Lord Siva

Lord Siva

Sunday, 12 August 2012

தாம்பத்தியத்தில் தன்னம்பிக்கையின் அவசிய‌ம்


மார்பகங்கள் சிறிதாக இருக்கும் சில பெண்கள் தம்மிடம் பெண்களி ன் அம்சங்கள் இல்லையென்றும், உடலுறவில் தம்மால் ஆண்ளைத் திருப்பிப்படுத்த முடியாது என்றும் கவலைகொண்டு ஒருவித தாழ்வு மனப் பான்மைக்குத் தள்ளப் படுகிறார்கள்.
கிராமத்து பெண்களிடம் மட்டுமல் ல, நகரத்து பெண்களிடமும் இது போல் தங்களது உடல் அமைப்பு குறித்த தவறான எண்ணங்கள் உள்ளன. இதைத்தான் Body இமே ஜ் என்று சொல்கிறோம். அதாவது, நம்முடைய உடல் பற்றி நமக்கி ருக்கும் எண்ணங்கள் மற்றும் நம் உடல் பற்றி மற்றவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பது பற்றிய நம் கற்பனை இரண்டும் சேர்ந்து, இது உருவாகிறது. முக்கியமாக உடலுறவில் ஆணைத் திருப்திப்ப டுத்த பெண்ணின் மார்பகங்கள் பெரிதாக இருக்க வேண்டும் என் றொரு நம்பிக்கையும், இதுபோல் பெண்ணைத் திருப்திப்படுத்த, ஆணு க்கு பிறப்புறுப்பு பெரிதாக இருக்க வேண்டும் என்றொரு நம்பிக்கையும் உள்ளன. இந்த நம்பிக் கைகள் எந்த அளவுக்குச் சரியானவை என்பது பற்றித்தான் நாம் பார்க்கப் போகிறோம்.
இந்த நம்பிக்கைகள் எந்த காலகட்டத்தில் உரு வானவை என்பது இதுவரை கண்டறியப்பட வில்லை. விஞ்ஞானரீதியான சிந்தனைகளும், கண்டுபிடிப்புகளும் இல்லாத காலகட்டத்தில் மக்கள் தங்களுடைய எல்லா சந்தேகங்களுக்கும் கற்பனையில்தான் விடைகளை கண்டு பிடித்தார்கள். இதற்கு மிகச் சிறந்த ஒரு உதாரணம், பெரியம்மை நோய். இது ஒரு வைரஸ் கிருமியால்தான் வருகி றது என்பது கண்ட றியப்படாத கால கட் டத்தில், அம்மை என் றொரு தெய்வத் தின் கோபத் தால்தான் இது வருகிறது என்று உலகம் முழுவதும் நம்பினார்கள். இதுபோல் பல நூற்றுக்கணக் கான நம்பிக்கைகள். ஆனால் இன்று விஞ்ஞானம் வளர்ச்சி யடைந்து, இதற்கெல்லாம் விடை கிடைத்துவிட்ட பிறகு ம், தலைமுறை தலைமுறையாக நன்றாக காலூன் றியிருக்கும் இந் த நம்பிக்கைகள் அப்படியேதான் இருக்கின்றன. இதுபோல்தான் பாடி இமேஜ் பற்றிய நம்பிக்கைகளும். ஏதோவொரு காலகட்டத்தில் தோ ன்றி, இன்றுவரை வந்திருக்கின்றன. இண்டெர் நெட்டில் நூற்றுக்க ணக்கான சைட்கள் இதுபற்றி இருக்கின் றன என்றால், உலகம் முழுக்க இந்த நம் பிக்கை எந்த அளவுக்கு காலூன்றியுள்ள து பாருங்கள்.
இனி, இந்த நம்பிக்கைகள் சரியானவை தானா என்று பார்ப்போம். முதலில் ஆண் பிறப்புறுப்பு பெரிதாக இருந்தால்தான் பெண்ணை திருப்திப்படுத்த முடியும் என் பதை எடுத்துக் கொள்வோம். ஆண் பிறப் புறுப்பு விறைப்புத்தன்மை இல்லாத சாதா ரண நேரங்களில் எவ்வளவு சிறியதாக இருந்தாலும், அதுபற்றி யாரும் கவலைப் படுவதில்லை. ஏனெனில், அப்போது அத னுடைய வேலை, சிறுநீர் கழிப்பது