Posted On Aug 2,2012,By Muthukumar |
கழுதைத்
தோலில் இருந்து தயாரிக்கப்படும் மாத்திரைகள் பெண்களின் பாலுணர்வை
தூண்டுவதாக தெரியவந்துள்ளது. இது மாதவிடாய் காலங்களில் ஏற்படும் வலிகளையும்
நீக்குவதாகவும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
பாலுறவையும்,
பாலுறவு உணர்ச்சிகளையும் தூண்டக்கூடிய பொருட்களாக சாக்கலேட்,
ஸ்டிராபெர்ரி, மூலிகைப் பொருட்கள் கண்டறியப்பட்டுள்ளன. அந்த வரிசையில்
தற்போது கழுதைத்தோலில் இருந்து தயாரிக்கப்படும் மாத்திரைகளும் இணைந்துள்ளன.
சீனாவில்
பாரம்பரிய மருந்துகளைத் தயாரிப்பதற்கு கழுதைகளின் தோலை பதப்படுத்தி அதில்
இருந்து எடுக்கப்படும் பொருள் பயன்படுத்தப்படுவதாகத் தெரிய வந்துள்ளது.
இந்த மருந்தானது, பெண்களின் பாலுணர்வைத் தூண்டுவதாகத் தெரிய வந்துள்ளது.
தற்போது
ஹாங்காங்கைச் சேர்ந்த ஒரு மருந்து நிறுவனம் ஆண்டுதோறும் சுமார் 10 லட்சம்
கழுதை தோல்களை பாரம்பரிய மருந்துகளை தயாரிப்பதற்காக பயன்படுத்தி வருகிறது.
மருந்து நிறுவனங்களுக்கு கழுதையின் தோல் தேவைப்படுவதாகவும், அதில் இருந்து
வடிகட்டுதல் மூலம் பெறப்படும் ஒருவகைப் பொருளைக் கொண்டு பாரம்பரிய
மருந்துகளை அந்நிறுவனங்கள் தயாரிப்பதாகவும் தெரிகிறது.
கழுதை
தோலில் இருந்து எடுக்கப்படும் பொருள் `எஜியாவோ' என்றழைக்கப்படுகிறது.
இதில் இருந்து தயாரிக்கப்படும் `நு பாவ்' என்ற மருந்து பெண்களின் பாலுறவு
உந்துதலைத் தூண்டுவதுடன், மாதவிடாய் காலங்களில் ஏற்படும் வலியைப் போக்க
உதவுவதாகவும் தெரிய வந்துள்ளது.
தென்
அமெரிக்காவில் நீண்டகாலமாக கழுதை தோலில் இருந்து மருத்து தயாரிக்கப்பட்டு
வந்த நிலையில், தற்போது ஆஸ்திரேலியாவிலும் இந்த தயாரிப்பு
தொடங்கப்பட்டுள்ளது. சிட்னியைச் சேர்ந்த ஏற்றுமதியாளர் ஜான் பிளெமிங்,
வெளிநாடுகளில் கழுதைகளை விற்பனை செய்வதற்காக கழுதை வேட்டையை விரும்புவதாகக்
கூறியுள்ளார்.
பதப்படுத்தப்பட்ட
கழுதை தோல் ஒன்று 30 அமெரிக்க டாலர் மதிப்பு கொண்டுள்ளதாகத் தெரிய
வந்துள்ளது. பெண்களை உற்சாகப்படுத்தும் இந்த மாத்திரைகளை தயாரிக்க பலநூறு
டாலர்களை செலவு செய்தும் கழுதைத்தோல் வாங்க மருந்து நிறுவனங்கள் தயாராக
இருப்பதாக மருந்து தயாரிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment