Lord Siva

Lord Siva

Thursday, 2 August 2012

மருத்துவ குணமுள்ள‍ பாரம்பரிய உணவுகளை பதப்படுத்தும் தொழில்நுட்ப பயிற்சி

உணவு உற்பத்தியில் சிறுதானியங்களின் பங்கு மிக முக்கியமான தாகும். பழங்காலங்களில் மக்களின் உணவில் சிறு தானியங்களுக்கு முக் கியத்துவம் அளிக்கப்பட்ட போதிலும், நாகரீகம் என்ற பெய ரில் சிறு தானிய வகைகளான சோளம், கம்பு, வரகு, திணை, சாமை, குதிரைவாலி போன்ற வை மக்களிடையே முக்கியத்துவத்தை இழந்தது. முன்பெல்லாம் தீபாவளி, பொ ங்கல் போன்ற பண்டிகை தினங்களில் மட்டுமே நெல் அரிசி சமையல் இருக்கு ம். மற்ற நாட் களில் சிறுதானிய உணவு களை உண்பார்கள். எனவேதான் அந்த காலத்தில் எல்லோரும் ஆரோக்கியமாக இருந்தார்கள். கொஞ்சம் கொஞ்சமாக அதையெல் லாம் ஒதுக்க ஆரம்பித்தபிறகுதான் சர்க்கரை நோய், ரத்த அழுத்தம் போன்ற ஏகப்பட்ட நோய்களில் சிக்கித்தவிக் கிறோம். இன்றைய தலைமுறையினர் சிறு தானியங் களை பார்த்ததுகூட இல்லை. தற் போது நோய்களின் தாக்கத்தால் சிறு தானிய உணவுகளை மக்கள் ஏற்க முன்வந்துள்ளனர். இதனை கருத்தில் கொண்டு சிறுதானிய உண வுகளை உடனடி உணவாகவும் எல்லா வயதி னர் மற்றும் உடல் நலம் பாதிக்கப்பட்டவர்க ளும் உட்கொ ள்ளும் வகையிலும் ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டது. சுமார் 30 வகை சிறு தானிய உணவுகளை அன்றாடம் உபயோகிக் கும் வகையில் கண்டுபிடிக்கப்பட்டது. இவ்வு ணவுகளின் தரம் மற்றும் சத்துக்கள் முதலிய வையும் கண்டறிய ப்பட்டது. தயாரிக்கப்பட்ட சிறு தானிய உணவுக ளில் சுமார் 15 கிராம் முதல் 25 கிராம் வரை புரதச் சத்தும் 5 முதல் 8 கிராம் வரை நார்ச்சத்து மற்றும் கால்சியம், பாஸ்பரஸ், சோடியம் போன்ற தாது உப்புக்களும் அதிகளவில் உள்ளது. சிறு தானிய உண வுகளை விரும்பி சாப்பிட மக்கள் தயாராகத்தான் இருக்கிறார்கள். இன்றைய காலத்திற் கேற்ப மாற்றிக் கொடுத்தால் நிச்சயம் மக்கள் விரும்பி ஏற்றுக்கொள்வார்கள். இதனால் சிறு தானியத்தின் உபயோகம் அதிகரிக்கும் போது விவசாயிகளும் அதிகம் உற்பத்தி செய்ய வாய்ப்பு உண்டு. விவசாய பெருமக்களே உற்பத்தி செய்த சிறுதானியங்களை மாற்று பொருளாக பதப்படுத்தி விற்பனை செய் யும்போது விவசாயிகள் வருமானம் பெரு கும்.
அதேபோல் கீரைகளில் உடலுக்கு தே வையான வைட்டமின்கள், தாது உப்புக் கள் தக்க அளவில் உள்ளன. இவை உட லுக்கு மிக குறைந்த அளவே தேவைப் படுகிறது. இக்கீரை உணவை சரிவர உட் கொள்ளாவிடில் பல நோய்கள் தாக்கு வதற்கு வழி ஏற்படும். இக்கீரைக ளில் மணத்தக்காளி கீரை உடல் ஆரோக்கிய த்திற்கான சத்துக்கள் நிறைந்திருப்பதோ டு பல மருத்துவ குணங்களையும் கொ ண்டுள்ளது. சித்தா, ஆயுர்வேத மருந்துக ளில் இக்கீரை அதிகம் உபயோகிப்பது கண்டறியப்பட்டது. ஆராய்ச்சி யில் வயிற்றுப்புண் (அல்சர்) குணப்படுத்தும் தன்மை உள்ளது கண்ட றியப்பட்டது. மணத்தக்காளியில் உள்ள சொலனின், ஆல்கலாய்டு, சல்போனின் போன்ற வகைகளுக்கும் புண்க ளை ஆற்றும் தன்மை உள்ளது. இக்கீரை சளி, இருமல் போன்றவற்றிற்கும் நல்ல மருந்தா கும். இம்மருத்துவ குணம்மிக்க கீரையை உப யோகித்து பலதானிய மிக்ஸ், ரொட்டி மிக்ஸ், சூப் மிக்ஸ் போன்ற பல உணவுகளை தயாரி க்கலாம்.
பழங்களில் வில்வம்பழம் பண்டை காலத்திலிருந்தே மூலிகை மருத்துவத்தில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதில் வைட்டமின்கள் மற்றும் மார்மலோசின், ஈகிலின், ஆனத்தோச யனின் போன்ற மருத் துவ தன்மை உள்ளது. இவ்வகை அனைத்து உணவுகளையும் தொழி ல் ரீதியாக பதப்படுத்துவதற்கான பயிற்சி அளி க்கப் படுகிறது. அதோடு அதற்கான இயந்திர ங்கள், பேக்கிங் முறைகள் பற்றிய விவரங்க ளும் அளிப்பதுடன் இத்தொழில் நுட்பங்களுக் கான செய்முறை பயிற்சியும் அளிக்கப்படுகிறது.
மேலும் விபரங்க ளுக்கு: 
- டாக்டர் சி.பார்வதி,
பேராசிரியர் மற்றும் தலைவர்,
மனையியல் விரிவாக்கத்துறை,
மனையியல் கல்லூரி மற்றும் 
ஆராய்ச்சி நிலையம், மதுரை-625 104.
0452-242 4684, 94422 19710, 97871 50703.

No comments:

Post a Comment