Lord Siva

Lord Siva

Wednesday, 29 February 2012

பேப்பர் (அட்டை) கப்-ல் டீ??? காபி??? – அய்யய்யோ வேண்டவே வேண்டாம்

என் நண்பர் ஒருவர் வயிற்று வலி யால் ரொம்பவே சிரமப்பட்டார். பல பரிசோதனைகளுக்குப் பிறகு நண்பரி ன் வயிற்றில் மெழுகு படிந்து இருந் ததை டாக்டர் கண்டுபிடித்தார். வயி ற்றில் எப்படி மெழுகு? சிற்றுண்டிச் சாலைகளில் பயன்படுத்தும் பேப்பர் கப் களில் அடிக்கடி டீ, காபி குடிப்பது நண்பரின்வழக்கம்.
அந்த கப்களில் இருந்த மெழுகுதான் நண்பர் வயிற்றுக்கு இடம் மாறி வயி ற்று வலிக்குக் காரணமாகி இருக்கிற து. சூடான டீ, காபி ஊற்றும்போது, கப் கரைந்துவிடக் கூடாது என்பதற்காக, அதன் உட் புறங்களில் ஒருவித மெழுகு பூசப்படுகி றது. இப்படி மெழுகு பூசப் பட்ட பேப்பர் கப்களில் சூடான டீ அல்லது காபி நிரப்பப்படும்போது, அந்த வெப்பம் காரணமாக, பேப்பர் கப் களில் இருக்கும் மெழுகும் கூடவே கொ ஞ்சம் உருகி, டீ – காபியுடன் கலந்து, நம் வயிற்றுக் குள்ளும் சென்றுவிடுகிறது.
அது நாளடைவில் வயிற்றில் பல உபா தைகளைத் தோற்றுவிக்கி றது. டீ, காபி அருந்துவதற்குக் கண்ணாடிக் குவளைக ளே சிறந்தவை. சில்வர் டம்ளர்களை யும் உபயோகிக்கலாம் என்பது மருத்து வர்களின் அறிவுரை. அனைவரும் இதைப் பின்பற்ற வேண்டும். தயவு செய்து இந்தச் செய்தியை அனைவரு க்கும் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!”
இப்படி ஒரு பதிவு சமீபத்தில் ஃபேஸ்புக் பக்கங்களில் வலம் வந்தது. படித்தவர்கள் அனைவருக்கும் அதிர் ச்சி. பிளாஸ்டிக் தட்டுகள், டப்பாக்கள், டம்ளர்கள் ஆகியவற்றின் மூலம் உணவு உட் கொள்வதால், நம் உடலில், என்ன மாதிரியான விளைவுகள் ஏற்படும்? மருத்துவர்கள், ஆராய்ச் சியாளர்கள், சமூக ஆர் வலர்கள் சிலரிடம் பேசி னோம்.
”பேப்பர் கப், டம்ளர் போ ன்றவற்றில் தண்ணீர் ஊ ற்றும்போது கரைந்து விடாமல் இருக்க மெழுகு தடவப்படுவது உண்மைதான். மரப்பிசி னில் இருந்து எடுக்கப்படும் மெழுகை மட்டுமே பேப்பர் கப் செய்வத ற்குப் பயன்படுத்த வேண்டும் என்ற விதியை அமெரிக்காவின் ‘எஃப்.டி.ஏ’ ஏற்படுத்தி இருக்கிறது. ஆனால், இன்று பெரும் பாலும் நம் நாட்டில் ‘பெட்ரோ-கெமிக்கல்’ மெழு குதான் பயன் படுத்தப்படு கிறது. அது பல பின்விளைவுகளை உண்டாக்கும்.
பேப்பர் கப்பால் மட்டும் அல்ல. இன்று அதிக அளவில் பயன் படுத் தப்படும் பிளாஸ்டிக்  பேப்பர் பிளேட், பாத்திரம், டம்ளர் போன்ற பொருட்களால்கூட நிறைய பிரச்னைகள் ஏற்படுகின்றன. உணவு வகைகளில், காரத்தன்மை அதி கமாக இருந்தால், அது பிளாஸ்டிக்கு டன் சேர்ந்து நச்சுத்தன்மை உடையதாக மாறும். பிளாஸ்டிக் டப்பா அல்லது தட் டுகளில் வைத்து ஏதோ ஒரு நாளோ, இரண்டு நாளோ உணவு சாப்பிட நேரும்தான். ஆனால், அதுவே வழக்கமாக மாறும்போது ஒவ்வாமை முதல் புற்றுநோய் வரைக் கும் நம்மைக் கொண்டுபோய் நிறுத்திவிடும்!” என்று எச்சரிக்கிறார் சித்த மரு த்துவரான சிவராமன்.
”இதுபோன்ற மலிவான பிளாஸ்டிக் பாத்திரங்களில் வைக்கும் போது உணவில் இருக்கும் நுண் சத்துக்கள் அதாவது மைக்ரோ நியூட்ரியன்ட்ஸ் சிதைந்துவிடும். ஆகையால் இவை தவிர்க்கப்பட வேண்டியவை” என்பது கேஸ்ட்ரோ என்ட்ராலஜிஸ்டான சந்திர மோகனின் கருத்து.
சென்னைப் பல்கலைக்கழகத்தின் மருந்தியல் மற்றும் சுற்றுச்சூழல் நச்சு இயல் துறையில் உதவிப் பேராசிரியராக இருக்கும் டாக்டர் கார்த்திகேயனும் இதே கோணத்தி ல்தான் பேசுகிறார். ”பிளாஸ்டிக் நெகிழும் தன்மை உடையதாக இரு க்க வேண்டும் என்பதற்காக சில கூட்டுப் பொருட்கள் சேர்க்கப்படுகி ன்றன. இந்தக் கூட்டுச் சேர்க்கை யை ‘பிளாஸ்டிசைஸர்’ என்பார்கள். சுமார் 100 விதமான பிளாஸ்டிசைஸர்கள் இன்றைக்குப் பயன் படுத்தப்பட்டு வருகின்றன. உணவுப் பொருட்களைச் சேமிப்பதற்கு என்றே ‘ஃபுட் கிரேட் பிளாஸ்டிக்ஸ்’  என்ற தனி ரகம் உள்ளது. அதி லும் ‘உணவுத் தரக் கட்டுப்பாடு’ முறையின் கீழ் தயாரிக்கப்ப டும் பிளாஸ்டிக் பொருட்களை மட்டுமே பயன்படுத்த வேண்டு ம்.
பிளாஸ்டிக் பேப்பர் கப்கள், தண்ணீர் பாக்கெட்டுகள், ஹோ ட்டல் களில் சாம்பார், ரசம், சட்னி போன்றவற்றைக் கட்டப் பயன்படுத் தப்படும் பிளாஸ் டிக் கவர்கள் போன்ற அனைத்தும் தவிர்க்கப்பட வேண்டியவை. பிளாஸ்டிக் பொருளில் சில வேதிப் பொருட்கள் இருக்கின்றன. அதேபோல உணவுப்பொருட்களிலும் சில வேதிப்பொருட்கள் இருக்கின்றன. பிளாஸ்டிக்கில் இருக்கிற வேதிப்பொருள் உணவில் இருக்கும் வேதிப் பொருளுடன் கலப்பதை ‘மைக்ரேஷன்’ என் போம். உணவு நச்சுத்தன்மை கொண்டதாக மாறுவத ற்கு இதுதான் காரணம்.  உணவு வகைகளை பிளாஸ்டிக் பொரு ட்களில் சேமித்து வைப்பதைத் தவிர்த்துவிடுவது நல்லது!” என்கிறார் கார்த்தி கேயன்.
பிளாஸ்டிக் பொருட்களைப் பயன்படுத்துவதால், புற்றுநோய் ஏற்படுமா?” என புற்றுநோய் நிபு ணர் ராஜாவிடம் கேட்டோம். நம் பதற்றத்தை உணர்ந்துகொண்ட அவர், ”பிளாஸ்டிக் தட்டுகள், கப் கள் ஆகியவற்றைப் பயன்படுத்தி உணவைச் சாப்பிடுவதால், புற்று நோய் ஏற்படும் என்பதற்கான நேரடி யான ஆதாரங்கள் எதுவும் இது வரை இல்லை என்றாலும், மினரல் வாட்டர் மற்றும் குளிர்பானங் களை அடைத்து விற்பனை செய்யப் பய ன்படுத்தும் பெட் பாட்டில் களைத் தொடர்ச்சியாக மாதக்கணக்கில் பய ன்படுத்தினால் புற்று நோய் ஏற்படு வதற்கான வாய்ப்புகள் கூடும் என்று ஆராய்ச்சி முடிவுகள் சொல்கின்ற ன” என்கிறார்.
”40 மைக்ரான் அடர்த்திக்குக் கீழே உள்ள பிளாஸ்டிக் பைகளைப் பயன்படுத்தக் கூடாது என்று சட்டம் இருக்கிறது. ஆனால், இன்னும் பல ஹோட்டல்களில் அந்தச் சட்டத்தை மதிக்காமல், சாம் பார், ரசம், சட்னி போன்ற உண வு வகைகளை மிக மெல்லிய பிளாஸ்டிக் பைகளில்தான் கட் டித் தருகிறார்கள். இது மிகவும் தவறு. இதற்காக அவர்கள் மீது நடவடிக்கையும் எடுக்க முடியு ம்.
உணவு வகைகளை பிளாஸ்டி க் பைகளில் கட்டிக்கொடுப்பதைவிட, வாழை இலை, தேக்கு இலை போன்ற இயற்கையான பொரு ட்களில் கட்டிக் கொடுக்க நுகர் வோர் கட்டாயப்படுத்தலாம். பிளா ஸ்டிக் பைகள் பயன்படுத்துவதை ஊக்கப்படுத்தாமல் இருப்பது நுகர் வோரின் கைகளில்தான் இருக்கி றது!” என்பது  ’நுகர்வோர் ஆலோச னைக் குழு’ அமைப் பைச் சேர்ந்த சரோஜாவின் கருத்து.
நம் வசதிக்காகப் பயன்படுத்தும் பொருள்தான் பிளாஸ்டிக். ஆனா ல், அந்த வசதியே நம் உடல் நலத்துக் கு எதிராகத் திரும்புகிறது என்றால், நாம் விழித்துக்கொள்ள வேண்டா மா?
மண் பானை மகத்துவம்!
குடிநீரை பிளாஸ்டிக் கேன்களில் நிரப்புவதற்குப் பதிலாக, சில்வர் ஃபில்டர்களில் நிரப்பி வைத் துப் பயன்படுத்தலாம். தண் ணீரைக் காய்ச்சி, ஆற வைத் து அதை மண் பானைகளில் நிரப்பிக் குடித்தால்… குளிர் ச்சிக்குக் குளிர்ச்சி, ஆரோக் கியத்துக்கு ஆரோக்கியம்!
கொழுப்புச் சத்து அதிகம் உள்ள அசைவ உணவுகளில் பிளாஸ்டிக் மிக வேகமாக ‘மைக்ரேஷன்’ நடத்தும். அப்போது பிளா ஸ்டிக்கின் வேதிப் பொருட்கள் அசைவப் பொருட்களுடன் கலந்து நச்சுத் தன்மை வாய்ந்ததாக மாறிவிடும்.
பிளாஸ்டிக் பாட்டில்களில் அடைக்கப்படும் உணவுப் பொருட்கள், குளிர்பானம் போன்றவற்றை முடிந்த வரை தவிர்த்துவிடுங்கள். அவற்றில் அமிலத்தன்மை அதிகமாக இருப்பதால், ‘மைக்ரேஷன்’ மிக வேகமாக நடக்கும்.

