Lord Siva

Lord Siva

Sunday, 12 February 2012

சாலை எப்படி இருந்தாலும் அதற்கு ஏற்ப தன்னை மாற்றிக் கொண்டு பயணிக்கும் வாகனம்

பொதுவாக நம்மில் சிலர் கொலிவுட் படங்களில் தண்ணீரிலும், தரையிலும் ஓடும் கார்களை பார்த்திருப்போம். அப்படி யொடு கார் நிஜத்தில் காணப் பட்டால் நன்றாகத் தான் இருக்கும்.
மேலும் இவ்வாறான கார் எதிர்காலத்தில் நிஜமாகலாம் என்கிறார் சீனாவைச் சேர்ந்த விஞ்ஞானி யுஹன் சாங். இவ ர் ஒரு அட்டகாச மான புதுவித காரை டிசைன் செய்திருக்கிறார்.
சாலை எப்படி இருந்தாலும் இந்த வாகனம் அதற்கு ஏற்ப தன்னை மாற்றிக் கொண்டு பயணிக்குமாம். இக்கார்கள் மணல் மேடு, சக்தி யான இடம், தண்ணீரின் மேலும் எளிதாக பயணம் செய்கிறது.
ஜேர்மனியின் வோல்ஸ்வேகன் தயாரிப்பாய் வரப்விருக்கும் இந்த காரிற்கு தற்போது “வோல்ஸ்வே கன் அக்வா” என பெயரிட்டிருக் கிறார்கள். இந்த கார், கார்பன் வாயுவை வெளிவிடாமல் சுற்று புறச் சூழலுக்கு நண்பனாய் இரு க்கும் என்பது இதன் சிறப்பம் சங்களில் ஒன்றாகும்.
மேலும் இதிலுள்ள சக்கரங்கள் நிலையாக இல்லாமல் மேல் நோக்கி, பக்கவாட்டில், கீழ்நோக்கி என பல திசைகளிலும் மாறும் தன் மையுடன் உருவாக்கப்படுகிறது. நீரில் பயணிக்கும் ஹவர் கிராப்ட் என்றழைக்கப்படு ம் காற்றுப்படகின் தொழில் நுட்பத்தின் அடிப்படை யில் தான் இந்த காரும் வடி வமைக்கப்பட்டுள்ளது.
எதிர்காலத்தில் இந்த சூப் பர் காரை அதிக அளவில் தயாரித்து எல் லோரும் பய ன்படுத்தக்கூடிய வகையி ல் குறைந்த விலைக்கே விற்பனை செய்ய முடியும் என்கிறார் விஞ் ஞானி யுஹன் சாங்.

No comments:

Post a Comment