப்பால் சேதமடைந்த ரத்த நாளங்களுடைய தோலின் மறுவளர்ச்சியை தூண்டி இதயத்தை மறுபடியும் சீராக செயல்பட வைக்கின்றன என்கிறது இதய அறிவியல்.
ஆக, இந்த சுழலும் எண்டோதீலியல் உயிரணுக்கள் எண்ணிக்கையில் குறைந்தாலோ அல்லது அவற்றின் வடிவம் மற்றும் செயல்பாட்டில் தவறான மாற்றங்கள் நிகழ்ந்தாலோ, மாரடைப்பு அல்லது இன்னபிற காரணங்களால் சேதமடையும் ரத்த நாளங்களின் மறுவளர்ச்சி பாதிக்கப்படுகிறது. இதனால் (மறுபடியும்) மாரடைப்பு ஏற்படும்போது மரணம் நிகழ்கிறது.
ஆனால், சுழலும் எண்டோதீலியல் உயிரணுக்களின் தன்மையை முன்னரே பரிசோதித்துக் கண்டறிவதன் மூலம், அதற்கான தகுந்த சிகிச்சைகளை மேற்கொண்டு, வரவிருக்கும் மாரடைப்பினை தவிர்க்க முடியும். அதைத்தான் இந்த புதிய ரத்தப் பரிசோதனை செய்கிறது என்கிறார்கள் மருத்துவர்கள். அதனாலேயே சுழலும் எண்டோதீலியல் உயிரணுக்களை வரவிருக்கும் மாரடைப்பினை கண்டறியும் `பயோ மார்க்கர்' அல்லது `அடையாளம் காட்டிகள்' என்கிறார்கள்.
வருடத்துக்கு 25 லட்சம் அமெரிக்கர்கள் மற்றும் பல லட்சம் இதர உலக நாட்டவர்களின் உயிர்களை பலி கொண்டுவரும் மாரடைப்பினை வருமுன் கண்டறிந்து, தக்க சமயத்தில் சரியான சிகிச்சைகளை மேற்கொள்ள உதவும் இந்த அதிசய பரிசோதனை எவ்வளவு இன்றியமையாத ஒன்று என்பது சொல்லி புரியவேண்டியதில்லை.
இந்த ரத்தப் பரிசோதனை, இன்னும் சில மேலதிக பரிசோதனைகளுக்கு பின்னர் மக்கள் பயன்பாட்டுக்கு தயாராகும் என்கிறார்கள் இதன் கண்டுபிடிப்பாளர்கள். இந்த பரிசோதனை மக்கள் பயன்பாட்டுக்கு வர இன்னும் ஓரிரண்டு வருடங்கள் பிடிக்கும் என்கிறார் இதனை கண்டறிந்த மருத்துவக் குழுவின் தலைமை மருத்துவர்களுள் ஒருவரான மருத்துவர் ராகவா கொல்லப்புடி.

ரத்த அழுத்தத்திற்கான சிகிச்சையில் புரட்சி

Posted On April 17,2012,By Muthukumar
ரத்த அழுத்தம் எந்த கட்டத்தில் இருந்தாலும், அதற்கான சிகிச்சை இருக்கிறதென்றாலும், இந்த பாதிப்பை தெரிந்து கொண்ட உடனே, சிகிச்சை எடுத்துக் கொண்டால், பல தேவையற்ற விளைவுகளையும், சிக்கலையும் தவிர்க்கலாம். உலக மக்கள் தொகையில் பாதிபேர், ரத்த அழுத்த நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இப்போது, 22 - 30 வயது நிரம்பியவர்களுக்குக் கூட, உயர் ரத்த அழுத்தம் இருப்பதை காணமுடிகிறது. குறிப்பாக, ஐ.டி., துறையிலுள்ள இளைஞர்கள், அதிகம் பாதிக்கப்படுகின்றனர். இதில், பெண்களும் அடங்குவர். கிடைத்த நேரத்தில், தகாத உணவு சாப்பிடும் பழக்கத்தால் இந்த நிலை.
இந்த ரத்த அழுத்த நோயின் விளைவுகள், வயது ஏற ஏற, அதிகமாகி கொண்டே வருகிறது. "ஸ்டிரோக்' என்ற, மூளையில் ரத்த கட்டி ஏற்பட்டு, தலை சுற்றல், மயக்கம், உடலின் பாதி செயலிழப்பு, இதய ரத்த குழாய் அடைப்பினால் ஏற்படும் மாரடைப்பு, மார்புவலி, மூச்சு இரைப்பு, படபடப்பு, இதய வீக்கம், இதயச் செயலிழப்பு, சிறுநீரக பாதிப்பு போன்றவை, உயர் ரத்த அழுத்தத்தின், தகாத விளைவுகள். இதனால், குடும்ப அமைதி இன்மை, பொருளாதார சீரழிவு, மருத்துவ செலவு போன்றவை ஏற்படுகின்றன. இந்த ரத்த அழுத்தத்தினால், ஸ்டிரோக் ஏற்பட்டு, பக்கவாதம் வந்து தடுமாறும் முதியோருக்கு, பராமரிப்புக்கான மருத்துவச் செலவு ஏற்படுகிறது. மேலும், இவர்களை கவனிக்க, தனிநபர் தேவை. இதனால், குடும்பத்தில் பொருளாதார சிக்கல் ஏற்படுகிறது. ஆக, முதியோர் வாழ்க்கை நரகமாகிறது. இந்த பாதிப்போடு, இதய நோயும் ஏற்பட்டு விட்டால், இந்த முதியவரை, குடும்பத்தின் மற்ற உறுப்பினர்கள், பாரமாக கருதுகின்றனர். இன்றைய இளைய சமூகத்தினரிடையே, முதியோர், வீட்டின் மூலையில் கிடக்கும் குப்பை போல் ஆகின்றனர்.
1ஏன் உயர் ரத்த அழுத்தம் குறைவதில்லை?
நவீன வாழ்க்கையின் வேகத்தில், பரபரப்பான நிலையற்ற வேலை, ஊதிய பற்றாக்குறை, ஆகியவற்றால், மன அழுத்தம், அடிக்கடி ஓய்வில்லாமல் பிரயாணம் செய்வது, சரியாக மருந்து, மாத்திரைகள் சாப்பிடாமல் இருப்பது, ஆகிய காரணங்களால், ரத்த அழுத்தம் குறையாத நிலை ஏற்படுகிறது. தனி மனித ஒழுக்கத்தை கடைப்பிடிக்காதது தான், இதற்கு காரணம். உடற்பயிற்சி, நடைபயிற்சி, கடுமையான உணவு கட்டுப்பாடு இல்லாததும், முக்கிய காரணம்.
2சிக்கலான உயர் ரத்த அழுத்தத்தை எப்படி கண்டறிவது?
பல ஆண்டுகளாக இருக்கும் ரத்த அழுத்தம், மேற்கூறிய காரணங்களால், மருந்துகளால் குறைக்க முடியாத நிலை ஏற்பட்டு, சிக்கலாகி விடுகிறது. ஒரு மாத்திரையின் அளவை, இரண்டு, மூன்று, நான்கு என்று கூட்டிய பிறகும், ரத்த அழுத்தம் குறைந்து, 130 / 90க்குள் வரவில்லை எனில், இது, சிக்கலான உயர் ரத்த அழுத்தம் என்று அழைக்கப்படுகிறது. விருதாசலத்திலிருந்து வரும், 58 வயதுள்ள என் நோயாளி ஒருவருக்கு, ரத்த அழுத்தம், 180/140க்கு குறைவதில்லை. இவருக்கு, எல்லாவித மருந்து மாத்திரைகள் கொடுத்தும் பலனில்லை. ஆஞ்சியோ கிராம் செய்யும் போது, மருந்து உள்ளே செலுத்திய நேரத்தில் மட்டும், ரத்த அழுத்தம் குறைந்தது. அதன் பின், அழுத்தம் பழையபடி, "எகிறி' விட்டது.
3ரத்த அழுத்தத்தில் சிறுநீரக பங்கு என்ன?
சில சமயங்களில், சிறுநீரகத்தில் ரெனின் என்ற, நொதி வெளி வருகிறது. இது, ராஸ் என்ற செயல்முறையை தூண்டுகிறது. இதனால், மூளையிலுள்ள நரம்பு மண்டலத்தை இயக்கி, ரத்த நாளத்தை சுருங்க வைத்து, உயர் ரத்த அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. இந்த ரத்தநாள சுருக்கத்தினால் ஏற்படும் பின்விளைவு தான், ரத்த அழுத்தம். ஆக, முக்கிய காரணி சிறுநீரகத்தின் ரத்த நாளத்திலுள்ள, சிம்பதிட்டிக் நரம்புகள் தான். இதன் இயக்கத்தால் தான், ரத்த அழுத்தம் ஏற்படுகிறது. இதற்குத் தீர்வு, "ரீனல் நெர்வ்
டீனெர்வேஷன்' என்ற சிகிச்சை முறை.
4"ரீனல் நெர்வ் டீனெர்வேஷன்' இந்தியாவுக்கு வருமா?
முடியாது. காரணம், இந்த முறைக்கு செலவு அதிகம். அரசும் இதை அறிமுகப்படுத்த, ஏகப்பட்ட செலவாகும். இந்தியாவிலுள்ள கார்ப்பரேட், டிரஸ்ட் மருத்துவமனைகளுக்கு இது வர முடியும். இந்த சிகிச்சைமுறை, ஆய்வுகளில் உள்ளது.
இந்த சிகிச்சையின் பலன், எப்படி, எத்தனை நாள் இருக்கும், திரும்பவும் உயர் ரத்த அழுத்தம் வருமா, நரம்பு உயிர் பெற்று எழுந்து, ரத்த அழுத்தம் மீண்டும் திரும்புமா என்பது போன்ற, ஆயிரக்கணக்கான கேள்விகளுக்கு பதில் இல்லை!
பொறுத்திருந்து பார்ப்போம்.
"ரீனல் நெர்வ் டீனெர்வேஷன்' சிகிச்சை முறை
இது, 2011ல், பாரீசில் நடந்த, ஐரோப்பிய இதய நோய் கழகத்து ஆண்டு மாநாட்டு துவக்க உரையாக இருந்தது. சிறுநீரகத்திற்கு ரத்தத்தை எடுத்துச் செல்லும் ரத்த நாளத்தின் உட்சுவரில், இந்த "ரீனல்' நரம்புகள், வேர்கள் போல் படர்ந்திருக்கும். இந்த நரம்புகளின் இயக்கத்தால் தான், உயர் ரத்த அழுத்தம் ஏற்படுகிறது. இந்த நரம்புகளை செயல் இழக்க செய்ய வேண்டும்.
எப்படி?
தொடைவழியாக, ரத்த குழாய் மூலம், ஒரு பிளாஸ்டிக் குழாயை உள்நோக்கி ஊடுருவி, சிறுநீரக ரத்த நாளத்தினுள் குழாயை செலுத்தி, இந்த சிகிச்சை முறைக்கு என, தயார் செய்யப்பட்ட கத்தீட்டரையும், உட்செலுத்த வேண்டும். குழாயின் முனையில், ஆர்.எப்., தகடு இருக்கும். இதை, ரீனல் ரத்த நாளத்தின் உட்பகுதியில் செலுத்தி, ஆர்.எப்., மெல்லிய பாட்டரி மூலம் இயக்க வேண்டும். இந்த அதிர்வு அலைகளால், நுண் நரம்புகள் துண்டிக்கப்பட்டு செயலிழக்கின்றன. இதனால், ரத்த அழுத்தம் குறைகிறது.

