Lord Siva

Lord Siva

Wednesday, 30 November 2011

மூலிகை மருத்துவம்: மு(பு)திய குழந்தைகள்

Posted On November 30,.2011,By Muthukumar
வயோதிகம் பெரும்பாலான முதியவர்களை குழந்தைகளாக மாற்றிவிடுகிறது. வயது அதிகரிப்பதால் முதியவர்களுக்கு மூளையின் ஆற்றல் குறைகிறது. எழுபது வயதிற்கு மேல் மூளையின் புறணியானது சுருங்கத் தொடங்குவதால், முதியவர்கள் தங்களது ஞாபக சக்தியையும் சிந்திக்கும் திறனையும் கொஞ்சம் கொஞ்சமாக இழக்கின்றனர். இளமைக்காலத்தில் தங்களது மனதில் பதிந்த நினைவுகள், மற்றவர்களைப்பற்றி கற்பனை செய்து வைத்திருந்த முடிவுகள், தங்களது நம்பிக்கைகள், அசைக்க முடியாத சில கருத்துக்கள் ஆகிய அனைத்தும் வயதான காலத்தில் ஒன்றன்பின் ஒன்றாக தோன்றி மூளையில் குழப்பத்தை ஏற்படுத்துவதால் முதியவர்கள் தங்களது சிந்தனைத்திறனை இழந்து, பேசியதையே திரும்ப திரும்ப பேசுவதும் நடக்காத விஷயங்களை நடந்ததுபோல பேசியும் தாங்களும் குழம்பி பிறரையும் குழப்புவர். அல்சீமர் என்ற நோய், மூளைச்சுருக்கம் போன்ற காரணங்களால் முதுமையில் ஐம்புலன்களும் குன்றுகிறது. மூளையின் எட்டாவது நரம்பான கேள்வி நரம்பும் பாதிக்கப்படுவதால் கேட்கும் திறனை இழப்பதுடன் சில உடல் உபாதைகளுக்கும் ஆளாகின்றனர். வெஸ்டிபில் என்னும் நரம்பின் ஒரு பாகமானது காதின் உட்புறம் இருந்து தலை மற்றும் உடல் சமநிலையை பாதுகாக்கிறத ு. இந்த நரம்பின் பாதிப்பால் காதின் உட்புறம் உள்ள நத்தைக்கூடு போன்ற பகுதியில் திரவ சமநிலையானது மாறுபட்டு, நரம்புகளுக்கு போதுமான மின்னோட்டம் கிடைக்காததால் மூளை தண்டுவடம் மற்றும் மூளை முன்புறத்தில் குழப்பம் உண்டாகி தலைசுற்றல் ஏற் படுகிறது.
இளமையில் எப்போதாவது வரும் தலைசுற்றல் முதுமையில் அடிக்கடி வருவது முதியவர்களுக்கு மனதளவில் பயத்தையும் உடலளவில் சோர்வையும் ஏற்படுத்தி விடுகிறது. நிற்கும்பொழுது தடுமாற்றம், நிலைகுத்திய பார்வை, குமட்டல், வாந்தி, இல்பொருள் காட்சி, சுற்றியுள்ள பொருட்கள் சுழல்வது போல் உணருதல், திடீர் வியர்வை, படபடப்பு, இதயத்துடிப்பு அதிகரித்தல், ரத்த அழுத்தம் குறைதல் போன்ற உணர்வுகளுடன் தலைசுற்றல் உண்டாவதை வெர்டிகோ என்று அழைக்கிறோம். தனக்குத்தானே சுற்றுவது போல் உணருதல் அல்லது தன்னைச் சுற்றியுள்ள பொருட்கள் சுற்றுவதுபோல் உணருதல் ஆகிய இரண்டு வகைகள் வெர்டிகோவில் காணப்புடுகின்றன. வெர்டிகோ தொல்லையினால் காதின் கேட்கும் திறனும் குறைகிறது. முதுமையில் ஏற்படும் இந்த தலைசுற்றல் பெரும்பாலும் குளிர்காலத்தில் அதிகரிக்கிறது. தலைசுற்றலினால் பாதிக்கப்படும் முதியவர்கள் நடப்பதற்கே பயப்படுவதுடன் தடுமாறவும் செய்கின்றனர். ஆகவே முதியவர்களின் உடல்நிலையை கருத்தில் கொண்டு அன்பும் அரவணைப்பும் காட்டவேண்டியது அவசியமாகும்.
வயோதிகத்தின் பயனாய் குழந்தைகள் போல் தடுமாறும் முதியவர்களை வெறுக்கக்கூடாது. அவர்களது வார்த்தைகளுக்கு அர்த்தம் கண்டு கோபப்படாமல் குழந்தையின் போக்காக நினைத்து அவர்களை புரிந்துகொள்ள வேண்டும். வயதான காலத்தில் புதிய குழந்தைகளாய் அவதாரமெடுக்கும் முதியவர்களின் வெர்டிகோ என்னும் தலைசுற்றலை கட்டுப்படுத்தும் மூலிகை மருந்துப் பொருள்தான் அரக்கு. சபின்டஸ் லாரிபோலியஸ் என்ற தாவரவியல் பெயர் கொண்ட சபின்டேசியே குடும்பத்தைச் சார்ந்த பெரிய மரங்களில் வளரும் ஒருவித பூச்சிகள் உற்பத்தி செய்யும் லாக்கோயர் என்னும் பொருளே அரக்கு என்ற பெயரில் சித்த மருந்துகளில் பயன்படுத்தப் படுகிறது. அரக்கு மரங்களின் கட்டை மற்றும் பூக்களில் உள்ள சப்போனின்கள் மூளையின் சமநிலையை நிலைநிறுத்தி காதின ் உட்புறத்தில் ஏற்படும் நிலையின்மையை குணப்படுத்துகின்றன. அரக்குப்பூச்சிகள் உற்பத்தி செய்யக்கூடிய பொருளாக இருந்தபோதிலும், அரக்கு மரங்களில் கூடு கட்டக்கூடிய பூச்சியிலிருந்து கிடைக்கக்கூடிய அரக்கே மருத்துவ குணம் வாய்ந்ததாகும். நாட்டு மருந்துக்கடைகளில் கிடைக்கும் கொம்பரக்கை ஒரு துணியில் முடிந்து, நீரில் போட்டு கொதிக்கவைத்து, நன்கு கரைந்ததும் வடிகட்டி, அத்துடனà � நல்லெண்ணெய் அரைபங்கு சேர்த்து கொதிக்கவைத்து, பதத்தில் வடிகட்டி, சூடுஆறிய பின் வாரம் இருமுறை தலையில் தேய்த்து இளவெந்நீரில் குளித்துவர வெர்டிகோ என்னும் தலை
சுற்றல் நீங்கும். சித்த மருந்துக்கடைகளில் கிடைக்கும் அரக்குத் தைலத்தை வாங்கி, வாரம் இரண்டு அல்லது மூன்று முறை தலைமுழுகி வர முதுமையில் தோன்றும் தலைசுற்றல், சைனஸ் பிரச்னையால் தோன்றும் தலைசுற்றல் ஆகியன நீங்கும்.

அழகு.. இளமை.. கிரீன் டீ..

Posted On November 30,2011,By Muthukumar
`நான் யாருக்கும் அடிமையில்லை, சுதந்திரமானவன்' என்று மார்தட்டுபவர்கள் கூட, தேநீரின் சுவைக்கு சுகமான அடிமைகளாக இருப்பது சுவையான விஷயம் தான். உலகிற்கு காகிதம், பட்டு போன்றவற்றை கொடையாக அளித்த சீனர்கள் தாம் தேநீரையும் அறிமுகப்படுத்தினார்கள். கி.மு.2737-ல் சீனப்பேரரசர் சென்-நுங் என்பவரால் இது கண்டுபிடிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. `கேமலியா சைனன்ஸிஸ்' என்பது இதன் தாவரவியல் பெயராகும்.
`ச்சா' என்பது சீன மொழியில் தேநீரை குறிப்பதாகும். இதுவே, பின்னர் மத்திய கிழக்கு நாடுகளில் `ச்சாய்' என மாறியிருக்கக்கூடும். இன்று இந்தியா உட்பட 35-க்கும் மேலான நாடுகள் `டீ' யை உற்பத்தி செய்கின்றன. உலகின் மொத்த `டீ' உற்பத்தி ஆண்டுக்கு 3 மில்லியன் மெட்ரிக் டன்னை தாண்டுகிறது.
தேயிலை க்ரீன் டீ, பிளாக் டீ, ஒயிட் டீ, மஞ்சள் டீ, ஊலாங் டீ என பல்வேறு வகைகளாக அவதாரம் எடுத்து உள்ளது. இவை அனைத்துமே தேயிலையில் இருந்தே வந்தாலும், தயாரிக்கப்படும் முறைகளாலும், பதப்படுத்தப்படும் முறைகளாலும் வேறுபடுகின்றன. இவற்றின் விளைவாக பெரும்பாலான `டீ' வகைகள் நல்ல மருத்துவ குணங்களை இழந்து விட, இவற்றுள் தன்மை மாறாமல் அப்படியே நம் கைகளில் கிடைப்பது `கிரீன் டீ' மட்டுமே.
ஜப்பானில் உள்ள டோகோஹூ பல்கலைக்கழக விஞ்ஞானி ஷன்சிகுரியாமா 40,530 நபர்களை வைத்து கிரீன் டீயை பற்றி மிகப்பெரிய ஆராய்ச்சியை நடத்தினார். அது 1994-ல் தொடங்கி 11 ஆண்டுகளாக நீடித்தது. மட்டுமல்லா மல், உலகெங்கும் உள்ள ஹார்வேர்ட், டோக்கிலோ போன்ற எண்ணற்ற பல்கலைக்கழகங்களும் கிரீன் டீ குறித்து ஆராய்ச்சிகள் செய்தன. ஆயிரத்துக்கு ம் மேற்பட்ட ஆச்சரியப்படத்தக்க ஆராய்ச்சி களின் முடிவுகள் வாழ்நாட்களையே நீட்டிக்க கூடிய அளவுக்கு நல்ல மருத்துவ குணங்கள் கொண்டது கிரீன் டீ என உறுதிப்படுத்தி உள்ளன.
`கிரீன் டீ' யின் ரகசியமே அதில் அதிக அளவில் உள்ள உயர்தர `ஆன்டி ஆக்சிடெண்ட்கள்' தான். இதனை `நோய் எதிர்ப்பு சக்தி' என தமிழில் அழைக்கிறோம். பழங்கள், காய்கறிகள், கீரை களில் உள்ளதை விட பல மடங்கு அதிகமாக இதில் இருக்கிறது. சுருக்கமாக சொன்னால், ஒரு கப் கிரீன் டீ 10 கப் ஆப்பிள் ஜூஸுக்கு சமம்.
என்ன ஆச்சரியமாக இருக்கிறதா? தொடர்ந்து படியுங்க... நிறைய ஆச்சரியப்படலாம்.
சூரியனின் வெப்பம், புற ஊதாக்கதிர், மாசடைந்த காற்று, சிகரெட் மற்றும் வாகன புகை, அழுக்கான தண்ணீர் என வெளிச்சூழல்கள் அனைத்தும் நம் உடலில் `பிரீ ரேடிகல்ஸ்' என்னும் கெடுதல் தரும் வேதிப்பொருட்களை ஏற்படுத்துகின்றன. இவைகளே நம் உடலின் ஒவ்வொரு செல்லையும் பாதித்து, சீரழித்து சிறிய நோய்கள் முதல் இதய, புற்று நோய்கள் வரை அனைத்து பெரிய நோய்களுக்கும் வழிவகுப்பதோடு சீக்கிரமே நம்மை முதுமை நிலைக்கும் தள்ளி விடுகின்றன. கிரீன் டீ யின் உயர் தர ஆன்டி ஆக்சிடெண்ட்கள் அபாயகரமான பிரீ ரேடிகல்களை சமன்படுத்தி, நம் உடலின் ஒவ்வொரு செல்லையும் புதுப்பித்து வாழ்நாட்களை நீடிக்க செய்கின்றன. எனவே தான் சீனர்கள் சராசரியாக 90 வயதை தாண்டி வாழ்வதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
கிரீன் டீ யின் நன்மைகள்:
* ரத்தத்தில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்கிறது.
* உயர் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துகிறது.
* உடலில் உள்ள தேவைக்கு அதிகமான கலோரிகளை வேகமாக எரித்து தேவையற்ற கொழுப்பை குறைத்து உடல் எடையை சீராக வைக்க உதவுகிறது.
* ரத்தக்குழாயில் அடைப்பு ஏற்படுவதை குறைக்கிறது. இதய நோய்கள் வராமல் தடுக்கிறது.
* ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை கட்டுப்படுத்துகிறது.
* நமது உடலின் திரவ அளவை சமன் செய்து சோம்பலை போக்குகிறது.
* புற்று நோய் வராமலும், புற்று நோய் செல்களை வளர விடாமலும் தடுக்கிறது.
* எலும்பில் உள்ள தாதுப்பொருட்களின் அடர்த்தியை அதிகரித்து எலும்பை பலப்படுத்துகிறது.
* பற்களில் ஏற்படும் பல் சொத்தையையும், வாய் துர்நாற்றத்தையும் நீக்குகிறது.
* ஞாபக சக்தியை அதிகரிக்கிறது.
* சருமத்தை பாதுகாத்து இளமையாக வைக்க உதவுகிறது. பருக்கள் வராமலும் தடுக்கிறது.
* வயதான பின் வரும் ஞாபக மறதி மற்றும் நரம்பு சம்பந்தமான நோய்களையும் தடுக்கிறது. (அல்சீமியர்ஸ் மற்றும் பார்க்கின்சன்ஸ்)
* மன அழுத்தத்திற்கும், தலைவலிக்கும் மருந்தாக செயல்படுகிறது.
* மூட்டு வாதத்தை குணமாக்க உதவுகிறது.
* உடலில் ஏற்படும் புண்கள், காயங்கள் விரைந்து குணமாக உதவுகிறது.
* புகை, மதுவின் விளைவாக உடலின் உள் உறுப்புகளில் ஏற்படும் பாதிப்புகளை குறைக்க உதவுகிறது.
* கிரீன் டீ உடலுக்கு ஆற்றலை தருவதிலும், நோய் எதிர்ப்பு சக்தி தருவதிலும் நிகரற்று விளங்குகிறது.

2020 ல் தமிழ் நாட்டு இளைஞர்களின் ஆண்மை பறிபோகும்

Posted On November 30,2011,By Muthukumar

  மிழ்நாட்டு இளைஞர்களில் பலர் சிறிது சிறிதாக ஆண் தன்மையை இழந்து கொண்டிருக்கிறார்கள் என்ற ஒரு தகவலை எனது மருத்துவ நண்பர் ஒருவர் சொன்ன போது எனக்கு அதிர்ச்சி ஏற்பட்டது.இதுமட்டுமல்லாமல் வேறொறு குண்டையும் அவர் தூக்கிப் போட்டார் நிலமை இப்படியே போனால் இன்னும் பத்து வருஷத்தில் தமிழ் நாட்டில் நூற்றுக்கு எட்டுப் பேருக்குத்தான் ஆண்மை இருக்கும் என்று  இதுவரையும் இல்லாது சமீபகாலமாக இத்தகைய நிலை நமது இளைஞர்களுக்கு ஏற்பட  என்ன காரணம்?  உண்மையாகவே அப்படி நடந்து வருகிறதா? அல்லது திட்டமிட்டு யாரேனும் அத்தனைய தகவல்களை பரப்பி வருகிறார்களா? என்ற சந்தேகம் எனக்கு தோன்றியது. ஏன் என்றால் இன்றைய பன்னாட்டு தொழிலமைப்புகள் எத்தகைய படுபாதக செயலையும் துணிந்து செய்ய கூடியவர்களாக இருக்கிறார்கள்.

   உண்மையோ. பொய்யோ பொதுவுடமை கட்சியை சார்ந்த ஒரு நண்பர் சர்வதேச மருந்து கம்பெனிகள் நோய்களை குணப்படுத்துவதற்கான மருந்துகளை கண்டுபிடிப்பதோடு மட்டுமில்லை புதிய நோய்களை உருவாக்கும் மருந்துகளையும் தயாரித்து மக்கள் மத்தியில் நடமாட விடுகிறார்கள். பிறகு அதற்கு தடுப்பு மருந்துகளை தயாரித்து பல லட்ச கோடிகளை அறுவடை செய்துவிடுகிறார்கள் என்ற அச்சம்மூட்டும் செய்தியை என்னிடம் சொல்லியிருந்தார் அவர் கூறிய வார்த்தைகளில் பொய்மையோ . அபரீத கற்பனையோ இருப்பதாக எனக்குப்படவில்லை காரணம் எந்த நாட்டில் அழகு சாதன பொருட்களின் சந்தையை பிடிக்க வேண்டுமென தயாரிப்பு நிறுவனங்கள் விரும்புகின்றனவோ அந்த நாட்டின் மாடல் அழகி உலக அழகியாகவோ பிரபஞ்ச அழகியாகவோ தேர்ந்தெடுக்கப்படுவார் என்ற ரகசியம் பல காலங்களுக்கு முன்பே எனக்கு தெரியும்.


    அதே போலவே தென்னக இளைஞர்களிடம் ஆண்மை குறைவு அதிகமாகயிருக்கிறது என்ற கருத்தை விஞ்ஞான ரீதியில் பிரச்சாரம் செய்து ஊக்க மருந்துகளின் விற்பனையை அதிகரிக்க சதி திட்டம் நடக்கிறதோ என்ற ஐயம் வந்தால் நிச்சயம் அதில் தவறில்லை. ஆனால் பல நடைமுறை சம்பவங்களை நேருக்கு நேராக பார்த்து போது எனது மருத்துவ நண்பர் சொன்ன ஆண்மை குறைவு விஷயம் பொய்யானது அல்ல பச்சை உண்மை என்ற நிதர்சனத்தை உணர்ந்தேன்.

  இன்றைய இளைஞர்களில் பலர் சோம்பேறிகளாக இருக்கிறார்கள். உடல் வளைந்து வேலை செய்வதில் அவர்களுக்கு நாட்டமில்லை. உட்கார்ந்த இடத்திலேயே எவரெஸ்ட் உச்சி வரவேண்டும் என்று விரும்புகிறார்கள். பலர் இரவு பகல் பாராமல் கணிப்பொறியின் முன்னாலேயே வாழக்கையை ஒட்டுகிறார்கள். சூரியன் முளைத்த பிறகு தூங்கி, மறைந்த பிறகு விழிக்கிறார்கள். இதனால் உறக்கம் கெடுகிறது. உடலின் சகஜ நிலை மாறுதல் அடைகிறது. மன அழுத்தம் அதிகக்கிறது. கடிதம் போடாமலேயே சக்கரை நோய் வந்து உடலோடு ஒட்டிக்கொள்கிறது.

  மருத்துவ ரீதியில் சக்கரை நோய் வருவதற்கு பல காரணங்கள் சொல்லப்பட்டாலும் மன அழுத்தம் என்பது மிக முக்கிய காரணியாக இருக்கிறது, உதாரணத்திற்கு சொல்ல வேண்டும் என்றால் எனது முன்னோர்களுக்கோ. என் குடும்பத்தில் மற்றவருக்கோ சக்கரை நோயே கிடையாது. ஆனால் எனக்கு அது வந்து பெரும் தொல்லை தருகிறது. இதற்கு காரணத்தை தேடிய மருத்துவர்கள் அதிகபடியான மன அழுத்தமே  எனக்கு வந்த நோய்க்கு காரணம் என்று சொன்னார்கள் அவர்கள் சொன்னதில் எந்த தவறும் இல்லை. எனக்கு குடும்பம் பிள்ளை குட்டிகள் என்ற எந்த விலங்கும் இல்லை. நான் கண்டிப்பாக செய்தே ஆக வேண்டும் என்ற கடமைகளும் இல்லை. உண்பதற்கு சோறும், உடுப்பதற்கு ஒரு முழு துணியும் இருந்தாலே என் தேவைகள் பூர்த்தியாகி விடும்.


 பிறகு எங்கிருந்து வந்தது எனக்கு மன அழுத்தம், இரண்டாயிரம் ஆண்டு துவக்கத்தில்  ஒரு பொது வேலையின் காரணமாக பல லட்ச ரூபாய் கடன் என் தலை மீது விழுந்தது. நம்பிக்கை நாணயம் கெடாமல் 2003-க்குள் அதை அடைத்து முடிப்பதற்கு நான் அனுபவித்த கஷ்டங்களை வெறும் வார்த்தைகளால் எழுதி விட முடியாது. கடன். வறுமை என்பவைகளின் முழுமையான அர்த்தம் எனக்கு அப்போது தான் தெரிந்தது. அப்போது ஏற்பட்ட மன அழுத்தமே என் உடலில் பல நோய்களை உண்டாக்கியது அல்லது வரவழைத்தது.

 நான் அனுபவித்த கஷ்டங்களை விட பல மடங்கு கஷ்டங்களையும் மன உளைச்சலையும் இன்றைய இளைஞர்கள் ஒவ்வொரு மணி நேரமும் அனுபவிக்கிறார்கள் என்பது யதார்த்தமாகும். குருவி தலையில் பனங்காயை வைத்தது போல வயதாலும் அனுபவமின்மையாலும் நமது இளம் தலைமுறையினர் சுமைகளை சுமக்க முடியாமல் திண்டாடுகிறார்கள் இதன் விளைவாக அவர்களின் மனமும், உடலும் பாதிப்படைகிறது. இது மட்டுமலல நாகரீகம் என்ற போர்வையில் நமது தேச பருவகாலத்திற்கு ஒத்து வராத பழக்க வழக்கங்களையும் உணவு முறைகளையும் ஏற்படுத்தி கொண்டும் அவதிப்படுகிறார்கள். இதனால் ஏற்படும் பல நோய்களில் மிக முக்கியமானது சக்கரை நோய்.

 சக்கரை நோயானது நாளமில்லா சுரபிகளை பாதித்துவிடுகிறது. இதனால் ஆண்களுக்கு ஆண்மை தன்மை குறைந்து உடலுறவில் நாட்டமில்லாமல் அல்லது திருப்தியில்லாமல் மழுங்கடித்து விடுகிறது. இந்த பிரச்சனை ஆண்களுக்கு மட்டும் தான் ஏற்படும் என 1970 வரை நம்பப்பட்டது. ஆனால் அதன் பிறகு நடத்தப்பட்ட பல ஆய்வுகள் சக்கரை நோயினால் பாதிப்படைந்த பெண்களுக்கும், பால் உறுப்புகளில் மென்மை தன்மை அல்லது பசைதன்மை அதிகம் ஏற்பட்டு பாலுறவில் சிக்கல்களை ஏற்படுத்துவதாக கண்டறியப்பட்டுள்ளது. அதாவது மன அழுத்தத்தால் உருவாகும் உடல் நோய்கள் ஆண்மை குறைவை மட்டுமல்ல, பெண்மை குறைவையும் ஏற்படுத்துகிறது.


 சக்கரை நோய் என்றில்லாமல் இளம் வயதினரை அதிகமாக தாக்கும் ரத்தகுழாய் தடிப்பு என்ற நோய் ஆண்குறி விறைப்பு தன்மையையும், பெண்கள் உச்சகட்டம் அடைவதில் இயலாமையையும் ஏற்படுத்துகிறது. இந்த நோயின் தாக்குதல் காலம் என்பது உடல் வலுவை பொறுத்து சில மாதங்களோ, சில வருடங்களோ கூட நீடிக்கும் என அனுபவம் வாய்ந்த மருத்துவர்கள் சொல்கிறார்கள். அதீதமான மன அழுத்தத்தால் ஏற்படும் நம்பு மண்டல பாதிப்புகள் பாலியியல் குறைபாடுகளை அதிகரிக்கவும் செய்கிறது.

 உட்கார்ந்த இடத்திலேயே அதிகநேரம் இருப்பதாலும் உடல் அசைவுகளை இயற்கைக்கு மாறாக அடக்கி வைப்பதனாலும் உணவு பழக்கவழக்கங்களில் கட்டுபாடு இல்லாததினாலும் இதய பலகீனத்தாலும் இளம் வயதினருக்கு ஏற்படும் மாரடைப்பு நோய் விலகிய பின்னரும் கூட அச்ச உணர்வு தொடர்வதினால் ஆண் தன்மை குறைகிறது.

 இக்கால இளைஞர்களிடத்தில் அதிவேகமாக குடிப்பழக்கம் பரவி வருகிறது. இன்று ஆண்கள் மட்டும் தான் மதுவிற்கு அடிமையானார்கள் என்ற நிலை மாறி பெண்களும் நாங்களும் சளைத்தவர்கள் அல்ல என்று மதுக் கடலில் குதித்து முத்தெடுக்க ஆரம்பித்துவிட்டார்கள் குடி பழக்கத்திற்கு அடிமையாகும் ஆண்களில் நாற்பது சதவிகித பேருக்கு குறி விறைப்பு தன்மையில் பாதிப்பு வருகிறது. ஐந்து முதல் பத்து சதவிகித பேருக்கு விந்து வெளியேறுவதில் சிக்கல் வருகிறது. மதுவிற்கு அடிமையான பெண்களில் ஐம்பது சதவிகித பேருக்கு பாலுணர்வு சிக்கலும், பதினைந்து சதவிகித பேருக்கு உறவில் உச்சகட்டம் ஏற்படுவதில் பிரச்சனையும் உருவாகி பெண் தன்மையை மட்டுப்படுத்துகிறது.  


  இது தவிர பலவிதமான போதை பொருட்கள் புகையிலை வகைகள் சில மாத்திரைகள், பாலியியல் குறைபாடுகளுக்கு காரணமாகவியருக்கிறது. இப்போது நான் சொன்னதெல்லாம், வெளியில் இருந்து தாக்கி இளைஞர்களின் ஆண் தன்மையை கெட்டு போவசெய்வதாகும். மனிதனின் மனத்திற்கு உள்ளேயே உள்ள வேறு சில விஷயங்களும் ஆண்மை குறைவுக்கு அஸ்தி வாரங்களாக இருக்கின்றன.

இறைவனால் படைக்கபட்ட எல்லா உயிர்களுக்கும் பாலுணர்வு என்பது பொதுவானதாகும் விலங்குகளிடமிருந்து அறிவால் வளர்ச்சிய்டைந்த மனிதன் மட்டும் தான் பாலுணர்வின் சாதக பாதகங்களை உணர்ந்து அதை நெறிபடுத்தி வாழ கற்று கொண்டான் எனலாம். மனிதனுக்குரிய தர்ம சட்டம் இல்லறத்தார்கள் அனைவருக்கும் பாலுறவை புனிதமான கடமையாகவே கருதுகிறது. அந்த உணர்வு தனது நேர்தன்மையிலிருந்து விலகி எதிர் தன்மையை நோக்கி பயணப்படும் போது ஒழுங்கீனமாக கருதப்டுகிறது.

  மனைவி அல்லது கணவனை தவிர மற்றவர்களுடன் உடலுறவு ஏற்படுத்தி கொள்வதை எந்த நாட்டு மக்களும் கவுரமாக நினைப்பதில்லை. அப்படி மாறுபட்ட உறவுகளை மனிதர்கள் உருவாக்கும் போது எவ்வளவு தைரியவான்களாக இருந்தாலும் ஒழுக்கத்தை பற்றி கவலைப்படாதவர்களாக  இருந்தாலும் இயற்கையாக ஏற்படும் பயம், பதட்டம் இவைகளில் இருந்து தப்பித்து விட முடியாது. உடலுறவு சமயத்தில் பாதுகாப்பு உணர்வு இல்லாது போனால் நிச்சயம் நரம்புகளும், இதயமும் பலகீனமடைந்து ஆண்மை குறைவை ஏற்படுத்தியே தீரும்.


