பிள்ளையார் சுழி
Posted on August 27, 2011 by muthukumar
“உ”
எனும் உகரம் பிள்ளையார் சுழியாய் எழுதப்படுகிறது. நாழியின் குறியீடாகவும்
உள்ளது. இந்தப் பிள்ளையார் சுழி குறித்து பல்வேறு கருத்துக்கள்
வழங்குகின்றன. முன்னோர் கள் “உ” என்று முதலில் எழுதி அடுத்து சிவமயம் என்று எழுதுவார்கள்.
தற்போது இந்த வழக்கம் மறைந்து விட்டது. ஆனால் இன்றும் நாட்டுக்கோட்டைச்
செட்டியார் சாதியினர் உ. சிவமயம் என்று எழுதுவதை வழக்கமாகக் கொண்டு ள்ளனர்.
வேறு சிலர் “உ” என்று பிள்ளையார் சுழியை மட் டும் போட்டு எழுதத் தொடங்கும்
வழக்கத்தைக் கொண்டுள் ளனர். இந்த “உ” குறியீட்டை சிலர் நாளை (தேதி) க்
குறிக் கவும் பயன்படுத்துகின்றனர். இரண்டு என்கிற எண்ணுக்கும் இதே எழுத்து,
குறியீடாகவும் அமைந்துள்ளது.
No comments:
Post a Comment