Friday, 13 April 2012

பன்றிக் காய்ச்சல் -தடுப்பூசி அவசியமா

Posted On April 13,2012,By Muthukumar
"பன்றிக் காய்ச்சல் தொடர்பான சுகாதாரத் துறை அமைச்சரின் அறிவிப்பும்; காய்ச்சலை பரப்பும் வைரஸ் பற்றிய தகவலும், பன்றிக் காய்ச்சல் தடுப்பூசி குறித்த குழப்பத்தை, மக்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.தமிழகத்தில், பன்றிக் காய்ச்சலின் தாக்கம் அதிகம் உள்ள, சென்னை மற்றும் கோவை மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள், தடுப்பூசி விஷயத்தில் குழப்பமான மனநிலையில் உள்ளதாகத் தெரிகிறது. அவசியமில்லை:"தொற்று நோய் அளவுக்கு, பன்றிக் காய்ச்சலின் தாக்கம் இல்லாததால், தடுப்பூசி தேவையில்லை' என, சுகாதாரத் துறை அமைச்சர் கூறுகிறார். ஆனால், காய்ச்சலால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை, நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.மேலும், காய்ச்சலை பரப்பும், "எச்1 என்1' வைரஸ், பருவ நிலைக்கு ஏற்ப, தன்னை
தகவமைத்துக் கொள்ளும்; பன்றிக் காய்ச்சல் தடுப்பூசி, ஓராண்டில் காலாவதி ஆகிவிடும் போன்ற தகவல்கள், தடுப்பூசி தொடர்பான குழப்பத்தை அதிகரித்துள்ளது.
காலாவதி தேதி...:இதுகுறித்து, தடுப்பு மருத்துவப் பிரிவைச் சேர்ந்த நிபுணர் ஒருவர் கூறியதாவது: பன்றிக் காய்ச்சலுக்கான தடுப்பூசி, ஓராண்டிற்குள் காலாவதி ஆகும்படி இருந்தால், அதில் பயன்படுத்தப்படும் வேதிப் பொருட்களின் இயல்பும் காரணமாக இருக்கலாம். "எச்1 என்1' வைரஸ், உருமாற்றம் பெற்று விட்டதாக, உலக சுகாதார நிறுவனம், இதுவரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.எனவே, கடந்த முறை தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் (ஓராண்டிற்கு முன்), தற்போது மீண்டும் போட வேண்டிய அவசியம் இல்லை. மற்றவர்கள், பன்றிக் காய்ச்சலின்
பீதியிலிருந்து விடுபட, தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம்.வெளிச் சந்தையில் கிடைக்கும், "பான்டிபுளு' தடுப்பூசியின் காலாவதி தேதியை, கவனித்து வாங்க வேண்டும். மருத்துவரின் ஆலோசனைப்படி மட்டுமே, இதை போட்டுக் கொள்ள வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.
பரிசோதனைக்கு ரூ.3,000:பன்றிக் காய்ச்சல் நோய் கண்டறிவதற்கான பரிசோதனை செய்ய, 12 தனியார் ஆய்வகங்களுக்கு, தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. ஆய்வக உரிமையாளர்களுடன், சுகாதாரத் துறை அமைச்சர் விஜய், நேற்று முன்தினம் ஆய்வுக் கூட்டம் நடத்தினார். கூட்டத்தில், நோய் கண்டறியும் பரிசோதனைக்கு, 5,000 முதல், 7,000 ரூபாய் வரை இருந்த கட்டணத்தைக் குறைத்து, 3,000 ரூபாய் மட்டுமே, அனைத்து அங்கீகரிக்கப்பட்ட தனியார் ஆய்வகங்களும் வசூலிக்க வேண்டும் என, அமைச்சர் வேண்டுகோள் விடுத்தார். ஆய்வக உரிமையாளர்கள், இதை ஏகமனதாக ஏற்றுக் கொண்டனர்.பன்றிக் காய்ச்சல் நோய் குறித்த பரிசோதனை விவரங்களை, அரசுக்கு உடனுக்குடன் தெரிவிக்க, அனைத்து அங்கீகரிக்கப்பட்ட ஆய்வகங்களும் அறிவுறுத்தப்பட்டுள்ளன. தனியார் ஆய்வகங்களில் மேற்கொள்ளப்படும் பரிசோதனை, அரசின், "கிங்' நிலைய ஆய்வகத்தின் மூலம், தரக் கட்டுப்பாடுக்கு உட்படுத்தப்படும் என்றும் கூட்டத்தில் முடிவெடுக்கப் பட்டது

ஆயுர்வேத சித்த மருத்துவ புத்தகங்கள்-14-இ புத்தங்களின் தொகுப்பு ..இலவச தகவிறக்கம்


Posted On April 13,2012,By Muthukumar



ஆயுர்வேத சித்த மருத்துவ புத்தகங்கள்
No. புத்தகத்தின் பெயர்
புத்தகத்தை தொகுத்தவர் -எழுத்தர்
இலவச தகவிறக்கம் செய்ய
1 மூலிகை  மர்மம்  முனிசாமி  Free Tamil eBooks
2 எளிதாக சித்த மருத்துவத்தை உபயோகிப்பது எப்படி
எஸ் .முத்து  Free Tamil eBooks
3 போகர்  7000 சப்தகாண்டம்  சித்தர்  போகர்
Free Tamil eBooks
4 தேரையர்  காப்பியம்  பொருளுடன்  தேரையர்
Free Tamil eBooks
34MB
5 தேரையர்  கரிசாலை  தேரையர்
Free Tamil eBooks
6 சித்தர்  வைத்தியம்  துடிசை கிழார்  Free Tamil eBooks
7 வைதியனுகுல  ஜிவரட்சனி  அங்கமுத்து  Free Tamil eBooks
8 அன்றாட வாழ்வில் சித்த மருத்துவம்
மருத்துவர் காசி பிச்சை
Free Tamil eBooks
9 மறந்து விட்ட சித்த மருந்துகள்
மருத்துவர் காசி பிச்சை Free Tamil eBooks
10 விவரிக்கப்பட்ட சித்த மருத்துவம் -படங்களுடன்

Free Tamil eBooks
11 வர்மக்கலை
கே .காளிதாசன்
Free Tamil eBooks
12 சித்த மருத்தவ மூலிகைகள்

Free Tamil eBooks
13 சரக சம்ஹிதை

Free Tamil eBooks
14 ஆயுர்வேத வரலாறு

Free Tamil eBooks

வளைந்திருக்கும் ஆணுறுப்புக்கள்!

Posted On April 13,2012,By Muthukumar

 எல்லா ஆண்களிலும் ஆணுறுப்பு விறைப்படையும்போது  போது நேராக இருப்பதில்லை.சில பேருக்கு நாப்பத்தைந்து டிக்கிரி வரைகூட வளைவு இருக்கலாம்.

அதிகமாக வளைவு சில நோய்களின் போதும் ஏற்படலாம். ஆனாலும் இந்த நோய்களுக்கு தீர்வுகள் உள்ளன.இதனால் உங்கள் இல்லறமே பாதிக்கப்படும் என்று அச்சம் கொள்ள வேண்டியதில்லை.



இனி ஆணுறுப்பிலே வளைவை ஏற்படுத்தக் கூடிய சில நோய்களைப் பார்ப்போம்!

ஹைப்போ ஸ்பாடியாசிஸ்(Hypospadiasis)




சாதாரணமாக சிறுநீர் மற்றும் விந்து வெளியேறும் துளையான்து ஆணுறுப்பின் நுனியில்தான் இருக்கும் .ஆனால் இந்த நோயினால் பாதிக்கப் பட்ட ஆண்களுக்கு அத்துளையானது நுனிப்பகுதியில் அல்லாமல் அடிப்புறமாக ஆணுறுப்பின் தண்டுப் பகுதியில் இருக்கும். இதனால் ஆணுறுப்பு வளைந்துள்ளது போன்ற தோற்றம் ஏற்படலாம்.
இதற்கு சத்திர சிகிச்சை மூலம் வேறு ஒரு துளையை ஆணுறுப்பின் நுனியில் ஏற்படுத்துவதன் மூலம் தீர்வு காணப்படலாம்.


பைமொசிஸ் (phimosis)



பொதுவாக ஆணுறுப்பு விறைப்படையும் போது  அதன் முன் தோல் பின்நோக்கி இழுபடும் . ஆனால் சில பேரிலே இந்த முன் தோல் பின்நோக்கி இழுபட முடியாமல் இருக்கும். இதனால் ஆணுறுப்பிலே சில வேளைகளில் வளைவு ஏற்படலாம்.

இதற்கு சிறிய சத்திர சிகிச்சை மூலம் தீர்வு காணப் படலாம். இந்த சத்திர சிகிச்சை circumcision எனப்படும் ,  இது முஸ்லிம் மக்கள் செய்து கொள்ளும் சுன்னத்து எனப்படும் செயன் முறையாகும்.

சிறுநீர் வழிச் சுருக்கம்.(urethral stricture)

சிறுநீர் வெளியேறும் குழாய் போன்ற அமைப்பு ஆணுறுப்பின் உள்ளே இருக்கிறது. அது  urethra எனப்படும். இது சுருங்குவதால் ureththral stricture) ஏற்படுகிறது. இதனால் கூட ஆணுறுப்பு வளைந்துள்ளது போன்ற மாயை ஏற்படலாம்.


பயரோநியஸ் நோய் (Peyronie's disease )

இந்த நோயினால் பாதிக்கப்பட்ட ஆணுறுப்பிலே தோலுக்குக் உள்ளாக இருக்கும் பகுதி சற்று தடிப்பு(கடினமடைவதால்) அந்த ஆணுறுப்பு விறைப்படையும் போது இவ்வாறு தடிப்படைந்த பகுதியை நோக்கி வளைந்து காணப்படும்.

சில வேளைகளில் அவர்களுக்கு வலி கூட ஏற்படலாம்.
சில ஆண்களிலே உடலுறவிலேயும் பாதிப்பை ஏற்படுத்தலாம்..
முக்கியமாக இதனால் பாதிக்கப்பட்ட ஆண்களுக்கு மனதளவிலே பெரிய அழுத்தங்கள் ஏற்படலாம்.அதுவே அவர்களின் இல்லறத்தைப் பாதிக்கலாம்.


இந்த நோயின் அறிகுறிகள்

இது படிப்படியாக ஏற்படலாம் அல்லது சிலரிலே சடுதியாகக் கூட ஏற்படலாம்.
முக்கிய அறிகுறி  ஆணுறுப்பு விறைப்படையும் போது ஒருபக்கமாக வளைந்திருத்தல்.அநேகமானவர்களில் இந்த வளைவு மேல் நோக்கியதாகவே இருக்கும். ஆனாலும் சிலபேரில் கீழ் நோக்கியதாக அல்லது பக்கவாட்டில்  இருக்கலாம்.
அடுத்த முக்கியமான அறிகுறி ஆணுறுப்பிலே வலி ஏற்படுதல்.
சில பேரிலே விறைப்புத்தன்மை ஏற்படுவதையே இது தடுக்கலாம்.
சிலவேளைகளில்  ஆணுறுப்பு சிறிதாவது போன்ற தோற்றம் ஏற்படலாம்.

இது என்ன காரணத்தால் ஏற்படுகிறது?

சரியான காரணம் அறியப்படா விட்டாலும் , இது ஆணுறுப்பிலே ஏற்படும் காயங்கள் காரணமாக ஏற்படும் தழும்புகள் காரணமாகவே  ஏற்படுவதாக சொல்லப் படுகிறது.
புகைப் பிடிப்பவர்களுக்கும் , நீரழிவு நோயாளிகளுக்கும் இந்த நோய் ஏற்படுவதற்கான சந்தர்ப்பம் அதிகம் என்று சொல்லப் படுகிறது.

இந்த நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் எப்போது வைத்தியரை நாட வேண்டும்?

இந்த  நோய் இருக்கும் எல்லா ஆண்களிலும் இது வலியை ஏற்படுத்துவதில்லை. அதே போல வளைவு இருந்தாலும் இது எல்லோரிலும் உடலுறவுக்கு   இடையூறாக இருப்பதும் இல்லை.
ஆகவே ஆணுறுப்பிலே ஏற்படும் வளைவு காரணமாக உங்களுக்கு வலி ஏற்பட்டாலோ அல்லது அது உடலுறவுக்கு இடையூறாக இருந்தால் மட்டுமே நீங்கள் வைத்தியம் பெற்றுக் கொள்ள வேண்டியவர்யாகுறீர்கள்.

இதற்கு எவ்வாறான வைத்தியங்கள் செய்யப்படலாம்?

மாத்திரைகள் மூலம் இதற்கு சரியான தீர்வு கிடைப்பதற்கான சந்தர்ப்பம் மிகக் குறைவு.
சிறிய  சத்திர  சிகிச்சை மூலம் தடிப்படைந்த பகுதி அகற்றப்படலாம்.


மேலே கேள்வி கேட்ட நண்பர்களுக்கு நான்மீண்டும்  சொல்லிக் கொள்ளுவது என்னவென்றால் , நீங்கள் உங்கள் ஆணுறுப்பு வளைந்து இருப்பதாக மட்டுமே சொன்னீர்கள். அது எந்த அளவுக்கு வளைந்து இருக்கிறது  என்று கூடசொல்லவில்லை  .சிலவேளை அது சாதாரண வளைவாகக் கூட இருக்கலாம்.

இருந்தாலும் நான் கூறியுள்ள விடயங்கள்  மூலம் அந்த நோய்களுக்கான சந்தர்ப்பம் உங்களுக்கு உள்ளது  என்று நினைத்தாலோ   அல்லது இது உங்களுக்கு பாலியல் மற்றும் உளவியல் ரீதியாக பிரச்சினைகளைக் கொடுக்கிறதா என்பதைப் பொறுத்து நீங்கள் வைத்திய வசதியைப் பெற்றுக் கொள்ளுவது உகந்தது.

