Posted On November 25,2011,By Muthukumar
பெருங்காயம்
வாசனைப்பொருளாக சேர்க்கப்படுவதாக பலர் கருதுகிறார்கள்.ஆயுர்வேத மருத்துவத்தில் வாத
நோய்களுக்கு மருந்தாக பயன்படுத்துவதுண்டு.நமது பாரம்பர்ய உணவில் சேர்க்கப்படும்
பொருட்களுக்கு குறிப்பிட்ட காரணத்தை சொல்வது கடினம்.பெரும்பாலானவை மருத்துவ குணம்
கொண்டவை.தவிர்க்க கூடாதவை.
அன்று மதியம்
இரண்டு மணியை தாண்டிவிட்ட்து.நல்ல பசி.நானும்,பால்யகால நண்பனும் கிராமத்திற்கு
திரும்பிக் கொண்டிருந்தோம்.நெடுஞ்சாலையில் ஒரு தாபா ஓட்டலை பார்த்தவுடன்
சாப்பிட்டுவிட்டு போகலாமென முடிவு செய்து உள்ளே நுழைந்துவிட்டோம்.உள்ளே போய்
உட்கார்ந்தவுடன் நான் பீர் குடிக்கப் போகிறேன் என்றான் நண்பன்.அவன் முடிவு
செய்தால் செய்த்துதான்.
கூலிங் பீர் இல்லை
என்று சொல்லிவிட்டார்கள்.அன்று முழுக்க மின் தடையால் பிரச்சினை.நண்பனின் முகம்
மாறினாலும் ஆசை மட்டும் போகவில்லை.எரிச்சலுடன் சரி கொடுங்கள் என்று
சொல்லிவிட்டான்.குடிக்க ஆரம்பித்த கொஞ்ச நேரத்தில் முகத்தை தடவிக்
கொண்டிருந்தான்.எழுந்து போய் கண்ணாடியில் பார்த்துவிட்டு வந்தான்.
அப்போதுதான்
கவனித்தேன்.முகத்தில் அங்கங்கே லேசாக கொப்புளங்கள் போல வீங்க
ஆரம்பித்திருந்த்து.எனக்கு கூலிங் இல்லாமல் பீர் குடித்தால் ஒத்துக்கொள்ளாது
என்றான்.எனக்கு பயம் ஏற்பட்டுவிட்ட்து.அவனோ அதிகம் அலட்டிக்கொள்ள வில்லை.ஏற்கனவே
அவனுக்கு அனுபவம் இருந்திருக்கிறது.சப்ளையரை அழைத்து பெருங்காயம் இருக்கிறதா?” என்று
கேட்டான்.
சப்ளை செய்பவர்
பெருங்காயத்தை தூள் செய்து எடுத்துவந்து கொடுத்தார்.குழம்பில் லேசாக தூவி சாப்பிட
ஆரம்பித்தான்.நான் சாப்பிடுவதை விட்டுவிட்டு அவனுடைய முகத்தையே பார்த்துக்
கொண்டிருந்தேன்.முகத்தில் இருந்த கொப்புளங்கள் கொஞ்சம்கொஞ்சமாக
மறையத்தொடங்கிவிட்ட்து.சாப்பிட்டு முடிப்பதற்குள் முகம் இயல்பான நிலைக்கு
வந்துவிட்ட்து.
வாயுத்தொல்லை,வயிற்றுப்பொருமல் போன்ற
தொல்லைகளுக்கு பெருங்காயத்தை பயன்படுத்துவதை பார்த்திருக்கிறேன்.கிராமங்களில்
வாழைப்பழத்தில் சிறிது பெருங்காயத்தை வைத்து உண்பார்கள்.தோல் அலர்ஜிக்கு
பயன்படுத்தப்படுவதை அன்றுதான் நேரில் பார்த்தேன்.
பெருங்காயம்
மிளகுத்தூள் போன்றவற்றில் சேர்ப்பார்கள்.அப்புறம் ஊறுகாய்களில் முக்கிய பொருளாக
இருக்கிறது.சீக்கிரம் கெட்டுப்போகாது என்று சொல்வார்கள்.நுண்ணுயிரிகளுக்கு எதிராக
செயல் புரியும் தன்மை இருப்பதால்தான் இது சாத்தியமாகிறது.
மரபு சார்ந்து
நம்முடைய உணவுப் பொருளில் சேர்க்கப்படுபவற்றை இந்த காரணத்திற்காக என்று
வரையறுப்பது கஷ்டம்.பெரும்பாலானவை மருத்துவ குணம் கொண்டிருக்கின்றன.முன்னோர்கள்
தங்களது ஆரோக்கியத்தை உணவுப்பொருட்களில் கொண்டிருந்தார்கள்.
இந்திய
மருத்துவ முறைகளுக்கு அப்பாற்பட்டும் கூட பாட்டி வைத்தியம் பரவலாக பலன் தருவதாக
இருப்பதை அறிய முடிகிறது.வரும் காலங்களில் ஒவ்வொன்றுக்குமான அறிவியல் காரணங்களை
மேலை நாடுகளில் ஆராய்ச்சி செய்து நமக்கு வழங்குவார்கள்.அவர்களே காப்புரிமை
பெற்றுவிடவும் வாய்ப்பிருக்கிறது.
.
No comments:
Post a Comment