Monday, 27 February 2012

மூட்டுகளை காக்கும் முள்ளாநங்கை

Posted On Feb 27,2012,By Muthukumar
நாம் பயன்படுத்தும் பெரும்பாலான இயந்திரங்களுக்கு, ஆயுட்காலம் குறைவு தான். ஏனென்றால், இயந்திரங்களின் அசையக் கூடிய பாகங்கள், விரைவில் தேய்ந்து விடுகின்றன. ஆனால், பிறந்தது முதல் கடைசி காலம் வரை அசையக் கூடிய நமது மூட்டுகளுக்கு, இயற்கை கூடுதலான ஆயுளை கொடுத்திருக்கிறது. ஆனாலும், நாம் மூட்டுகளை சரியாக பராமரிக்காததால், பல்வேறு வகையான மூட்டுவாத நோய்களுக்கு ஆளாகிறோம்.
நமக்கு தேவையான உடல் எடையை விட, 10 சதவீதத்திற்கு மேல், உடல் எடை அதிகரிக்க ஆரம்பித்தவுடனேயே, முழங்கால் மூட்டுகள் மற்றும் கணுக்கால் இணைப்புகள், பலவீனமடைகின்றன. குனிந்து கொண்டோ, ஒரே இடத்தில் நிலைகுத்தி பார்த்தவாறோ பணிபுரிவதால், கழுத்து முள்ளெலும்புகளும், சர்க்கரை நோய் மற்றும் தவறான நிலையில் தூங்குவதால் தோள்பட்டை இணைப்புகளும், அமர்ந்தே பணிபுரிவதால், முதுகு முள்ளெலும்புகளும், நீண்டநேரம் ஒரே இடத்தில் உட்கார்ந்திருப்பதால், இடுப்பு முள்ளெலும்புகளும், தொடை எலும்பு இணைப்புகளும், பலவீனமடைகின்றன.
இதைத் தவிர, கணினியில் பணிபுரிபவர்களும், எழுத்து வேலை செய்பவர்களும், விரல்களின் மூட்டு இணைப்பு பலவீனத்திற்கு ஆளாகின்றனர். எலும்புகள், எலும்புகளைச் சூழ்ந்துள்ள சவ்வுகள், எலும்புகளை பிடித்துள்ள தசைநார்கள் மற்றும் தசை ஆகியவற்றிற்கு போதுமான ரத்தம் செல்லாவிட்டால், மூட்டுகளில் வலி உண்டாகிறது. அசைக்கும் பொழுது வலி ஏற்படுதல், அசைக்காமல் இருந்தால் மூட்டுகள் இறுகுதல், நோயின் ஆரம்ப நிலையில், மூட்டுகளை அசைக்கும்பொழுது, "களுக் முளுக்' என, பிறருக்கு கேட்கும் படியாக சத்தம் உண்டாதல், நாட்பட்ட நிலையில் மூட்டுகளில் வீக்கம் மற்றும் கடுமையான வலி உண்டாதல் ஆகியன, மூட்டு பலவீனத்தைக் காட்டும் அறிகுறிகள்.
மூட்டு பலவீனத்தின் ஆரம்ப நிலையில், முறையான பயிற்சிகளை செய்து, ரத்த ஓட்டத்தை அதிகரிக்கும் ஒற்றடம் செய்து வந்தால் பலன் உண்டாகும். ஒற்றடம் இட, மூலிகை எண்ணெய்களை பயன்படுத்துவதால் தோல், சதை மற்றும் இணைப்பு வரை மருந்துச் சத்துகள் ஊடுருவி, வலி நீங்கி குணமுண்டாகிறது. மூட்டுகளில் தோன்றும் கடுமையான வலி மற்றும் இறுக்கத்தை குறைத்து மூட்டை பாதுகாக்கும் அற்புத மூலிகை முள்ளாநங்கை. பார்லேரியா லுபிலினா என்ற தாவரவியல் பெயர் கொண்ட, அகான்தேசியே குடும்பத்தைச் சார்ந்தது. கூரிய முட்களையும் சிவப்புநிற இலைக்காம்புகளையும் உடைய முள்ளாநங்கை செடிகளின் இலைகள், சித்த மருத்துவத்தில் பயன்படுகின்றன. இதன் இலைகளிலுள்ள, அசிட்டைல்பார்லரின், பீட்டாகுளூக்கோபைரோனுசல் மற்றும் போர்னியால் ஆகிய வேதிச்சத்துகள், மூட்டு எடை வீக்கங்களை குறைத்து, வலியை நீக்குகின்றன. அதுமட்டுமின்றி, திசுக்களின் இறுக்கத்தை குறைத்து, மூட்டுகளின் அசைவை எளிதாக்குகின்றன. வெளிநாடுகளில் மசாஜ் நிலையங்களில் போர்னியால் என்ற முள்ளாநங்கை வேதிச்சத்து சேர்க்கப்பட்ட கிரீம் உடம்பில் தேய்க்கப்பட்டு, வலி நீக்கும் மசாஜ் செய்யப்படுகிறது.
முள்ளாநங்கை இலைகளை நீரில் வேகவைத்து, நீர் வற்றியதும் வெள்ளை துணியில் முடிந்து, ஒற்றடமிட வலி நீங்கும். ருமடாய்டு ஆர்த்தரைட்டிஸ், சர்வாங்கி வாதம் போன்ற வாத நோய்களில் தோன்றும் மூட்டுவலி நீங்க முள்ளாநங்கை இலைகளை இடித்து, சாறெடுத்து, நல்லெண்ணெயிலிட்டு காய்ச்சி, பதத்தில் வடிகட்டி, வலியுள்ள இடங்களில் தடவிவரலாம். முள்ளாநங்கை இலைச்சாறு- 500மிலி, ஓமம்-100 கிராம், தேங்காய் எண்ணெய்-500மிலி சேர்த்து கொதிக்கவைத்து, சாறு வற்றியதும் வடிகட்டி இளஞ்சூட்டில் 20 கிராம் பூங்கற்பூரத்தை போட்டு கரைந்ததும் மூடி வைத்துக்கொள்ள வேண்டும். இந்த எண்ணெயை வலியுள்ள இடங்களில் தடவி வர, பல்வேறுவகையான மூட்டுவலிகள் கட்டுப்படும்.

