Lord Siva

Lord Siva

Thursday, 19 July 2012

புதுமணத் தம்பதிகளுக்கு, ஆடி மாத உறவு, ஆகாத உறவு! ஏன் ?


ஆடிமாதம் வந்தாலே புதிதாய் திருமணமான தம்பதிகளுக்கு ஆகாத மாதமாகிவிடும். வீட்டில் உள்ள பெரியவர்கள் ஒன்று சேர்ந்து புது மணத் தம்பதிகளை பிரித்து பெண்ணை அம்மாவீட்டுக்கு அனுப்பி விடுவார்கள். ஒரு மாதத்திற்கு தனி படுக்கை தான். காலம்காலமாக நடந்து வரும் இந்த பழக்கம் சமூக ரீதியாக மட்டுமின்றி அறிவிய ல் ரீதியாகவும் நன்மை தரக் கூடியதுதான் என்று நிரூபிக்க ப்பட்டுள்ளது.
 அம்மன் மாதம்
தமிழில் ஆடி என்று மலையாளத்தில் கார்கிடகா என்றும் அழைக்கப் படும் ஆடி மாதம் அம்மனுக்கு உகந்த மாதம். இந்த மாதத்தில் பெரு ம்பாலான திருவிழாக்கள் நடைபெறுகின்றன. இந்த சமயத்தில் வீட் டில் உள்ள இளசுகள் இணைந்திருப்பது அந்தளவிற்கு உகந்த தல்ல என்பது பழங்கால நம்பிக்கை யாகும். இறைவனை பிரார்த்திக்க மட்டு மே உகந்த மாதத்தில் தாம்பத்ய உறவு ஏற்றதல்ல என்கின்றனர் முன்னோர்கள். அதனால் பெண்ணை புகுந்த வீட்டுக்கு அனுப்பி வை த்துவிடுகின்றனர்.
ஆடிமாதம் பிறப்பதற்கு முதல்நாள் புதுமணத்தம்பதியர்களுக்கு சீர் கொடுத்த பெண்ணின் பிறந்த வீட்டிற்கு அழைத்து வந்து புத்தாடையு ம், நகையும் கொடுத்து அணியச் சொல்கின்றனர். விருந்து உபசாரம் முடிந்த பின்னர் பெண்ணை விட்டுவிட்டு மாப்பி ள்ளை தன்னுடைய வீட்டிற்கு சென்று விடுகிறார்.
ஆயுர்வேதம் சொல்லும் உண்மை
ஆடிமாதம் பலம் குன்றியமாதமாக ஆயுர்வேதத்தில் கூறப்பட்டுள்ள து. இந்த மாதத்தில்தான் பருவமழை தொடங்கும். தண்ணீரின் மூல மும் காற்றின் மூலமும் ஏகப்பட்ட நோய்கள் பரவும். இந்த சமயத்தில் புதுமணத்தம்பதிகள் இணைய நே ரிட்டால் கருவில் உதிக்கும் குழந் தைக்கு எளிதில் நோய் தாக்க வாய்ப்புள்ளது என்று கூறப்பட்டு ள்ளது. எனவேதான் இந்த மாதத் தில் இணைவதற்கு தடை விதித்து இறைவழிபாட்டிற்குரிய மாதமாக கொண்டாடி வருகின்றனர்.
சூரியனின் நகர்வு
ஆடி மாதம் தட்சனயண தொடக்கக் காலமாகும். வடக்கு திசையில் இருந்து தெற்கு திசை நோக்கி சூரியனின் பயணம் தொடங்கும். இந்த கால கட்டதில் சூரியனை வணங்கி தியானத்தில் ஈடுபடவேண்டும் என் றும் கூறுகின்றனர். இதனால் உட லில் நோய் எதிர்ப்பு சக்தி அதி கரிக் குமாம். மேலும் ராமாயணம், மகா பாரதம் உள்ளிட்ட இதிகாசங் களை இந்த மாதத்தில் வாசிப்பது நல்லது என்கின்றனர் முன்னோர் கள்.
ஆடிமாதம் விவசாயத்திற்கு ஏற்ற மாதம். குளம், குட்டைகள் நிரம்பி வழியுமாம். அப்பொழுது விவசாய த்தை தவிர வேறு எதிலும் கவ னம் திரும்பிவிடக்கூடாது என்பதற் காகவும் இந்த பிரித்து வைக்கும் சடங்கினை ஏற்படுத்தியிருக்கலாம் என்கின்றனர்.
சித்திரையில் குழந்தை
ஆடியில் கூடினால் சித்திரையில் குழந்தை பிறக்கும் என்பார்கள். சித்திரைமாதம் அதிக வெப்பமான மாதம். இந்த மாதத்தில் பிறக்கும் குழந்தைக ளுக்கு எளிதில் சின்னம்மை போன்ற வெப்பநோய்கள் தாக்கும். அடிக்கடி நோய் வாய்படும் என்பதால்தான் ‘சித்திரையில் குழந்தை பிறந்தால் சீரழியும்´ என்ற சொல்வழக்கு உள்ளது. இதை காரணமா கக்கொண்டுதான் ஆடிமாதம் தம்பதியர் உறவில் ஈடுபடுவது நல்லதல்ல என்கின் றனர்.
செக்ஸ் என்பது மனிதவாழ்வின் ஒரு அங் கம். இது இயல்பு வாழ்க்கையை பாதிக்கு ம் வகையில் அமைந்துவிடக்கூடாது. ஆரோக்கிய மான சந்ததியை உருவாக்க வேண்டும் என்பதற்காகத்தான் அனைவரும் பாடுபடுகின்றனர். என வே ஆடி மாத உறவு என்பது பிறக்கும் குழந்தையின் ஆரோக்கியத்தி ற்கு ஏற்றதல்ல என்ற காரணத்திற்காகவே தம்பதியரை பிரித்து வைக்கின்றனர் என்று நிரூபித்துள்ளனர் ஆய்வாளர்கள்.

No comments:

Post a Comment