   விருப்பமில்லாத வாழ்க்கை துணையோடு உறவில் தொடர்ந்து ஈடுபட்டாலும், உறவின்போது பாலியியல் துணையால் அவமானப்படுத்தபட்டாலும் தனது பாலுறுப்புகளின் மீது தாழ்வு மனப்பான்மை கொண்டாலும் ஆண்மை குறைவு ஏற்படும். குடும்பத்தில் ஏற்படும் திடிர் மரணம், எதிர்பாராத அதிர்ச்சி, தொழில் நஷ்டம், பகைமை, விரக்தி போன்ற உணர்வுகளும், ஆண்மை குறைவுக்கு காரணமாகலாம் என மனநிலை மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

  தாமபத்ய உறவில் மனதால் ஏற்படும் பாதிப்புகளால் அதிகம் தாக்கப்படுவது பெண்களே ஆகும். முதல் முறையாக தனிமையில் ஏற்படும் ஆண்மையின் அருகாமையும், முரட்டுதனமும் பல பெண்களை பாலியியல் ஊனமாக்கி விடுகிறது, முதல் புணர்ச்சியில் ஏற்படும் வலி, பயம், பதட்டம் ஆண்மையின் ஆளுமை போன்றவைகள் பெண்களின் மனதை வார்த்தையில் வடித்துவிட முடியாத அளவுக்கு நோகடித்து விடுகிறது, இதனால் ஏற்படும் பிரச்சனைகளே பல விவாகரத்துகளுக்கு காரணமாக இருக்கிறது, அளவுகடந்த கூச்சம் குற்ற உணர்வு, கருத்தரிக்கும் அச்சம் போன்றவைகளும் பெண்மை குறைவுக்கு வழிகோலுகின்றது.

ஆண்மை குறைபாட்டிற்கு சுய இன்பம் என்பத மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த விஷயமாக இருக்கிறது, ஆங்கில மருத்துவர்களில் பலர் சுய இன்பம் காண்பதனால் ஆண்மை குறைவு ஏற்படாதுயென அடித்து பேசுகிறார்கள், மலம், மூத்திரம், வியர்வை போலவே விந்து என்பதும் ஒரு கழிவு பொருள். அது நாம் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் ஒரு குறிப்பிட்ட காலத்தில் வெளியேறியே தீரும். அப்படியே அது வெளியேறாமல் உடம்புக்குள்ளேயே தங்கிவிட்டால் அதுவே பல நோய்கள் உருவாக மூலகாரணமாக அமைந்து விடும் என்கிறார்கள். 



   ஆங்கில மருத்துவர்களின் இந்த கூற்றை சித்தா, ஆயுர்வேதா, யுனானி போன்ற மரபு சார்ந்த மருத்துவதுறை வல்லுநர்கள் மிக கடுமையாக மறுக்கிறார்கள் தாம்பத்திய உறவின் போது இந்திரியம் வெளிபடுவதற்கும், சுய இன்பம் காணும் போது வெளியேறுவதற்கும் மிகப்பெரிய வித்தியாசம் உள்ளது. சுயஇன்ப பழக்கமானது ஆண், பெண் இருவருக்கும் பொதுவானது என்றாலும் ஆண்களே மிக அதிமாக நரம்பியல் ரீதியாக பாதிப்படைகிறார்கள். இல்லாத தாம்பத்ய துணை இருப்பதாக கற்பனை செய்து சுய இன்பத்தில் ஈடுபடும்போது மனதும் பாதிப்படைகிறது. உடலும் சோர்வடைகிறது. இந்த பழக்கம் இளைஞர்களை பொறுத்த மட்டில் பெருவாரியானவர்களுக்கு பதினான்கு வயதிலிருந்தே ஏற்பட்டு விடுவதினால் மிக நீண்ட காலம் அந்த பழக்கம் தொற்றி கொள்கிறது. இதனால் விந்து நீர்த்து போகுதல், நரம்பு தளர்ச்சி போன்றவைகள் ஏற்பட்டு ஆண்மை குறைவை சுமக்க வேண்டிய நிலை உள்ளது என்கிறார்கள்.

 ஆங்கில மருத்துவர்கள் சொல்வது போல விந்து என்பது ஒரு கழிவு பொருள்தான் சிறுநீரும், மலமும் சரிவர வெளியேறா விட்டால் எப்படி உடல் நலம் கெடுமோ அதே போலதான் யோகபயிற்சி செய்யாதவர்களின் உடம்பில் விந்து தங்கினால் பல சிக்கல்கள் ஏற்படும். இதனால் தான் இயற்கையானது. மனிதன் உடலுறவில் ஈடுபட்டாலும், படாவிட்டாலும் பதினைந்து அல்லது இருபது நாட்களுக்கு ஒருமுறை தானாக வெளியேற்றி விடுகிறது. தானாக வெளியேறுவதற்கும், நாமாக வெளியேற்றுவதற்கும் பல வேறுபாடு உள்ளது.

தினசரி காலை மாலை இருவேளையிலும் வயிறு சுத்தமானால் அது இயற்கை, தினசரி ஆறு, ஏழு முறை சுத்தமானால் அது இயற்கையல்ல, வயிற்று போக்காகும் தக்கமருந்து கொண்டு தடுக்காவிட்டால் நோயாளியின் கதை பரிதாபகமாகி விடும். சிறுநீர் கழிப்பதும், சகஜ நிலையை விட்டு அதிகரிக்குமானால் அதன் பெயர் நீரழிவு ஆகும். இதே விதிதான் சுய இன்பத்திற்கும் பொருந்தும். அதிகப்படியான விந்து வெளியேற்றம் கண்டிப்பாக நரம்பு தளர்ச்சியில் கொண்டு போய்தான்விடும்.


  நடைமுறை அனுபவத்தில் பார்க்கும்போது சுய இன்ப பழக்கத்தில் ஈடுபட்ட பலர் இந்திரியத்தில் உயிர் அனுக்களில் சக்தியில்லாமல் அவதிப்படுவதையும் குழந்தை பெற முடியாமல் தத்தளிப்பதையும் பார்க்கின்றோம். அதனால் ஆங்கில மருத்துவர்கள் சொல்வது போல சுய இன்ப பழக்கம் பிரச்சனை தராதுயென்பதை நம்ப முடியவில்லை.

 ஆண்மை குறைவுக்கு உடல் நலம் மன நலம் சார்ந்த பிரச்சனைகள் மட்டும் தான் இருக்கிறது என்று உறுதியாக சொல்ல முடியாது. அதையும் தாண்டிய சில பிரச்சனைகளும் உள்ளன. ஆனால்  அவைகள் விஞ்ஞான பூர்வமானது என்று சொல்ல முடியாவிட்டாலும், நடைமுறை வாழ்க்கையில் அனுபவத்திற்கு சாத்தியம் இல்லாது என்று ஒதுக்கி விட முடியாது.

 பொதுவாக இன்றைய தலைமுறையினர் பலர் ஜோதிடத்தை நம்புவதும் இல்லை. பொருட்டாக கருதுவதும் இல்லை. இந்த நிலைக்கு வெகுஜன ஊடகங்களும், பல ஜோதிடர்களும் காரணம் என்று சொல்லலாம். ஒரு காலத்தில் சித்த வைத்தியம் இயற்கை வேளாண்மை போன்றவைகளை மூடதனமானது என சினிமா உள்ளிட்ட வெகுஜன ஊடகங்கள் பிரச்சாரப்படுத்தி வந்தது போல் இன்று ஜோதிடம் சார்ந்த பழைய மரபுகள் அனைத்தையும் ஒட்டுமொத்தமாக கேலி செய்யும் இயல்பு வளர்ந்து வருகிறது.

 ஜோதிடம் மற்றும் அமானுஸ்ய விஷயங்கள் அனைத்துமே சரியானவைகள் என்று வாதிட நான் விரும்பவில்லை. ஆனால் சாம்பலுக்குள் நெருப்பு மறைந்திருப்பது போல அவைகளுக்குள்ளும் பல உண்மைகள் ஒளிந்திருக்கின்றன. அவற்றை சரியான முறையில் ஆய்வு செய்தால் பல நன்மைகள் மனித குலம் அடையும் என்று  நான் அனுபவபூர்வமான நம்புகிறேன்.


  ஒருவன் பிறந்த நேரத்தை துல்லியமாக கணிக்கும் போது அவனுக்கு ஏற்படும் வாழ்க்கை நிகழ்வுகளை மட்டுமல்ல அவனை தாக்கும் நோய்களையும் ஓரளவு கணிக்கலாம் என வராகி மிகிரர் பாஸ்கரர் போன்ற பழங்கால வானியல் ஆய்வாளர்கள் கருதுகிறார்கள். உதாரணமாக ஜோதிடப்படி ஒரு மனிதனின் பிறப்புறுப்பு தன்மையை நிர்ணயம் செய்வது எட்டாவது இடமாகும். இந்த எட்டாம் இடத்திற்கு அதிபதியான கிரகம் பலவீனமான நிலையில் இருந்தால் நிச்சயம் பாலுறவில் சிக்கல் ஏற்படுகிறது.

  அதேபோல மர்மஸ்தானாபதி என்று அழைக்கப்டும் செவ்வாய் கிரகம் தான் நின்ற ராசிக்கு திரிகோண ஸ்தானத்திலிருந்து ஐந்து அல்லது ஒன்பதாம் இடத்திலிருந்து கேது கிரகம் இருந்தாலும் செவ்வாய்க்கு இரண்டாம் இடத்தில் கேதுவும் மாந்தியும் கூட்டாக இருந்தாலும் எட்டாம் இட அதிபதி இருக்கும் இடத்திலிந்து இரண்டாவது இடத்தில் கேது இருந்தாலும் பிறப்பு உறுப்பு சம்பந்தப்பட்ட குறைபாடு ஏற்படும் என்று பண்டைய ஜோதிட நூல்கள் பல உறுதியாக சொல்லுகின்றன.

  ஒரு மனிதன் ஆண்மையற்று போக உடலும் மனதும் தான் காரணமென விஞ்ஞானம் உறுதிபட சொல்வதை நான் முழுமையாக ஏற்று கொண்டாலும் நமது பண்டைய கால அறிஞர்கள் சொல்வதையும் தவிர்த்து விட கூடாது என சொல்கிறேன் பூமியில் வாழ்கின்ற அனைத்து உயிர்களும் ஏதாவது ஒரு வகையில் மற்ற கிரகங்களின் ஈர்ப்பு விசைக்கு உட்பட்டே தனது சஞ்சாரங்களை நடத்துகின்றன என்பதை அவ்வளவு சீக்கிரம் மறுத்துவிட முடியாது.



  அமாவாசை, பௌர்ணமி தினங்களில் சந்திரனின் ஈர்ப்பால் கடல் கொந்தளிப்பதை நாம் அறிவோம். அவ்வளவு பெரிய கடலே சந்திர ஈர்ப்புக்கு ஆட்படும்போது மனிதன் மட்டும் தப்பித்து விட முடியுமா? எனவே ஜோதிட சாஸ்திரத்தை விஞ்ஞான பூர்வமாக   அணுகி ஆய்வு செய்தால் ஆண் தன்மை குறைபாட்டிற்கு முற்று புள்ளி வைக்கலாம் என்று கருதுகிறேன்.

  மன பிரச்சனைகளால் ஆண்மைகுறைவு ஏற்பட்டால் அதை நீக்குவதற்கு மருந்து மாத்திரைகள் எடுத்துக் கொண்டால் விரும்பதகாத பல பின்விளைவுகள் ஏற்படுவதை தவிர்க்க முடியாது. அதனால் மன பிரச்சனைகளுக்கு மருந்துகளை நாடாமல் தியானம், யோகாசனம் போன்ற மார்க்கங்களை நாடினால் நிச்சயம் நல்ல பலன் கிடைக்கிறது.

  உடல் பிரச்சனைகளால் ஆண்மை குறைவு ஏற்பட்டால் அவசர தேவைக்கு வேண்டுமானால் ஆங்கில மருத்துவத்தை நாடிக் கொள்ளலாம், தொடர்ச்சியாக ஆண்மை குறைவுக்கு ஆங்கில மருத்துவம் மேற்கொண்டால் பயங்கரமான பின் விளைவுகள் ஏற்படுவதை தவிர்க்க இயலாது, தமிழக சித்தர் மரபில் எத்தகைய உடல் காரணங்களாலும் ஆண்மை குறைவு ஏற்பட்டால் அதில் இருந்து முற்றிலும் விடுபட நல்ல பல மூலிகை மருந்துகள் இருக்கின்றன. அவற்றை நிதானமாக ஆறு மாத காலத்திற்கு எடுத்து கொண்டாலே போதுமானது. பக்க விளைவுகள் ஏதுமில்லாமல் குறைபாட்டிலிருந்து வெளி வந்துவிடலாம்


1.    அமுக்கரான்  கிழங்கு - 700 கிராம்
2.    நிலபனை கிழங்கு  - 700 கிராம்
3.    சுக்கு             - 70 கிராம்
4.    மிளகு            - 70 கிராம்
5.    திப்பிலி            - 70 கிராம்
6.    ஏலம்            - 35 கிராம்
7.    கிராபு            - 35 கிராம்
8.    சீறுநாக பூ        - 35 கிராம்
9.    சித்திர மூலம்        - 70 கிராம்
10.    ஜாதிக்காய்        - 35 கிராம்
11.    லவங்க பத்திரி        - 35 கிராம்
12.    சவ்வியம்        - 72 கிராம்
13.    பேரிச்சகாய்        - 525 கிராம்
(விதை நீக்கியது)

ஆகியவைகளை நாட்டுமருந்து கடையில் வாங்கி நன்றாக இடித்து சல்லடையில் சலித்து வைத்து கொள்ளுங்கள், பிறகு மூன்று லிட்டர் சுத்தமான பசும் பாலில் ஒன்றரை கிலோ நாட்டு வெல்லத்தை கரைத்து பாகுபதமாக வரும்வரை மெல்லிய நெருப்பில் சூடாக்கி கொள்ளுங்கள். பாகுபதத்தை இது எட்டும் போது இடித்து வைத்து இருக்கும் மூலிகை பொடிகளை கொட்டி நன்றாக கிளறி அடுப்பில் இருந்து இறக்கி ஆற விடுங்கள் நன்றாக சூடு ஆறிய  பின் முந்நூற்றி ஐம்பது மில்லி தேனையும் ஏழு நூறு மில்லி நெய்யையும் அதில் ஊற்றி கண்ணாடி சீசாவில் காற்று புகா வண்ணம் அடைத்து வைத்து கொள்ளலாம், இதில் முக்கியமாக கவனிக்க வேண்டியது இந்த மருந்து செய்ய விறகு அடுப்பையும், மண் பாத்திரத்தையும் தான் கண்டிப்பாக பயன்படுத்த வேண்டும். கண்ணாடி சீசாவில் அடைக்கப்பட்ட மருந்தை ஐந்து நாட்கள் கழித்து தினசரி மூன்று வேளை ஆகராத்திற்கு முன் கோலி குண்டளவு சாப்பிட்டு வர தொன்ணூறு நாட்களில் ஆண்மை குறைவுக்கு நல்ல முடிவு வரும்.
    கிரக கோளாறுகளினால் தான் பெருவாரியான நபர்களுக்கு உடல் மன பாதிப்புகளால் ஆண்மை குறைவு ஏற்படுகிறது. கிரகங்களின் ஈர்ப்பு விசையை மாற்றி நல்ல ஈர்ப்பு தன்மையை மட்டும் உடலுக்குள் அனுப்பும் சக்தி சில அரிய மூலிகைகளுக்கு இருக்கிறது. பூத வேதாள உப்பு , கண எருமை விரச்சவேர். ஜோதி புல் போன்ற மூலிகைகளை வெள்ளி தாயத்துக்களில் அடைத்து உடலில் படும்படி அணிந்து கொண்டால் நூறு சகவிகிதம் ஆண்மை குறைவு நீங்குவதை நான் பார்த்து இருக்கிறேன்.