நீங்கள் தனிமையில் இருக்கும்போது உங்களுக்கு மாரடைப்பு ஏற்பட்டால், உடனடியாக‌ நீங்கள் செய்ய வேண்டியது என்ன‍?

மாலை மணி 6: 30,வழக்கம் போல் அலுவலகப் பணிகளை முடித் து விட்டு வீட்டிற்கு தனியாக சென்று கொண்டிருக்கிறீர்கள். அலுவலகத் தில் வேலை பளுவின் காரணமாக, மற்றும் இதர சில பிரச்சனைகள் காரணமாக உங்கள் மனம் மிகவும் அழுத்தத்துடன் உள்ளது, நீங்கள் மிக வும் படபடப்பாகவும், தொய்வாக வும் உள்ளீர்கள், திடீ ரென்று உங்கள் இதயத்தில் அதிக வலி ஏற்படுவதை உணர்கிறீர்கள்,
அந்த வலியானது மேல் கை முதல் தோள்பட்டை வரை பரவுவதை உண ருகிறீர்கள், உங்கள் வீட்டில் இருந்து மருத்துவமனை ஒரு ஐந்து மைல் தூரத்தில் இருப்பதாக வைத்துக்கொள்வோம், ஆனால் உங்க ளால் அந்த ஐந்து மையில் தூரத்தை கடக்க முடியாது என உங்கள் மூளை உங்களுக்கு சொல்கிறது இந்த நேரத்தில் நம் உயிரை நாமே காக்க என்ன செய்யலாம் ??
துரதிஷ்ட வசமாக மாரடைப்பு ஏற்படும் போதெல்லாம் இறப்பவர் கள் அதிகமாக தனியாக இருந் திரு ப்பவராக உள்ளனர்! உங்க ள் இதயம் தாறுமாறாக துடிக் கிறது..நீங்கள் சுயநினைவை இழக்க வெறும் 10 நொடிகள் தான் உள்ளது. இப்போது நீங்கள் செய்ய வேண்டியது தொட ர்ச்சியாக மிக ஆக்ரோஷமாக இரும் ப வேண்டும், ஒவ்வொரு முறை இரு ம்புவதர்க்கு முன்னரும் மூச்சை இழு த்துவிட வேண்டும், இருமல் மிக ஆழமா னதாக இருக்க வேண்டும்
 
இருதயம் இயல்பு நிலை திரும்பும் வரையிலோ அல்லது வேறொ ருவர் உதவிக்கு வரும் வரையிலோ ஒவ்வொரு இரண்டு நொடிக்கும் மூச் சை இழுத்து விட்டு இருமிக் கொண் டே இருக்க வேண்டும். மூச்சை இழுத் து விடுவதினால் நுரை ஈரலுக்கு ஆச்சிஜன் சீராக செல்ல வழி வகுக் கிறது , இருமுவதால் இருதயம் நிற்ப தில் இருந்து தொடர்ச்சியாக துடித்துக் கொண்டே இருக்க உதவும், இதனால் ரத்தஓட்டம் சீரடையும்.
 
இருமுவதால் ஏற்படும் அதிர்வினால் இதயம் சீராக துடிக்கும். பின்னர் இரு தயம் சீரடைந்ததும் அருகில் உள்ள மருத்துவமனை க்கு செல்ல லாம். இந்த தகவலை குறைந்தது உங்களின் பத்து நண்பர்களுக் காவது பகிருங்கள்..தேவை இல்லாத விசயங்களையும், ஜோக்குக ளையும் பகிர்வோர், உயிரை காக்கும் இது போன்ற விசயங்களை யும் பகிருங்கள் !!!!

தாம்பத்யம் என்பது இல்லற பந்தத்தில் உடல் பசியை தீர்ப்பதற்கு மட்டுமல்ல.

தாம்பத்யம் என்பது இல்லற பந்தத்தில் உடல் பசியை தீர்ப்பதற்கு மட்டுமல்ல. ஒருவருக்கொருவ ர் அன்பை பகிர்ந்து கொள்ள உத வும் ஆயுதம். உடல் தேவை யை பூர்த்தி செய்வது மட்டுமே நோக்க மாக இருந்தால் அது முழுமையான காதலாகாது. உறவின் போது உணர்ச்சிப்பூர் வமான, அன்பான பந்தம் கண வனுக்கும் மனைவிக்கும் இருந் தால் தான் மணவாழ்க்கை முழுமை பெறும். உறவுக்கு முந்தைய விளையாட்டுக்களான தொடுதல், முத்தமிடுதல் உள்ளிட்டவை தாம்பத்யத்தில் முக்கிய அம்சமாகும். ஸ்பரிசம் மூலமே உணர்வு தூண்டப்படுகிறது. மனித உடல் நரம்புகளால் மூடப்பட் டது. உடலின் சில பகுதிகளி ல் நரம்புகள் அதிகமாக இருக் கும். இவற்றை தொட்டால், தடவினால் மகிழ்ச்சி பல மட ங்கு அதிகமாகும். எண்ணற்ற பெண்கள் உறவுக்கு முந்தை ய முன்தொடுதலை விரும்பு வதாக ஆஸ்தி ரேலியாவில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றில் கண்டறியப்பட்டு ள்ளது.
முன் விளையாட்டுக்குத் தேவையானவை:
நேருக்கு நேர் பேசிக் கொள்ளுதல் அவசியம். ஏனென்றால் முன் தொடுதல் சிலருக்கு பிடிக்கலாம். சில ருக்கு பிடிக்காமல் போகலாம். மனம் விட்டு பேசிக்கொண்டால் பிரச்சனைக ள் தீரும். அக்கறை உள்ள அன்பு, கவ னிப்பு. “நான் இருக்கிறேன் உனக்கு பாதுகாப்பாக” என்று சொல்லாமல் சொல்லும் பரிவான தடவல்களால், ஒரு ஆண், ஒரு பெண்ணின் மனதை நெருடி, உணர்ச்சிகளை ஊக்கு விக்க முடியும். இதனால் மனரீதியாகவும் பெண்கள் பாதுகாப்பாக உணர்வதாக ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.
தொடுதல் – ஒரு முக்கிய காரணி
முன் தொடுதலால் சருமம் மூலம், இன்பமான உணர்ச்சிகள், உட லெங்கும் பரவும். அணைத்தல், தழுவுதல் போன்ற குறிப்பான பாலியல் தொடுதலைப் போ லவே, பாலியல் குறிக்கோ ளாக இல்லாமல், பரிவுடன் செய்யப்படும் ஆதரவான தழுவுதல், தொடுதல் இவை யும் பெண்களுக்கு பிடித்தமா ன செயல்களாகும். மிருது வான ஸ்பரிசம், மிருதுவா ன, மென்மையாக தொடுதல் இவைகளே சில சமயங்களி ல் உணர்ச்சியை தூண்டபோதுமானவை. பின் முது கை தடவுதல், மசாஜ் செய்தல் இவை சிலருக்கு ஆசை உணர்வை அதிகரிக்கும். கழுத்தை நீவுதல், விரல்களை லேசாக கடித்தல் போன்ற பலவித செயல்கள் இருக்கின்றன. இவற்றை ஆண்கள் தங்களின் மனைவி க்கு ஏற்றவாறு கையாளலாம் என்றும் ஆய்வாளர்கள் தெரிவி த்து ள்ளனர்.
முத்தம் உணர்த்தும் அன்பு
முத்தமிடுவதுதான் உறவின் திறவுகோல். இது அனைவரும் பிடித்தமானதும் கூட. முத்த மிடுதல் மூலம் பெண்ணின் ஆசையை ஆதிகரிக்கச் செய்ய லாம். முன் தொடுதல் விளையாட்டினால் பெண்கள் மட்டுமல்ல, ஆண்களும் மகிழ்ச்சியடைவது கண்டறியப் பட்டுள்ளது. ஆண்களு ம் முன்தொடுதலை ஆரம்பிக்கும்முன், பெண்ணை சகஜ நிலைக்கு கொண்டு வரவேண்டும். எப்பொ ழுதும் ஒரே மாதிரியாக இல்லாம ல் கற்பனையை புகுத்தி மாற்ற ங்களை கையாண்டால் தாம்பத்ய த்தில் இனிமை கூடும்.