மட்டு ம்தான். ஆனால், விறைப்புத்தன்மை அடைந்த பிறகு, எந்த அளவுக்கு அது நீளமாக, தடிமனாக இருக்கிறதோ, அந்த அளவுக்குப் பெண் ணைத் திருப்திப்படுத்த முடியும் என்னும் நம்பிக்கை உள்ளதால், விறைப்புத் தன்மை அடைந்த நிலையில், ஆண் பிறப்புறுப்பு எவ்வளவு நீளம் இருக்கிறது என்பது முக்கியமாகிவிடுகிறது. அதாவது, பெண் பிறப்புறுப்பின் உட்பகுதி இடைவெளி இல்லாம ல் நிரப்பப்படும் போதுதான், பிற ப்புறுப்பின் உட்புறச் சுவர்களில் உராய்வு ஏற்பட்டு, அவள் உச்ச கட்ட இன்பத்தைப் பெற்று திருப்தியடைகிறாள் என்பது நம்பிக்கை. அதைவிட முக்கியமானது, பெண்ணை திருப்திப்படுத்துவது என்பது ஆண்மையின் அடையாளமாகவும், வீரத்தின் அடையாளமாகவும் வேறு கொள்ளப்படுகிறது. இத னடிப்படையில்தான் இந்த நம்பி க்கை உருவாகியுள்ளது. பெண் களுக்கும் இந்த நம்பிக்கை உள்ளது என்பது இதற்கு மே லும் வலு சேர்த்துவிட்டது. இனி விஞ்ஞான ரீதியான முடிவுக ளைப் பார்ப்போம்.
சாராசரியாக உணர்ச்சிவசப்ப டாத நிலையில், அதாவது விறைப்பற்ற நிலையில் ஆண் பிறப்புறுப்பு 2 அங்குலம் முதல் 4 அங் குலம் வரை உள்ளது என்று கண்டறியப்பட்டுள்ளது. விறைப்படை ந்த நிலையில், 5 அங்குலம் முதல் 6 அங்குலம் வரை உள்ளது. ஆனால், பெண் பிறப்புறுப்பி ன் முதல் 2 இன்ச் பகுதிகளி ல்தான் அவ ள் தூண்டப்பட்டு செக்ஸ் உணர்ச்சிகளை அ டைகிறாள் என்று விஞ்ஞான ஆராய்ச்சிகள் தெரிவிக்கின் றன. ஏனெனில், பெண்ணின் செக்ஸ் உணர்ச்சி நரம்புகள் இந்த பகுதியில்தான் உள்ள ன. அதையும் கடந்து உள்ளே எவ்வளவு தூரம் சென்றாலும், பிரயோஜனமில்லை. எனவே, ஒரு பெண்ணின் செக்ஸ் உணர்ச்சிகளைத் தூண்ட, ஒரு ஆணுக்கு விறை ப்படைந்த நிலையிலும்கூட 2 இன்ச் பிறப்புறப்பு போதும். ஆனால் இதைவிட அதிக மான நீளம் கொண்டதாகத் தான் உலகம் முழுக்க ஆண்களுக்கு பிறப்பு றுப்பு அமைந்துள்ளது. என வே ஆண் பிற ப்புறுப்பு சிறிய தாக உள்ளதா, பெரியதாக உள்ளதா என்பது உடலுறவி ல் ஒரு பிரச்னை யே இல்லை.
முதலில் செக்ஸ் வெறும் உட ல் சம்பந்தப்பட்டது என்பதே தவறான நம்பிக்கை. உடல்தான் செயல் படுத்துகிறது என்றாலும் செக்ஸ் மனது சம்பந்தப்பட்டது என்பதுதா ன் உண்மை. ஒரு பெண், ஒரு ஆணுடன் எந்த அளவுக்குப் பழகி, அவன்மேல் காதல்கொ ண்டு, எந்த அளவுக்கு அவன்மேல் விருப்ப மும் ஆசையும் கொள்கிறாளோ அந்தளவு க்குத்தான் அவள் உடலுறவின்போது திருப்தி யடைகிறாள். ஒரு பெண் ஒரு ஆணின்மேல் காதலும் ஆசையும் திருப்தியும் அடைவது அவர்கள் இரண்டு பேருக்கும் இடையேயான பழக்க வழக்கங்களைப் பொறுத்துதான் உள் ளது. எனவே பெண்ணை திருப்திப்படுத்த விரும்பும் ஆண், அவள் தன் னை விரும்பும் விதமாக, அவளது ஆசைகளையும் விருப்பங்களை யும் தெரிந்து நடந்துகொள்வதுதான் முக்கியமே