   ஆனால் இந்த மூலிகைகள் இக்கால கட்டத்தில் மிகவும் அரிதாகிவிட்டது. சதுரகிரி மலை, இமயமலை அடிவாராங்களில் அரிதாக கிடக்கிறது. அது கிடைக்கும் இடங்கள் சில நபர்கள் மட்டுமே அறிந்து வைத்திருப்பதினால் அவர்கள் வியாபார நோக்கில் அதிகமான பணத்தை எதிர்பார்க்கிறார்கள். பணத்தை பார்க்காமல் நிவாரணத்தை மட்டுமே பார்ப்பவர்கள் உடனடியாக பலனை பெற்றுவிடுகிறார்கள்.
 
  இத்தகையை அரிய மூலிகைகளை பணம் உள்ளவர்கள் மட்டுமே பெற முடியும் என்ற நிலையை மாற்றி அனைவரும் பயன்பெற அம்மூலிகைகளை நானே வளர்க்க விரும்புகிறேன். அதற்கு இறைவன் நிச்சயம் துணை செய்வான். காரணம் நமது இளைஞர்கள் ஆண்மையற்றவர்களாக போய்விட்டால் நாம் எதிர்பார்கின்றது போல நம் தேச வளர்ச்சி துரித கதியில் அமையாது. எனவே அனுபவம் வாய்ந்தவர்கள் களம் காண இறங்கினால் நமது பிள்ளைகளை பிடித்து நிற்கும் பேடிதனம் என்ற பெருத்த அபாயம் செத்து ஒழியும்.






மனிதர்களை கண்டால் குழிபறிக்கும் மூலிகை

Posted On November 30,2011,By Muthukumar

   
ந்த பெரியவர் சிறுவர்களுக்கு ஒரு விளையாட்டு பொருள், சிறுவர்களின் கையில் கிடைக்கும் சிறு கூழாங்கற்கள் அவர் உடலை பதம் பார்ப்பதும் உண்டு, மற்றவர்களுக்கு அவர் ஒரு அறுவருப்பு பொக்கிஷம், இடுப்பை மறைக்கும் கிழிந்த சாக்கு. முகத்தை மூடி மறைத்திருக்கும் பெரிய சாடமுடியும். தாடியும். குளித்தே பலவருடமாக அழுக்கில் உரம் ஏறிப்போன உடம்பும். குப்பைகளை வாரி வைத்து முதுகில் தொங்கவிட்டு இருக்கிற பாங்கும் தெருமுனையில் அவர் வந்தவுடன் வீசும் முடைவீச்சும். யாரையும் அவரிடம் அண்ட விடாமல்தான் செய்யும், திடீரென்று  அவர் போடுகின்ற கூச்சலும். பாடுகின்ற பாடலும் மூளை பிளந்து போன பரம்பரை பைத்தியம் என்று பறைசாற்றும். ஊரில் இருக்கின்ற குப்பைகளையெல்லாம் பொறுக்கி எடுத்து பையில் திணித்துக் கொள்ளும் அவரின் ஆவேசம் எல்லோரையும் பயமுறுத்தும்.

    இப்படிப்பட்ட அந்த பைத்தியத்தை அணுகிய மகாகவி பாரதியார். ஏன் இப்படி குப்பைகளை சுமக்கிறாய் என்று கேட்டாரம், அதற்கு அந்த பைத்தியம் முண்டம் முண்டம் நான் வெளியில் சுமக்கிறேன், நீ உள்ளுக்குள் சுமக்கிறாய் என்று கூறியதாம், அப்போதுதான் பாரதியாருக்கு புரிந்து இருக்கிறது, அவர் ஞானப்பித்தன் என்று வெளியில் தெரியும் கோலத்திற்கும் உள்ளுக்குள் இருக்கும் ஞானத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை, அலங்கரிக்கப்பட்ட பூக்களைப் புரட்டிப் பார்த்தால் புழுக்கள் நெளிவதைப் பார்க்கலாம், கலங்கி நிற்கும் சாக்கடையை துழாவினால் தங்கமும் கிடைக்கலாம்.

     நம்மைப்போன்ற சாதாரணர்கள் அலங்காரத்தையும். அழகையும் பார்த்து ஏமாறுகிறோம், கண்முன்னே இருக்கும் அழகான ரோஜா தோட்டத்தை விட்டு விட்டு வானத்திலிருந்து ஒரு கந்தர்வ தோட்டம் குதிக்கப்போவதாக கனவுகளில் மிதந்து காலத்தை வீணாக்கி கொள்கிறோம், மிக சாதாரண நடப்பில் கூட மிகப்பெரும் விஷயம் அடங்கியிருப்பதை கவனிக்காமல் பல நேரத்தில் ஊதாசினம் செய்து நமது அறிவு வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை போட்டுவிடுகிறோம்,

    நான் ஒரு நாயை 2 நாட்களாக கவனித்து வந்தேன், 2 நாட்களாகவே அந்த நாய் எதுவும் சாப்பிடுவதில்லை, வழக்கமான சுறுசுறுப்பு  அதனிடம் இல்லை, வாய்விட்டு குரைக்கக் கூட. அது யோசனை செய்து கொண்டிருந்தது, மந்தமாக எதையோ சாப்பிடக் கூடாததை சாப்பிட்டு விட்டது போன்று உடலை நெளிப்பதும். வளைப்பதும் சுருண்டு படுப்பதுமாக இருந்தது, 3வது நாள் காலை என்று நினைக்கிறேன் உடைந்த செங்கல்களுக்கு இடையில் முளைத்திருந்த ஏதோ ஒரு செடியை போய் ஆசையுடன் தின்றது, எனக்கு அந்த காட்சி அதிசயமாக இருந்தது, ஆடு. மாடுகள். இலை. தழைகளை தின்பது ஒன்றும் வியப்பல்ல, நாய் தின்பது விந்தையாகவும் விசித்திரமாகவும் இருந்தது, என்ன ஆச்சரியம் சிறிது நேரத்தில் அந்த நாய் வாந்தி எடுத்தது, வாந்தியில் கந்தை சாக்கு பகுதிகளும் வந்து விழுந்தன.
  
     நமக்கு நோய் வந்தால் அந்த நோயின் தன்மைக்கு ஏற்ப மருத்துவரை அணுகி மருந்துகளை வாங்கி சாப்பிடுகிறோம், நாம்வளர்க்கும் விலங்குகளுக்கும் கூட நாம் வைத்தியம் பார்க்கிறோம், ஆனால் தானாக பிறந்து வாழ்ந்து முடிந்து போகும் சாதாரண ஜீவன்களான இவைகளும் நோய் வந்தால் மருந்தை தேடும் அறிவை பெற்றிருப்பது இறைவனின் பெருங்கருணையல்லவாõ இன்ன நோய்க்கு இன்ன மருந்து என்பதை ஐந்தறிவு ஜீவன்கள்கூட மிக தெளிவாக அறிந்து வைத்திருப்பது அதிசயத்திலும் அதிசயம் தானே.
    நாய் தின்ற அந்த செடியை எடுத்து வரச்சொல்லி அதை ஆராய்ந்து பார்த்தேன், அந்த செடியின் பெயர் “தேள் கொடுக்கு இலை” என்பதை புரிந்து கொண்டேன், சாதாரணமாக அந்த தழை கிராமங்களில் தற்கொலை செய்து கொள்ள விஷம் சாப்பிட்டவர்களை வாந்தி எடுக்க வைக்க இதைப் பயன்படுத்துவர், நாய்கள் வாந்தி எடுக்க இந்த தழையை மட்டும் பயன்படுத்துவதில்லை, அருகம்புல்லையும் பயன்படுத்தும். பூனை. குரங்கு முதலியவை இத்தழைகளின் சக்தியை அறிந்து வைத்திருக்கின்றன, மிக சாதாரண விலங்குகளே மூலிகைகளை பயன்படுத்தி நோய்களை நீக்கி கொள்ளும் போது இறைவனின் உயரிய சிருஷ்டியான மனிதன் எந்த அளவு அறிந்து வைத்திருப்பான் என்று எண்ணி வியந்து போனேன்,

   வான வெளியில் சதா சஞ்சரித்துக் கொண்டு இருக்கிற ஒலி அலைகளை மந்திரமாக கண்டறிந்து வெளியிட்ட மனிதன் தனது சரீரத்திற்குள் வியாபித்து இருக்கும் “ஓஜஸ்” சக்தியை பிரபஞ்ச சக்தியோடு இணைக்க தெரிந்த மனிதன் மன சக்தியின் மூலம் இயற்கையின் இயக்கங்களையே கட்டுப்படுத் தெரிந்த மனிதன் இறைவனின் வரமாக பூமியில் அங்கிங்கெனாதபடி எங்கும் பரந்து கிடக்கும் மூலிகைகளின் சக்தியை அறிந்தும் உள்ளான், பயன்படுத்தியும் வருகிறான்,
    ஒரு காலத்தில் நான் மூலிகைகள் மனித உடலின் மருத்துவத்திற்கும் ரசவாதத்திற்கும் மட்டுமே பயன்படக்கூடியது என கருதியிருந்தேன், 1992-ஆம் வருடம் ராபர்ட் வில்சன் என்ற அன்பருக்காக சித்த வைத்தியம் பற்றி அறிந்த அவரின் உறவினர் ஆவி ஒன்றை அழைத்து பேசிக் கொண்டிருந்தோம், அந்த ஆவி பல விஷயங்களைப் பற்றி பேசிக் கொண்டு இருந்த போது துண்டாக வெட்டப்பட்ட உடல் உறுப்புகளை அனுத்துளுத்தான் தழை என்ற மூலிகையால் தொடும் ஷனத்திலேயே உறுப்புகள் ஒட்டிக் கொள்ளும் என்று கூறியது,
    மேலும் அந்த மூலிகைச் செடி கொல்லி மலை. உதக மண்டலம் போன்ற இடங்களிலும் செஞ்சிக் கோட்டையில் ராஜாக் கோட்டையில் உள்ள சுரங்க வழியில் இந்த மூலிகை உள்ளது என கூறியது, மேலும் அந்த ஆத்மா மூலிகைகளில் மந்திரப் பிரயோகம் பற்றியும் மூலிகைகளால் கிடைக்கும் மந்திர சித்திகளை பற்றியும் மிக விரிவாக கூறியது,
    மூலிகைகளில் மந்திர பிரயோகம் என்கிற விஷயம் எனக்கு புதுமையாக இருந்தது, அவைகளைப் பற்றி ஆராய்ச்சி செய்ய வேண்டும் என்ற எண்ணம் எனக்கு வலுத்த வேளையில் ஆவி சொன்ன அனுத்துளுத்தான் தழை உண்மையா அப்படி ஒன்று உண்டா என்ற கேள்வி மண்டைக்குள் பூரான் ஊர்வதைப் போல் உறுத்திக் கொண்டேயிருந்தது,
    அந்த வருடத்தில் ஆகஸ்ட் மாதம் என நினைக்கிறேன், தினமலர் பத்திரிகையை புரட்டி கொண்டிருந்த போது உதக மண்டலத்தில் வெளிநாட்டு நபர் ஒருவரின் அனுபவம் என்ற செய்தி என்னைப் பெரும் வியப்பில் ஆழ்த்தியது, மலைச்சரிவுகளில் அவர் நடந்து கொண்டிருந்த போது எதிர்பாராமல் எருமைமாடு ஒன்று அவர் தொடையில் முட்டி பெரும்காயத்தை ஏற்படுத்தி விட்டதாகவும் செடிகொடிகளுக்கு இடையில் பொறுக்க முடியாத வலியில் நடக்க முயாமல் நடந்து மேலே ஏறுகின்ற போது. திடீரென்று கால்களில் இருந்த வலிமறைந்ததாகவும் வலி என்ன ஆனது என்று காலைப் பார்த்த போது காயம்பட்டதற்கான அடையாளமே இல்லாது மறைந்து விட்டதாகவும் அந்த வெளிநாட்டுக்காரர் கூறி இருந்தார்,

   செடிகளுக்கு இடையில் நடந்து வரும் போது பலவிதமான செடி கொடிகள் தமது காயத்தை தொட்டதாகவும் அதில் ஏதோ ஒரு செடியின் வேகம் தான் தனது காயத்தை குணப்படுத்தியிருக்க வேண்டும் என கருதி அந்த செடி என்னவென்று அறிய 4 நாட்கள் தேடியதாகவும். இறுதி வரையில் தனக்கு கிடைக்கவே இல்லையென்று கூறியிருந்தது, மேலே சொன்ன ஆவி கூறியது என்னை நம்ப வைத்தது, அவரை குணப்படுத்தியது அனுத்துளுத்தான் தழையாகத்தான் இருக்க வேண்டும் என்று இன்றுவரை உறுதியாக நான் நம்புகிறேன்,

    இந்த விஷயம் மந்திரத்திற்கும் மூலிகைக்கும் மிக நெருங்கிய தொடர்பு இருக்க வேண்டும், அதை அறிந்து கொள்ள வேண்டும் என்ற என் வேட்கையை மிக அதிகமாக அதிகரித்தது, இதன் அடிப்படையில் பலவித ஆராய்ச்சிகளையும் நான் மேற்கொண்டேன், அதர்வண வேதமந்திர சம்ஹிதை என்கிற சாகையில் குறிப்பிடப்பட்டுள்ள மரமல்லி இலையை எடுத்து ஜீவபீஜம் மந்திரத்தை உருஏற்றிய போது எனக்கு கிடைத்த விசேஷமான தேவதைகளின் பிரசன்னம் புது விதமான உத்வேகத்தை தந்தது, அந்த உத்வேகம் மூலம் என் சுய அனுபவமாகவும் பல பழைய கிரகந்தங்ளின் மூலமாகவும் பல அரிய விஷயங்களை அறியப் பெற்றேன், அதை அனைத்தையும் இல்லையென்றாலும் ஒரு சிலவற்றையேனும் வாசகர்களோடு பகிர்ந்து கொள்வதில் பெருமைப்படுகிறேன்.

    மனிதர்களாகிய அனைவருக்குமே பணத்தின் மீது எப்போதுமே ஒரு ஈடுபாடு உண்டு, அதுவும் உழைக்காமல் திடீர் அதிர்ஷ்டங்கள் மூலமó கிடைக்கின்ற பணம் என்றால் யாருமே அதை வேண்டாம் என்று ஒதுக்குவதில்லை, புதையலைத் தேடி பெரும் பயணம் மேற்கொண்ட சரித்திர வீரர்கள் எத்தனைப் பேரையோ நாம் படித்து இருக்கிறோம் பார்த்தும் இருக்கிறோம், முதலில் புதையலுக்காக போட்டியிட்டு புதைந்து போன சாம்ராஜ்ஜியங்களும் உண்டு, அப்படிப்பட்ட புதையல் எங்கு இருக்கிறது, எப்படியிருக்கிறது என்று தெரிந்து கொள்ளும் ஆர்வம் எல்லோருக்கும் உண்டு, புதையல் எங்கு இருக்கிறது என்று காட்டி தரும் ஒரு மூலிகை இருக்கிறது, அதன் பெயர் நிலம் புரண்டி என்பது, புதையல் என்பது அக்கால மன்னர்கள். நிலப் பிரபுக்கள். மிகப் பெரும் கருமித்தனம் கொண்டவர்கள் மற்றும் சேமிப்பில் அக்கறை கொண்டவர்கள் தங்களது செல்வத்தை மற்றவர்களிடம் இருந்து பாதுகாக்க பூமியில் புதைத்து வைப்பதாகும், அவர்கள் அப்படி செய்யும் போது வெறும் நிலத்தை தோண்டி மண்ணைப்போட்டு காசுகளை மூடி விடுவது இல்லை,



    அப்பொருளை பாதுகாக்க பல அமானுஷ்ய சக்திகளை மந்திர உச்சாடனம் மூலம் அவ்விடத்தில் ஸ்தாபிதம் செய்துவிடுவார்கள், பூதம் புதையலை பாதுகாக்கும் கதையெல்லாம் வெறும் கற்பனைகளஞ்சியங்கள் அல்ல அதிலும் ஓரளவு உண்மைகள் உண்டு என்பதை நான் அனுபவத்தில் உணர்ந்து இருக்கிறேன்,

    அமானுஷ்ய சக்திகளின் பாதுகாப்பில் புதையல் இருப்பதால் தான் அதை எல்லோரும் எடுத்து விடுவது கடினமாக இருக்கிறது, இந்த சக்திகளின் பாதுகாப்பில் இருக்கும் புதையல்கள் ஒரே இடத்தில் இருப்பதும் இல்லை, இந்த சக்திகளால் பல இடங்களுக்கு நகர்த்தப்படுவதும் உண்டு, புதையல்களை பாதுகாக்கும் அமானுஷ்ய சக்திகளை அதற்குரிய முறையில் திருப்தி படுத்தினால் மட்டுமே நம்மால் எடுக்க முடியும்,

    நிலம் புரண்டி மூலிகைச் செடி புதையல் எங்கே இருக்கிறது என்பதை நமக்கு காட்டும் ஒரு கருவியே ஆகும், இந்த மூலிகை சாதாரணமாக பூமியில் மற்ற செடி கொடிகளுக்கு இடையில் முளைத்திருக்கும், இது மனிதர்களின் வாசனை பட்ட மாத்திரத்தில் மண்ணை கீறிக்கொண்டு உள்ளே  போய்விடும், அதனால்தான் இதற்கு நிலம் புரண்டி என்ற பெயரை நமது முன்னோர்கள் வைத்து இருக்கிறார்கள், இதை கண்டு பிடிக்க வேண்டும் என்றால் சாதாரணமாக நாட்டு மருந்துக்கடைகளில் கிடைக்கும் தேத்தான்   கொட்டைகளை வாங்கி கையில் வைத்துக் கொண்டு நடந்தால் தேத்தான் கொட்டையினுடைய வீரியத்தால் நிலத்திற்குள் போகாமல் வெளியே நின்று விடும்,

    இத்தகைய நிலம்புரண்டி மூலிகையை ஞாயிறு. செவ்வாய் மற்றும் வியாழன் கிழமையில் சூர்ய உதயத்திற்கு முன் இடத்தை சுத்தம் செய்து அச்செடிக்கு சாப நிவர்த்தி செய்து மந்திரத்தால் உயிர் கொடுத்து காப்பு கட்டி தூப தீபங்கள் காட்டி பறித்து வந்து குழித்தைலம் இறக்க வேண்டும், அந்த தைலத்தில் பச்சை கற்பூரம் ஜவ்வாது. கோரோசனை மூன்றும் சம எடையில் சேர்த்து குழைத்து அஞ்ஜனமாக்கி வைத்துக்கொள்ள வேண்டும், அந்த அஞ்ஜனத்தில் ஆஞ்சநேய மூல மந்திரம் மற்றும் அஞ்ஜனா தேவி மூல மந்திரம் முறையே 1008 முறை ஜபித்து உருஏற்ற வேண்டும், தேவையான போது அந்த அஞ்ஜானத்தை சிறிது எடுத்து வெற்றிலையில் தடவி மேற்குறிப்பிடும் மூல மந்திரத்தை 108 முறை ஜபித்து வெற்றிலையில் பார்த்தால் தொலைக்காட்சி பெட்டியில் படம் தெரிவது போல் புதையல் இருக்கும் இடத்தை நமக்கு மிக துல்லியமாக காட்டும்,    மேலும். இந்த மூலிகையின் வேரை கன்று போடாத பசுஞ்சானத்தோடு எரித்து சாம்பலாக்கி நீரில் கரைத்து மேற்குறிப்பிட்ட மூல மந்திரத்தை முறைப்படி ஜபித்து புதையல் இருப்பதாக நாம் கருதும் இடத்தில் இரவில் தெளித்து விடவேண்டும், காலையில் சென்று பார்த்தால் அங்கு புதையல் இருக்கும் பட்சத்தில் பாளம் பாளமாக வெடித்து இருக்கும். புதையல் இல்லையென்றால் சாதாரணமாக இருக்கும்

    புதையல் மிக ஆழமாக பல நூற்று அடிகளுக்கு கீழே இருந்தால் அந்த இடத்தில் ஸ்ரீலேகா என்ற மூலிகையை புதைத்து விட்டால் குறைந்தது 6 மாதத்தில் நாம் தோண்டி எடுக்கும் சொற்ப ஆழத்தில் புதையல் மேலே வந்துவிடும், ஸ்ரீ லேகா என்பது 16 வகை மூலிகைகளின் கூட்டு வடிவமாகும், இது இமயமலை சாரல்களில் மட்டுமே கிடைக்கிறது, மூலிகை சாஸ்திரத்திலும். மந்திர சாஸ்திரத்திலும் நிபுணத்துவம் பெற்றவர்கள் இந்த அரிய பொக்கிஷத்தை பாதுகாக்க வைத்து இருப்பார்கள்


     இன்றைய காலகட்டத்தில் மனிதர்களை மனிதர்களே வசியம் செய்யும் இடுமருந்து என்பதை மிக அதிகமாக கேள்விப்படுகிறோம், இவைகள் முன்பெல்லாம் கிராமப்புறங்களில் தான் அதிகமாய் இருந்தது, இன்றோ நகரங்களில் கூட இந்த இடுமருந்து ஊடுருவி விட்டது, இந்த மாதிரியான விஷயங்களால் பல குடும்பங்கள் தொல்லைகளை சந்தித்து அழிந்தும் போயிருக்கிறது, இந்த இடுமருந்தை எடுப்பது ஒன்றும் பெரிய விஷயமல்ல, புல்லாமணக்கு என்கிற மூலிகையை நிழலில் உணர்த்தி கல் உரலில் இடித்து வஸ்திர காயம் செய்து நெய்யில் குழைத்து காலை. மாலை இருவேளையும் தொடர்ந்து 3 நாட்கள் பாதிக்கப்பட்டவர்கள் சாப்பிட்டால் போதுமானது, 3 நாட்களிலே இடுமருந்தின் வீரியம் குறைந்து சகஜ நிலைக்கு அவர்கள் திரும்பி விடுவார்கள், இந்த புல்லாமணக்கு என்பது பல்லி முட்டையைப் போன்று இருக்கும், இருப்பினும் முறைப்படி காப்பு கட்டி எடுக்கப்பட்ட மூலிகையாக இருந்தால் மிக சக்தி வாய்ந்ததாக இருக்கும்,

    ராமாயணத்தில் தசரதன் குழந்தை வரம் வேண்டி புத்திரகாமேஷ்டி யாகம் செய்தான் என்பதை நாம் அறிவோம், அந்த யாகத்தில் கூறப்படும் மிக முக்கியமான புத்திர வர்ஷா என்கிற மந்திரத்தை விபூதி இலை என்ற மூலிகையில் உருஏற்றி அரை மண்டலம் சாப்பிட்டால் பெண்களின் கர்ப்பப்பையில் இருக்கும் புழுக்களை நீக்கியும் ஆண்களுக்கு மலட்டு தன்மைû போக்கியும் புத்திர சந்தானத்தையும் உண்டாக்கும், இம்முறையை இன்றும்கூட பலர் பயன்படுத்தி அற்புதமான பலனை அடைந்து வருகிறார்கள், இதை எம்மிடம் பெற்ற ஒரு அன்பர் கைமேல் பிள்ளையை பெற்றுள்ளார்,

    இன்று நமது தமிழகமெங்கும் வறட்சி, அதனால் விவசாயம் பாதிப்பு கிணறுகளில் தண்ணீர் இல்லை, பயிர்கள் பட்டுப்போயின என்ற அழுகுரலும் அங்கலாய்ப்பும் எங்கும் கேட்கிறது, கிணறுகளில் தண்ணீர் ஊர பன்னீர் இலையில் சடாட்சர மந்திரத்தை 1008 முறை உருஏற்றி நீர் இல்லாத கிணற்றில் போட்டால் 9 நாட்களுக்குள் நீர் இல்லாத கிணற்றில் நீர் சுரக்கும், பயிர்களின் மீது பூச்சிகள் பரவினாலும் தென்னை மரங்களில் குருத்துப் புழுக்கள் அதிகரித்தாலும் மா. தென்னை. பலா போன்ற மரங்களில் காய்கள் குறைந்தாலும் ஆடு திண்டாப்பாலையை பஸ்பமாக்கி பிரணவ மந்திரத்தை 1008 முறை உருஏற்றி பாதிக்கப்பட்ட மரம். செடி. கொடிகளின் மேல் தெளித்தால் பூச்சிகள் அழிந்து நன்றாக காய்கள் அதிகரிக்கும்


    இத்தகைய மூலிகைகளை உயரிய நிலையில் இருக்கும் தெய்வீக ஆத்மாக்களோடு மந்திர பிரயோகம் செய்பவர்களும் இருக்கிறார்கள், ஆத்மாவை அழைத்துப் பேசும் கலைதெரியாத சாதாரண மக்கள் கூட மன சுத்தியோடும் உடல் சுத்தியோடும் இதை செய்யலாம், அப்படி செய்தாலும் நல்ல பலனை கொடுப்பதை பலமுறை நான் பார்த்திருக்கிறேன், ஆனாலும் பயிற்சி பெற்ற நல்ல மனிதர்களை இதைச் செய்தால் கைமேல் பலன் கொடுப்பது கண் கூடான விஷயம்

    எனக்கு தெரிந்த இளைஞர் ஒருவர் மிகவும் சுறுசுறுப்பானவர், சதா சர்வகாலமும் ஏதாகினும் ஒரு வேலையை செய்து கொண்டு இருப்பார், அவர் வேலை செய்யும் வேகம் சாட்டையால் சுழற்றப்பட்ட பம்பரம் ஒன்று அதிவேகமாக சுற்றுவது போல் இருக்கும்   அவரைப்பற்றி நான் சிலநேரம் யோசிப்பதுண்டு, இரவில் கூட இவர் ஓய்வாக தூங்குவாரா? இல்லை அப்போதும் ஏதாவது வேலை செய்து கொண்டுதான் இருப்பாரா? என்ற இறைவன் வேலை செய்வதற்காகவே இவரை படைத்துள்ளாரோ தானும் இவரை போல்தான் சதா வேலை செய்து கொண்டிருக்கிறேன் என்று காட்டுவதற்காக இவரை பூமியில் நடமாட விட்டிருக்கிறாரோ என்றெல்லாம் எண்ணி வியந்ததுண்டு

    இப்படி சுறுசுறுப்பின் இலக்கணமான அந்த இளைஞர் திடீரென்று ஒருநாள் மயங்கி விழுந்து விட்டார், அதன் பின்பு அவரிடம் படிப்படியான சில மாற்றங்களை நான் கவனித்தேன், சோர்ந்து உட்கார்ந்து விடுவதும் வேலையிடத்திலேயே சுருண்டு படுத்துவிடுவதும் உண்டு, நாளடைவில் அவர் கைகால்கள் நரம்புத் தளர்ச்சியால் நடுங்குவதைப் போல் நடுக்ககம் எடுக்க ஆரம்பித்தது, அவரிடம் நான் விசாரித்தேன், உனக்கு என்ன ஆயிற்று என்றுõ  அவர் அதற்கு ஒன்றுமே புரியவில்லை, உடல் நடுங்குவதும். நாவறட்சி ஏற்படுவதும் அதற்கு மேல் கண்களின் பார்வை சக்தி குறைந்து விடுவதுமாக இருக்கிறது என்றார், அவர் மீது களிவிரக்கம் ஏற்பட்ட நான் எனது வசமாக இருந்த ஒரு தேவரையை அழைத்து அவருடைய உடலுக்கு என்ன என்று கேட்டேன், அதற்கு அந்த தேவதை அவருடைய மூளை நரம்புகளில் ஒன்றில் சீதளக் கிருமிகள் தாக்கி ரத்த ஓட்டத்திற்கு சிறு தடை ஏற்பட்டுள்ளது என்று குறிப்பிட்டது, அவருக்கு மேற்கொண்டு சிகிச்சை செய்ய விரும்பி அவரை ஒரு வாரமாக தேடினேன், கிடைக்கவில்லை,