Saturday, 25 February 2012

நமக்கு ஏன் வயதாகிறது?

Posted On Feb 26,2012,By Muthukumar

`இந்த உலகத்தில் பிறப்பவர்கள் எல்லாம் ஒரு நாள் இறப்பை சந்திக்கத்தான் வேண்டும்' என்பது நமக்கு நன்றாகத் தெரியும். ஆனால் அது ஏன் என்பதற்கான பதில் மட்டும் இதுவரை யாருக்குமே தெரியாது. அதேசமயம் இந்த உலகத்தில் பிறக்கும் ஒவ்வொருவரும் எப்படி இறந்து போகிறார்கள் என்று கேட்டால் அதற்கு நம்மால் ஓரளவுக்கு பதில் சொல்ல முடியும்.
அதாவது, ஒரு குழந்தை பிறந்த பின்பு நாட்கள், வருடங்கள் செல்லச் செல்ல அதற்கு வயதாகிறது. வயதாக வயதாக உடல் மெலிந்து, நோய்கள் ஏற்பட்டு இறுதியில் இறந்து போகிறது. ஆக, பிறந்த ஒவ்வொருவரும் இறந்து போவதற்கு காரணம் நமக்கு வயதாகிப்போவது அல்லது மூப்படைவதுதான்!
ஆமாம், நமக்கு ஏன் வயதாகிறது?
இந்தக் கேள்விக்கு உலக அறிவியலாளர்கள் யாரும் இதுவரை விடை கண்டுபிடிக்கவில்லை.
ஆனால், `நான் கண்டுபிடித்துவிட்டேன்' என்கிறார் அமெரிக்காவின் சால்க் ஆய்வு மைய விஞ்ஞானி மார்ட்டின் ஹெட்சர்.
நியூரான்கள் என்னும் நரம்பு உயிரணுக்களின் மையக்கருவான நியூக்ளியசின் மேற்புறத்தில் ELLP என்னும் ஒரு வகை புரதங்கள் இருக்கிறது. `ELLP' என்றால் மிக மிக நீண்ட ஆயுளை உடைய புரதங்கள் என்று பொருள். நியூக்ளியசிற்கு உள்ளேயும், நியூக்ளியசிலிருந்து வெளியேயும் என்னென்ன பொருட்கள் செல்ல வேண்டும் என்பதை தீர்மானிப்பதே இந்த ணிலிலிறி புரதங்கள்தான். இதனால் இவற்றுக்கு `போக்குவரத்து வழித்தட புரதங்கள்' என்று மற்றொரு பெயரும் உண்டு.
முக்கியமாக, நச்சுப்பொருட்கள் நியூக்ளியசிற்கு உள்ளே செல்லாமல் தடுப்பது இந்த புரதங்களே. உடலின் பிற புரதங்கள் சேதமடைந்தால் உடனே அவை புதிய புரதங்களால் நிரப்பப்படும். ஆனால், வேதியியல் மாற்றங்கள் மற்றும் பிற பாதிப்புகளால் ELLP புரதங்கள் சேதமடையும்போது அவற்றுக்கு மாற்றாக, புதிய புரதங்கள் உற்பத்தி செய்யப்படுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதன் காரணமாக, பல நச்சுப்பொருட்கள் நியூக்ளியசிற்கு உள்ளே சென்று நியூரான்களின் உள்ளே இருக்கும் மரபுப்பொருளான DNAவை பாதிக்கின்றன. இதனால் மரபணுக்களின் செயல்பாடுகள் மாற்றப்பட்டு உயிரணுக்கள் மூப்படைகின்றன என்று கண்டறிந்துள்ளனர் மார்ட்டின் ஹெட்சர் தலைமையிலான ஆய்வாளர்கள்.
பொதுவாக, உடலிலுள்ள புரதங்களின் வயது இரண்டு அல்லது மூன்று நாட்கள் மட்டுமே. அதாவது மூன்று நாட்களுக்கு பின்னர் அவை செயலிழந்து போகும். ஆனால் ELLP புரதங்களின் வயதோ மிக மிக அதிகம். உதாரணமாக, எலிகளின் உடலிலுள்ள ELLP புரதங்களின் வயதும் எலியின் வயதும் ஒன்று என்கிறார் மார்ட்டின் ஹெட்சர்.
இத்தகைய விசேஷ பண்புடைய ELLP புரதங்களையும், இவற்றுக்கும் மூப்படைதலுக்கும் தொடர்பு உண்டு என்பதையும் உலகில் முதன்முதலில் கண்டறிந்த பெருமை ஆய்வாளர் மார்டின் ஹெட்சரையே சேரும்.
மூப்படைதல் தொடர்பான இதற்கு முந்தைய ஆய்வுகளில், இயல்பான மரபணு செயல்பாடுகளில் ஏற்படும் மாற்றங்களே மூப்படைதலுக்குக் காரணம் என்று கூறப்பட்டது. ஆனால், உயிரணுக்களின் நியூக்ளியசில் இருக்கும் ELLP புரதங்கள் பாதிப்படைவதால், நியூக்ளியசிற்கு உள்ளே நச்சுப்பொருட்கள் சென்று உள்ளிருக்கும் DNAவை சேதப்படுத்துவதாலேயே மரபணு செயல்பாடுகள் மாற்றமடைகின்றன என்று ஆய்வாளர் மார்ட்டின் ஹெட்சர் கண்டறியும் வரை, மரபணு செயல்பாட்டு மாற்றங்களுக்கான காரணம் என்னவென்று உலகின் பிற ஆய்வாளர்களுக்கு தெரியாது என்பது குறிப்பிடத்தக்கது.
உடலின் முக்கிய பாகங்களான இதயம் மற்றும் மூளையின் செயல்பாடுகள் குறைந்து போவதுதான் மூப்படைதலின் முதல் மற்றும் அடிப்படை அறிகுறி. இந்த பாகங்களின் உயிரணுக்களில் நிகழும் புரத சமன்பாடு (protein homeostasis) அல்லது உட்புற உறுதி நிலை (internal stability) பாதிக்கப்படுவதே அவற்றின் செயல்பாடு குறைவதற்கான முக்கிய காரணம் என்கிறது சமீபத்திய ஆய்வு முடிவுகள்.
ஆய்வாளர் மார்ட்டின் ஹெட்சரின் ஆய்வு முடிவுகளில், (மூளை உயிரணுக்களான) நியூரான்களின் செயல்பாடுகள் குறைவதற்கு ELLP புரதங்கள் சேதமடைவதே காரணமாக இருக்கக்கூடும் என்று கண்டறியப்பட்டுள்ளது.
நியூரான்கள் தவிர்த்த உடலிலுள்ள பிற உயிரணுக்களின் செயல்பாடுகள் குறையும்போது அவை, அவற்றின் சேதமடைந்த பழைய புரதங்களை அழித்து புதிய புரதங்களை உற்பத்தி செய்துவிடுகின்றன. இதனால் அவற்றின் செயல்பாடு மீண்டும் அதிகரித்து விடுகிறது. ஆனால் நியூரான்களிலுள்ள புரதங்கள் ஒருமுறை சேதமடைந்தால் அவற்றுக்கு மாற்றாக புதிய புரதங்கள் உற்பத்தி செய்யப்படுவதில்லை என்பது துரதிஷ்டவசமானது.
`என்றும் பதினாறு' மார்க்கண்டேயனைப் பற்றி படித்திருக்கிறோம். இந்த ஆய்வு முடிவுகளை பார்க்கும்போது, ஒருவேளை மார்க்கண்டேயனின் ELLP புரதங்கள் அவனுடைய பதினாறாவது வயதுக்குப் பிறகு சேதமடையவே இல்லையோ என்று எண்ணத் தோன்றுகிறது!

Sunday, 19 February 2012

டெமென்ஷியா ப்ரேகாக்ஸ் (dementia Praecox) – ஒருவித மனநோய்

டெமென்ஷியா ப்ரேகாக்ஸ் (dementia Praecox) என்று ஒரு காலத்தில் அழைக் கப்பட்ட இந்நோய்க்கான அறிகுறிகள் மற்றும் இந்நோ யின் நடத்தை எப்படி உண்டாகிறது என்று இன்று வரை கண் டு பிடிக்க முடியவில்லை.
பொதுவாக, நம் உடலில் உள்ள வேதிப் பொருட்களின் மாற்றங் களால்தான் பலருக்கு மனம் சம்பந்தப்பட்ட பிரச்சி னைகள் வரும். சிலருக்கு நரம்பு சம்பந்த ப்பட்ட கோளாறுகள் இருந்தால், மனம் சம்பந்தப்பட்ட பிரச்சினை கள் வரும். இன்னும் சிலருக்குப் பரம்பரைத் தன்மையில்கூட மன நோய் கள் வருவதுண்டு. ஆனால் இந்நோய் இந்தக் குறைபாடுகளால் வரு வதாகத் தெரியவில்லை. ஆனால், இந் தக் குறைபாடுகள் எல்லாம் ஒன்று சேர் ந்து தாக்கும் போது, இப்படி நடந்துகொ ள்ள வாய்ப்புகள் அதிகம் என்று மட்டுமே ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். அண் மையில் நடந்த ஆராய்ச்சிகளின்படி, அன்பு இல்லாத, பாசத்தைக் கொட்டி சீராட்டி வளர்க்கப்படாத பெற்றோர்களி டம் வளரும் குழந்தைகளுக்கு இந்தப் பாதிப்பு அதிகம் என்று கண்டு பிடித்திரு க்கிறார்கள்.
இந்நோய்க்கான வேறு அறிகுறிகள் :
பொதுவாக, காலத்திற்கும் இடத்திற்கும் பொருத்தமில்லாதபடி இவர் கள் நடந்துகொள்வார்கள்.
தங்களுக்குள் எதோ ஒரு குரல் கேட்பதாகவும், அதற்குக் கட்டுப்பட் டு நடப்பதாகவும் காட்டிக் கொள்வா ர்கள்.
ஒரு விஷயத்தைப் பற்றிப் பேசும் போது தெளிவான ஆதாரம் இல்லா மல் பேசுவார்கள். மடக்கிக் கேட்டா ல், பேச்சைத் துண்டித்துக்கொள்வா ர்கள். அடிக்கடி நீண்ட நேரம் மௌனத்தைக் கடைப்பிடிப்பார்கள்.
ஒரு சிலர் சகஜமாகப் பேசுவார்கள். தாங்கள் படும் துன்பத்தை முன் பின் அறிமுகமில்லாதவர்களிடம்கூட ஒளிவுமறைவு இன்றி சொல்லிக் கொ ண்டு இருப்பார்கள். ‘எல்லாரும் தன் னை ஒதுக்குகிறார்கள். புருஷன் தன் னை கொடுமைப்படுத்துகிறான்’ இப்ப டிப் பேச்சு இருக் கும்.
ரம்யா மாதிரி மருத்துவப் பரிசோதனை க்கு வந்த நடுத்தரப் பெண் ஒருத்தி, யா ரோ தன் காதில் ‘நீ செத்துப் போய்விடு. இந்த உலகத்தில் நீ இருக்காதே. செத் துப்போ’ என்று அடித்துப் பேசுவதாகச் சொல்லிக் கொண்டு வந்தார்.
இந்நோயால் இன்னும் பாதிக்கப்பட்ட சிலர், பெரிய சந்தேகப் பேர் வழியாக இருப்பார்கள். கணவன் எந்த செயலைச் செய்தாலும் அதை சந்தேகப்பட்டுப் பேசி, சண்டையை வரவழைத்துக் கொண்டே இருப் பார்கள். ஆண்களைவிட பெண் கள்தான் இந்தப் பாதிப்புக்கு அதி கம் ஆட்படுகிறார்கள்.
அதீத கற்பனைப் பேச்சும், நடத்தை யும்கூட இந்நோய்க்கு அறிகுறியா கச் சொல்லப்படுகிறது. ‘மீனம்பா க்கம் விமான நிலையம் இருக் கும் இடம் எங்களது. என் கொள்ளுத் தாத்தாதான் அதை தானமாகக் கொடுத்தார்’ என்பார்கள். எதாவது கல்யாண மண்டபத்தில் தரை யைச் சுத்தம் செய்யும் வேலையில் இருப்பார்கள். ‘ஜனாதிபதி என் நெருங்கிய உறவினர்தான். ஏதோ என் போறாத காலம் இப்படி இருக்கேன்’ என்று புலம்புவார்கள்.
இவர்களின் பேச்சில் ஒழுங்கு இருக்கும். கட்டுக்கோப்பு இரு க்கும். சில சமயம் நம்பும்படி யாகவும் இருக்கும். ஆனால், அது மிகைப்படுத்தப்பட்ட கற் பனையாகவே இருக்கும். இதற்குக் காரணம் எதிராளி யைவிட, அவ ரே கற்பனையை உண்மை என்று நம்புவதன் விளை வுதான்.
இப்படிப்பட்ட மனநிலையில் இருக்கும் ஒரு மருமகள், தன் மாமி யார் எவ்வளவு கொடுமைப்படுத்தினாலும் சிரித்துக்கொண்டே இரு ப்பார் என்று சொல்லப்படுகிறது. அப்பேர்ப் பட்டவர்களின் உணர்வுகள் சூழ்நி லைக்குத் தக்கபடி இருக்காது. எது நடந்தாலும் பேசாமல் இருப்பார் கள். நீண்ட நேரம் ஒரே நிலையில் உட்கார்ந்திருப்பார்கள். உச்சகட்ட நடவடிக்கையின்போது, திடீரென்று மூக்கை நுழைப்பார் கள். அதுதான் பலசமயம் அவருக்கோ எதிராளிக் கோ பெரிய ஆபத்தை உண்டாக்கி விடும். உதாரணத்திற்கு சில மரு மகள்கள் தீக்குளிப் பதைச் சொல் கிறார்கள்.
மேலே சொல்லப்பட்ட நடவடிக்கைகள் அதிக அளவு ஒருவரிடத் தில் இருந்தால் அவரை டெமென்ஷியா ப்ரே காக்ஸ் என்கிற மன நோயால் பாதிக்கப் பட்டவர் என்ற முடிவுக்கு வரலாம் என் கிறார்கள். இது ஒருவகையில் மனச் சிதைவு நோயை ஒட்டியதுதான். என் றாலும் அதற்குண்டான அறிகுறிகளை வைத்து இதுவும் இந் நோய்தான் என் ற முடிவுக்கு வரமுடியாது என்கிறார்கள் மருத்துவர்கள்.
இந்நோயால் பாதிக்கப்பட்டவர்களை எளிதில் குணப்படுத்தி விட முடியும் என் கிறார்கள். மனதளவில் ஆரோக்கிய மாற்றங்கள், உடல ளவில் நல்ல உடற் பயிற்சி, அன்பான சுற்றுச்சூழல் இருந்தாலே இதை எளிதில் நிவர்த்தி செய்யமுடியும் என்கிறார் கள்.
எளிதான வழிகள்:
1. வாக்கிங், ஜிம் : வாக்கிங் கட்டாயம் போக வே ண்டும். குறைந்தது 30 முதல் 40 நிமிடங்கள் தொடர் வாக்கிங் அவசியம். வேகமாக நடக்க வேண்டுமே தவிர, ஓடக்கூடாது. இது முக்கிய ம். நடைப் பயிற்சிதான் உடலையும், மனதையும் ஒருமுகப் படுத்துவதாக அமை யும். ஜிம்முக்குப் போவது ரொம்ப நல்லது.
2. நல்ல மூடுக்கு வர முயற்சித்தல் : சம்பந்தப் பட்டவரை நல்ல சந்தோஷமான மூடில் இருக்கு ம்படி செய்யவேண்டும். குடும்பத்தாரின் கனிவா ன பேச்சு, நண்பர்களின் வாழ்த்துக்கள், உறவி னர்களின் பாராட்டுக்கள் அவர் நல்ல மூடுக்கு வர உதவக்கூடிய உத் திகள்.
3. ஒமேகா_3 : இம்மனநிலையில் இருப்பவர்கள் ஒமேகா _ 3 கொழு ப்புள்ள மீன்களை உணவில் சேர்த்துக்கொண்டால், அதில் உள்ள அமிலம் மூளையில் உள்ள வேதிப்பொருட்களுடன் கல ந்து நல்ல மூட் உருவாக உதவும் என்கிறார்கள். இதற்காக நீங்கள் உங் கள் மருத்துவரை ஒருமுறை கலந்தாலோசிக்க வேண்டும்.
4. மௌனமாக இருக்கவிடக் கூடாது : இத் தகைய மனநிலை பாதிப்பில் இருப்பவர் கள் அடிக்கடி நீண்ட நேரம் மௌனமாக இருப்பார் கள். உடன் இருப்பவர்கள்தான், அவர்களின் மௌனத்தைக் கலைக்க ஏதா வது செய்யவேண்டும். அவருக்குப் பிடித்த கிரிக்கெட் வீரர், பிடித்த நடிகர், நடிகை, அரசியல் தலைவர்கள் பற்றி அவர்களுடன் விவாதிக்கலாம். அவர்களுக்குச் சாதக மாகப் பேசுவது அவசியம்.
5. தனியறையில் தூங்கவிடக் கூடாது : இப்படிப்பட்டவர்களை தனி யறையில் தூங்கவிடக் கூடாது. நம் அருகில் அம்மா வோ, தோழி யோ இருக்கிறார்கள் என்ற நினைப்பே அவர்களை உறக்கத்தில் மற்ற சிந்தனைக்கு அழைத்துச் செல்லாது என்கிறார்கள். தூக்கத்தில் எழுந்து நடந்தால், அவர் எங் கே போகிறார் என்றுதான் பார்ப்போமே என்று அவரைப் பின் தொட ர்வது போன்ற விபரீத விளையாட்டுக்களில் ஒருபோதும் இறங்கி விடாதீர்கள்.
6. யோகா, தியானம்: மனதில்மாற்று எண் ணங்கள் உருவாகாமல் இருக்க முறை யான யோகாவும், தியானமும் இவர்களு க்கு உதவும்.
7. பொழுதுபோக்கு: புதிதாக ஏதாவது பொழுதுபோக்கு அம்சங்களில் ஈடுபடலா ம். சுற்றுலா. வயலின், வீணை வாசிக்கக் கற்றுக் கொள் ளுதல், இப்படி பயனுள்ள பொழுதுபோக்காக இருந்தால் மூளைக் கும் வேலை கொடுத்ததாகும். மனதிற்கு ம் உற்சாகமாக இருக்கும். வேறு சிந்த னைகளை உருவாகவிடாமல் இவை தடுக்கும்.

