Lord Siva

Lord Siva

Saturday, 18 February 2012

ஆரஞ்சு மகிமை

Posted On Feb 18,2012,By Muthukumar
எல்லா சீசனிலும் மக்களை தேடி வரும் பழங்களுள் ஒன்று... ஆரஞ்சு. பல நோய்களை முன்கூட்டியே வராமல் தடுக்கும் மகத்துவமும் இதில் உண்டு.
சில உணவுகளை சாப்பிட்டதும் அவை உடலில் சில மாற்றங்களை ஏற்படுத்தி பித்த நீரை அதிகம் சுரக்கச் செய்கின்றன. இதனால் உடலில் உள்ள செல்களின் செயல்பாடுகள் முடக்கப்படுகின்றன.
இந்த பித்த நீர், ரத்தத்தில் கலந்து ரத்தத்தில் உள்ள இரும்புச் சத்துக்களை அழித்து விடுகிறது. இதனால் ரத்தம் அசுத்த மடைகிறது. மேலும், பித்த நீர், தலைக்கேறி கண் பார்வை நரம்புகளை பாதிப்படையச் செய்கிறது. அதோடு ஞாபக மறதியும் ஏற்படுகிறது. சருமத்தை பாதித்து சுருங்கச் செய்கிறது. தலைமுடி நரைக்கச் செய்கிறது.
இதுபோல் இனிப்பு மற்றும் கொழுப்பு உணவுகளை 300 கலோரி அளவு சாப்பிட்ட பிறகு ஒரு மணி நேரம் கழித்து ரத்தத்தை பரிசோதித்துப் பார்த்தால் பித்த நீர் அதிகம் சுரந்து ரத்தத்தில் கலந்திருப்பதை அண்மையில் கண்டறிந்துள்ளனர்.
இந்த பித்த நீர் அதிகம் சுரப்பதை தடுக்கவும், உடலுக்குத் தேவையான அனைத்து சத்துக்களையும் தரும் பழங்களில் முக்கியமான ஒன்றாகத் திகழ்கிறது ஆரஞ்சு. ஆரஞ்சு பழச்சாறு சாப்பிட்டவர்களின் ரத்தத்தில் பித்த நீரில் அளவு குறைவாக இருப்பது ஆய்வின் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஆரஞ்சு பழச்சாறில் உள்ள வைட்டமின் சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து உடலை புத்துணர்வுடன் இருக்கச் செய்கிறது. இதனால் உடலில் அணுக்கள் நன்கு செயல்பட ஆரம்பிக்கிறது. உடலும் முதுமை அடையாமல் இளமைத் தோற்றத்துடன் காட்சியளிக்கிறது.
ஸோ... ஆரஞ்சை எங்கேப் பார்த்தாலும் `மிஸ்' பண்ணிடாதீங்க...

No comments:

Post a Comment