ஆனாலும் இதனால் உங்களுக்கு உடலுறவிலே ஈடுபடும் தகுதி இல்லை என்று தேவை இல்லாமல் மனத்தைக் குழப்பிக்கொள்ள வேண்டாம்.

Wednesday, 11 April 2012

ரத்த அழுத்தத்தை அதிகமாக்கும் வலி நிவாரண மாத்திரைகள்

Posted On April 11,2012,By Muthukumar
ரத்த அழுத்தம் என்பது சத்தமே இல்லாமல் ஆளையே சாய்த்துவிடக் கூடிய ஓர் ஆபத்தான நோய். மாரடைப்பு உள்ளிட்ட பல இதய நோய்களை ஏற்படுத்துவதால் ரத்த அழுத்தமானது ஒரு நோயாக கருதப்படுகிறது.
ரத்த அழுத்தம் ஏற்படுவதற்கு சிறுநீரகக் குறைபாடு மற்றும் நாளமில்லா சுரப்பி புற்றுநோய்கள் போன்றவை காரணமாக இருக்கக் கூடும் என்ற ஒரு சந்தேகம் மருத்துவர்களிடையே இருக்கிறது. ஆனால் உடல் வலியை போக்க கொடுக்கப்படும் வலி நிவாரணிகள் கூட ரத்த அழுத்தத்துக்கு காரணமாக இருக்கக்கூடும் என்கிறது இஸ்ரேலிலுள்ள டெல் அவிவ் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் எகுட் கிராஸ்மேன் என்பவரின் சமீபத்திய ஆய்வு.
வலி நிவாரண மருந்துகளிலுள்ள வேதியல் மூலக்கூறுகள், நேரடியாகவோ அல்லது ரத்த அழுத்தத்துக்கான மருந்துகளின் செயல்பாடுகளில் குறுக்கிடுவதன் மூலமாகவோ, ரத்த அழுத்தத்தை அதிகரிக்க வாய்ப்பு இருக்கிறது என்று விளக்குகிறார். முக்கியமாக, மருந்துகள் மூலம் உண்டாகும் இந்த ரத்த அழுத்தத்திற்கு, நாம் பயன்படுத்தும் பல மருந்துகள் காரணமாக இருக்கும் என்பது மருத்துவ உண்மை. ஆனால் இது குறித்த புரிதல் மருத்துவர்கள், நோயாளிகள் என இரு சாராருக்குமே இல்லை என்பதுதான் மிகவும் ஆபத்தானது என்கிறார் கிராஸ்மேன்.
இது தவிர சிலர் தாமாகவே மருந்துக்கடைகளுக்குச்சென்று நோய் அறிகுறிகளைத்தெரிவித்து மருந்துகள் வாங்குகிறார்கள். இந்த சுய மருத்துவம் மிக ஆபத்தானது. இதுவும் ரத்த அழுத்தம் அதிகரிக்க ஒரு காரணமாக அமைகிறது.
இந்த ஆய்வுகள் மூலம் எந்தெந்த மருந்துகள் ரத்த அழுத்தத்துடன் தொடர்புடையவை என்று கண்டறிந்துள்ளனர். உதாரணமாக, கர்ப்பத்தடை மாத்திரைகள், மனச்சோர்வுக்கான மாத்திரைகள், காயங்கள் மூலமாக உண்டாகும் வலியை போக்கும் மாத்திரைகள் மற்றும் பாக்டீரியாவுக்கு எதிரான கிருமி நாசினிகள் என நீள்கிறது மருந்துகளின் பட்டியல்.
இத்தகைய மருந்துகளால் நோயாளிகளுக்கு ரத்த அழுத்தம் ஏற்பட்டால் அதை சரி செய்ய வேண்டியது மருத்துவர்களுடைய பொறுப்பு. அதனால் இம்மருந்துகளுடைய அளவை குறைப்பது அல்லது ரத்த அழுத்தத்துக்கான ஒரு மருந்தை சேர்த்துக் கொடுப்பது போன்ற வழிமுறைகளை மருத்துவர்கள் கையாள வேண்டியது அவசியம் என்கிறார் பேராசிரியர் கிராஸ்மேன்.
எது எப்படியிருந்தாலும், வலி நிவாரண மருந்துகள் மூலமாக உண்டாகும் ரத்த அழுத்தம் குறித்த விழிப்புணர்வை மருத்துவர்களும், நோயாளிகளும் பெற்றிருக்க வேண்டியது அவசியம். பெரும்பாலான மருத்துவர்கள் இதை கருத்தில் கொள்வதில்லை, சிலருக்கு இது குறித்து தெரிவதேயில்லை. இந்த மருத்துவ உண்மை குறித்த புரிதலை ஏற்படுத்திக் கொண்டு தங்கள் நோயாளிகளை ரத்த அழுத்தத்திலிருந்து காப்பாற்ற வேண்டியது மருத்துவர்களுடைய கடமையாகும் என்கிறார் கிராஸ்மேன்.
பெரும்பாலான சமயங்களில் ஒரு குறிப்பிட்ட நோய்க்கான சிகிச்சையின் பின்விளைவாக ரத்த அழுத்தம் ஏற்படும்போது, அதே சிகிச்சையில் ரத்த அழுத்தத்துக்கான மருந்துகளையும் சேர்த்துக்கொள்ளலாம். ஆனால் பல சூழ்நிலைகளில் அப்படிச் செய்ய முடியாது. காரணம், சில சிகிச்சைகளின்போது உண்டாகும் ரத்த அழுத்தம் அந்த சிகிச்சைக்கு சாதகமான சில மாற்றங்களைச் செய்வதுதான்.
உதாரணமாக, ரத்த நாளங்களின் வளர்ச்சியை தடை செய்யும் புதிய மருந்துகள், ரத்த அழுத்தத்தை அதிகப்படுத்தி புற்றுநோய் கட்டிகளுக்கு ரத்தத்தை கொண்டு செல்லும் புதிய ரத்த நாளங்களின் வளர்ச்சியை தடை செய்கிறது. இந்த மருந்துகள் புற்றுநோய் சிகிச்சையில் மிகுந்த பலனளிப்பதால், இவற்றால் உண்டாகும் ரத்த அழுத்தம் கருத்தில் கொள்ளப்படுவதில்லை என்று தான் நம்புவதாக சொல்கிறார் கிராஸ்மேன்.
ஆனால், அதற்காக சிகிச்சையின் பின்விளைவாக உண்டாகும் ரத்த அழுத்தத்தை கூர்ந்து கவனிக்க வேண்டியதில்லை என்று அர்த்தமில்லை. ஏனென்றால், இந்த மருந்துகள் மூலமாக ஒரு நோயாளிக்கு நீண்ட ஆயுள் கிடைத்த பிறகு, அவர் ரத்த அழுத்தத்தால் உண்டாகும் பிரச்சினைகளான ஸ்ட்ரோக் அல்லது மாரடைப்பு போன்றவற்றால் பாதிக்கப்படக்கூடும் என்று எச்சரிக்கிறார் கிராஸ்மேன்.
இந்த ஆபத்துகளை தவிர்க்க, நோய்களுக்கான சிகிச்சையில் ரத்த அழுத்தத்துக் கான மாத்திரையைச் சேர்த்துக் கொள்வது போன்ற எளிமையான பல வழிகள் இருக்கின்றன. இதனை உணர்ந்து, மருத்துவர்கள் பொறுப்புடன் செயல்பட வேண்டியது அவசியம் என்று கருத்து தெரிவிக்கிறார் கிராஸ்மேன்.

Saturday, 7 April 2012

போரடிக்குதா? புதுசா ட்ரை பண்ணுங்களேன் !

Posted On April 07,2012,By Muthukumar
தாம்பத்யத்தில் தினமும் ஒரே மாதிரியான விளையாட்டு போரடித்து விடும். அது ஆர்வமின்மையை ஏற்படுத்திவிடும். எனவே புதிது புதியாய் கிரியேட்டிவாக சிந்தித்து தாம்பத்ய உறவின் போது ஈடுபடுத்தினால் சுவாரஸ்மாக இருக்கும் என்று ஆலோசனை கூறியுள்ளனர் நிபுணர்கள்.
வாசனை திரவியங்கள்
தலை மற்றும் உடலுக்கு மென்மையாக வாசனைதிரவியங்களையும், எண்ணெய்களையும் பூசினால் அந்த வாசனையானது ஆளை அசத்தும். அப்புறம் என்ன உங்கள் படுக்கையறையில் உற்சாகத்திற்கு கேட்கவா வேண்டும். இயற்கை மூலிகைகள் நிரம்பிய அரோமா ஆயில் உபயோகிப்பது ஆரோக்கியமானது என்று மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். மல்லிகை, ரோஜா போன்ற மலர்களின் வாசனை அடங்கியவை என்றால் ஆட்டம் பாட்டம் அமர்களம்தான்.
கண்ணாமூச்சி விளையாட்டு
ஒருவர் கண்ணை கட்டிக்கொண்டு தொட முயற்சிப்பது உறவிற்கு உற்சாகம் தரும் விளையாட்டு. இது வேண்டும் என்றே தொட அருகில் வருவதும், பின் விலகி ஓடுவதும் என தொட்டு விட தொட்டு விட உறவு தானாய் மலரும். போரடிக்காத இந்த விளையாட்டை அடிக்கடி விளையாடலாம்.
இறகால் வருடலாம்
மென்மையான குஞ்சங்களைக் கொண்ட ஃப்ரஸ்சினால் வருடுவது, இறகால் மென்மையாய் தொடுவது மனதையும், உடலையும் உற்சாகமடையச் செய்யும். எங்கு தொட்டால் சிலிர்க்குமோ, அங்கே இவற்றை உபயோகித்து விளையாடலாம். இது மனதின் ரொமான்ஸ் பக்கங்களை தூண்டிவிடும்.
மாற்றம் தரும் இசை
காதல் உணர்வுகளை தூண்டும் மெல்லிய இசை நிச்சயம் மனதில் உற்சாகத்தை ஏற்படுத்தும். எனவே தினமும் இரவு நேரங்களில் மூடு வர காதல் பாடல்களை கசியவிடுங்கள். அப்புறம் என்ன உற்சாகம் உங்களுக்கு கை கொடுக்கும்.
சுவையான உணவுகள்
காதல் உணர்வுகளை தூண்டுவதில் உணர்வுகளுக்கு முக்கிய பங்குண்டு. கருப்பு திராட்சைகளை கைகளில் எடுத்து ஊட்டிவிட்டு விளையாடலாம். ஜாம், ஜெல்லி, கிரீம் போன்றவைகளை சாப்பிடும் போது விளையாட்டாக முகத்தில் பூசி அதை துடைப்பதுபோல ரொமான்சை தொடங்கலாம்.

Friday, 6 April 2012

லன்டனில் புதிதாக அறிமுகமாகியிருக்கும் “விநோத குளியல்”

தற்போது லன்டனில் புதிதாக அறிமுக மாகியிருக்கிறது பால், தேன், டீ, காபி குளியல்.
லன்டனில் உள்ள பிரீமியர் இன் ஓட்டல் களிலேயே இவ் விநோத குளியல்கள் அறிமுகப்படுத்தப்பட்டு ள்ளன.
பெரிய குளிக்கும் தொட்டியினுள் பால், தேன், சாக்லெட், காபி போ ன்ற பானங்களை வேறு வேறாக நிரப்பி விதவிதமான பெயர்க ள் மூலம், வாடிக்கையாளர்களின் விருப்புக்கு அமைய குளியல் மேற் கொள்ளப்படுகிறது.
22 வயதாகும் Rebecca Carroll எனும் பயிற்சி பெற்ற பிசியோதெரபி நிபு ணர் தலைமையில் குளியல் செயன் முறை கண்காணிக்கப்படுகிறது.
இக் குளியல் மூலம் சருமப் புத்துணர் ச்சி, நிம்மதியான தூக்கம் போன்றவை ஏற்படுவதாக வாடிக்கை யாளர்களால் தெரிவிக்கப்படுகிறது.
ஐந்து நட்சத்திர அந்தஸ்து கொண்ட இக் குளியலுக்கு ஒப்பீட்டளவில் குறை ந்தளவு பணமே அறவிடுகிறார்களாம்.
இவ்வாறு 15 வகைகளுக்கு மேற்பட்ட குளியல் தெரிவுகளை வாடிக்கையாளர்க ளுக்கு தருகிறார்களாம், இவ் ஓட்டல் நிர்வாகிகள்.
இக்குளியலிற்கு பிருத்தானியாவின் கவர்ச்சி மாடல்கள் பலர் விசி றியாக இருப்பதால், வியாபாரம் சூடு பிடிக்கிறதாம்…!