Saturday, 18 February 2012

ஆரஞ்சு மகிமை

Posted On Feb 18,2012,By Muthukumar
எல்லா சீசனிலும் மக்களை தேடி வரும் பழங்களுள் ஒன்று... ஆரஞ்சு. பல நோய்களை முன்கூட்டியே வராமல் தடுக்கும் மகத்துவமும் இதில் உண்டு.
சில உணவுகளை சாப்பிட்டதும் அவை உடலில் சில மாற்றங்களை ஏற்படுத்தி பித்த நீரை அதிகம் சுரக்கச் செய்கின்றன. இதனால் உடலில் உள்ள செல்களின் செயல்பாடுகள் முடக்கப்படுகின்றன.
இந்த பித்த நீர், ரத்தத்தில் கலந்து ரத்தத்தில் உள்ள இரும்புச் சத்துக்களை அழித்து விடுகிறது. இதனால் ரத்தம் அசுத்த மடைகிறது. மேலும், பித்த நீர், தலைக்கேறி கண் பார்வை நரம்புகளை பாதிப்படையச் செய்கிறது. அதோடு ஞாபக மறதியும் ஏற்படுகிறது. சருமத்தை பாதித்து சுருங்கச் செய்கிறது. தலைமுடி நரைக்கச் செய்கிறது.
இதுபோல் இனிப்பு மற்றும் கொழுப்பு உணவுகளை 300 கலோரி அளவு சாப்பிட்ட பிறகு ஒரு மணி நேரம் கழித்து ரத்தத்தை பரிசோதித்துப் பார்த்தால் பித்த நீர் அதிகம் சுரந்து ரத்தத்தில் கலந்திருப்பதை அண்மையில் கண்டறிந்துள்ளனர்.
இந்த பித்த நீர் அதிகம் சுரப்பதை தடுக்கவும், உடலுக்குத் தேவையான அனைத்து சத்துக்களையும் தரும் பழங்களில் முக்கியமான ஒன்றாகத் திகழ்கிறது ஆரஞ்சு. ஆரஞ்சு பழச்சாறு சாப்பிட்டவர்களின் ரத்தத்தில் பித்த நீரில் அளவு குறைவாக இருப்பது ஆய்வின் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஆரஞ்சு பழச்சாறில் உள்ள வைட்டமின் சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து உடலை புத்துணர்வுடன் இருக்கச் செய்கிறது. இதனால் உடலில் அணுக்கள் நன்கு செயல்பட ஆரம்பிக்கிறது. உடலும் முதுமை அடையாமல் இளமைத் தோற்றத்துடன் காட்சியளிக்கிறது.
ஸோ... ஆரஞ்சை எங்கேப் பார்த்தாலும் `மிஸ்' பண்ணிடாதீங்க...

தாம்பத்ய வாழ்க்கையில் தடுமாறாமல் இருக்க பேசி புரிஞ்சுக்கங்க

Posted On Feb 18,2012,By Muthukumar
தெளிவான நீரோட்டம் போல சென்றுகொண்டிருக்கும் வாழ்க்கைப்பாதையில் சின்ன சின்னதாய் சலசலப்புகள் ஏற்படுவது வாடிக்கை. அவ்வப்போது எழும் புகைச்சல்களை ஊதி பெரிதாக்காமல் ஒருவருக்கொருவர் பரஸ்பரம் பேசினால் பிரச்சினைகள் தீர்ந்துவிடும் என்கின்றனர் உளவியலாளர்கள். தாம்பத்ய வாழ்க்கையிலும் ஏற்படும் தடுமாற்றங்களை சமாளிக்க அவர்கள் தரும் ஆலோசனைகள்
பேசித் தீர்த்துக்கொள்ளுங்கள்
அன்றாட வாழ்வில் அலையலையாய் வரும் குடும்ப பிரச்சனைகளில் கணவன் மனைவியரிடையில் கருத்துவேறுபாடுகள் ஏற்படுவது இயற்கை. இது மனச்சோர்வுகள், மன இறுக்கங்கள் போன்றவை ஏற்படும். இத்தகைய ஆழ்ந்த மனப்பாதிப்புகள் தாம்பத்திய உறவுக்கு பெரும் எதிரி. எனவே அவற்றை நீடிக்க விடாமல் பரஸ்பரம் பேசித் தீர்க்க வேண்டும். ஏனெனில் மனஒற்றுமை ஏற்படாமல் உடல்களால் மட்டும் இணைவது நல்லதல்ல என்கின்றனர் உளவியலாளர்கள்.
அவசரம் ஆகாது
தாம்பத்தியம் ஓர் இனிய சங்கீதம். இசைப்பதும், ரசிப்பதும் மென்மையாய் நிதானமாய் அமைய வேண்டும் அவசரங்களால் தாம்பத்தியம் அரைகுறையாக அலங்கோலமாக ஆகிவிடும். எனவே உறவுக்கு முன் இனிமையான உரையாடலும், உணர்வுப்பறிமாறலும், முன்விளையாடலும் உறவு முழுமைபெற உதவும்.

மருந்து வேண்டாம்
உணவு உண்ட ஒரு மணிநேரத்திற்குள் உடலுறவு செய்வது கூடாது. இதனால் மூட்டு உபாதைகளும், வேறு பல உடல்நலக்கோளாறுகளும் ஏற்படும்.
எந்தச் சந்தர்ப்பத்திலும் பாலியல் சக்தியைப் பாதிக்கக்கூடிய அலோபதி மருந்துகளை உண்ணக்கூடாது.
சத்தான உணவுகள்
தாம்பத்ய வாழ்க்கையின் தொடர் வெற்றிக்கு கணவன், மனைவி இருவரின் உடல்நலமும் மனநலமும் முக்கியம். அன்றாட உணவில் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த - புரதம், கொழுப்பு, வைட்டமின்கள், தாது உப்புக்கள் நிறைந்த உணவுகளையும் சேர்த்துக்கொள்ளவேண்டும். உயிர்ச்சத்துக்களை அதிகம் தரும் சத்தான காய்கறிகள், பழங்கள், கீரைகள் போன்றவற்றையும் உண்ண வேண்டும். தாம்பத்ய உறவிற்கு ஏற்க உணவுப்பொருட்களை அவ்வப்போது சேர்த்துக்கொள்ள வேண்டும்.
புரிந்து கொள்ளுங்கள்
தம்பதியரிடையே தாம்பத்திய தாகம் ஒரே அலைவரிசையில் இருப்பதில்லை.ஆணுக்கு ஆவல் அடிக்கடி ஏற்படும். பெண்ணுக்கு விருப்பமில்லாதபோது தொல்லை தரக்கூடாது என்றெண்ணி அடக்கிக்கொள்கிறான். இது தொடர்கதையானால் மனைவி மீது ஒருவித வெறுப்பு ஏற்படுவது தவிர்க்கமுடியாது. எனவே பெண்கள் ஆண்களின் மனநிலையறிந்து இயன்றளவு தங்களை சரிசெய்துகொள்ளுவது இல்லறத்தை இனிக்கச் செய்யும். அடிக்கடி உறவுக்கு ஆசைப்படும் பெண்களும் உண்டு.ஆண்கள் அவர்களது விருப்பம் அறிந்து உதாசீனப்படுத்தாமல் தங்களை சரி செய்து கொள்ள வேண்டும். பரஸ்பர மனவிருப்பம், தேவை அறிந்து உடல் எழுச்சியை வரவழைத்து தாம்பத்தியம் மேற்கொள்வது தம்பதியரிடம் என்றென்றும் இறுக்கமான பிணைப்பையும், இணைப்பையும் உறுதிப்படுத்தும்.
வரையறை தேவை
எதற்குமே ஒரு எல்லை உண்டு. அது தாம்பத்திற்கு மிகவும் அவசியம்.அடிக்கடி வரைமுறையின்றி உறவு கொள்ள விரும்புவது ஆரோக்கியத்தைச் சீர்குலைக்கும். தாம்பத்திய உறவில் ஏதாவது ஒரு வரையறையைக் காலப்போக்கில் தம்பதியர்கள் தாங்களாகவே நிர்ணயம் செய்துகொள்வது முக்கியம். வயது அதிகமாகும் போது. ... தாம்பத்திய உறவு இயலாமல் போய்விடுமோ என்ற அச்சம் தேவையற்றது. உடலுறுவுக்கு வயது ஒரு தடை அல்ல என்கின்றனர் உளவியலாளர்கள். தாம்பத்தியத்தில் எந்திரத்தனங்களும், எல்லைமீறல்களும் இனிமை தராது என்கின்றனர் அவர்கள்.
விருப்பங்களை வெளிப்படுத்துங்கள்
அன்றாட சமையலில் சுவை அறிந்து கேட்பது மனித இயல்பு. அதுபோல அந்தரங்கமான வாழ்க்கையிலும் விருப்பத்தை உணர்த்த வேண்டும் என்கின்றனர் உளவியலாளர்கள். இப்படிப்பேசினால் அநாகரீகம் அப்படிச் செய்தால் அநாகரீகம் என்று எண்ணத் தேவையில்லை. இருவரது விருப்பங்களில் ஆரோக்கியமான அனைத்துமே, சுகமான அனைத்துமே பாலியல் வாழ்க்கை நெறிப்படி சரியானதுதான்.
4

