Posted on August 8, 2014 by vidhai2virutcham
உடலுறவுக்கு தயார்! என்பதை துணைக்கு உணர்த்தும் சமிஞ்சை (சிக்னல்) முத்தங்கள் – விரிவான அலசல்
தம்பதிகள் ஒருவருக்கொருவர் தரும் முத்தங்கள் நேரத்திற்கேற்ப, சந்தர்ப்ப சூழ்நிலைகளுக்கு ஏற்ப அமையலாம். அந்தந்த சந்தர்ப்பச் சூழ்நிலைகளில் தரப்படுவதின் அடிப் படையிலேயே முத்தங்களின் பெயர் களும் அமைகின்றன. பொதுவாக,
முத்தங்களும், தழுவல்களும் ஒரு ஆணும், பெண் ணும் கலந்து இன்பம் அனுபவிக்கும் பொருட்டுப் பய ன்படுத்தப்படும் காதல் சமிக்ஞைகள் என்கிறது காம சூத்திரம். இவற்றை 5 வகைகளாகவும் அது பிரித்து க்கூறுகிறது. அவை …
இங்கு கூறப்படுபவை கணவன் – மனைவி இருவரு க்கு மட்டுமே பொருந்தும்.
1) உத்திபாக சும்பன் (காம இச்சையைத் தூண்டும் முத்தம்)
2) கலிதக சும்பன் (கவனத்தைத் திருப்பும் முத்தம்)
3) பிரீதிபோதகா சும்பன் (ஆசையை உணர்த்தும் முத்தம்)
4) சாயா சும்பன் (நிழலை முத்தமிடுதல்)
5) சங்கிரந்த் சும்பன் (மாற்றப்பட்ட முத்தம்)
மேற்காணும் ஐவகையான சமிஞ்சை முத்தங்கள் ஒவ்வொன்றாக சுருக்கமாக பார்ப்போம்
உத்திபாக சும்பன் (காம இச்சையைத் தூண்டும் முத்தம்)
காதலன் அயர்ந்துபடுத்துத் தூங்கிக்கொண்டிருக்க, காதலி மோகம் பொங்க ஏக்கப்பெருமூச்செறிந்து அவனது முகத்தையே நெடுநேரம் பார்த்துக் கொண் டிருந்துவிட்டு கடைசியில் அவனது கன்னத்தில் மெ ல்ல முத்தமிட்டு அவனது காம இச்சையைத் தூண் டுவது இந்த முறையாகும்.
கலிதக சும்பன் (கவனத் தைத் திருப்பும் முத்தம்)
காதலன் காதலியைப் பார்க்காமல்வே று ஏதவாது வேலைகளில் ஈடுபட்டிருக் க, காதலி அவனது கவனத்தைத் தன் பக்கம் திருப்பும் விதத்தில் அவனுக்கு முத்தம் அளிப்பது இந்த வகை.
பிரீதிபோதகா சும்பன் (ஆசையை உணர்த்தும் முத்தம்)
காதலி தூங்கிக் கொண்டிருக் கிறாள். பணி முடித்து வெகு நே ரம் சென்று வீடு திரும்பிய காத லன், தனது ஆசையை அவளுக் கு உணர்த்தும் விதத்தில் அவள து கன்னத்தில் மெதுவாக முத்தம் பதிப்பது இந்த வகை.
சாயா சும்பன் (நிழலை முத்தமிடுதல்)
காதலன் தன் காதலை வெளிப்படுத்த, முக க் கண்ணாடி அல்லது நீர் நிலையில் தெரி யும்காதலின் முகத்தில் முத்தமிடுவது இந்த வகை
சங்கிரந்த் சும்பன் (மாற்றப்பட்ட முத்தம்)
காதலி, தனது காதலனிடம் காதலை வெளிப்படு த்த அருகில் இருக்கும் குழந்தை, ஓவியம், அல் லது சிலைகளுக்கு முத்தமிடுவது இந்த வகை
இதுவிதை2விருட்சம் இணையத்தின் பதிவல்ல
No comments:
Post a Comment