Thursday, 5 April 2012

ஹை ஹீல்ஸ் : அழகா, ஆபத்தா ?

Posted On April 05,2012,By Muthukumar
அழகிப் போட்டி பார்த்திருக்கிறீர்களா ? பளீரென வெளிச்சம் வீசும் பாதையில் வசீகர அசைவுடன் பூனை நடை போட்டு வரும் அந்த அழகிகளின் செருப்புகளை எப்போதாவது கவனித்திருக்கிறீர்களா ? ஒரு வைன் கோப்பையைப் போல நெடு நெடுவென இருக்கும் அந்த ஹை ஹீல்ஸ் செருப்புகளில் கண்ணுக்குத் தெரியாத ஏராளம் ஆபத்துகள் இருக்கின்றன.
திரைப்படங்களிலும், விளம்பரப் படங்களிலும் வரும் மாடல்களின் ஹை ஹீல்ஸ் செருப்புகள் இளம் பெண்களை வசீகரிப்பதில் வியப்பில்லை. பிறரால் கவனிக்கப் பட வேண்டும் எனும் ஆழ்மன ஆர்வம் அவர்களை ஹீல்ஸ் பாதையில் கவனத்தைச் செலுத்த வைக்கிறது.
“ஹை ஹீல்ஸை” தமிழில் “உயரமான குதிகால்” என்று சொல்லலாமா ? பிழையெனில் தமிழ் அறிஞர்கள் மன்னிப்பார்களாக ! ஹை ஹீல்ஸ் செருப்புகளைப் போட்டுக்கொண்டு நடப்பது இன்றைய இளசுகளின் ஃபேஷன். கால்களை நெடு நெடுவெனக் காட்ட வேண்டும் என விரும்புபவர்களின் சாய்ஸ்களில் முக்கியமானது இது. அதனால் தான் உயரம் குறைவாக இருக்கும் பெண்கள் தங்களை உயரமாகக் காட்டிக் கொள்ள ஹீல்ஸ் செருப்புகளில் சரணடைகிறார்கள்.
சிலருக்கு பாதங்கள் வசீகரமாக இருக்காது. அல்லது அவர்களாகவே அப்படி நினைத்துக் கொள்வார்கள். அப்படிப்பட்டவர்கள் ஹை ஹீல்ஸ் வசீகரங்களுக்குள் தங்களுடைய பாதங்களைப் பூட்டி வைக்க முயல்வார்கள்.
அழகிப் போட்டிகளில் கலந்து கொள்பவர்களைப் பற்றிச் சொல்லவே வேண்டாம். அவர்களைக் கேட்டால் “ஹீல்ஸ் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம்” என்பார்கள். பாதிக் காசை கால் செருப்புக்கே கரைப்பார்கள். என்ன செய்ய ? தங்கள் வளைவுகளை வசீகரமாய்க் காட்ட வேண்டிய கட்டாயத்தில் இருப்பவர்கள் அவர்கள். பின்னழகை எடுப்பாய்க் காட்டுவதில் ஹீல்ஸ் செருப்புகள் கில்லாடிகள்.
“இந்தக் காலத்துப் பொண்ணுங்களே இப்படித் தான், அந்தக் காலத்துல…” என பாட்டி புராணத்தை ஆரம்பிக்கிறீர்களா ? கொஞ்சம் வெயிட் பண்ணுங்க ! ஹீல்ஸ் சமாச்சாரம் இன்று நேற்று வந்த விஷயமல்ல. கி.மு 3500 லேயே எகிப்தில் ஹீல்ஸ் செருப்புகளைப் பயன்படுத்தியிருக்கிறார்கள். ஏழைகள் வெறுங்கால்களோடும் பணக்காரர்கள் ஹீல்ஸ் செருப்புகளோடும் அலைந்திருக்கிறார்கள். அப்படிப் பார்த்தால் குறைந்த பட்சம் 5500 ஆண்டுகளுக்கு முன்பே ஹீல்ஸ் தனது ஹிஸ்டரியை ஆரம்பித்திருக்கிறது !
பண்டைய ரோமில் விலை மாதர்கள் ஹை ஹீல்ஸ் அணிந்து நடப்பார்களாம். அவர்களுடைய ஹீல்ஸ் அளவைப் பார்த்து தான் இது எந்த மாதிரிப் பெண் என்பதை ஆண்கள் அடையாளம் கண்டு கொள்வார்களாம். ஆண்கள் கூட ஹை ஹீல்ஸ் அணிவதுண்டு. குறிப்பாக ஹாலிவுட்டின் கௌபாய் படம் பார்த்தவர்களுக்கு அது தெரியும்.
ஒவ்வோர் காலகட்டத்திலும் ஹை ஹீல்ஸ் மாற்றங்களும், ஏற்றங்களும் அடைந்து கொண்டே இருந்தது. இன்றைக்கு அது நவீன வடிவத்தை உள்வாங்கி வசீகரமாய் இருக்கிறது.
கடையில போய் பார்த்தா பல அளவுகளில் செருப்புகள் இருக்கும் இல்லையா ? இதில் எது ஹை ஹீல்ஸ் எது லோ ஹீல்ஸ் தெரியுமா ? பொதுவாக செருப்பின் குதிகால் உயரம் 6 சென்டி மீட்டர் வரை உயரமாய் இருந்தால் அது லோ ஹீல்ஸ் ! 8.5 சென்டீ மீட்டர் வரை இருந்தால் நடுத்தர ஹீல்ஸ் ! அதைத் தாண்டினால் அதை ஹை ஹீல்ஸ் என்பார்கள். இது செருப்புகளின் கணக்கு !
“இந்த ஹை ஹீல்ஸ் கண்டு பிடிச்சவனுக்கு கோயில் கட்டிக் கும்பிடணும்” என்று ஒரு முறை மர்லின் மன்றோ ரொம்பவே உணர்ச்சி வசப்பட்டுப் பேசியிருந்தார். அவரை உறை பனியில் செய்த கவர்ச்சிச் சிலையாய்க் காட்டியதில் ஹை ஹீல்ஸின் பங்கு கணிசமானது ! எனவே அவர் அப்படிச் சொன்னதில் எந்த ஆச்சரியமும் இல்லை !
ஆனால் சாதாரணமாய் பயன்படுத்தலாமா இதை ? விருப்பம் போல போட்டுக் கொண்டு நடக்கலாமா ? சாதாரணச் செருப்பு அணிவதற்கும் ஹீல்ஸ் அணிவதற்கும் ஏதேனும் வித்தியாசம் உண்டா ?
ஆஸ்திரேலியாவிலுள்ள கிரிஃபித் பல்கலைக்கழக ஆய்வு என்ன சொல்கிறது தெரியுமா ? ஹை ஹீல்ஸ் போடும் பெண்கள் நடக்கும் போது ஏகப்பட்ட எனர்ஜியைச் செலவழிக்கிறார்களாம். தொடர்ந்து கொஞ்ச நாள் ஹை ஹீல்ஸ் போட்டால் அதன் பிறகு நடக்கும் முறையே மாறிவிடுமாம். அதன் பின் ஹை ஹீல்ஸ் போடாவிட்டால் கூட நடப்பதற்காய் உடல் அதிக அளவு எனர்ஜியைச் செலவிடுமாம்.
“நமது உடலிலுள்ள உறுப்புகளெல்லாம் ஒரு குறிப்பிட்ட சமநிலையில் அமைந்திருக்கிறது. ஹை ஹீல்ஸ் காலில் சமநிலை அமைப்பை மாற்றி வைக்கிறது. அதன் பின் புதிய நிலையையே சாதாரண நிலை என மூளை எழுதிக் கொள்கிறது. இதனால் தான் தினமும் ஹீல்ஸ் போடும் பெண்கள், பின்னர் ஹீல்ஸ் போடாவிட்டால் கூட அவர்களுடைய உடல் சமநிலைக்கு வருவதில்லை. அதுவே அதிக எனர்ஜி செலவாகக் காரணம்” என்கிறார் டாக்டர் நெயில் ஜெ குரோலின்.
நிறைய தூரம் நடக்க வேண்டியவர்கள், படிகளில் ஏறி இறங்க வேண்டியவர்களுக்கெல்லாம் ஹை ஹீல்ஸ் காலில் இருக்கும் எமனைப் போல ! கொஞ்சம் சறுக்கினாலும் கால் பணால் ! ஹை ஹீல்ஸ் போட்டு காலைச் சுளுக்கிக் கொண்டவர்களில் லிஸ்ட் சீனச் சுவரை விட நீளமானது !
சுளுக்கோட போனா பரவாயில்லை, கொஞ்சம் தைலத்தைத் தடவிட்டு நம்ம வேலையைப் பார்க்கப் போகலாம். ஆனால் ஹீல்ஸ் மேட்டர் அவ்வளவு சின்னதல்ல. ஹீல்ஸ் போட்டால் கால் முட்டிகள், இணைப்புகளில் அதிக அழுத்தம் ஏற்பட்டு அவை வலுவிழக்கும் என்கிறது இன்னொரு ஆராய்ச்சி.
ஹீல்ஸ் போட்டு நடக்கும் போது உருவாகும் அதிர்வுகள் உடலின் மூட்டு இணைப்புகளில் எத்தகைய பாதிப்புகளை ஏற்படுத்தும் எனும் ஆராய்ச்சியில் இந்த முடிவு எட்டப்பட்டது. ஹீல்ஸ் போட்டு நடக்கும் போது உருவாகும் அதிர்வுகள் சாதாரணமாய் நடப்பதை விட மிக அதிகம் என்பதால் இந்தப் பாதிப்பும் அதிகம் என்கிறார் ஆராய்ச்சியாளர் டேனியல் பார்கேமா.
ஆஸ்டியோஆர்த்ரடிஸ் (Osteoarthritis) எனும் மூட்டுகளைச் சிதைக்கும் நோய் கூட ஹீல்ஸ் அணிவதால் வரலாம் என அதிர்ச்சியளிக்கிறார் யூ.கேயிலுள்ள ஆராய்ச்சியாளர் பேராசிரியர் ரெட்மான்ட்.
இதையெல்லாம் விட முக்கியமான சிக்கல் முதுகு வலி. ஹை ஹீல்ஸ் உடலின் சம நிலையை பாதிக்கிறதில்லையா ? அதனால் முதுகெலும்புக்கு அழுத்தம் அதிகமாகிறது. அது ஒரு பேலன்ஸ் இல்லாத நிலையில் இருக்கும். முதுகுக்கு அசௌகரியம் வரும்போது வலி வருவது இயல்பு தானே ! அப்படி வலியை வலியப் போய் அழைப்பது தான் ஹீல்ஸ் அணிவதால் ஆய பயன் !
நமது பரம்பரை வைத்தியர்களிடம் கேட்டுப் பாருங்கள். உடலின் அத்தனை உறுப்புகளுக்குமான தொடர்பு பாதத்தில் இருக்கிறது என்பார்கள். அந்த நரம்புகள் தூண்டப்படும் போது முழு உடலுக்கும் இரத்த ஓட்டம் அதிகரிக்கிறது. செருப்புகள் ஒரு வகையில் அந்த தூண்டுதலைத் தடுக்கின்றன. இந்த ஹை ஹீல்ஸ் அந்த தூண்டுதலை ரொம்பவே பாதிக்கும். இது உடல்வலியுடன், தலைவலியையும் உருவாக்கி விடும் என்கின்றனர் மருத்துவர்கள்.
ரொம்ப சோர்வாக இருக்கும் போது பாதங்களைக் கொஞ்சம் வெது வெதுப்பான தண்ணீரில் கழுவினால் சுகமாய் இருக்கும் இல்லையா ? அதன் காரணமும் இந்த நரம்புகள் தான். ஹீல்ஸ் போடுபவர்கள் அடிக்கடி இப்படி கால்களைக் கவனிக்கலாம் !
ஹீல்ஸ் போட்டு நடக்கும் போதும் சாதாரணமாக நடப்பதைப் போல முதலில் குதி கால், பிறகு முன்கால் என நடக்க வேண்டும் என்கின்றனர் அழகுக் கலை நிபுணர்கள். இல்லாவிட்டால் நடப்பது சிரமமாய் இருக்குமாம். எதுவானாலும் வீட்டில் நன்றாக நடக்கப் பழகிவிட்டு விழாவுக்குச் செல்லுங்கள். நூறு பேர் மத்தியிலே தடுமாறி விழுந்தா நல்லாவா இருக்கும் ?
மெட்டடார்சல்ஜியா (Metatarsalgia ) என மருத்துவம் அழைக்கும் ஓரு நிலை பாதங்களில் ஏற்படும் வலி தொடர்பானது. பாதத்தில் விரல்களுக்குக் பின்னால் பாதப் பந்து எனுமிடத்தில் எழும் இந்த வலியை வெற்றிலை பாக்கு வைத்து அழைக்கிறது ஹை ஹீல்ஸ் ! அதே போல தான் ஹேமர்டோஸ்(Hammertoes) எனும் நிலையும். இது விரல்களின் இயல்பான வடிவம் மாறி வளைந்தும் நெளிந்தும் போவது. புனியன் (Bunion) என்பது பெருவிரலை வளையச் செய்வது ! இவையெல்லாம் ஹை ஹீல்ஸ் பயன்படுத்துவதால் வரும் சிக்கல்கள்.
ஹை ஹீல்ஸ் தொடர்ந்து அணிந்தால் பாதத்திலுள்ள தசைகள் இறுக்கமாகி அது பின்னர் இலகுவாகாமல் போய்விடும். அதிக எடையுள்ளவர்கள் ஹீல்ஸ் அணிந்தால் சிக்கல்கள் இரண்டு மடங்காகி விடும் என்பது கூடுதல் அதிர்ச்சி.
தாய்மை நிலையில் இருப்பவர்கள் ஹை ஹீல்ஸ் பயன்படுத்துவதைத் தவிர்ப்பது ரொம்ப ரொம்ப நல்லது. அவர்களுடைய உடலில் ஹீல்ஸ் செருப்புகள் தேவையற்ற அழுத்தத்தைக் கொடுக்கும். தடுமாறி விழுந்தாலும் சிக்கல் தானே !
மருத்துவர்கள் பொதுவாகச் சொல்லும் அறிவுரை ஒன்று தான். ஹீல்ஸ் அணிவதை கூடுமானவரை தவிருங்கள். போட்டே ஆகவேண்டுமெனில் அவ்வப்போது போடுங்கள். அதுவும் எடுத்த எடுப்பிலேயே ஏணி மாதிரி ஹீல்ஸ் எடுத்து காலில் மாட்டாதீர்கள். சின்ன ஹீல்ஸ் போட்டுப் பழகி, பிறகு கொஞ்சம் கொஞ்சமாய் ஹை ஹீல்ஸ் போடுவதே நல்லது. அப்போது தான் உங்களால் தடுமாறாமல் நடக்கவும் முடியும், உங்கள் உடல் கொஞ்சம் கொஞ்சமாய் மாற்றத்தை ஏற்றுக் கொள்ளவும் செய்யும்.
ஹை டெக் அழகியாய் அழகாய்த் தெரியவேண்டும் என்பதற்காக அசௌகரியத்தை விலை கொடுத்து வாங்குவது தான் ஹை ஹீல்ஸ் சமாச்சாரம். ஒரு அவசரத்துக்கு ஓடக் கூட முடியாத ஹை ஹீல்ஸ் உங்களுக்கு தேவையா என்பதை யோசியுங்கள். தற்காலிக அழகை விடவும் முக்கியமானது நிரந்தர ஆரோக்கியம் ! சொல்ல வேண்டியதைச் சொல்லி விட்டேன், மற்றதெல்லாம் உங்கள் கையில்… சாரி, காலில் ! !