Thursday, 16 February 2012

மூன்றுவித பாலுறவுகள்..!!


செக்ஸில் மூன்றுவிதமான அனுபவங்கள் வெளிப்படுகின்றன. ஒரே சமயத்தில் மூன்று அனுபவங்களும் ஒன்றுசேரலாம்.. அல்லது தனித் தனியாக நடை பெறலாம். அல்லது ஒன்றன பின் ஒன்றாகத் தொடர் ச்சியாகக் கூட நடைபெறலாம்.
செக்ஸில் முதல் வகை
முதலாவது செக்ஸ் என்பது இனப்பெருக்க ம் செய்வதற்கானது. இது எளிமையானது. எளிதில் புரிந்து கொள்ளக்கூடியது. ரூடிளி; சாதார ணமாக நடப்பது. மனித வாழ்க்கை யில் இன்பபெருக்கம் செய்வதற்கான செக்ஸ் 10 முறை அல்லது அதற்கும் குறை வான எண்ணிக் கையில் நடைபெறுகிறது. இதற்கு வெறும் மூன்று, நான்கு நிமிடங்கள் போதும். அப்பொழுது விந்துவும், முட்டையும் இணைந்து கரு வளர சாதகமான சூழல் இருந்தால் அது வளர்ச்சிய டையும். இது நவீன அறிவிய ல் வளர்ச்சியடைந்த சூழலில் செயற்கை கருவுறுதல் நிகழ் ச்சிக்கு சமமாகும்.ரூடிளி; இமமாதிரியான கருத்த ரிப்பு பாலுறவை எந்த அரசாங்கமு ம் வரவேற்பதில்லை., கார ணம் மக்கள் தொகைப் பெரு க்கம்., இதைப் போல இளம் பெண்களும், காதலில் ஈடுபட்டுள்ள காதலர்களும், விதவையான வர்கள், திருமணமாகாமல் தனியாக வாழ்பவர்கள் என்ற அனை வரும் விரும்பாத செக்ஸ் முறையாகும் இது.,
செக்ஸில் இரண்டாவது வகை
செக்ஸ் என்பது காதலை வெளி ப்படுத்தும் ஒரு வழி., காதலர்க ளுக்கு இடையே கொஞ்சல் வார் த்தைகளும் ஊடல்களும் இருந் தாலும் இரு உடல் ஒரு உயிராய் சுடர்விட்டு இணையும்பொழுது காதலின் உன்னதமானவை. செக் ஸ்க்குத் திருமணம் அவசியம் என்பது சமூகக் கண்ணோட்டத் தில் பார்க்கப்படும் விஷயமா கும். ரூடிளி ; மற்றப்படிஇ திருமணம் செய்தால்தான் செக்ஸ் என்பது தவறான கண்ணோட்டமாகும். ஆனால், இன்றைய இளம் காதலர்க ளுக்கிடையே, காதலைவிட காமம் முன் நிற்பதால் காதல் பாலு றவாகி நமது சமூகத்தில் வீண் சங்கடங்களை ஏற்படுத்துகிறது.,
செக்ஸில் மூன்றாவது வகை

இந்த வகைப் பாலுறவை உலகம் முழுவ தும் ஏற்றுக் கொள்ளவில்லை. மேலை நாடுகளில் இது மதப்பிரச்சாரமாக மாற் றப்பட்டது. பெற்றோர்களும் இந்த வகை உறவை எதிர்த்தார்கள். எல்லோர் மனதி ற்குள்ளும் செக்ஸ் கொள்ள வேட்கை இருந்து வருகிறது. குறிப்பாக 25 வயதுக் குட்பட்ட பையன்கள் அனைவரும் விளையாட்டாக உடல் சுகத்திற்காகவும் உணர்ச்சிப் பெருக்கத்திற்காகவும் பொழு து போக்காக செக்ஸ் நடவடிக்கையில் ஈடுபடுகிறார்கள். இது கள்ள உறவாக வயது வித்தியாசத்துடன் நடைபெறுகிற து. மேலும் உறவுமுறைகளை மீறியும் பாலுணர்வு வேட்கை. மனிதர் களை வேட்டையாடிக்பொண்டிருக்கிறது. நாய், பூனை என்ற எல்லா விலங்குகளும் விரும்பும்பொழுது இன்பம் துய்த்துக்கொள்கின்றன. அதுபோல நாமும் செய்தால் என்ன என்ற எண்ணம் ஏற்படு கிறது செக்ஸ் என்பது சந்தோ ஷமான விஷயமாகும். ஆனா ல், அது வரம்பு மீறும்பொழுது பிரச்சினையும் ஏற்படுகிறது.
செக்ஸில் முழுமையான இன் பம் பெறுவது எப்படி?
செக்ஸில் 100க்கு 100 இன்பம் பெறுவது எளிது. அதற்கு செக்ஸில் குறைந்தப்பட்ச தெளிவு இருக்க வேண்டும். இன்றைய நவீன உலகி ல், இரண்டு சக்கர வாகனங் கள், கார், ஓட்டுவதற்குப் பயிற்சி அளிக் கப்படுகிறது. ஆனால் எல்லோரிடத்திலும் இருக் கும் பாலுறுப்புகளை எப்ப டிப் பயன்படுத்துவது என்பது குறித்து கற்றுத் தருவதில் லை. எல்லாம் மறைமுக மாக, ஒரு வித பரவசத்து டன் செக்ஸ் பார்க்கப்பட்டு வருகிறது. இது தவறு, இனப் பெருக்கத்தைப் பற்றி பள்ளியில் கல்லூரியில் பாடம் படிக்கும் நாம் செக்ஸ் கல்வி பற்றிப் படிக்க பேசத் தயக்கம் காட்டுகிறோம். செக்ஸ் கல்வி என்பது ஆரோக்கியமான செக்ஸ் செயல்பாடுகளுக் கு வீணான கற்பனைகளை, கட்டு க் கதைகளைத் தவிர்க்க உதவும். மேலும் செக்ஸ் தொடர்பான பிரச் சினைகளை ஆண், பெண் புரிந்து கொண்டு செயல்படமுடியும். இன் று பெரும்பாலான விவாகரத்துக ளுக்குப் செக்ஸ் இன்பம் முக்கி காரணமாக இருக்கிறது. ஆண். பெண்ணையும். பெண். ஆணையும் குற்றம் சாட்டி வருகிறார்கள், இதைத் தவிர்க்க செக்ஸ் கல்வி கற்று த்தரப்பட வேண்டும்.,
செக்ஸ் பற்றி வேறு எந்த சமூக அமைப்பிலாவது கற்றுத் தருகி றார் களா?
மலைஜாதி மக்களிடம் செக்ஸ் பற்றிய சிந்தனை உள்ளது., வயது க்கு வந்த ஆண் பையன்களை, அனுபவம் பெற்ற பெண்கள் அழைத்துச் சென்று எப்படி செக் ஸில் ஈடுபட வேண்டும் என்ப தைக் கற்றுத் தருகி றார்கள். அதுபோல சற்று வயதான ஆண்கள், இளம் பெண்களுக்கு செக்ஸ் பற்றிப் பயி ற்சி தருகிறார்கள்; அப்படிப் பட்ட நபர்கள் அந்த சமூகத்தில் மரியா தைக்குரியவர்களாக உள்ளார் கள்.
செக்ஸில் அதிகபட்ச இன்பம் பெற ஒருவர் என்ன செய்ய வேண்டும்?.
செக்ஸில் ஈடுபடுவதற்கு முன்னர் ஆணும். பெண்ணும் எந்த மாதிரியான செக்ஸ் தே வை என்பதை முடிவு செய் வது அவசியம்.. இனப்பெருக் கம் செய்வ தற்காகவா அல்லது அன்பை வெளிப்படுத்தவா அல்லது பொழுது போக்குக்காகவா என்பதில் தொளிவாக இருக்க வேண் டும். உங்களின் தேவையை முடிவு செய்துவிட்டீர்கள் என்றால் இன்பம் கிடைக்கும். செக்ஸில் ஈடுபடும் இருவரும் தெளிவான எண்ணத்துடன் இதில் ஈடுபட்டால் இன்பம் இரட்டிப்பாகும்.

Depression – தெரிந்து கொள்ள வேண்டியது

Depression குறித்து நாம் நிறை ய தெரிந்துகொள்ள வேண்டியு ள்ளது.
குழந்தைகளுக்கு கவலை எப்படி ஏற்படுகிறது?
குறிப்பாக இரண்டு சூழல்களில் தான் குழந்தைகள் கவலைக்கு ஆளாகிறார்கள்:
ஒன்று: தன் முயற்சியில் தோல்வி அடைந்திடும் போது.
ஒரு காரியத்தில் இறங்குகிறான் ஒரு சிறுவன். அதில் தோல்வி அடைகின்றான். அல்லது ஒன்றை அடைந்திட முயற்சி செய்கின் றான். அது அவனுக்கு கிட் டிடவில்லை. அடுத்து என் ன செய்தால் தான் நினைத் தது கைகூடும் என்று அவ னுக்குத் தெரியவில்லை. தான் எதற்கும் இலாயக்கி ல்லை என்று எண்ணத் தொடங்குகிறான். அப்போ து தான் அவனை கவலை தொற்றிக் கொள்கிறது!
இரண்டு: மற்றவர்களோடு பழகுவது எப்படி என்பது புரியாத போது.
கவலைக்கு இன்னொரு காரணம் அவன் மற்றவர்களோடு பழகும் போது ஏற்படுகின்றது. ஏதோ ஒரு தேவைக்காக மற்ற ஒருவனை அணுகுகின்றான். அதை அவன் மறு த்து விடுகின்றான். இவன் அவனை விட்டு விலகிவிடுகின் றான். தொ டர்பை முறித்துக்கொ ள்கின்றான். மறு படி அவன் வந்து “சமாதானம்” பேசினாலும் அதனை இவன் ஏற் பதில்லை. அவன் எதிரே வந்தாலும் தலையைத் திருப்பிக் கொண்டு விலகிச் சென்று விடுகின் றான். இப்படியாக அவன் தன்னைத் தனி மைப் படுத்திக் கொள்கின்றான்.
விளைவு: கவலை!!!
இப்படிப்பட்ட இரண்டு சூழ்நிலைகளில் இருந்தும் இத்தகைய சிறு வர்களைக் காப்பாற்றிட வேண்டியது யார் பொறு ப்பு?
பள்ளிக்கூட ஆசிரியர்களுக்கு இதில் நீங்காப் பொறுப்பு இருக்கிறது என்கி றார்கள் வல்லுனர்கள்.
சோக வயப்பட்ட குழந்தைகள் – படிப்பில் கவனம் செலுத்திட இய லாது! இப்படிப்பட்ட குழந்தைகள் பள்ளியிலிருந்து இடையிலேயே நின்று விடும் நிலையும் (drop out) ஏற்பட்டு விடுகிறது.
எனவே–ஆசிரியர்கள் அன்றாடம் நடத்துகின்ற பாடங்களோடு சேர் த்து–தோல்வியைச் சந்திப்பது எப்படி என்றும், அடுத்தவர் உணர் வுகளைப் புரிந்து கொண்டு நடப்ப து எப்படி என்றும் குழந்தைகளு க்குச் சொல்லிக் கொடுத்திட வே ண்டும். (மேலை நாடுகளில் சில பள்ளிகளில் இவ்வாறு சொல்லிக் கொடுக்கத் தொடங்கி விட்ட னர்).
அடுத்து பெற்றோர்கள்.
பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் விஷயத்தில் அலட்சியம் காட் டினால்? தந்தை எப்போதும் வேலை வேலை என்று தனது தொழி லில் பிஸியாக இருந்து விட்டா ல்? தாய்க்கு தன் பிள்ளைகளை ப் புரிந்து கொள்ளத் தெரியவில் லை என்றால்? கணவனும் ம னைவியும் பிரிந்து வாழ்ந்தால்? கணவனும் மனைவியும் அடி க்கடி சண் டையிட்டுக்கொண்டி ருந்தால்……..? என்னவாகும் குழந்தை கள்?
குழந்தைகளின் கவலைகளை நீக்கிடப் போதுமான விழிப்புணர்வு இன்னும் ஏற்படாத காரணத் தினால் தான் உலக அளவில், சோகத் துக்கு ஆளாகின்ற குழந்தை களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கின்றதாம். இத ற்கு வழி ஒன்றை நாம் கண்டே ஆக வேண்டு ம் தானே!
குழந்தைகளின் கவலைகளைப் போக்கிட இஸ்லாம் என்ன தீர்வு தருகின்றது?
ஒன்று:
மகிழ்ச்சிகரமான குடும்ப வாழ்வை இறை வன் கற்றுத் தருகின்றா ன். குழந்தைகள் மகிழ்ச்சியாக இருந்திட வேண்டும் எனில் பெற்ற வர்கள் முதலில் மகிழ்ச்சியாக இருந்திட வேண்டும்.
இரண்டு:
போதும் என்ற மனப்பான்மையுடன் வாழ்ந்திடக் கற்றுத் தருகின்றான் இறைவன். பொருள்களை வாங்கி வாங்கிக் குவிப்பதில் மகிழ்ச்சி இல் லை என்பதை பெற்றோர்கள் புரிந்து கொள்ள வேண் டும். குழந்தைகளுக்குப் புரிய வைத்திட வேண்டும்.
மூன்று:
மற்றவர்களுடன் மகிழ்ச்சியோடு பழகு வது எப்படி என்று கற்றுத் தருகின்றான் இறைவன். சிரித்த முகத்தோடு அணுகுவது, கை குலுக்குவது, சலா ம் சொல்வது, அன்பளிப்புகளைப் பகிர்ந்து கொள்வது, மற்றவர்க ளுக்கு முன்னுரிமை தருவது, விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை, மன்னிக்கும் மனப்பான்மை, வீ ணான சந்தேகங்களைத் தவிர்த் தல், கோள் சொல்லாமை, மற்ற வர்க்கு உதவி செய்தல் மற் றும் வாழ்த்துக்கள் – இப்படி அடுக் கிக் கொண்டே போக லாம்.
மற்றவர்களோடு பழகுவது எப்படி என்பதை குழந்தைகளுக்கு பெற் றோர் கற்றுத் தந்திட வேண்டும். பெற்றோர்களின் முன்மாதிரியை அப்படியே பின்பற்றுவார்கள் என்பதால், பெற்றோர்கள் மற்றவர்க ளுடன் இனிமையாகப் பழகுவதை வழக்கமாக ஆக்கிக் கொள்ள வேண்டும். அடுத்தவர் உணர்வுகளைப் புரிந்து கொள்ளவும் அதற்கு த்தக்க நடந்து கொள்வது எப்படி என்பதையும் பெற் றோர்கள் குழ ந்தைகளுக்குப் புரிய வைத்திட வேண்டும்.
குழந்தைகள் கவலை தோய் ந்தவர்களாக ஆவதிலிருந்து காப்பதே சாலச் சிறந்தது. ஏனெனில் ஒரு முறை அவர் கள் சோக வயப்பட்டு விட் டால், காலம் முழுவதும் அது தொடருமாம்!
குழந்தைகளை மகிழ்ச்சியுடன் வைத்திருத்தல் சமூகக் கடமை. ஏனெனில் அவர்களே எதிர்கால சமூகத்தின் மகிழ்ச்சிக்கு காரணமா க இருக்கப் போகிறவர்கள் என்பதை நாம் மறந்து விடக் கூடாது!