Posted on November 8, 2011
ஹார்மோன் ஏற்றத்தாழ்வு காரணமாக ஆண்களுக்கும் மார்பகபுற்றுநோய் வரலாம் என்று டாக்டர்கள் எச்சரித்துள்ள னர். கான்பூரில் உள்ள ஜே. கே. புற்றுநோய் மருத்துவ மனையில் நடந்த கூட்டத் தில் மார்பக புற்றுநோய் க்கான சிறப்பு நிபுணர் ரோ ஷினி ராவ் பேசுகையில், மார்பக புற்றுநோய் என்பது பெண்களை மட்டுமே தாக்கும் என்று மக்கள் கரு துகின்றனர்.
ஆனால், அது ஆண்களையும் தாக்கும் என்ற விழிப்புணர்வுஇல்லாமல் மக்கள் உள்ள னர். இதனால் பலர் பாதிக் கப்படும் அபாயம் ஏற்படும்.
மார்பக பகுதிகளில் சிக்க ல், ஹார்மோன்களில் சம நிலை இல்லாத நிலையில் 40 வயது தாண்டிய ஆண்க ளுக்கு மார்பக புற்றுநோய் தாக்க வாய்ப்புள்ளது. விழி ப்புணர்வு இல்லாமை, நோ ய் பற்றி தெரிந்து கொள்வதில் காட்டும் தயக்கம் காரண மாக பெரும்பான்மையினர் பாதிக்கப்படுகின்றனர். மேலும் இந் நோ ய் ஆண்களைவிட பெண்களுக்கே அதிகம் வர வாய்ப் புள்ளது. மார்பக புற்றுநோய் அறி குறியின் ஆரம்ப நிலையி லேயே கண்டறிந்தால் அதி லிருந்து முழுமையாக மீள லாம். முற்றிய நிலையில் வருவதாலே பலர் இறக்க நேரிடுகிறது.
மார்பு, அக்குள் பகுதியில் வீக்கம், சீல் வட்டம், உரு வமற்ற கட் டி வந்தால் அது மார்பக புற்றுநோய்கான அறிகுறிகள். இவைகள் தென்பட்ட உட னே சிகிச்சை பெற்றால் முற்றிலும் தீர்வு காணப்படும் என்று
ரோஷினி தெரிவித்தார்.
மார்பக புற்றுநோயை அறிய முலை ஊடுகதிர்படத்தை (மமோ கிராபி) பயன்படுத்தலாம். ஆனா ல், இது ஆண்களுக்கு உகந்த தாக இருக்காது. மேலும், எம்ஆர்ஐ, சிடி ஸ்கேன் மற்றும் அல்ட் ராசவு ண்ட் முறைகளை பின்பற்றி அறி ந்து கொள்ளலாம். உடல் பருமன், கொழுப்பு நிறைந்த இளம் பெண் களைகூட அதிக அளவில் மார்பக புற்றுநோய் தாக்க வாய்ப்புள்ளது. குறிப்பாக மார்பு பகுதியில் கட்டி, சீல் வட்டம் தென்பட்டால் 40 வய தை தாண்டிய அனைவரும் டாக் டர்களின் ஆலோசனை பெறுவது அவசியம் என்று நிபுணர்கள் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment