Lord Siva

Lord Siva

Friday, 30 January 2015

விந்து தானம் -முட்டை தானம் -கருவுயிர் தானம்



எல்லா மனிதர்களுமே குறிப்பாகப் பெண்கள் தானமா க ஏதாவது கிடைக்கப் போகிறது என்றால், உடனே அதை எதிர்பார்ப்பார்கள், உயிரணு தானத்தைத் தவிர,
கணவனின் வாரிசை  சுமப்பதைத்தான் கல்யாணமான எல்லா பெண்களுமே விரும்புவார்கள். மனைவியின் வயிற்றிலிருந்து தன் வாரிசுதான் உருவாக வேண்டும் என்று கணவர்கள் விரும்புவார்கள்.
 
என்னதான் மலடியாக இருந்து, இன்னொருவர் உயிரணுவை கருப்பைக்குள் சுமந்து தனது மனைவி கருவைச் சுமந்து குழந்தைப் பெற்றாலும், அதைத் தனது சொந்த மகனாக நினைக்கிற பக்குவம் என்பது அரிதாகத்தா ன் வரும். இவ்வாறே தனது கருமுட்டையிலிருந்து  உருவாகாத பிள்ளையை தாய் அங்கீகரிப்பதும் கொஞ்சம் சிரமமான  விஷம்தான்.
 
இந்நிலையெல்லாம் எப்போது ஏற்படுகின்றன? ஆண் கருத்தரிப்பிக்கவோ, பெண் கருத்தரிக்கவோ கொஞ்சம் கூட வாய்ப்பு இல்லாமல் போகும் போது. அதாவது ஆணுக்கு எந்தப்பிரச்சனையும் இல்லாமல், பெண்ணுக்கு முழு மலடு  ஏற்பட்டாலும்,  பெண்ணுக்குப் பிரச்சனை  எதுவுமில்லாமல் ஆணுக்கு முழுமையான மலட் டுத்தன்மை உண்டானாலும் கருத்தரிப்புக்கு வாய்ப்பில்லாமல் போகிறது.
 
ல்லவா? இந்நிலையை  மாற்றுவதற்காகத்தான்  கரு முட்டைகளையும் உயிரணுக்களையும் தான மாகப் பெற்று கருத்தரிப்பை  நிகழ்த்தும் விஞ்ஞான வளர்ச்சி நடைமுறையில் உள்ளது. உதாரணமாக ஒரு பெண்ணுக்கு கருமுட்டைகள் உருவாகாத  நிலையிரு க்கலாம்.
 
இந்நிலையில் வேறுஒரு பெண்ணின் கருமுட்டையை தானமாகப் பெற்று தனது கணவரின் உயிரணு மூலம் கருத்தரிக்கச் செய்து, அதை தன் கருப் பைக்குள் வைத்து வளரச் செய்யலாம். அவ்வாறில்லாமல்  கணவருக்கு உயிரணுக்களே இல்லாத நிலையில் முகம் தெரியாத, மரபுக் குறைபாடுகள் அற்ற யாரோ ஒருவரின் உயிரணுவை தான மாகப் பெற்று கருப்பைக்குள் வைத்து வளரச் செய்யலாம்.
 
கணவரின் உயிரணுக்கள் இயல்பாக இருந்தால், அதை பெண்ணின் கருப்பைக்குள்ளும், கருப்பைக் கழுத்துப் பகுதியிலும்  செலுத்தி கருத்தரிக்க இயலுமா என்பதை பரிசோதிப்பார்கள். ஹார்மோன் பிரச்சனைகளுடையசிலருடை விந்தணுக்கள் குறைதீன் கொண்டதாக இருக்கும்போது, சுயஇன்பம் மூலம் பலமுறை உயிரணு க்களை வெளிப்படச் செய்து சேகரித்து, அவற்றின் எண்ணிக்கை அதிகரித்ததும் கருத்தரிக்கச் செய்வார்கள்.
 
இவ்வாறு தான் கலவியில் ஈடுபட  இயலாதவர்களின் உயிரணுக்களையும் சேகரி த்து மனைவியின் கருப்பைக்குள் செலுத்துவார்கள். இவற்றை செயற்கை முறையிலான கருவூட்டம் செய்தல் என்று சொல்கிறார்கள். விந்தணுக்களைக் கொண்டு கருத்தரிப்பு நடந்தால் செயற்கை முறை விந்தேற்றம் என்றும், முட்டைகளை வாங்கி கருத்தரிப்பு நடந்தால் முட்டை தானம் என்றும் கூறுகி றார்கள்.
 
கணவனுக்கு விந்தணுக்களே வர வாய்ப்பில்லை என் றால் என்ன செய்வது, அப்போது தான் பிறருடை விந்தணுக்களை தானமாகப் பெறும் நிலை உருவாகிறது. விந்தணுவை தானமாகப் பெறும் போது சில விஷயங் களை கவனிக்க வேண்டும்.
 
விந்து தானம்..
 
மரபு ரீதியாக குறைபாடுகள், தொற்று நோய்கள் போன்றவை இல்லாத நபரிடமிருந்து, அனைத்துவிதமான பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்ட பின்பு, விந்து தானமாகப் பெறப்பட்டு, விந்து வங்கிகளில் சேமித்துவைக்கப்படுகிற து.
 
தேவைப்படும்பெண்கள் குறிப் பிட்ட விந்து வங்கிகளை அணுகி தகவல் கேட்டால் அவர்களுக்குத் இது அளிக்கப் படுகிறது. எப்போது விந்தேற்றம் செய்யலாம்  என்ப தை அல்ட்ரா சவுண்டு, ரத்தப் பரிசோதனை போன்ற சோத னைகளை மேற்கொண்டு, உற்ற தருணத்தை முடிவு செய்து, உயிரணுக்களைச் செலுத்தி கருத்தரிக்கச் செய்கிறார்கள்.
 
முட்டை தானம்…
 
சோதனைக்குழாய் முறையில் கருவாக்கம் செய்வதற் காகத்தான் முட்டை தானமாகப்பெற இயலு ம்.சோதனைக் குழாயில் கருவாக்கம் செய்து, பிறகு அதை கருப்பைக்குள் பொருத்திக் கொள் ளலாம்.
 
இந்தமுறையில் சினைப்பை முழுவதும் பாதிக்கப்பட்ட நிலையில் இருப்பவர்கள், கருமுட்டை உருவாகாதநிலையை உடைய பெண்கள், தனத சொந்த கரு முட்டைகள் கருத்தரிக் காமல் சிதைந்துபோகும் தன்மை யை க்கொண்டவர்கள், பாரம்பரிய மாகப் பிறவிக்குறைபாடு உடையவ ர்கள் ஆகியோர் முட்டைகளைத்  தானமாக பெற்றுக் கருத்தரிப்பை சாத்தியமாக்கலாம்.
 
கருமுட்டையைத் தானமாக பெறும் பெண்ணின் கருப் பையை ஹார்மோன்களால் சுமார் மூன்று மாத காலத் துக்குத் தூண்டி அதை சீர்படுத்த வேண்டும். அதன் பிறகு தங்கள் கணவரின் உயிரணு வோடு இணைக்கப்பட்ட வேறொரு பெண்ணின் சினை முட்டையை தனது கருப்பையில் பொருத்தச் செய்து கருவுயிரை வளர்க்கலாம். மாத விலக்கு தொடர்ச்சியாக வந்து கொண்டிருக்கும் நிலையுடைய பெண்ணுக்கு முட்டை தானத்தால் கருத்தரிப்பைத் தக்க வைத்துக் கொள்ள முடியாது.
 
கருவுயிர் தானம்…
கருத்தரிப்பு நிகழ்த்தப்பட்ட பிறகு தேவையிவல்லாமல் அதிகப்படியாக இருக்கும் கருவு யிர்களை பெரும்பாலும் ஆராய்ச்சிக்குப் பயன்படுத்து வார்கள். சில மையங்க ளில் இதையும் விரும்பு வோருக்கு அளித்து அவ ர்களுக்கு குழந்தைப்பே ற்றை உண்டாக்குகிறார் கள். இத்தகையசெயலும், ஒருவிதத்தில் தத்துக்கொடுப்பதைப் போன்றுதான்.
=>மாலை மலர்

No comments:

Post a Comment