  ஒரு வாரம் சென்று வந்து தான் மருத்துவமனைக்கு சென்றிருந்ததாகவும் பரிசோதனையில் தனது மூளை நரம்பில் நோய்த் தொற்று என்கிற பஆ உள்ளதாகவும் அதற்கு உடனடியாக சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என்றும் சில வருடங்கள் மாத்திரைகளை சாப்பிட்டு வர வேண்டும் என்றும் மருத்துவர்கள் கூறிவிட்டதாக கவலையுடன் குறிப்பிட்டார், என் மீது தீவிர பக்தியும் அன்பும் கொண்ட அந்த நண்பரை குணமாக்கும்படி வேண்டினார்  அவருக்காக சிவ பெருமானின் பரிவாரங்களான 12 ருத்திரர்களில் தலைவரான ஸ்ரீ மாகருத்ரரின் நேரடி அம்சமான  ஸ்ரீ பிரபாசன் என்று போற்றுதலுக்குரிய தேவ கனத்தை அழைத்து பேசினோம், அவர் அந்த இளைஞரின் நோய் நீங்கிட சில மூலிகைகளை (அவர் கொடுத்த உத்தரவின்படி அந்த மூலிகைகளின் விபரம் இங்கு தரமுடியாமைக்கு வருந்துகிறோம்) அதர்வண வேத மந்திரங்களால் செறிவூட்டச் சொல்லி 2 மண்டலம் மட்டுமே அவரை சாப்பிடச் சொன்னார், அதன்படி அந்த இளைஞருக்கு செய்து கொடுத்தேன், ஒரு மாதத்தில் அந்த நண்பர் உடல் நிலையில் முன்னேற்றம் கண்டார், 2 மண்டலத்திற்கு பின்பு அவர் பரிபூரணமாக குணமடைந்து பழையபடி சுறுசுறுப்பு அடைந்து விட்டார், இன்று அவர் நல்ல நிலையிலே உள்ளார், இப்படி எத்தனையோ மந்திரமும் மூலிகையும் செய்த மகத்துவத்தை சொல்லிக் கொண்டே செல்லலாம்

    இறைவன் இந்த பூமியில் எந்தவொரு சிறிய வஸ்துவையும் காரணமில்லாமல் படைக்கவில்லை, ஒன்றைத்தழுவி ஒன்று இருப்பதைப் போல் தாவர ஜங்கமங்கள் அனைத்தும் ஒன்றுக்கு பயன்படும் வண்ணமே இறைவன் சிருஷ்டித்துள்ளான், ரிக் வேதத்தில் வரும் பல ஸ்லோகங்கள் தாவரங்கள் சூரியனிடமிருந்து சக்தியை ஜீவர்களுக்கும் கொடுப்பதாக சொல்லப்பட்டு இருக்கிறது, அதாவது அண்ட சராசரங்கள் அனைத்திலும் பரவியுள்ள பரமாத்மாவின் பரமசத்தை கிரஹித்து பூமிக்கு வழங்கி கொண்டிருக்கும் அமுத சுரபிகளே விருட்சங்கள் என்று வேதம் சொல்கிறது, விவிலியமும். திரு-கூர்-ஆனும் இதைப்போன்ற கருத்துக்களை வலியுறுத்துகின்றன,

    சுக்ருத சம்ஹிதையில் ஐந்தறிவும் ஆறறிவும் உடைய ஆத்மாக்களின் உடலின் நோயையும் மரங்களிலும் செடி கொடிகளிலும் மண்ணிலும் நோய்க்கான மருந்தையும் பரமான்மா வைத்துள்ளதாக வைரத்தை உடைத்தது போல் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது, மேலும் சுசருதர் ஒளஷதங்கள் ரசங்களாலும் மந்திரங்களாலும் நிரப்பபட வேண்டும் என்றும் கூறுகிறார்.


    அந்தக் கால மருத்துவர்கள் மந்திரங்களிலும் வல்லுநர்களாக இருந்தார்கள், நவீன விஞ்ஞான கருவிகள் எதுவுமே இல்லாது சுசருதர் செய்த பல உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை அனைத்திலும் மந்திரங்கள் மூலிகைகளின் உதவிகளாலேயே செய்யப்பட்டதாக பழைய கிரந்தங்கள் கூறுகின்றன

    நோய் தீர்க்கும் மந்திரங்களால் பிரதிஷ்டை செய்யப்பட்ட பல ஆலயங்கள் கிரேக்க நாட்டில் இருந்துள்ளன, அந்த ஆலயங்களில் படுத்து உறங்குவதனாலேயே நோய்கள் குணமாகி விடுவதாக கிரேகக் நாட்டின் மந்திர நிபுணர் கேலன் கூறியுள்ளார், சீன நாட்டில் கி,மு,450 ஆண்டில் வாழ்ந்த எம்ப்படிடாக்கின்ஸ் மனிதர்களின் தோல் மீதுள்ள துளைகள் வழியாக பல தீய சக்திகள் புகுந்தே நோயை உருவாக்குகிறது என்றும் அதை மந்திரங்களால் தொட்டே குணப்படுத்தி விடலாம் என்று கூறியுள்ளார்

    இன்று நடைமுறையில் உள்ள ரெய்கி. பிரானிக்ஹீலிங் என்ற முறைகளும் அண்டத்தில் உள்ள காஸ்மிக் மற்றும் பலவித பிரணவம் சார்ந்த பல கதிர்களை உடலுக்குள் செலுத்தவதே ஆகும், மந்திரங்களும் அண்ட நாதத்தின் மறுவடிவு ஆகும், ஆகவே அண்டசக்தியின் பிம்பங்களுடன் மூலிகைகளும் மந்திரங்களும் இணைந்தால் சாத்தியம் இல்லாதவற்றை சாத்தியமாக்கி விடலாம்.

    மந்திரங்களில் இரண்டு வகை உண்டு, குட்டிச்சுவரை கோபுரமாக்கும் நல்ல மந்திரங்கள் ஒருவகை சாம்பிராஜ்யங்களை சாம்பல் மேடாக்கும் தீய மந்திரங்களை ஒரு வகை, இத்தகைய இருவகை மந்திரங்கள் உலகெங்கும் நம்மிடையே உள்ளது, தீய மந்திரங்களின் கொடுமையான விளைவுகள் பல குடும்பங்களை நாசமாக்கி இருக்கின்றன, அத்தகைய தீய மந்திரங்களை ஒடுக்குவதற்குரிய மந்திர மூலிகைகள் ஏதேனும் உண்டா? என்று நான் தேடுதலில் ஈடுபட்ட போது ஆன்மீக ரீதியிலும். மற்ற வகையிலும் பல நேரங்களில் எனக்கு வழிகாட்டியிருக்கும் இன்னொரு உலக வாசிகளான தெய்வீக ஆத்மாக்கள் பலமூலிகைகளை எமக்கு காட்டின அவற்றில் தீவினைகளான பில்லிசூன்யத்தை முற்றிலுமாக ஒழிக்கும் சில மூலிகை வகைகளை உங்களோடு பகிர்ந்து கொள்வதில் பெருமைப்படுகிறேன்.


    ஆடு தீண்டாப்பாலை. திருநாமப் பாலை. வில்வம். துளசி. வேம்பு. திரவந்தி. அழுகண்ணி. ஏர்சிங்கி. சூக்குளி. வல்லாரை. கொடுப்பை. கரிசிலாங்கண்ணி. தாழைமடல். நாபி. அஷ்வலோகா மற்றும் பல மூலிகைகள் கலந்து ஸ்ரீ ருத்மூலமந்திரம் ஹோமத்தில் ஆகுதி செய்யப்பட்ட மந்திர ஒளஷத பஸ்பத்தை மக்கள் பயன்பாட்டிற்கு இன்றும் கொடுத்து வருகிறோம், இந்த மூலிகை பஸ்பத்தை கடல் நீரில் கலந்து சில மந்திர உச்சாடனத்துடன் சூன்யம் இருக்கும். பகுதியில் தெளித்தால் 9 நாட்களிலேயே தீய சக்திகள் விலகி நல்ல சக்திகள் குடிகொண்டு பல சௌக்ய சௌபாக்கியத்தை தந்து வருவதை இன்றும் நடைமுறையில் பலர் அனுபவித்து வருகிறார்கள்.


    இத்தகைய தெய்வீக ஆத்மாக்கள் பூமியின் சுத்திகரிப்புகாகவும் அதாவது “வாஸ்து” நிவர்த்திக்காகவும் பல விதமான மூலிகை பஸ்பங்களை தந்துள்ளார்கள், பல இலட்சம் செலவு செய்து கட்டப்பட்ட கட்டிடங்கள் வாஸ்து நிவர்த்திக்காக இடித்து தரைமட்óடம் ஆக்கப்படுவதை இம்மூலிகை பஸ்பங்கள் தடுத்து வாஸ்து தோஷத்தை முழுமையாக நிவர்த்தி செய்துவிடுகிறது, பல கஷ்டங்களை தாண்டி கட்டப்படும் வீடுகளில் காலம் முழுக்க குடியிருக்க முடியாமல் தேச சஞ்சாரியாக அவதிப்படுபவர்களும். கழுத்தில் தொங்கவிடப்பட்ட கல் கிணற்றுக்குள் ஆழத்தில் அமுக்கி விடுவதைப் போல் கட்டிய வீட்டை விற்க முடியாமல் மூச்சு திணறுபவர்களும் தனது வாழ்நாளில் ஒரு சொந்த விடு கட்டி விடமாட்டோமா என்று ஏங்குபவர்களும் இந்த மூலிகை ஓளதஷதங்களால் நல்ல பயன்களை பெற்று இருப்பதை பார்க்கும் போது தெய்வீக ஆத்மாக்கள் மனித குலத்திற்கு செய்து வரும் மகத்தான சாதனையை எண்ணி நன்றி கூறாமல் இருக்க முடியவில்லை


   வெந்ததை தின்று வேளை வந்தால் சாவோம் என்று அர்த்தம் அற்ற பாதையில் அவசரகதியாக நமது வாழ்க்கை ரதம் தாறுமாறாக ஓடிக் கொண்டிருக்கிறது, நம்மால் எது சரி? எது தவறு? என்று தீர்மானிக்க முடியவில்லை, எதை விடுவது எதை தொடுவது என்ற முடிவுக்கும் வர முடியதில்லை, நுனியில் உட்கார்ந்து அடி மரத்தை வெட்டுபவனைப் போல் பித்து குளித்தனமாக நாம் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம், நமது அஜாக்கிரதையினாலும். அசட்டையினாலும் இழந்த செல்வங்கள் அது எத்தனையோõ  நான் இங்கு குறிப்பிடும் மந்திரங்களும். மூலிகைகளும் நம் கையில் இருந்து நழுவி விடும் சூழலிலேயே இன்று ஊசலாடிக் கொண்டிருக்கிறது, வெளிச்சத்திற்கு வீட்டை கொளுத்தியவன் போல் நிறைய செல்வங்களை நாம் இழந்து விட்டோம்.


    இந்த கொஞ்ச நஞ்ச செல்வங்களையாவது இழக்காமல் இருக்க நாம் விழிப்புடன் இருக்க வேண்டும், இன்று நாம் விழித்துக் கொண்டால் இன்னும் ஒரு 1000 ஆண்டிற்கு சுகமாக வாழலாம், இல்லை நான் தூங்கத்தான் செய்வேன் என்று அடம்பிடித்தால் வாழ்ந்ததற்கான அடையாளங்களைகூட பார்வையிட எந்த ஜீவனும் இருக்காது, நம் முன்னோர்கள் நமக்கு தந்து விட்டு சென்ற இந்த அரிய செல்வங்களை நமது அறிவீனத்தால் குழந்தைகளுக்கு கொடுக்காமல் சென்று விடகூடாது, இவைகளைப் பாதுகாக்க ரகசியங்களையாவது தெரிந்து வைத்திருக்க உழைப்போமாக!