டி.வி பார்க்கும் போது இடைவெளிவிட்டு அமருங்க

Posted On April 05,2012,By Muthukumar
விதவிதமான சேனல்கள் கண்டு பிடிக்க முடியாத அளவுக்கு டி.வி.யில் ஏகப்பட்டவை இருக்கின்றன.  இடத்தை விட்டு நகராமல் பார்த்துக் கொண்டு இருக்ககூடாது. அது கண்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். முதலில் தெரிந்து கொள்ளவேண்டியது. நீங்கள் பார்த்து கொண்டிருக்கும் டி.வி.யின் அளவு எத்தனை அங்குலம் என்று. 9 அங்குலம் 12, 14, 19, 22, 24, 26, 32, 42, 50, 65, 103 ஏன் 160 அங்குலம் வரை மிகப்பெரிய டி.வி மார்க்கெட்டில் விற்பனைக்கு இருக்கிறது. நீங்கள் வீட்டில் எந்த அளவுள்ள டி.வி. வைத்திருக்கிறீர்களோ, அந்த டி.வி.யின் ஸ்கிரீன் அளவு எத்தனை அங்குலம் என்று தெரிந்து வேண்டும்.
ஏழு முதல் பதினான்கு அங்குலம் டி.வி.
உங்கள் டி.வி. ஸ்கீரின் அளவு சுமார் 7 மடங்கு இருப்பின் 4அடி தூரத்தில் தள்ளி உட்கார்ந்துதான் டி.வி. பார்க்க வேண்டும். அதாவது உதாரணத்திற்கு 19 அங்குலம் ஸ்கிரீன் அகலமுள்ள டி.வி. நீங்கள் வைத்திருந்தால் 19 அங்குலம் X 7= 133 அங்குலம் அதாவது சுமார் 11 அடி தூரத்தில் உட்கார்ந்துதான் டி.வி. பார்க்க வேண்டும்.
14 அங்கு டி.வி. என்றால் 98 அங்குலம் அதாவது சுமார் 8 அடி தூரத்தில் உட்கார்ந்து டி.வி. பார்க்க வேண்டும். இந்த டி.வி. அகலம், அளவு கணக்கு எல்லாம் தெரியவில்லை என்றால் கவலையே பட வேண்டாம். எந்த டி.வி.யாக இருந்தாலும் குறைந்தது 3 மீட்டர் அதாவது 10 அடி தள்ளி உட்கார்ந்து டி.வி. பாருங்கள். கண்களுக்கு பாதிப்பு ஏற்படாது.
சம உயரத்தில் உட்கார்ந்துதான் டி.வி. பார்க்க வேண்டும்.
ரூமுக்கு ஏற்றபடிதான் டி.வி. வாங்க வேண்டுமே தவிர டி.வி.க்கு ஏற்றபடி ரூமை மாற்ற முடியாது. ரூம் பெரியதாக ஆக இருந்தால் டி.வி.யும் பெரிதாக செலக்ட் பண்ணலாம். டி.வி. பார்ப்பவரும் டி.வி.யும் தரையிலிருந்து ஒரே உயரத்தில் இருக்க வேண்டும். டி.வி. அதிக உயரத்திலும், பார்ப்பவர் கீழேயும் உட்கார்ந்து பார்க்கக் கூடாது. பெரும்பாலான குழந்தைகள் தரையில் உட்கார்ந்து கொண்டோ, கட்டிலில் படுத்துக் கொண்டோதான் டி.வி. பார்ப்பார்கள் இது தவறு.
சம உயரத்தில் உட்கார்ந்துதான் டி.வி. பார்க்க வேண்டும். டி.வி. மேலேயும் பார்ப்பவர் கீழேயும் உட்கார்ந்து டி.வி.யை அதிக நேரம் பார்த்தால் கண் சீக்கிரம் களைப்படைந்து விடும், கழுத்து தசைகள் எல்லாம் வலி எடுக்க ஆரம்பித்துவிடும். எனவே சம உயரத்தில் உட்கார்ந்து டி.வி. பார்த்துப் பழகுங்கள். அதிக நேரம் தொடர்ந்து டி.வி. பார்ப்பதைத் தவிர்க்க வேண்டும்.
2 நிமிடம் கண்களை மூடிக்கொண்டு அமரலாம்
ஒரு திரைப்படத்தை தொடர்ந்துதான் பார்த்தாக வேண்டும். அதற்காக 21/2 மணி நேர படத்தை ஒரு மணி நேரம் மட்டும் பார்த்துவிட்டு நடுவில் விட்டுவிட்டு வர முடியாது. குறைந்தது, விளம்பரம் போடுகிற இடைவேளையிலாவது டி.வி. ரூமைவிட்டு எழுந்து அடுத்த ரூமுக்கு போய் ஒரு சுற்று சுற்றிவிட்டு வந்து மறுபடியும் படம் பார்க்க ஆரம்பிக்கலாம்.
அல்லது 2 நிமிடம் கண்ணை மூடிக்கொண்டு உட்கார்ந்திருந்து மறுபடியும் பார்க்க ஆரம்பிக்கலாம். இந்த மாதிரி இடைவெளிவிட்டு மறுபடியும் டி.வி. பார்ப்பது கண்களுக்கு நல்லது. டி.வி.யை தொடர்ந்து அதிக நேரம் பார்ப்பவர்களுக்கும், கம்ப்யூட்டரில் தொடர்ந்து அதிக நேரம் உட்கார்ந்து வேலை பார்ப்பவர்களுக்கும் சில நேரங்களில் தலைவலி வர வாய்ப்புண்டு.
இடைவெளிவிட்டு அமர்வது நல்லது
இம்மாதிரி தலைவலியை சந்திப்பவர்கள், கண்டிப்பாக கொஞ்சம் இடைவெளிவிட்டு அமர்வது நல்லது. டி.வி. பார்க்கும் ரூமில் எல்லா விளக்குகளையும் அணைத்துவிட்டு டி.வி.யை பார்ப்பது நல்லதல்ல, டி.வி. வெளிச்சம் போக அந்த ரூமில் ஏதாவது ஒரு விளக்கு கண்டிப்பாக எரிய வேண்டும். சிலர் சினிமா தியேட்டரில் படம் பார்க்கும், எபெக்ட்டை வீட்டில் உருவாக்கி விடுவார்கள்.
மொத்த ஜன்னலையும் மூடி மொத்த ஸ்கிரீனையும் போட்டு எல்லா விளக்குகளையும் அணைத்து ரூமை நன்றாக இருட்டாக்கி டி.வி. பார்ப்பார்கள். இது கண்ணுக்கு கெடுதி. டி.வி.யிலிருந்து வரும் வெளிச்சமும் அந்த ரூமிலுள்ள வெளிச்சமும் ஒரே அளவில் இருக்க வேண்டும். டி.வி.யிலிருந்து வரும் வெளிச்சம் அதிகமாகவும், ரூமிலுள்ள வெளிச்சம் குறைவாகவும் அல்லது டி.வி. வெளிச்சம் குறைவாகவும், ரூம் வெளிச்சம் அதிகமாகவும் இருக்கக்கூடாது.
கவனம் அவசியம்
இது கண்களுக்கு நல்லதல்ல. டி.வி.க்கு பக்கத்திலோ, பின்னாலேயோ எங்கிருந்தோ மறைமுகமாக ஒரு வெளிச்சம் அந்த ரூமில் இருக்க வேண்டும். அதே நேரத்தில் ரூமிலுள்ள வெளிச்சம் டி.வி. ஸ்கிரீனில் பட்டு உங்கள் கண்ணுக்கு திருப்பி வராமல் பார்த்துக் கொள்ள வேண்டும். டி.வி. ரூமைச் சுற்றி வெளிச்சம் வைத்துக்கொண்டு டி.வி.யைப் பார்த்தவர்கள் பல பேருக்கு கண் அசதி குறையும், கண் சோர்வு குறைவும், கண் களைப்பு குறைவும், வெளிச்சத்தால் மூளை தூண்டுதல் குறைவாக இருப்பதாகவும் `லைட் ரிசர்ச் சென்டர்` விஞ்ஞானி `யுகியோ அகாஷி' கூறுகிறார்.
எனவே டி.வி. பார்க்கும்போது கண்களின் நலனைப் பாதுகாக்க விரும்பினால், குறிப்பிட்ட தூரத்தில் இருந்து பார்ப்பதுடன், சிறிது இடைவேளை விட்டு டி.வி. பாருங்கள்

Wednesday, 4 April 2012

காம சூத்திரம் சொல்லும் முத்தத்தின் மொத்த‍ ரகசியங்கள்..!!