தவிர, ஆண் பிறப் புறுப்பின் அளவுபற்றி கவலைப்படுவது தேவையில்லாதது. எனவே, மற்ற ஆண்களின் பிறப்புறுப்புடன் ஒப்பிட்டு தனக்கு மட்டும் சிறிதாக உள்ளது. தன்னை மட்டும் கடவுள் ஏமாற்றி விட்டான் என்று கவலைப் படுவது தேவை யில்லாதது. மூக்கு பெரிதாக இருக்கிறவர்கள் அதிக அளவு காற்றை உள்ளே இழுத்து நன் றாக சுவாசிக்கிறார்கள், மூக்கு சிறிதாக இருப்பவர்களால் அந்த அள வுக்கு நன்றாக சுவாசிக்க முடிவதில்லை என்பது எவ்வளவு கேலிக் குரியதோ அதுபோல்தான் இதுவும்.
சிறுநீர் கழிக்கும் இடங்களில் மற்ற ஆண்களின் பிறப்புறுப்பைப் பார்க்க நேரும். சில ஆண்கள் தனது பிறப்புறு ப்பு அவர்களைவிட மிகச் சிறியதாக உள்ளதாக எண்ணுகின்றனர். இதுவு ம் தேவையில்லாத கவ லை. பொதுவாக ஒரு பொருளை பக்கத்தில் பார்ப்பதற்கும் தூரத்தில் பார்ப்பதற்கும் வித்தியாசம் உள்ளது. பக்கத் தில் பார்க்கும்போது சிறிதாக இருக்கும் ஒரு பொருளை தூர விலகி நின்று பார்க்கும் போது பெரி தாகத் தெரியும். இது ஒப்ரிக் கல் இல்யூஷன் (Optical Illusion)தான். மேலும் எல் லோருக்கும் ஒரே அளவு இரு க்க வேண்டும் என்று அவசி யமும் இல்லை.
போலி டாக்டர்களும் மருந்து தயாரிப்பவர்களும் இந்த பயத் தையும் தாழ்வு மனப்பான் மையையும் பயன்படுத்திக் கொண்டு ‘‘சிறு வயதில் செய்த கோளாறுகள் காரணமாக ஆணுறுப்பு சுருங்கி விடு கிறது’’ என்று மேலும் அதிகம் பயங்காட்டி காசு சம்பாதிக்கிறார்கள். ஆனால் 18 வயதுக்கு மேல் உடல் உறுப்புக ளின் வளர்ச்சி நின்று விடுகிறது. அதற்குப் பிறகு சிறிதாகாது என்பதுதான் உண்மை. மேலும் எந்த மருந்து மாத்திரைகள் மூல மும் உடற்பயிற்சி மூலமும் ஆண் பிறப் புறுப்பை வளர்க்க முடியாது என்பதும் விஞ்ஞான ரீதியான உண்மை.
இதேநிலைதான் பெண்ணின் மார்பகங்க ளுக்கும். அது சிறிதாக இரு  ப்பதற்கும் பெ ரிதாக இருப்பதற்கும் செக்சுக்கோ அல்லது குழந்தைக்கு பாலூட்டுவதற்கோ சம்பந்த மில்லை. ஒரு ஆண், அவள் மேல் எவ்வள வு ஆசையுடன் காதலுடன் நெருங்குகிறா ன் என்பது தான் முக்கியம். நடிகைகள் சர்ஜரி செய்து கொள்வது சினிமாவின் காட்சி தேவைகளுக்காக. அதை ஒரு சாதாரணப் பெண் செய்ய வேண்டும் என்று அவசியமே இல்லை.
பொதுவாக இதுபோன்ற பயங்க ளும் தாழ்வு மனப்பான்மையும் ஆணுக்கும் சரி, பெண்ணுக்கும் சரி, அவர்களுக்கே அவர்கள் மீது நம்பிக்கை இல்லாமல் ஆகு ம்போதுதான் ஏற்படுகிறது. தன் உடலை காதலிக்க வேண்டும். என்ன இருக்கிறது என்பதல்ல, அதை நான் எப்படி பயன்படுத் திக் கொள்கிறேன் என்பதுதான் முக்கியம் என்கிற தன்னம்பிக்கை வேண்டும். இந்த இரண்டுடன், தன்னுடைய இணைமீது காதலும் விருப்பமும் சேர்ந்தால் போதும். பரிபூரண இன்பம் என்பதை யாராலு ம் தடுக்க முடியாது.

No comments:

Post a Comment