Lord Siva

Lord Siva

Tuesday, 30 August 2011

சர்க்கரை வள்ளிகிழங்கு

சர்க்கரை வள்ளிகிழங்கு

சர்க்கரை வள்ளிகிழங்கு அதிக சத்து நிறைந்த காய்கறிகளில் இதுவும் ஒன்று. இதிலு ள்ள ஒரு என்ஸைம் இ தன் மாவுச்சத்தை, கிழங் கு முற்றியதும் சர்க்கரை யாக மாற்றி விடுகிறது.
சமைக்கும் போது இதன் இனிப்பு இன்னும் அதிக மாகிறது. கிழங்கு வகை யாக இருந்தாலும் இதற் கும் உருளைக் கிழங்கு க்கும் சம்ப ந்தமில்லை.
இது ஒரு அமெரிக்கச் செடி. முதலில் மத்திய, தென் அமெரிக் காவிலும், மெக்சிகோவிலும் பயிரிடப்பட்டது. மெக்சிகோ பக் கத்தில் உள்ள தீவுகளில் சர்க்கரை வள்ளிக்கிழங்கை ஆக்ஸி என்று அழைத்தனர்.
கொலம்பஸ் தன் முதல் கடல் பயணத்தை முடித்து ஸ்பெயி னுக்கு திரும்பி வரும் போது நிறைய பொருள்களை எடுத்து வந்தார். அதில் சர்க்கரை வள்ளியும் ஒன்று. பதினாறாம் நூற் றாண்டில் போர்ச்சுகீசியர்கள் இதை இந்தியாவில் அறிமு கப்படுத்தினர்.
வகைகள்: முக்கியமான இரண்டு வகைகள் உள்ளன.
1. நீளமாக இளம் மஞ்சள் தோலுடன் அல்லது சிவப்புத் தோ லுடன் உள்ளே வெள்ளையாக ஒரு வகை. இதன் உள் சதை காய்ந்தாற் போல இருந்தாலும் நீர் அளவு இவற்றில் மிக அதிகம்.
2. வெளியில் சிவப்புத் தோலுடன் உள்ளே ஆரஞ்சு வண்ண சதையுடன் கூடியது. இது கொஞ்சம் மிருதுவாக ஈர ப்பத த்துடன் காணப்பட் டாலும் நீர் அளவு குறை வு. உள்ளே பார்ப் பதற்கு ஆரஞ்சு நிறத்தில் இருப்ப தால் அமெரிக்காவில் இ தைத் தவறாக (சேனைக் கிழங்கு) என்கின்றனர். உண்மையில் சேனை க்கும் இதற்கும் தொடர்பி ல்லை. இந்த வகை இந்தியாவில் அரிது. அமெரிக்கர்கள் விரும்புவது இந்த ஆரஞ்சு சதை கொண்டதைத்தான். ஏனெ னில் விட்டமின் ‘ஏ’ இதில் அதிகம்.
இதைத் தவிர ஊதாக்கலர் சதையுடனும் கிடைக்கிறது. நவம் பர் மாதம் அமெரிக்காவில் நடைபெறும் நன்றி அறிவித்தல் (தேங்க்ஸ் கிவ்விங்க்) பண்டிகையின் போது இந்த வகை சர்க்கரை வள்ளிக்கிழங்கின் சீஸனாகும். நம்மூர்களில் பொ ங்கல் (ஜனவரி) மாதம் சீஸன்.
தேர்ந்தெடுப்பது:கையில் எடுத்தால் கனமாகக் கெட்டியாக இருக்க வேண்டும். தோல் புள்ளி எதுவும் இல்லாமல் சுத்த மாக இருக்க வேண்டும். நுனியில் சுருங்கி இருந்தால் பழசு. அழுகத் தொடங்கிய பகுதியை வெட்டி எறிந்தால் கூட அதன் வாசனை மற்ற இடங்களுக்குப் பரவி இருக்கும். வெளித் தோல் கொஞ்சம் கறுத்திருந்தாலும் கெட்டுப் போய் இதனடி யில் உள்ள சதையும் கறுப்பாக மாறியிருக்கும்.
வாங்கியதும் மண் படிந்திருந்தால் தோலை அலம்பக் கூடா து. ஈரம், கிழங்கை சீக்கிரம் கெடுத்துவிடும். உபயோகிக்கும் முன் சுத்தம் செய்தால் போதும்.
பாதுகாத்தல்:சீக்கிரம் பயன்படுத்தி விடவேண்டிய காய்கறி இது. ஃப்ரிஜ்ஜில் வைத்தால் காய்ந்து போய் ருசியும் குறை ந்து விடும்.
உணவுச்சத்து:அதிகமான உணவுச்சத்து நிறைந்தது. சமை ப்பது சுலபம். ஒருவித இனிப்புடன் ருசி பிரமாதமாக இருக் கும். பச்சையாகவும் சாப்பிடலாம். வேக வைத்து, சுட்டு, வதக்கி, பொரித்து என்று பல வகைகளில் சமைத்து சாப்பிட லாம். சர்க்கரை வள்ளிக்கிழங்கின் தோலும் சாப்பிட க் கூடி யது. இதில் நிறைய நார்ச்சத்து உள்ளதால் உரிக்காமல் சாப்பிடுவது நல்லது.
ஒரு மீடியம் சைஸ் சர்க்கரை வள்ளிக்கிழங்கில் இருக்கும் உணவுச்சத்து: கலோரி 130, கொழுப்புச்சத்து 0.39 கிராம், புரோட்டின் 2.15 கிராம், கார்போ ஹைட்ரேட் 31.56 கிராம், நார்ச்சத்து 3.9 கிராம், சோடியம் 16.9 மில்லிகிராம், பொட் டாசியம் 265.2 மில்லி கிராம், கால்சியம் 28.6 மில்லி கிராம், விட்டமின் சி 29.51 மில்லி கிராம், விட்டமின் ஏ-26081 IU.
சமையல் வகைகள்:சாலட், ஜூஸ், சூப்: சர்க்கரை வள்ளிக் கிழங்கைப் பச்சையாகவே துருவி சாலட்டில் சேர்த்தால் ருசியோடு விட்டமின் ‘ஏ’ சத்தும் நேரடியாக கிடைக்கும். ஜூஸாக அரைத்து பச்சையாக சூப்பில் சேர்க்கலாம். ஆரஞ்சு வண்ணக் கிழங்கைத் துருவி சேர்த்தால் சாலட், சூப் சமையல் வகைக்கு வண்ணம் சேர்ப்பதோடு காரட் போல காட்சியளிக்கும்.

No comments:

Post a Comment