‘இரண்டு உதடுகளையும் ஒருசேரக்குவித்து, பெண்ணின் உடலில் உனக்கு விருப்பமான இடத்தில் வைத்து மிருதுவாக அழுத்து. அப் போது ஒரு வினோதமான சத்தம் கேட்கும். அதுதான் முத்தம். எங்கே முத்தம் இடுகிறோமோ அந்த இடத் தைப் பொறுத்து முத்தமிடும் முறைகளும், அந்த முத்தங்களால் ஏற்படும் பரவச உணர்வுகளும் வித்தியாசப்படும்’ என்று அடிப் படை வகுப்பெடுக்கிறார் வாத்ஸாயனர்.
ஒரு ஆண், பெண்ணை எங்கெங்கே முத்தமிடலாம் என்று சுட்டிக் காட்டுகிறார். பெண்ணின் உணர்சிப் பிரதேசங்களாக எட்டு இடங்க ளைச் சொல்கிறார். பெண்ணின் உச்சிப் பொட்டு, நெற்றி, கண்கள், கன்னங் கள், உதடு, நாக்கு, மார்பகங்கள், இர ண்டு மார்பகங்களுக் கிடையே உள் ள மையப்பகுதி அகிய எட்டு இடங் கள் தான் அவை.
இவை தவிர இன்னும் மூன்று இடங் களை ரகசியமாகத் தருகிறார். இந்த இடங்களை ‘கலாஸ்தானம்’ என்று குறிப்பிடுகிறார். பொது வாக இப்ப டித்தான் முத்தமிட்டுக் கொள்கிறார்கள். இங்கெல்லாம் முத்த மிடும் போது பரவச உணர்வு எழும். ஆனால் அதில் எது தப்பு எது சரி என்று சொல்ல மாட் டேன். ஒவ்வொருவரும் அவ ர் வாழும் நாடு, காலம் சூழ் நிலை, ஆகியவற்றைப் பொ றுத்து அவரவருக்கு எது சரி என்று தெரிகிறதோ அப்படி முத்த மிட்டுக் கொள்ளுங்கள்’ என்று தீர்க்கமாக சொல்கிறா ர்.
ஒவ்வொரு முத்தத்துக்கும் அழகாய் பெயர் சூட்டியுள்ளார். தூரத் தில் வரும் காதலனை பார்த்தவுடன் காதலி தூங்குவது போல நடிக் கிறாள். ஆசையோடு வரும் அவனது எண்ணம் என்ன வாக இருக்கும் என்று அறிந் து கொள்ளும் ஆவல் அவளி டம். வரும் காதலன் இவள் நினைத்த மாதிரி நினைத்த இடத்தில் முத்தம் கொடுக்கி றான். இது ‘பிராதி போதக சும்பணம்’ நினைத்த மாதிரி முத்தம் என்கிறார்.
இரவு வேளை, ஊரில் திருவிழா, ஊரே கூடி தின்று திருவிழாவை ரசிக்கின்றது. வெளிச்சமான இடத்தில் உறவுக்காரர்கள் சூழ்ந்தி ருக்க ஒரு பக்கம் காதலி, அவளுக்கு சற்று தொலைவில் கண்களில் காதலோடு காத்திருக்கும் காதலன். எல்லோரும் திருவிழா காட்சி களில் லயித்திருக்கும் போது காதலன் அ வளை நெருங்கி குனிந்து கை விர ல்களையோ, கால் விரல்க ளையோ பிடித்து முத்தமிடுகிறான். இது ‘அங் குலி சும்பணம்’, அதாவது விரல் முத்தம்.
காதலர்கள் எப்படியோ திருமண பந்தத்தில் இணைந்து விட்டார் கள். ஆனால் அந்த ஆண் மீது பெண்ணுக் கு முழு நம்பிக்கை வரவில்லை. ஆனால் அவன் உறவுக்கு கட்டாயப்படுத்துகிறான். அவளிடம் முத் தம் கேட்டு தன் உதட்டைக் குவித்து நிற்கிறான். அப் பெண் தன் முகத்தை அவன் முகத்துக்கு அருகில் கொண்டு போய் எந்த உண ர்சியும் இல்லாமல் சும்மா உதட்டால் உதடு தொடுகிறா ள். இது ‘நிமிதகம்’ அதாவது சும்மா முத்தம்.
காதலனும் காதலியும் சந்திக் கவோ அன்பை வெளிப்படு த்திக் கொள்ளவோ முடியவி ல்லை. காதலி எங்கோ இரவி ல் பாதுகாப்போடு வரும்போ து சுவரில் விழும் அவளது நிழலுக்கு முத்தம் இடுகிறான், காதலன். இது ‘சாயா சும்பணம்’ நிழல் முத்தம். இப்படி முத்தத்தைப் பற்றி அதிகமாக ஆராய்ந்து அலசிய நூல் காம சூத்திரம் மட்டுமே. இந்தி யர்கள் காலப்போக்கில் முத்தத்தின் நண்மைகளை உணராமல் ஒது க்கி வைத்து விட்டார்கள்.

முதல் இரவு முக்கியமானது, ஏன்?

Posted On April 04,2012,By Muthukumar
ருவ வயது வந்த ஆண், பெண் வாழ்க்கையில் அதி முக்கியத்துவம் வாய்ந்தது, முதல் சந்திப்பு. வாழ்க்கையின் புதிய அத்தியாயத்தை தொடங்குவதற்கும், எதிர்கால வாழ்க்கைக்கு திட்டமிடுவதற்கும், எதிர்வரும் பிரச்சினைகளை எதிர்கொள்வதற்கும் இருவரும் தங்களை தயார்படுத்திக்கொள்வதற்கு அடித்தளம் அமைத்து தருகிறது, இந்த முதல் சந்திப்பு. புதிய வாழ்க்கையில் அடியெடுத்து வைக்கும் ஆணும், பெண்ணும் தங்களை அறிமுகப்படுத்திக்கொள்ளும் வாய்ப்பையும் இந்த முதல் சந்திப்புதான் தருகிறது.
இந்த முதல் சந்திப்பை மூன்று விதமாக பிரிக்கலாம். அது வெறும் நட்பாக அமையலாம், அல்லது காதலாக மலரலாம். அதுபோய் கல்யாணத்திலும் நிறைவடையலாம். கல்யாணத்தில் அவர்கள் இணையும்போது, அந்த முதல் சந்திப்பு, மனோரீதியாக நெருங்கி, உடல்ரீதியாக நிறைவடைகிறது. அதனால்தான் நமது முன்னோர்கள், முதலிரவையும் திருமணத்தின் முக்கிய சடங்காக அங்கீகரிக்கிறார்கள். அதற்கு `முதல்' என்ற அடைமொழியையும் கொடுத்திருக்கிறார்கள்.
முதலிரவு என்பது, திருமணத்தை முழுமைப்படுத்தும் சடங்காகவும், தம்பதிகளுக்கான சங்கமமாகவும் அமைகிறது.
மனித வாழ்க்கையில் ஒவ்வொரு நிகழ்விற்கும் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. இது மற்ற உயிரினங்களிலிருந்து பண்பட்ட மனிதனை பிரித்து காட்டவும், வாழ்க்கையை வகுத்து காட்டவும் உதவுகிறது.
திருமணத்தை பல சடங்குகளாக பிரித்து, நடத்திக்காட்டுவதன் மூலம் இந்திய திருமணங்கள் உன்னத நிலையை அடைந்திருக்கின்றன. அனைத்து சடங்குகளும் திருமண வாழ்வில் அடியெடுத்து வைக்கும் ஒரு பெண்ணின் ஒட்டுமொத்த பாதுகாப்பை பின்னணியாக கொண்டதாக இருக்கிறது.
நம்முடைய சாஸ்திர சம்பிரதாயங்கள் அனைத்தும் ஒரு பெண்ணின் எதிர்கால பாதுகாப்பையும் சமூக அந்தஸ்தையும் உயர்த்தும் விதமாகவே வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. அந்த வகையில் சாந்தி முகூர்த்தம் என்பதும் ஒரு பெண்ணின் தேவை, பாதுகாப்பு, எதிர்கால சந்ததியின் வளர்ச்சி போன்றவைகளை உள்ளடக்கியதாக இருக்கிறது.
திருமணத்திற்கு பின்பு மனைவியுடன் வாழ்ந்து, குழந்தைகளைப் பெற்று அவர்களை கடைசிவரை காப்பாற்றும் கடமை கணவருக்கு இருக்கிறது. அந்த கடமையில் இருந்து அவர் தவற முற்படும்போது இந்த சடங்குகள் அவரை கட்டுப்படுத்துகிறது. அதை அடிப்படையாகக்கொண்டு சமூகம் அவரை தட்டிக்கேட்கிறது. சடங்குகள் அப்போது மனைவிக்கு துணையாக வருகிறது. உறவுகளையும், சமூகத்தையும் சாட்சியாக வைத்து நடத்தப்படும் திருமண சடங்குகள் அனைைத்தும் அவர்களை ஒரு பாதுகாப்பான சமூக கட்டுக்குள் கொண்டு வந்துவிடுகிறது. இந்த சமூக கட்டுப்பாடு வருங்காலத்தில் அவர்களை ஒரு ஒழுக்கமுள்ள பிரஜைகளாக வெளிப்படுத்துகிறது. இது அவர்களுக்கு தார்மீக பலத்தை அளிக்கிறது.
திருமணம் என்பதே இருவரின் வாழ்க்கையை நாலு பேரின் சாட்சியோடு ஒரு பாதுகாப்பு வட்டத்திற்குள் கொண்டு வருவதே ஆகும். இதில் சுற்றியுள்ள உறவுகளுக்கு முக்கிய பங்கு இருக்கிறது. கற்பு என்ற விஷயத்தை குடும்ப கவுரவமாக மதிக்கும் நம் இந்திய திருமணத்தில் உள்ள சடங்குகள் அனைத்தும் அதை பாதுகாக்கும் விதமாகவே அமைந்து உள்ளது. அந்த விதத்தில் இந்த சாந்தி முகூர்த்தம் என்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த சடங்காக கருதப்படுகிறது.
இருமனம் சேர்ந்தால் திருமணம் என்ற தத்துவத்தை எல்லோரும் ஏற்று கொண்டாலும், திருமணத்திற்கு சாட்சியை தேடுகிறார்கள். சம்பந்தப்பட்ட பெண்ணிற்கு பாதுகாப்பு தேவை என்பதுதான் அதற்கான காரணம். சம்பந்தப்பட்ட யாருக்கும் பாதிப்பு வந்துவிடக்கூடாது என்ற மனிதாபிமானத்தோடு இந்திய திருமண சடங்குகள் வடிவமைக்கப்பட்டிருக்கின்றன. ஒவ்வொரு சடங்கும் ஒரு ஆழமான உட்கருத்துடன் இயற்றப்பட்டு இருக்கிறது. அதனை புரிந்து கொண்டு செயல்படும்போது திருமணமும், அதன் மூலம் வாழ்க்கையும் புனிதம் அடைகிறது.
ஒரு கவிஞன் கவிதை வடிக்க பெண் காரணமாகிறாள். அற்புதமான சிலை வடிக்க பெண் தான் தூண்டுகோலாகிறாள். ஓவியமும், இலக்கியமும் பெண்ணின்றி தோன்றுவதில்லை. நம் இந்திய மண்ணில் சாஸ்திரங்கள் தோன்றவும் பெண்ணே முழு முதல் காரணமாக இருந்திருக்கிறாள்.
``மாத்ரு தேவோ பவ'' என்கிற வேதத்தில் பெண்ணே போற்றுதலுக்குரிய முதல் இடத்தைப் பிடிக்கிறாள். அத்தகைய பெண்ணை போற்றவும், அவளின் உரிமைகளை பாதுகாக்கவும் எழுந்ததுதான் நம் இந்திய தர்ம சாஸ்திரங்கள். திருமண சடங்குகள் யாவும் இந்த சாஸ்திரங்களை அடிப்படையாக வைத்தே நடத்தப்படுகிறது. அந்த சாஸ்திரங்களில் முதலிரவும் இடம் பிடிக்கிறது. முதலிரவு என்பது வருங்கால சந்ததியினருக்கு உறவுகளும் சமூகமும் கொடுக்கும் அங்கீகாரமாகவும், பாதுகாப்பாகவும் அமைகிறது.

