Posted on August 5, 2012 by muthukumar
“வாசனை உணர முடிகிறதா?’ தலை மற்றும் கழுத்து அறுவை சிகிச் சை நிபுணர் ரவி ராமலிங்கம்:
நம் மூக்கிலிரு ந்து மூளைக்கு, ஒரு மெல்லிய நரம்பு போகும். அந்த நரம்பைச்
சுற்றி பாதுகாப்பிற்காக, எலும் பாலான ஒரு, “லேயர்’ இருக்கும். காது மடல்க
ளில் உள்ள குறு த்தெலும்பு போன்று, இந்த எலும்பும் உறுதியற்றதாகத் தான்
இருக்கும். தவ றி விழுந்தாலோ, விபத்தினாலோ இந்த எலும்பு பாதி
க்கப்பட்டிருந்தால், நரம்பு நசுங்கும் பாதிப் பைப் பொறுத்து, வாசனை களை
உணர்வது குறையும் அல்லது உணர முடியாமலேயே கூட போகும். இந்த பாதிப்பிற்கு,
“ஹைபோஸ்மியா’ என்று பெயர். சிறிய விபத்துகள், மூளைக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது. இது தவிர, சரியாக சிகிச்சை எடுக்காத, “சைனஸ்’ பிரச்னை, மாசு அலர்ஜியால் மூக்கின்
உள்பகுதியில் ஏற்படும், “பங்கஸ்’ பாதி ப்பு, இதனால் ஏற்ப டும் சதை
வளர்ச்சி, மூக்கி ன் எலும்பு வளைந்திரு ப்பது, இவற்றாலும் வாசனை நுகர்வதில்
கு றைபாடு ஏற்படும். வாச னை தான் பசியைத் தூ ண்டும். எனவே, இந்த
குறைபாட்டால், சாப்பாடு மீது விருப்பம் குறைந்து விடும்; சரியாகச் சாப்பிட
முடியாது. உடலில் சத்து குறைபாடு ஏற்பட்டு, பல பிரச்னை கள் உருவாகும்.
“சைனஸ்’ பாதிப்பால், வாசனை உணர்வதில் குறைபாடு ஏற்பட்டிருந்தால், மருந்து,
மாத்தி ரைமூலம் குணப்படுத்த வாய்ப்புண்டு. “சைனஸ்’ பாதிப்பு முற்றிவி
ட்டால், அறுவை சிகிச்சை மூலம் கு ணப்படுத்தலாம். மற்றபடி, வாசனை உணரும்
நரம்பு சம்பந்தப்பட்ட பிரச் னை அல்லது, “பங்கஸ்’ சதை வளர்ச் சி என்றால்,
அறுவை சிகிச்சை மூல ம்தான், தீர்வுகாண முடியும். சளி பிடி த்திருந்தால்,
அப்போது, வாசனை உணர முடியாமல் இருக்கு ம்; இது சகஜம். ஆனால், விபத்திற்குப்
பிற கோ அல்லது சாதாரணமாகவோ வாசனை உணர்வதில் குறை பாடு இருப்பதாகத்
தெரிந்தால், உடனே, காது, மூக்கு, தொண்டை மருத்து வரைப் பார்க்கவேண்டியது
அவசியம்; இந்த விஷயத்தில் அலட்சிய ம் கூடாது.
No comments:
Post a Comment