நீங்கள் கமகமக்க…

Posted On November 30,2011,By Muthukumar
"பூக்களுக்கு நீயே வாசமடி' என்றும், "மங்கை அவள் வாய் திறந்தால் மல்லிகை பூ வாசம்' என்றும், பெண் வாசம் பற்றி பெருமை பேசும் பாடல்கள் நிறைய. நிஜத்திலும் அது சாத்தியமாக
இதோ சில வாசனை டிப்ஸ்...:
பெண்ணின் உடலமைப்பு, செயல்பாடு காரணமாக பலருக்கும் உடல் துர்நாற்றம் என்பது தவிர்க்க முடியாமல் போகிறது. நாற்றத்துக்கு காரணங்கள் பல. முதலில் வியர்வை. இது ஆண்,பெண் எல்லாருக்கும் பொது. வியர்வைக்குத் தனியே எந்த வாசனையும் கிடையாது. அது, பாக்டீரியாவுடன் சேரும் போதுதான், ஒரு வித துர்நாற்றம் வெளிப்படுகிறது. வியர்வையை அசுத்தமாக நினைப்பவர்கள் பலர்; ஆனால், அது ஆரோக்கியத்தின் வெளிப்பாடு. வியர்வையின் மூலம் உடலில் தேவையற்ற கொழுப்பும் வெளியேறும். சருமத்தில் ரோம வளர்ச்சி அதிகமுள்ள இடங்களில், வியர்வை அதிகம் சுரக்கும். தினம் இரு வேளைகள் குளிப்பது, டியோடரன்ட் உபயோகிப்பது, காட்டன் உடைகளை அணிவது போன்றவை இப்பிரச்னைக்கு தீர்வளிக்கும்.
மாதவிலக்கு, வெள்ளைப்படுதல் போன்றவற்றின் காரணமாகவும், பெண்களின் உடலில் துர்நாற்றம் வரும். மாதவிலக்கு நாட்களில் தரமான சானிட்டரி நாப்கின்களை உபயோகிப்பது, அடிக்கடி அவற்றை மாற்றுவது போன்றவை இம்மாதிரி துர்நாற்றங்களை தவிர்க்கும். தினம் இரண்டு வேளை பல் தேய்த்தாலும், சிலருக்கு வாய் நாறும்; இவர்கள், மவுத் வாஷ் உபயோகிக்கலாம். கிராம்பை ஊற வைத்த தண்ணீரால் அடிக்கடி வாய் கொப்பளித்து வந்தாலும் நாற்றம் அகலும். அதே மாதிரி ஏலக்காயையும் மெல்லலாம்.
உடலை நாள் முழுதும் நறுமணத்துடன் வைத்திருக்க...: குளிக்கும் தண்ணீரில் வேப்பிலை, கற்பூரம் அல்லது எலுமிச்சை பழத்தின் தோல் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை போட்டுக் குளிக்கவும்; உடல் மணக்கும். ரொம்பவும் வாசனையான சோப்புகள் சருமத்துக்கு நல்லவையல்ல. சோப்புக்கு பதிலாக பச்சைப்பயறு மாவு அல்லது கடலை மாவுடன், கஸ்தூரி மஞ்சள், சந்தனம், வெட்டி வேர், பூலாங்கிழங்கு, ரோஜா இதழ் போன்றவற்றை காய வைத்து, அரைத்து, உடம்புக்கு தேய்த்து குளிக்கலாம். இது, சரும அழகையும் அதிகரிக்கும்; உடலையும் இயற்கை நறுமணத்துடன் வைக்கும்.

Tuesday, 29 November 2011

“ஹெர்னியா’ ஏற்பட்டால் கவலைப்பட வேண்டாம்


Posted On November 29,2011,By Muthukumar
அறுவை சிகிச்சை செய்து கொண்ட ஒருவர், ஐந்து முதல் ஏழு நாட்களுக்குப் பின் மறுபடி வேலைக்குச் செல்லலாம். ஆனால், இது அந்த நோயாளியின் உடல்கூறு எப்படிப்பட்டது என்பதையும், அவருக்கு இருந்த குடலிறக்கத்தின் அளவையும் பொறுத்தே இருக்கும்.
" ஏய்... எனக்கு, "ஹிரண்யா' வந்திருக்காம்ப்பா... அடி வயித்த வலிக்குதுன்னு, டாக்டர்ட்ட போனா, அவர், எனக்கு, "ஹிரண்யா' ஏற்பட்டிருக்குன்னு சொல்றார். சர்ஜரி செய்யணுமாம்...' என, பக்கத்து வீட்டுப் பெண், வெலவெலத்துப் போய், உங்களிடம் "துக்கத்தை'ப் பகிர்ந்து கொண்டிருப்பாரே? அவரிடம், அது, "ஹிரண்யா' இல்லம்மா... "ஹெர்னியா' எனச் சொல்லி, திருத்தினீர்களா? திருத்தவில்லை எனில், உங்களுக்கும் அது குறித்துத் தெரியவில்லை எனப் பொருள். குடல் சிகிச்சை நிபுணர் டாக்டர் விக்ரம், "ஹெர்னியா' பற்றிச் சொல்கிறார். படியுங்கள்:
குடலிறக்கம் (ஹெர்னியா) என்றால் என்ன?: வயிற்றுப் பகுதியின் அடிப்புறச் சுவர், சில பகுதிகளில் நலிந்து, வலுவிழந்து இருக்கும். அவ்வாறு வலுவிழந்து காணப்படும் பகுதி வழியே, சிறுகுடல் பிதுக்கிக் கொண்டு அல்லது துருத்திக் கொண்டு இறங்கி விடும். இதைத்தான், "ஹெர்னியா' அதாவது, குடலிறக்கம் என்று கூறுகிறோம்.
இந்த குறைபாடு ஏன் ஏற்படுகிறது?: வயிற்றுப் பகுதி வலுவிழப்பது இயற்கை தான். ஆண்களுக்கு, அவர்களின் இடுப்புக்கு கீழ், அதாவது, அரைப்பகுதியில் (எணூணிடிண ச்ணூஞுச்) சிறுநீர் வெளியேறும் பகுதியை அடுத்து, விரைக்காய்கள் இருக்கும். அவை வயிற்றின் உட்பகுதியில் தொடங்கி, வெளியே நீண்டு தொங்குகின்றன. அந்த பாதையில் குடல் இறங்கு�® �து தான், "ஹெர்னியா!' சில நேரங்களில், அந்த பகுதி வலுவிழக்க நேரிடும். தொப்புள் பகுதியும் வலுவிழந்து விடுகிற பகுதி. இவற்றின் வழியாக, குடலிறக்கம் ஏற்படுகிறது.
பெண்களுக்கு எந்த வகை குடலிறக்கம் இயற்கையாகக் காணப்படுகிறது? ஏன்?: பெண்களுக்கு, வயிற்றுப் பகுதியில் அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டால், குடலிறக்கம் ஏற்பட வாய்ப்பு அதிகம். "சிசேரியன்' அறுவைச் சிகிச்சை எனப்படும், பேறுகால அறுவைச் சிகிச்சைகள் மற்றும் கர்ப்பப்பை நீக்கும் அறுவைச் சிகிச்சைகளுக்குப் பின், குடலிறக்கமà � ஏற்படுகிறது. பெண்களுக்கு, வயது ஏற ஏற, எடை கூடுவது இயற்கை. இப்படி எடை கூடுவது வயிற்றுப் பகுதியை பலவீனமாக்குகிறது. கருவுற்றிருக்கும் காலத்தில், மாதம் ஆக, ஆக, வயிறு விரிவடைகிறது. இதுவும் வயிற்றுப் பகுதியை பலவீனமாக்கி, வலுவிழக்கச் செய்கிறது. பெண்களிடையே தொப்புள் கொடிப்பகுதி வழியே ஏற்படும் குடலிறக்கம் வெகு சாதாரணமாகக் காணப்படுகிறது.
ஒருவர் இயற்கைக் கடன்களைக் கழிக்கும்போது, அளவுக்கதிகமாக (முக்குதல்) சிரமப்படுதல், சிறுநீர் கழிக்கும்போது எளிதாகச் செல்லாமல், துன்பப்படுதல் ஆகியவை எவ்வாறு குடலிறக்கத்துக்கு காரணமாகின்றன?: இயற்கைக் கடன்களைக் கழிக்கும்போது, ஒருவர் எந்த வகையில் சிரமப்பட்டாலும், அதன் காரணமாகக் குடலிறக்கம் ஏற்படும். ஆண்கள் முதுமையடையும் காலத்தில், "புரோஸ்டேட்' சுரப்பிகள் வீங்கிப் பெரிதாகின்றன. அவைதான் சிறுநீர் கழிப்பதற்கு சிரமத்தை ஏற்படுத்துகின்றன. அந்த சிரமமே ஒருவருக்குக் குடலிறக்கம் ஏற்பட வழிவகுக்கிறது. இது போலவே, இயற்கைக் கடன்கழிக்க ஏற்படும் சிரமத்தாலும், இதே விளைவு தான் ஏற்படுகிறது.
ஒருவர் அதிகமான அளவிற்கு இருமுவதாலும், குடலிறக்கம் ஏற்படக்கூடுமா?: இருமல் வரும்போது, வயிற்றுக்குள் ஏற்படும் அழுத்தத்தின் அளவு அதிகரிக்கிறது. எனவே, இருமலினாலும் குடலிறக்கம் ஏற்படுகிறது.
பளு தூக்குதல், அதிக எடையுள்ள பொருட்களைத் தூக்குதலால் குடலிறக்கம் ஏற்படுகிறதா?: பளுதூக்குதல் மற்றும் அதிக எடையுள்ள பொருட்களைத் தூக்குவதால் குடலிறக்கம் ஏற்படுகிறது என்று உறுதிப்படுத்துவதற்கு, இது வரையில் சான்றுகள்(ஆதாரங்கள்) ஏதுமில்லை.
சிறிய அளவிலான குடலிறக்கத்திற்கு அறுவை சிகிச்சை தேவைப்படுகிறதா?: சிறிய குடலிறக்கம் காரணமாக, பெருங்குடல் வழி வெளியேறும் கழிவுப் பொருட்கள், நகராமல் நின்று அடைத்துக் கொள்வதற்கு, அதிக வாய்ப்பு உள்ளது. அப்போது, இது ஒரு நெருக்கடியான நிலைமையை ஏற்படுத்துகிறது. இதை, அந்த சமயத்தில் உடனடியாக அறுவைச் சிகிச்சை செய்து அகற்றாவிட்டால், அது இன்னும் பெரிய அளவிற்குச் சிக்கல்களை ஏற்படுத்திவிடும்.
குடலிறக்கத்தைச் சரி செய்வதற்கான சிறந்த வழி எது?: சிறிய துவாரங்கள் உடைய வலை போன்ற பொருளை (மெஷ்), இறங்கிய குடலைத் தூக்கிப் பிடித்துத் தாங்கிக் கொள்வதற்குப் பயன்படுத்தலாம். அப்படிப் பயன்படுத்தும் அந்தப்பொருள் (மெஷ்), குடலிறக்கம் மீண்டும் ஏற்படாமல் தடுக்கிறது. இது, திசுக்களின் மீது நிலையாகப் பொருந்தி அந்தப் பகுதிக்கு வலுவூட்டும். மிகச் சிலருக்கு நோய் தொற்று ஏற்பட லாமà � . "மெஷ்' சுருண்டு விடலாம். இவற்றை, உடனுக்குடன் சரிசெய்ய வேண்டும்.
ஒருவர் அறுவை சிகிச்சை முடிந்து எத்தனை நாட்கள் கழிந்தபின் மீண்டும் வேலைக்குச் செல்ல முடியும்?: அறுவைச் சிகிச்சை செய்து கொண்ட ஒருவர், ஐந்து முதல் ஏழு நாட்களுக்குப் பின் மறுபடி வேலைக்குச் செல்லலாம். ஆனால், இது அந்த நோயாளியின் உடல்கூறு எப்படிப்பட்டது என்பதையும், அவருக்கு இருந்த குடலிறக்கத்தின் அளவையும் பொறுத் தே இருக்கும். "லாப்பரோஸ்கோப்' மூலமாகவும், குடலிறக்கத்தை சரி செய்ய முடியும்.
குடலிறக்கத்தைச் சீர் செய்யும் பழைய முறைகள் சிறந்தவையா? என்னென்ன முறைகள்?: இதற்குக் கையாளப்படும் பழைய முறைகள், 150 ஆண்டுகளுக்கும் மேலாகப் பழக்கத்தில் இருந்து வந்துள்ளன. அவை, மிகவும் சிறந்தவையே. அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்கள் பின்பற்ற வேண்டிய முன்னெச்சரிக்கைகள்:
  1. *இயன்ற வரை அதிகம் நடக்க வேண்டும்.
  2. *வழக்கமாக எந்த அளவுக்கு எடை தூக்கி வந்தாரோ, அந்த அளவு எடையைத் தூக்கலாம்.
  3. *நோயாளி மாடிப்படிகளில் ஏறி இறங்கலாம்.
  4. * குத்துக்காலிட்டு உட்காரும், இந்திய வகைக் கழிப்பிடத்தைப் பயன்படுத்தலாம். இவற்றால் எல்லாம் குடலிறக்கம் ஒரு போதும் மீண்டும் ஏற்படாது.

எம்.எல்.ஏ.க்களின் சம்பளம்..!