அழகுக்கு அழகு சேர்க்க கடலை மாவு பேஷியல்

Posted On April 04,2012,By Muthukumar
கோடை வெயிலினாலும், தூசுக்களினாலும் சருமம் அதிகம் பாதிப்பிற்குள்ளாகிறது. கூந்தலும் மாசடைந்து வறண்டு விடுகிறது. சருமம், கூந்தல் பாதிப்பினால் முகத்தில் கரும்புள்ளிகள் தோன்றுவதோடு பொலிவு குறைந்து காணப்படும். இழந்த அழகை மீட்க வீட்டில் அன்றாடம் சமைக்கப் பயன்படுத்தப்படும் அடுப்பங்கறை பொருட்களே போதுமானது. எலுமிச்சை, மஞ்சள், கடலைப் பருப்பு, பாசிப்பருப்பு போன்ற பொருட்களை உபயோகப்படுத்தி முகத்தையும், சருமத்தையும் அழகாக்கலாம் என்கின்றனர் அழகியல் நிபுணர்கள்.
கடலைமாவு மஞ்சள் பேஸ்ட்
தொன்று தொட்ட முதியோர் காலத்திலிருந்து பாரம்பரியப் பொருனாக பயன்படுத்தப்படும் பொருள் கடலைமாவு, மஞ்சள்தூள். இரண்டுமே உடல் ஆரோக்கியத்திற்கும், சரும ஆரோக்கியத்திற்கும் அழகு தரக்கூடியவை. ஒரு கிண்ணத்தில் 2ஸ்பூன் கடலைமாவை எடுத்துக் கொண்டு ஒரு சிட்டிகை மஞ்சள்தூள் சேர்த்து கலக்கவும். சிறிதளவு தண்ணீர் ஊற்றி கலந்து முகத்தில் பூசி அரைமணி நேரம் கழித்து வெதுவெதுப்பான நீரில் முகம் கழுகி வந்தால் சருமம் மென்மையாகும்.
வழுவழுப்புக்கு கடலைமாவு பேஷியல்
அழகை பேணிக்காப்பதில் முக்கிய பங்கு வகிப்பது கடலைமாவு. கடலைமாவானது பொலிவிழந்த சருமத்தை இளமையூட்டும். இரண்டு ஸ்பூன் கடலை மாவில் சிறிதளவு தண்ணீர் விட்டு கெட்டியாக பிசைந்து கொள்ளவும். பின்னர் முகத்தில் நன்றாக தடவி ஊறவிடவும். நன்றாக உலர்ந்த பின்னர் குளிர்ந்த நீரில் முகம் கழுவினால் பளிச் என்று இருக்கும். அதேபோல் குளிக்கும் போது கடலைமாவு பூசி குளித்தால் சருமம் வழுவழுப்பாகும். சுருக்கமின்றி இளமையோடு காட்சியளிக்கலாம்.
ரோஸ் வாட்டர் கடலைமாவு
இரண்டு ஸ்பூன் கடலைமாவுடன், 4 ஸ்பூன் பால், 2 ஸ்பூன் ரோஸ் வாட்டர் சேர்த்து கலக்கவும். பின்னர் கலவையை நன்றாக முகத்தில் பூசவும். பத்து நிமிடம் கழித்து இதனை குளிர்ந்த நீரில் கழுவ சருமம் மென்மையாகும் இளமையோடு காட்சி தரும்.
பருக்கள் நீங்க
கடலை பருப்பு 1 டீஸ்பூன். ஒரு மிளகு இவற்றை எடுத்த ஒரு டீஸ்பூன் பாலில் ஊறவையுங்கள். இதனுடன் கால் டீஸ்பூன் முல்தானி மட்டி பவுடரைச் சேர்த்து கலக்குங்கள். பிறகு இதை முகத்தில் "பேக் ஆகப் போட்டு, உலர்ந்ததும் குளிர்ந்த நீரில் கழுவ்வேண்டும். பருக்கள் இருந்த படிப்படியாக மறைந்து போகும்.
பிசுபிசுப்பான சருமத்திற்கு
சருமம் எண்ணெய் வழிந்து பிசுபிசுப்பாக இருந்தால் அதற்கு கடலைமாவுடன் தயிர் சேர்த்து பேஷியல் போடுவது முகத்தை பொலிவாக்கும். ஒரு கிண்ணத்தில் கடலைமாவு எடுத்து அதில் தயிர், எலுமிச்சை சாறு ஊற்றி நன்றாக கலந்து முகத்தில் அப்ளை செய்யவும். சில நிமிடங்கள் ஊறவைத்து வெதுவெதுப்பான நீரில் கழுவவும். இதனால் எண்ணெய் பசை நீங்கி முகம் பொழிவுபெறும்.
டல் முகம் பொலிவாக
தோலுடன் இருக்கும் கடலைபருப்பு அரை கிலோ துளசி இலை 50 கிராம், வேப்பங்கொழுந்து 5 கிராம் இவற்றை நிழலில் உலர்த்தி. நன்றாக அரைத்துக் கொள்ளுங்கள். ஒரு கிண்ணத்தில் இரண்டு ஸ்பூன் போட்டு அதில் இரண்டு துளி எலுமிச்சை சாறு சேர்த்து முகத்துக்கு "பேக்" போட்டு ஐந்து நிமிடம் கழித்து வெதுவெதுப்பான தண்ணீரால் முகத்தைக் கழுவுங்கள். வாரம் ஒரு முறை இதைச் செய்து வந்தால், பளபளவென்று முகம் பிரகாசிக்கும்.

உடலுக்கு வலிமை தரும் கத்தரிக்காய்

Posted On April 04,2012,By Muthukumar
நீர்ச்சத்து அதிகம் கொண்ட கத்தரிக்காயில் வைட்டமின்கள் ஏ, சி, பி1, மற்றும் பி2, காணப்படுகின்றன. கத்தரிக்காய் காய்கறியாக பாவிக்கப்பட்டாலும் உண்மையில் இது பழ வகையைச் சார்ந்ததாகும். இது வெள்ளை, ஊதா, கறுப்பு போன்ற நிறங்களில் காணப்படுகின்றது. மேலும் இரும்புச்சத்து, புரதம், நார்ச்சத்து கார்போஹைடிரேட், பாஸ்பரஸ், கால்சியம், நிறைந்துள்ளது. வைட்டமின் அதிகமாக இருப்பதால் நாக்கில் ஏற்படும் அலர்ஜியினைப் போக்குவதில் முக்கிய பங்காற்றுகிறது.
வாதநோய், ஆஸ்துமா, ஈரல் நோய்கள், கீல்வாதம், சளி, பித்தம், தொண்டைக்கட்டு, மலச்சிக்கல், கரகரப்பானகுரல், உடல் பருமன் முதலியவற்றைக் குணப்படுத்தும் காய்கறிகளுள் கத்தரிக்காயும் ஒன்று. கத்தரிக்காய் பிஞ்சாகச் சாப்பிடுவதே நல்லது.
முற்றிய பெரிய காய்களைச் சாப்பிட்டால் உடம்பில் அரிப்பு ஏற்படும். குறிப்பாக, வீட்டிலே வளர்த்துப் பிஞ்சாகப் பறித்துச் சாப்பிட வேண்டிய காய்களுள் இதுவும்  ஒன்றாகும். தக்காளிக்கு இணையானது, இக்காய். தக்காளியைப் போலவே எடை, புரதம், கலோரி அளவு, தாது உப்புகள் முதலியன கத்தரிக்காயில் உள்ளன. ஆனால் வைட்டமின் ‘ஏ’யும், வைட்டமின் ‘சி’யும் குறைவாகவே உள்ளன.
இவற்றை ஈடுசெய்யும் வகையில் வைட்டமின் ‘பி’ தக்க அளவில் உள்ளது. இதனால்  நாம் சாப்பிடும்  மற்ற உணவுகள் உடனடியாகச் சிதைந்து சத்தாக மாறக்  கத்தரிக்காயில் உள்ள வைட்டமின் ‘பி’ பயன்படுகிறது. பாரிச வாயுநோய் தடுக்கப்படுகிறது. பசியின்மை அகற்றுகிறது. உடல் சோர்வடைவதை குறைக்கப்படுகிறது. மூச்சுவிடுதலில் சிரமம், தோல் மரத்துவிடுவது  முதலியவையும் தடுக்கப்படுகிறது.
முற்றிய காய்கள் உடல் வளர்ச்சிக்குப் பயன்படும். காரணம், இவற்றில் வைட்டமின் ‘ஏ’ அதிக அளவில் இருக்கிறது. ஆனால், அளவாகத்தான் பயன்படுத்தவேண்டும். இதனால் கண்பார்வைத் திறனும்  அதிகரிக்கும். உடலுக்கு சூடு தரும் காய்கறி இது. எனவே, மழை நேரத்தில் கூட  இரவு நேரத்தில் உடல் கதகதப்பாய் இருக்கக் கத்தரிக்காய் குழம்பு சமைத்து உண்ணலாம்.
கத்தரி வற்றலும் உடம்பில் சூட்டை ஏற்படுத்தும். நீர்க்கனத்தைக் குறைக்கும். உடல் பருமனைக்  குறைக்கும். உடம்பில் சொறி சிரங்கு, புண் உள்ளவர்கள் கத்தரிக்காயைத் தவிர்ப்பது  நல்லது. உடலுக்குச் சூடு தரும் காய் என்பதால் அரிப்பை உண்டு பண்ணிப் புண்கள் ஆற அதிக நாள் ஆகும்.
மற்றவர்கள்  மருந்தைப்போல் கத்தரிக்காயை உணவில் சேர்த்து உடலுக்கு நன்மை பெற வேண்டும். இக்காய் இளம் பிஞ்சாய் இருந்தால், சமையலில் சேர்த்து நாம் சாப்பிடும் மற்ற உணவுகள் விரைந்து  சிதைந்து  சத்தாக உடலுக்குக் கிடைக்க இது பயன்படும். வீட்டில் நன்கு உரமிட்டு  வளர்க்கப்படும் கத்தரிச்செடியில் உள்ள பிஞ்சு உடலுக்கு வளத்தையும் வலிமையையும் தவறாமல் தரும்.

Monday, 2 April 2012

குடல் புற்றுநோயும் கொலாஸ்டமி அறுவை சிகிச்சையும்

Posted On April 02,2012,By Muthukumar
மலக்குடல் மற்றும் பெருங்குடலில், புற்றுநோயோ மற்ற பாதிப்புகளோ ஏற்பட்டு, அறுவை சிகிச்சை மூலம், செயற்கை மலப்பையை உடலுக்கு வெளியே பொருத்துவதை, நோயாளிகள் அருவருப்பாக கருதி, இச்சிகிச்சைக்கே உட்படாமல், மிக மோசமான நிலைக்கு, ஏன் மரணத்திற்கே கூட தள்ளப்படுகின்றனர்.
ஆனால், இன்றைய மருத்துவ விஞ்ஞான தொழில்நுட்பத்தால், மேற்படி பிரச்னை, கிட்டத்தட்ட பெருமளவு குறைக்கப்பட்டு விட்டது என்கிறார், ராஜிவ் காந்தி பொது மருத்துவமனையின், "கேஸ்ட்ரோ என்ட்ராலஜி' துறை தலைவர், டாக்டர் எஸ்.எம்.சந்திரமோகன். இனி அவர்...
1. கொலாஸ்டமி எந்த இடத்தில் செய்யப்படுகிறது?
பொதுவாக, இரண்டு விதமான கொலாஸ்டமி செய்யப்படுகிறது. ஒன்று, "ட்ரான்ஸ்வர்ஸ் கொலாஸ்டமி!' இது, வயிற்றின் மேல் பாகத்தில் வலதுபுறம் செய்யப்படுகிறது. மற்றொன்று, அடிவயிற்றின் இடது பாகத்தில் பெருங்குடலின் கடைசி பாகமான சிக்மாய்டு கோலனில் செய்யப்படும், சிக்மாய்டு கொலாஸ்டமி. மிகவும் அரிதான அடிவயிற்றின் வலதுபுறம், பெருங்குடல் ஆரம்பிக்கும் இடமான இலியம் பகுதியில் செய்யப்படுவது, இலியாஸ்டமி.
2. கொலாஸ்டமி எந்தெந்த பிரச்னைகளுக்காக தேவைப்படுகிறது?
மலக்குடல் புற்றுநோயால், இயற்கையாக ஆசனவாய் வழியாக மலம் கழிக்க முடியாத போது, தற்காலிகமாகவோ, நிரந்தரமாகவோ செய்யப்படுகிறது. புற்றுநோய் தவிர, குடலில் ஏற்படும் நீடித்த அழற்சியினாலும் (அல்சரேட்டிவ் கோலைட்டிஸ்), விபத்து போன்றவற்றால் காயம் ஏற்படுவதினாலும் கூட, மலக்குடலும், ஆசனவாயும் பாதிக்கப்படுவதால் கொலாஸ்டமி தேவைப்படுகிறது. இதைத்தவிர, குழந்தைகளுக்கு பிறவிக் குறைபாட்டினால், மலக்குடல் பகுதிகளில் பாதிப்பு இருந்தாலும், கொலாஸ்டமி தேவைப்படுகிறது.
3. கொலாஸ்டமி அறுவை சிகிச்சையில் ஏற்பட்டுள்ள தொழில்நுட்ப வளர்ச்சிகள் யாவை?
இருபது ஆண்டுகளுக்கு முன்பு வரை கூட, மலக்குடல் புற்றுநோயினால் ஒருவர் பாதிக்கப்பட்டால், அதற்கு ஒரே தீர்வு, கட்டியை அகற்றிவிட்டு, நிரந்தரமாக, "கொலாஸ்டமி பேக்' பொருத்தப்பட வேண்டும் என்பதே. தொழில்நுட்ப வளர்ச்சியால், புற்று நோயைப் பற்றிய விளக்கமும், அதற்கு தேவைப்படும் சிகிச்சை முறைகளும் சாதகமாக உள்ளன. புற்றுநோய் கட்டியின் அளவு, அது பரவியுள்ள இடத்தின் அகல நீளம், அதனுடன் இணைந்த நிணநீர் சுரப்பியின் பாதிப்பு எவ்வளவு, உடலின் வேறு பாகங்களுக்கு அது பரவியுள்ளதா போன்ற விவரங்களை, மிகத் துல்லியமாக தெரிந்து கொள்ள, அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன், எம்.ஆர்.ஐ., "சிடி' ஸ்கேன் மற்றும் பெட் சிடி ஸ்கேன் என்று, மேலும் மேலும் நுண்மையாகி வருகிறது மருத்துவ தொழில்நுட்பம். எனவே, புற்றுநோய் கட்டியை முழுமையாக அகற்றிவிட முடிகிறது. கட்டியை அகற்றியபின், குடலின் இரண்டு முனைகளையும் இணைக்க, முன்பு கைகளால் தையல் போடப்பட்டது. இதனால், சில நேரங்களில் தையல் விட்டுப் போவதும், புண் சீக்கிரம் ஆறாமல் போவதும் ஏற்படலாம் என்பதால், தற்காலிகமாக கொலாஸ்டமி செய்யப்பட்டது.
தற்போது, இரண்டு பகுதிகளை ஒரே சீராக, தேவைக்கேற்ப நெருக்கமாக தையலிட்டு இணைப்பதற்கான, "ஸ்டேப்ளர்' கருவிகள் உபயோகப் படுத்தப்படுகின்றன. இதனால், தையல் விடுபடும் அபாயம் இல்லாததால், தற்காலிக, "கொலாஸ்டமி'யே கூட தேவைப்படாமல் போகலாம்.
ஒரு வேளை, கட்டி மிகப் பெரிதாய் இருந்தால், கீமோதெரபி, ரேடியேஷன் தெரபி (கதிர்வீச்சு) மூலம், கட்டியின் அளவை குறைத்து விட்டு, பின்பு அறுவை சிகிச்சையில் கட்டியை அகற்றிவிட்டு, இரண்டு முனைகளும் இணைக்கப்படுகின்றன.
கீமோ, ரேடியேஷன் தெரபி கொடுக்கும்போது, ஸ்டேப்ளர் தையல் பிரிந்து விடலாம் என்பதால், புண் ஆறும் வரை, மலம் அவ்வழியே செல்வதை நிறுத்த வேண்டி, தற்காலிக கொலாஸ்டமி செய்யப்படுகிறது.
இன்னும் வரும்...

