உங்கள் பச்சிளங் குழந்தையை குளிப்பாட்டுவதற்கான வழிமுறைகள்
August 25,By muthu kumarமுறையான குளியல்
உங்கள் குழந்தையை குளிப்பாட்டுவதற்கு அதன் தொப்புள் கொடி காய்ந்து உதிர வேண்டும் என்றோ அல்லது அந்த இடம் முற்றிலும் ஆற வேண்டும் என்றோ காத்திருக்க வேண்டியதில்லை. உங்கள் குழந்தையை குளிர் தாக்காமல் குளிப்பாட்டவும்.தண்ணீர் இளம் சூட்டுடன் இருக்கும் படி பார்த்துக் கொள்ள வேண்டும். குளியல் அறையும் இதமான வெப்பநிலையில் இருக்க வேண்டும்.
குழந்தை உருவத்தில் மிகச் சிறியதாக இருக்கும். எனவே குழந்தைக்கான சிறிய டப்பில் வைத்து குளிப்பாட்டலாம். சில குழந்தைகள் வெதுவெதுப்பான நீரை மிகவும் விரும்புவார்கள். சில குழந்தைகள் குளிப்பாட்டி முடியும் வரை அழுது கொண்டேயிருப்பார்கள். பச்சிளங்குழந்தைகளை தினமும் குளிப்பாட்ட தேவையில்லை. வாரம் ஒரு முறையோ இரு முறையோ குளிப்பாட்டினால் போதும். குழந்தையின் முகம், கை, கால் மற்றும் பிறப்புறுப்புகளை தினமும் துடைத்து விட்டால் போதும்.
குழந்தையின் தோலுக்கு ஆபத்து ஏற்படுத்தாத, குழந்தைகளுக்கென்று தயாரிக்கப்படும் மென்மையான சோப்புகளை பயன்படுத்தவும். இது கூட முதல் சில வாரங்களுக்கு சிறிதளவு பயன்படுத்தினால் போதும்.
ஆனால் குழந்தையை சுத்தமாக வைத்திருக்க வெறும் தண்ணீரில் மட்டும் அவர்களை குளிப்பாட்டினால் போதாது
பாதுகாப்பாக குளிப்பாட்டும் முறை
• குழந்தையை ஒரு நொடி கூட தனியாக விடக்கூடாது. யாராவது தொலைபேசியில் (போனில்) கூப்பிட்டாலோ, கதவை தட்டினாலோ அவர்களுக்கு பதில் சொல்லப் போகும் போது குழந்தையை ஒரு டவலில் சுற்றி உங்களுடன் எடுத்துச் செல்லுங்கள். ஒரு சிறு குழந்தை ஒரு அங்குலம் தண்ணீரில் மூழ்கினாலே ஒரு நிமிடத்திற்குள் மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிருக்கு ஆபத்து ஏற்படும்.
• குழாயில் தண்ணீர் வந்துகொண்டிருக்கும் போது குழந்தையை குளிப்பாட்டக் கூடாது (தண்ணீரின் வெப்பநிலை மாறும் அல்லது தேங்கும் தண்ணீரின் உயரம் அதிகரித்து விடும்).
• தண்ணீரின் வெப்பநிலை 49 டிகிரி செல்சியஸ§க்கு (சென்டிகிரேட்) மேல் போகக் கூடாது. 60 டிகிரி செல்சியஸ் (சென்டிகிரேட்) வெப்பநிலையில் குழந்தையின் உடல் வெந்துவிடும்.
குழந்தையை குள்ளிப்பாட்டும் விதம்
1. முதலில் உங்கள் கைகளை கழுவிக் கொள்ளுங்கள். குளிப்பாட்டுவதற்கு வேண்டிய எல்லா பொருட்களையும் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். மேலும் ஒரு சுத்தமான டவல், ஒரு சுத்தமான நாப்கின் மற்றும் உடைகள் ஆகியவற்றை எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.