கடந்த 1964 ஆம் ஆண்டு முதல் 1980 ஆம் ஆண்டு வரை எம்.எல்.ஏ.,க்களி ன் சம்பளம் 250 ரூபாயாக மட் டுமே இருந்து வந்தது. இடையி ல், 1971-ல் ஈட்டுப்படியாக 100 ரூபாயும், 1974-ல் ஈட்டுப்படி 200 ரூபாயாகவும், 1978-ல் இது 350 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டது. அதே போல, தொலைபேசிப் படி என்று 150 ரூபாய் 1978 முதல் வழ ங்கப்பட்டது. இந்த தொலை பேசி ப்படி, 1980-ல் 200 ரூபாயாக உயர் த்தப்பட்டது. இதனால், 1980 ஆம் ஆண்டு, மொத்தமாக 800 ரூபாய் எம். எல்.ஏ.,க்கள் பெற்று வந் தனர்.
கடந்த 1981-ல், ஈட்டுப்படி 400 ரூபாயாகவும், தொலைபேசிப் படி 300 ரூபாயாகவும் உய ர்த்தப்பட்டது. 1982-ல், சம்பளம் 300 ரூபாயாகவும், தொலைபேசிப் படி 350 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டது. 1985-ல் சம்பளம் 500 ரூபாயாக உயர்த்தப்பட்டது. 1985-ல் ஆண்டில், சம்பளம் 600 ரூபாயா கவும், ஈட்டுப்படி 500 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டது. கடந்த 1987-ல், தொலைபேசிப் படி 450 ரூபாயாக உயர்த் தப்பட்டது. இதன்பின், 1989-ல், ஈட்டுப்படி 700 ரூபாயாக உயர்த்தப்பட்டு, மொத்த சம் பளம் 1750 ரூபாயா க இருந்தது.
இந்நிலையில், 1990-ல் சம்பளம் 1000 ரூபாயாகவும், ஈட்டுப்படி 800 ரூபாயாக வும், தொலைபேசிப் படி 700 ரூபாயாகவு ம் உயர்த்தப்பட்டது. 1991-ல், புதிதாக தொகுதிப்படி என்று உருவாக்கப்பட்டு, 250 ரூபாய் சேர்த்து வழங்கப் பட்டது. கடந்த 1992-ல், தொலைபேசிப் படி 800 ரூபாயக உயர்த்தப்பட்டது. இந்நிலையில், 1993-ல், சம்பளம் 1250 ரூபாயாக உயர் த்தப்பட்டு, புதிதாக தபால் படி என்று 250 ரூபாய் சேர்த்து வழங்கப்பட்ட து. இதன்பின், 1994-ல், சம்பளம் 1500 ரூபா யாகவும், ஈட்டுப்படி 1000 ரூபா யாகவும், தொகுதிப்படி 300 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டு, மொத்த சம்ப ளம் 3950 ஆக உயர்ந்தது.
பின்னர், 1995-ல் சம்பளம், 1700 ரூபாயாகவும், தொகுதிப் படி 400 ரூபாயா கவும், தபால் படி 450 ரூபாயாகவும், தொலைபேசிப் படி 900 ரூபாயாக வும் உயர்த்தப்பட்டது. இதன்பின், 1996-ல் தி.மு.க., ஆட்சிக்கு வந்ததும், சம்பளம் 2000 ரூபாயாகவும், ஈட்டுப்படி 1500 ரூபாயா கவும், தொகுதிப்படி 525 ரூபாயாகவும், தபால் படி 625 ரூபாயாகவும், தொலைபேசிப்படி 1250 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டு, மொத்த சம்ப ளம் 6000 ரூபாயை தொட்டது. இதன்பின், 1997 -ல் ஈட்டுப்படி, 3500 ரூபாயாக வும், தொகு திப்படி 625 ரூபாயா கவும் உயர்த் தப்பட்டது. தொடர்ந்து, 1998-ல் தொகுதிப்படி 875 ரூபாயா கவும், தபால் படி 875 ரூபாயாக வும், தொலை பேசிப் படி 1750 ரூபாயாகவும் உயர்த்தப்பட்ட து.
இதுவே, 1999-ல் தொலைபேசிப் படி மட் டும் 2750 ரூபாயாக உயர்த்தப்பட்டு, மொத் த சம்பளம் 10 ஆயிரம் ரூபாயானது. கடந்த 2000 ஆம் ஆண் டில், புதிதாக தொகுப்புப்ப டி என்று உருவாக்கப்பட்டு, 2000 ரூபாய் கூடு தலாக வழங்கப்பட்டது. பின்னர், 2001-ல், ஈட்டுப்படி, 4000 ரூபாயா கவும், தொகு திப்படி 2000 ரூபாயாகவும், தபால் படி 1500 ரூபாயாகவும், தொலைபே சிப் படி 4000 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டு, மொத்த சம்பளம் 16 ஆயிரம் ரூபாயானது. அதன்பின் அ.தி.மு.க., ஆட்சி முடியும் வரை எம். எல்.ஏ.,க்களி ன் சம்பளம் உயர்த்தப்படவில்லை. இந் நிலையில், 2006 -ல் தி.மு.க., ஆட்சி அமைந்த பின், செப்டம்பர் முதல் தேதி யன்று, ஈட்டுப் படி 6000 ரூபாயகவும், தொகுதிப்படி 4000 ரூபாயாகவும் உயர் த்தப்பட்டு, மொ த்த சம்பளம் 20 ஆயிரம் ரூபாயானது.
2007 ஏப்ரலில் புதிதாக வாகனப்படி என்று ஒன்று உருவாக்கப்பட்டு, 5000 ரூபாய் கூடுதலாக வழங்கப்பட்டது. தொடர்ந்து, 2008-ல், 12 ஆண்டுகளுக் குப் பின், சம்பளம் 3000 ரூபாயாக உயர்த்தப்பட்டது. அத்துடன், ஈட்டுப்படி 7000 ரூபாயாகவும், தொகுதிப்படி 5000 ரூபாயாகவும், தபால் படி 2500 ரூபாயா கவும், தொலைபேசிப் படி 5000 ரூபாயா கவும் உயர்த்தப்பட்டு மொத்த சம்பளம் 30 ஆயிரம் ரூபாயனது.
இதன்பின், வாகனப்படி 20 ஆயிரம் ரூபா யாக உயர்த்தப்பட்டது. 2010 முதல், எம். எல்.ஏ.,க்களின் மொத்த சம்பளம் 50 ஆயிரம் ரூபாயானது. அதாவது, 2006-ல் ஆட்சி அமைந்த போது, மொத்த சம்பளமாக 16 ஆயிரம் ரூபாய் பெற்று வந்த எம்.எல்.ஏ.,க்கள், ஆட்சி முடி யும் நிலையில், மூன்று மடங்குக்கு மே ல் உயர்த்தப் பட்டது. 
2011ல் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தது அ.தி.மு.க., இதை யடுத்து 14செப்டம்பர் 2011ல் நடைபெற்ற சட்டப் பேரவை கூட்டத்தில்¢ முதலமைச்சர் ஜெயலலிதா அறிவிப்பு ஒன்றை வெளி யிட்டார். அதன் படி, உறுப்பினர்களின் தொகுதிப்படி 5 ஆயிரம் ரூபாய் அதிகரிக்கப்பட்டு, இனி எம்.எல்.ஏ.க் களின் மாத ஊதியம் சம்பளம் 55 ஆயிரமாக இருக்கும் என்றார்.
இதுமட்டுமன்றி, எம்.எல்.ஏ.,க்க ளின் தினப்படியாக 500 ரூபாய், பயணப்படியாக ஏ.சி., இரண்டடு க்கு ரயில் பயணம், அதுவும் ஆண் டுக்கு இரண்டு தவணை களாக 20 ஆயிரம் ரூபாய்க்கு ரயில் பய ணம், ஒரு உதவியாளர் உட்பட இருவருக்கு இலவச பஸ் பாஸ், விடுதியில் ஒரு தொலைபேசி இணைப்பு, வீட்டுக்கு ஒரு தொ லைபேசி இணைப்பு ஆகியவற்றுக்கான பில் கட்டணம், இலவச மரு த்துவ சிகிச்சை மற்றும் மருந்துகளுக்கு ஆகும் செலவை ஈடு கட்டுதல், போன்ற பல்வேறு சலுகைகளும் எம்.எல்.ஏ., க்களுக்கு உண்டு. 


Monday, 28 November 2011

கவர்ச்சியான கைகளுக்கு…

Posted On November 28,2011,By Muthukumar

நகங்களை அழகுற வெட்டி, பூச்சு போட்டு அழகுபடுத்தும் கலைக்கு, "மானிகூர்' என்று பெயர். "மானிகூர்' செய்ய சில கருவிகள் தேவை. கியூட்டிக்கிள் சாப்டர், ஆரஞ்ச் ஸ்டிக், நெயில் பைல், எமரி பேப்பர், அஸ்டிரிஞ்ஜன்ட் லோஷன், க்ளென்சிங் லோஷன், மசாஜ் க்ரீம், நகப் பூச்சு பஞ்சà � போன்றவற்றை பயன்படுத்தலாம்.
நல்ல ஆரோக்கியத்துடனும், பளபளப்புடனும் தென்படும் நகங்கள், கைகளுக்கு கவர்ச்சி தரும். மனித உடம்பின் ஆரோக்கியம் நகங்களில் தென்படும். நல்ல ஆரோக்கியமுடைய நகம், இளம் சிவப்பு நிறத்தில் இருக்கும். உடம்பில் இரும்புச் சத்துக் குறைவாக இருந்தால், நகங்கள் நிறத்தை இழந்து, வெளிறி விடும். நகங்களில் நகப் பூச்சு "மானிகூர்' செய்வதற்கு முன், பூச்சு ரிமூவர் உபயோகித்து, அகற்ற வேண்டும். நகப் பூச்சை தொடர்ந்து உபயோகிப்பதால், நகங்கள் மஞ்சளாக தோற்றமளிக்கும். சற்று எலுமிச்சம் பழச்சாறு தேய்த்து, 10 நிமிடத்திற்கு பின், பஞ்சால் துடைத்து எடுத்தால், மஞ்சள் தோற்றம் அகன்று விடும். நகப் பூச்சை அகற்றிய பின், நக முனைகளை வெட்டி சரி செய்ய வேண்டும். ஒரு, "நெயில் பைல்' உபயோகித்து, மென்மையாக தேய்த்த பின், எமரி பேப்பரில் மீண்டும் தேய்த்து, நகங்களை அரை வட்ட வடிவமாக்க வேண்டும்.
நக முனைகளை சுரண்டி சரி செய்வதற்கு, "நெயில் பைல்' உபயோகிக்க வேண்டும். பிளேடு போன்ற கருவிகளை உபயோகிப்பதால், நக முனைகள் சிதைந்து போகும். பைல் செய்து வடிவுப்படுத்திய நகங்களில், "க்ளென் சிங்க் லோஷன்' தேய்க்க வேண்டும். பத்து நிமிடத்துக்குப் பின் பஞ்சால் துடைத்து விட்டால், நக இடுக்குகளில் உள்ள அழுக்குகள் நீங்கி விடு�® �். அப்படியும் போகாத நகத்தின் உள்ளிருக்கும் அழுக்குகளை, சோப்புத் தண்ணீரில் மூழ்க வைத்து, பஞ்சால் துடைக்கவும். பிறகு, ஆரஞ்ச் ஸ்டிக்கில், பஞ்சு சுற்றி, நகத்தின் உள்ளிருக்கும் அழுக்குகளை நீக்க வேண்டும். "க்ளென்சிங் லோஷனை' துடைத்த பிறகு, "ஹாண்ட் லோஷன்' க்ரீம் ஏதாவது ஒன்றை கைகளில் தடவ வேணடும். ஐந்து நிமிடம் கழித்து, பஞ்சை உபயோகித்து, "ஹாண்ட் லோஷனை' துடைத்து, களையவும்.
நக எனாமல் பூசிக் கொண்டால், நகங்கள் நன்கு தோற்றமளிக்கும். தண்ணீராலும் மற்றும் வேறு கறைகளாலும் பாதிக்கப்படாமலும் இருக்கும். நகப் பூச்சை இளக்குவதற்கு, நகப் பூச்சு ரிமூவரைச் சேர்க்கக் கூடாது. அவ்வாறு செய்தால், நகத்திலிட்ட பூச்சு உரிந்து போய்விடும். நக எனாமல் காய்ந்த பின் ஒருமுறை லேசாக, "கிளியர் நெயில் வார்னிஷ்' பூச வேண்டும். இது, நகங்களின் பளபளப்புக்கு உதவும். தினமும் இரவு உறங்குவதற்கு முன், நகங்களில் கியூட்டிகல் கிரீமை அழுத்தி தேய்த்து வந்தால், நகங்களின் கவர்ச்சி அதிகரிக்கும். இரண்டு தேக்கரண்டி லானோலின், இரண்டு தேக்கரண்டி டால்கம் பவுடர், ஐந்து சொட்டு பாதாம் எண்ணெய் ஆகியவற்றைக் கலக்க வேண்டும். இது ஒரு சிறந்த க்யூட்டிகல் கிரீம். இரண்டு மேஜைக்கரண்டி வாசலைன் மற்றும் அரை தேக்கரண்டி கிளிசரின் கலந்தால், நல்லதொரு க்யூட்டிகல் கிரீம். சிவந்த நிறமுடையவர்கள் அழுத்தமான கலரில் உள்ள நகப் பூச்சு உபயோகிக்க வேண்டும். சிவப்பும், இளஞ்சிவப்பும் இவர்களுக்கு பொருத்தமானவை; மஞ்சளும், சாம்பல் நிறமும் பொருத்தமில்லாதவை.
கருமை நிறமுடையவர்களுக்கு, கருஞ்சிவப்பு, மஞ்சள் மற்றும் சாம்பல் நிறங்கள் பொருத்தமானவை. மூன்லைட், கிளியர் பேர்ல் போன்ற நிறங்களும் பொருத்தமுடையன ஆகும். கோடை காலங்களில் விரல்களும், நகங்களும் உலர்ந்து போக வாய்ப்பு உண்டு. ஹேண்ட் கிரீம் தடவிக் கொண்டால் வறட்சி நீங்கி விடும். ஒரு தேக்கரண்டி பாதாம் எண்ணெய், 20 சொட்டுக்கள் கிளிசரின், அரை தேக்கரண்டி லானோலின் ஆகியவற்றை கலந்தால், சிறந்த ஹேண்ட் கிரீம் தயார். நகங்களை அழகுபடுத்த நெயில் லாக்கர் பூசும் போது, அந்த நிறம் லிப்ஸ்டிக்கின் நிறத்தை ஒட்டி இருப்பது போல் பூசிக் கொள்ளலாம்.
டிப்ஸ்..
  • நகத்தை அஸ்ட்ரின்ஜென்ட் லோஷன் பஞ்சால் துடைத்து, அதன் பிறகு நகப் பூச்சை போட வேண்டும். நகத்தில் ஈரம் இருக்கும் பொழுது, பூச்சு போடக் கூடாது.
  • நகப் பூச்சை போடுவதற்கு முன், ஒரு கோட், "கிளியர் வார்னீஷ்' தடவ வேண்டும். வார்னீஷ் காய்ந்த பிறகு நகப் பூச்சை பூச வேண்டும். நகப் பூச்சு விரைவில் உதிராதிருக்க கிளியர் வார்னீஷ் உதவும்.
  • நகப் பூச்சை அடர்த்தியாக போடக் கூடாது. இரண்டு அல்லது மூன்று தடவை லேசாக பூச வேண்டும். நன்றாக காய்ந்த பிறகு தான் மறுமுறை பூச வேண்டும்.
  • நகத்திற்கு பூச்சு போடுவதற்கு முன், நகக் கண்களில் கொஞ்சம் வாசலினோ அல்லது கோல்டு கிரீமோ போட வேண்டும். பூச்சு நன்கு உலர்ந்த பின், வாசலினை துடைத்து விட வேண்டும். இவ்வாறு செய்தால் பூச்சு நகக் கண்களில் படாமல் தடுக்க முடியும்.
  • நகத்திற்கு போடும் போது, நகக் கண்களின் இரு புறத்திலும் ஒரு மில்லி மீட்டர் இடைவெளி விட்டு பட்டையாக போட வேண்டும். இது, நகங்களின் நீளம் கூடுதலாகத் தோற்றமளிக்க உதவும்.
  • நக எனாமல் பூசிக் கொண்டால், நகங்கள் நன்கு தோற்றமளிக்கும். தண்ணீராலும் மற்றும் வேறு கறைகளாலும் பாதிக்கப்படாமலும் இருக்கும்.
  • நகப் பூச்சை இளக்குவதற்கு, நகப் பூச்சு ரிமூவரைச் சேர்க்கக் கூடாது. அவ்வாறு செய்தால், நகத்திலிட்ட பூச்சு உரிந்து போய்விடும்.