உடல் மெலிந்தவர்களுக்கு.. எளிய வைத்திய முறைகள்..!

Posted On April 2,2012,By Muthukumar


பொதுவாக உடலில் இரும்பு, பாஸ்பரஸ், கால்சியம், மக்னீசிய சத்துக்களும் வைட்டமின்களும் தாதுப் பொருட்களும் போதுமான அளவு இருந்தால்தான் உடல் ஆரோக்கியமாக இருக்கும்.

இச்சத்துக்கள் குறையும்போது உடல் பலவீனமடைகிறது. இவற்றைப் போக்க மருந்து மாத்திரைகள் உண்பதை விட உணவில் அதிகளவு காய்கறி பழங்கள் கீரைகள் சேர்த்துக்கொள்ள வேண்டும். மதிய உணவில் மோர் சாப்பிடவேண்டும்.

· வாரம் ஒருமுறை மீன் சாப்பிடுவது நல்லது. அதுபோல் இரவு படுக்கைக்குச் செல்லும் முன் பாலில் சிறிது சுக்கு தட்டிப்போட்டு காய்ச்சி அருந்த வேண்டும். வாழைப்பழம், கொய்யாப்பழம் சாப்பிடலாம்.

· நோயினால் பாதிக்கப்பட்டு உடல் பலம் குறைந்தவர்கள் அருகம்புல்லை நன்கு சுத்தம் செய்து அரைத்து நீரில் கொதிக்க வைத்து வடிகட்டி பனைவெல்லம் கலந்து காலை மாலை டீ காஃபிக்கு பதிலாக அருந்தி வந்தால் உடல் பலவீனம் நீங்கும்.
· பச்சை பயறை நீரில் ஊறவைத்து முளை கட்டிய பின் அதனை லேசாக அவித்து சாப்பிட்டு வந்தால் இளைத்த உடல் தேறும்.

· பாதாம் பருப்பை ஊறவைத்து அரைத்து பாலில் கலந்து இரவு படுக்கைக்குச் செல்லும் முன் அருந்தி வந்தால் உடல் பலம் பெறும்.

· சோற்றுக் கற்றாழை மடலை எடுத்து அதன் மேல் தோலை நீக்கி, உள்ளிருக்கும் சதைப் பகுதியை நன்கு நீர் விட்டு அலசி காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் இளைத்த உடல் தேறும்.

· தூதுவளை பொடியை தேனில் கலந்து 1 ஸ்பூன் அளவு காலை வேளையில் சாப்பிட்டு வந்தால் நன்கு பசியைத் தூண்டும். இளைத்த உடல் தேறும். இதை உடல் பலவீனமான குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சாப்பிடலாம்.

· கொண்டைக் கடலை 10 எடுத்து இரவு சுத்தமான நீரில் ஊறவைத்து மறுநாள் காலையில் நீருடன் சேர்த்து கடலையை மென்று சாப்பிட்டு நடைபயிற்சியோ உடற்பயிற்சியோ செய்து வந்தால் மெலிந்த உடல் தேறும். சோர்வு நீங்கும்.

· தேவயான அளவு பேரிச்சம் பழம், தேன் இவற்றோடு கற்கண்டும் சேர்த்து லேகியப்பதமாகச் செய்து வைத்துக்கொண்டு தினமும் காலை மாலை 1 தேக்கரண்டி சாப்பிட்டு வர மெலிந்த தேகம் பருக்கும்.

· முருங்கை இலைக்கொத்தின் ஈர்க்குகளை எடுத்து சிறிதாக நறுக்கி அதனுடன் சின்ன வெங்காயம், மிளகு, பூண்டு சேர்த்து சூப் செய்து அருந்தி வந்தால் கை கால் உடல் அசதி நீங்கும். உடல் பலம் பெறும். உடலைத் தேற்ற சிறந்த டானிக் இது.

· உடல் பலவீனமடைந்து தேறாமல் நோஞ்சான் போல் உள்ளவர்களின் உடல் பலமடைய தூதுவளை, பசலைக்கீரை சிறந்த நிவாரணி. இவற்றைப் பக்குவப்படுத்தி உண்டு வந்தால் உடல் பலமும், தேக ஆரோக்கியம் கிடைக்கும்.

· முதல் வாரத்தில் தூதுவளைக்கீரை, அடுத்த வாரத்தில் பசலைக்கீரை..

அதேபோல் அடுத்த வாரத்தில் தூதுவளைக் கீரை என மூன்று மாதங்கள் சாப்பிட்டு வந்தால் உடல் பலவீனம் நீங்கி தேக ஆரோக்கியம் கிடைக்கும்.

மஞ்சள் காமாலை வந்தால்

Posted On April 02,2012,By Muthukumar
கல்லீரல் மற்றும் மண்ணீரலில் ஏற்படும் பாதிப்புதான்... மஞ்சள் காமாலை. இது, வைரஸ் கிருமியின் தாக்குதலால் ஏற்படுகிறது.
பிறந்த குழந்தைக்கும்கூட மஞ்சள் காமாலை வர வாய்ப்பு உள்ளது. அது சில நாட்களில் சரியாகி விடும்.
மஞ்சள் காமாலை வந்தால் கல்லீரல், மண்ணீரலோடு மற்ற உறுப்புகளும் பாதிக்கப்படும் வாய்ப்பு உள்ளது.
பொதுவாக மஞ்சள் காமாலை உள்ளவர்களுக்கு பசி எடுக்காது, கடுமையான காய்ச்சல் இருக்கும். சிறுநீர் வெளியேறுவதில் பிரச்சினை மற்றும் சிறுநீர் மஞ்சளாக வெளியேறுதல், கண் மற்றும் உடல் மஞ்சள் நிறமாக மாறுதல் போன்ற பிரச்சினைகள் உருவாகும். இந்த நோயால் பாதிக்கப்பட்டால் 3 மாதங்கள் வரை பத்திய சாப்பாடு சாப்பிட வேண்டும்.
தவிர்க்க வேண்டியவை : மசாலா வகைகள், கார உணவுகளை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். சமையலில் அதிக எண்ணெய் பயன்படுத்தக்கூடாது.
மஞ்சள் காமாலை வந்து 5 மாதங்கள் வரை அசைவ உணவுகளை தொடக்கூடாது. முட்டையில் மஞ்சள் கருவை தவிர்க்க வேண்டும்.
அதிக புரதம் உள்ள பருப்பு, சோயா வகைகளையும் விலக்கி வைக்கவும். மாவுச் சத்து உள்ள உணவுகள் மட்டுமே எடுத்துக் கொள்ள வேண்டும்.
தினமும் 3 இளநீர் குடிக்க வேண்டும். மோர், முட்டையின் வெள்ளைக் கரு தினமும் சாப்பிடலாம். காய்ச்சல் ஏற்பட்டால் அதற்கு மருத்துவரிடம் சிகிச்சை எடுத்துக் கொண்டு உணவுக் கட்டுப்பாட்டையும் கடைபிடிக்க வேண்டும். எளிதில் ஜீரணம் ஆகும் உணவுகளை சாப்பிடுவதே நல்லது.

சுடுநீர் பாத்டப்பில் உறவு கொண்டால் ஆணுறை தேவையில்லையா?

Posted On April 02,2012,By Muthukumar


உறவு கொள்வதில் வித்தியாசத்தை விரும்புவோர் நிறைய. ஒவ்வொருவருக்கும் ஒரு வித்தியாசம், ஸ்டைல் இருக்கும். அதில் ஒன்று ஷவரில் குளித்தபடி உறவு கொள்வது, பாத்டப்பில் உறவு கொள்வது. அதேசமயம், சுடுநீரில் உறவு கொள்ளும்போதுஎந்தவிதமான கருத்தடை சாதனமும் தேவையில்லை. சுடுநீரில் உறவு கொள்ளும்போது கருத்தரிக்க வாய்ப்பில்லை என்று சிலர் கருதுகின்றனர்.

அது உண்மையா? டாக்டர்கள் சொல்வதைக் கேட்போம். 

எந்த முறையில் உறவு கொண்டாலும் நிச்சயம் கருத்தடை சாதனங்கள் அவசியம் - கருத்தரிப்பதை விரும்பாவிட்டால். சுடுநீரில் குளித்தால் கருத்தடை சாதனம் தேவையில்லை என்பது வினோதமாக இருக்கிறது. ஆனால் உண்மையில் அது தவறு. சுடுநீராக இருந்தாலும், குளிர்ச்சியான நீராக இருந்தாலும் விந்தனு பெண்ணுறுப்பின் வழியாக செல்வதை முறையான கருத்தடை சாதனத்தைத் தவிர வேறு எதுவுமே தடுக்க முடியாது.

மேலும், ஆணுறுப்பு மற்றும் பெண்ணுறுப்பின் வழியாக பரவும் நோய்களைத் தடுக்கக் கூடிய தன்மையும் சுடுநீருக்குக் கிடையாது. எனவே ஆணுறை உள்ளிட்ட கருத்தடை சாதனங்கள் அவசியம் என்கிறார்கள் டாக்டர்கள்.

அதேபோல சுடுநீரில் குளித்தால் ஆண்களுக்கு மலட்டுத்தன்மை ஏற்படும், ஆணுறுப்பில் பாதிப்பு ஏற்படும், விந்தனு வளர்ச்சி பாதிக்கப்படும் என்ற அச்சம் சிலருக்கு உண்டு.

இதுகுறித்து டாக்டர்கள் கூறுகையில், இதில் பாதி உண்மை உள்ளது. விந்தனு உற்பத்திக்கும், உடல் சூட்டுக்கும் தொடர்புள்ளது. உடல் சூடு அதிகரிக்கும்போது விந்தனு உற்பத்தி பாதிக்கப்படும். நமது உடலின் பிற பகுதிகளில் உள்ள வெப்ப நிலையை விட வி்ந்துப் பையின் வெப்ப நிலை 5 டிகிரி குறைவாகவே இருக்கும். அதற்கேற்றபடி விந்துப் பையானது தனது வெப்ப நிலையை சரிவிகித நிலையில் வைத்துக் கொள்ளும். அங்கு வெப்பம் அதிகரிக்கும்போது வி்ந்தனு உற்பத்தி நிச்சயம் பாதிக்கும் என்கிறார்கள் டாக்டர்கள்.