Lord Siva

Lord Siva

Sunday, 29 July 2012

புத்துணர்ச்சி தரும் கத்தி வைத்தியம்!

Posted On July 29,2012,By Muthukumar
மன அழுத்தத்தை போக்குவதற்கும், ரத்த ஓட்டத்தை சீராக்குவதற்கும், தைவானில் உள்ள சிலர், புதுமையான சிகிச்சை முறையை கையாளுகின்றனர். மாமிசம் வெட்டுவதற்கு பயன்படுத்தப்படும், கூர் தீட்டிய கத்திகளை, சிகிச்சைக்கு வருவோரின் உடலில், சரமாரியாக, பத்து நிமிடங்கள் வெட்டுகின்றனர். படிக்கும்போதே நடுக்கமாக இருக்கிறதா? "பயப்பட வேண்டாம். இந்த பத்து நிமிட கத்தி தாக்குதலில், உடலில் எந்த காயமும் ஏற்படாது. ஒரு சொட்டு ரத்தம் கூட சிந்தாது. சிகிச்சை முடிந்ததும், புத்துணர்ச்சி பீறிட்டு வரும்...' என்கின்றனர், இந்த சிகிச்சையை மேற்கொள்ளும் நபர்கள்.
வடக்கு தைவானில் உள்ள ஹிசின்சு என்ற நகரம், இந்த கத்தி வைத்தியத்துக்கு மிகவும் பிரபலம். வெளியூர்களில் இருந்தெல்லாம், இந்த சிகிச்சைக்காக வருகின்றனர். பத்து நிமிட சிகிச்சைக்கு, ஒரு நபருக்கு, 500க்கும் குறைவான கட்டணம் தான் வசூலிக்கப்படுகிறது. கூர்மையான கத்திகளால், வெட்டும்போது காயம் ஏற்படாதது எப்படி என கேட்டால், "அது தான், எங்கள் சிகிச்சையின் ஸ்பெஷல். சிகிச்சைக்காக வருவோரின் உடல்களில், வேகமாக கத்தியை இறக்குவது போல் தெரியும். ஆனால், உடலில் கத்தி படும்போது, வேகத்தை குறைத்து விடுவோம். உடலில் கத்தி படும்போது, கத்திக்கு அழுத்தம் கொடுக்கவோ, இழுக்கவோ மாட்டோம். அப்படி செய்தால், கத்தி பட்ட இடம், துண்டாகி விடும்...' என்கின்றனர்.

No comments:

Post a Comment