Posted On July 22,2012,By Muthukumar |
சமீப
காலங்களில் பள்ளி மாணவர்கள் பலர் பாலியல் பிரச்சினைகளில் சிக்கி
பாதிக்கப்படுகின்றனர். பத்தாம் வகுப்பு பள்ளி மாணவிக்கு குழந்தை பிறப்பது,
அதேபோல் மாணவர்கள் சிலர் மாணவிகளுடன் உறவில் ஈடுபட்டு அதை வீடியோ எடுப்பது
என கலாச்சார சீர்கேடுகள் அதிகரித்து வருகின்றன. இதுபோன்ற டீன் ஏஜ் வயதில்
உறவில் ஈடுபடுவது எதிர்காலத்தில் அவர்களின் மூளை நரம்புகளை பாதிக்கும்
என்று மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.
இளம்
வயதில் உறவில் ஈடுபடும் கலாசாரம் அமெரிக்கா உள்ளிட்ட மேலை நாடுகளில்
மட்டுமே அதிகம் இருந்தது. தற்போது இந்தியாவிலும் இது அதிகரித்து வருகிறது.
இதனால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து அமெரிக்காவின் ஒஹியோ மாநில மருத்துவ
பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு மேற்கொண்டனர்.
எலிகளில் பரிசோதனை
பிறந்து
40 நாட்கள் ஆன பெருச்சாளிகளை வைத்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. நன்கு
வளர்ந்தவை, நடுத்தர வயதில் இருப்பவை, இளம் எலிகள் என மூன்றாக
பிரிக்கப்பட்டன. அவைகளுக்கு உணர்வை தூண்டும் ஊசி போட்டு சோதனை
நடத்தப்பட்டது. பின்னர், எலிகளிடம் மருத்துவ ரீதியாக ஏற்பட்டிருக்கும்
மாற்றங்கள் ஆராயப்பட்டன.
மூளை செயல்கள் பாதிப்பு
மற்ற
பிரிவுகளுடன் ஒப்பிடும்போது இளம் வயது எலிகளின் செயல்பாடுகள் உறவுக்கு
பிறகு பெரிதும் பாதிக்கப்பட்டிருந்தன. அவற்றின் அன்றாட செயல்பாடுகளில்
சுணக்கம், சோர்வு ஏற்பட்டது. அன்றாட உணவைக்கூட உண்ணாமல் ஒரே இடத்தில்
முடங்கி கிடந்தது. சரியான பருவத்தில் இருந்த எலிகள் வழக்கம்போல
இருந்தன.நரம்பு மற்றும் மூளை செயல்களும் பாதிக்கப்பட்டிருந்தது
தெரியவந்தது.
இளம்
பருவத்தில் செக்ஸ் உறவு வைத்துக் கொள்வது மூளை, நரம்புமண்டல வளர்ச்சியை
பாதிக்கும் என்பது இந்த ஆய்வின் மூலம் உறுதியாக தெரிகிறது. மனிதர்களுக்கும்
இது பொருந்தும். இதன் பாதிப்பு உடனடியாக இருக்காது என்றாலும்
எதிர்காலத்தில் அதிகரிக்கும்.
பாலியல் விழிப்புணர்வு கல்வி
இந்தியாவில்
குறிப்பாக தமிழ்நாட்டில் இளம் வயதில் பாலியல் ரீதியான உறவுகளில்
ஈடுபடுபவர்கள் அதிகரித்து வருகின்றனர். அவர்களின் மூளையும், செயல்பாடுகளும்
பாதிக்கப்பவடுவதாலேயே கொலை, கொள்ளை உள்ளிட்ட குற்றச் செயல்களில்
ஈடுபடுகின்றனர். இவற்றை தடுக்க பாலியல் விழிப்புணர்வு குறித்த கல்வியை
மாணவர்களுக்கு கற்பிக்கவேண்டும் என்பது உளவியல் நிபுணர்களின்
அறிவுரையாகும்.
No comments:
Post a Comment