2. 12 செ.மீ. உயரத்திற்கு தண்ணீரை நிரப்பிக் கொள்ளுங்கள். அதாவது உங்கள் குழந்தையின் தோள்கள் வரை தண்ணீர் இருக்கும் படி பார்த்துக் கொள்ளுங்கள். தண்ணீர் இளம் சூட்டுடன் வெதுவெதுப்பாக இருக்க வேண்டும். சூடாக இருக்கக் கூடாது. 38 டிகிரி செல்சியஸ் இருப்பது குழந்தையில் உடல் சூட்டிற்கு இணையானது, ஏற்றது.
3. குழந்தையின் ஆடைகளை முற்றிலுமாக களைந்து (கழற்றி) விடுங்கள்.
4. முதலில் குழந்தையின் கால்களை தண்ணீரில் வையுங்கள். ஒரு கையால் குழந்தையின் பிடரி மற்றும் தலையை தாங்கிப் பிடித்துக் கொள்ளுங்கள். குழந்தையின் மீது தொடர்ந்து கொஞ்சம் கொஞ்சமாக வெதுவெதுப்பான தண்ணீரை ஊற்றிக் கொண்டே இருக்க வேண்டும். இல்லையெனில் குழந்தைக்கு குளிரும்.
5. குழந்தையின் மீது மலம் போன்றவை படிந்து இருந்தால் சோப் பயன்படுத்தி சுத்தம் செய்யவும். வெறும் தண்ணீரால் சுத்தம் செய்வது போதாது.
6. உங்கள் கைகளினாலும், ஸ்பாஞ் போன்றவற்றை பயன்படுத்தியும் குழந்தையை உச்சி முதல் பாதம் வரை மேலும் கீழுமாக மற்றும் முன்னும் பின்னுமாக நன்கு குளிப்பாட்டவும். வெதுவெதுப்பான நீரில் நனைக்கப்பட்ட சோப் நுரை கொண்ட மென்மையான பருத்தி துணியைக் கொண்டு தலையை துடைக்கவும். நனைந்த பஞ்சைக் கொண்டு குழந்தையின் கண்களையும் முதகத்தையும் துடைக்கவும். குழந்தையின் மூக்கிலோ அல்லது கண்களின் ஓரத்திலோ ஊளை கட்டியிருந்தால் அதை மென்மையாக நீக்கவும். குழந்தையின் பிறப்புறுப்புகளை பொறுத்த வரை சாதாரணமாக குளிப்பாட்டுவது போதுமானது.
7. சோப்பு நுறை முற்றிலும் போகும்படி நன்கு தண்ணீர் ஊற்றி குளிப்பாட்டிய பிறகு ஒரு கையால் குழந்தையின் பிடரி மற்றும் தலையை தாங்கி பிடித்தபடியும் மற்றொரு கையால் குழந்தையின் புட்டத்தையும் தாங்கி பிடித்தவாறு குழந்தையை தூக்குங்கள். பதற்றபடாமல், நன்கு பிடித்தபடி தூக்க வேண்டும். ஏனெனில் குழந்தைகள் ஈரமாக இருக்கும் போது கையிலிருந்து வழுக்கக் கூடும், கவனமாக இருங்கள்.
8. குழந்தையை ஒரு துவலை சுற்றி ஈரத்தை துடைக்கவும். பின்னர் நாப்கின்னை மாட்டி விடவும். குழந்தையின் தோல் எண்ணைப் பசை இல்லாது வறண்டு இருந்தால் மென்மையான லோஷன் அல்லது கீரீமை குளிப்பாட்டிய பிறகு தடவி விடவும். கடைசியாக. நன்கு காய்ந்த சுத்தமான போர்வையால் குழந்தையை போர்த்தி அதன் மென்மையான, வாசம் மிகுந்த தலையில் முத்தமிடுங்கள்.
No comments:
Post a Comment