Posted on March 29, 2015 by MUthukumar
பெண்களுக்கு ஒவ்வொரு காலக்கட்டதில் ஒவ்வொரு விதமான வலிகளை தங்களது பிறப்புறுக்களில் உணர்கிறார்கள். அந்த வகையில்
பிரசவத்திற்கு பின் பெண்களின் உடல் முழுவதும் வலியுடன் இருக்கும். இத்தகையவலிகள் குறைய குறைந்தது 2 முதல் 3 வாரத்திற்கு மேல் இருக்கும். அதிலும் பிரசவத்திற்கு பின், பிறப்புறுப்பில் ஏற்படும் வலிக்கு அளவே இருக்காது. இந்த வலியானது குழந்தை பிறப்புடன் தொடர்புடையது. இந்த பிறப்புறுப்பு வலி ஏற்படுவதற்கான காரண ங்கள் என்னவென்று பார் க்கலாம்..
சுகப்பிரசவத்தின்போது, குழந்தையை வெளியே தள்ளுவதற்கு அதிகப்படியான அழுத்தத்தை பெண் கள் தரவேண்டியிருக்கும். ஆகவே அதிகப்படியான அழுத்தத்தை பெண்கள் தருவதால், பிறப்புறுப்பில் வீக்கம் மற்றும் வலியானது சில வாரங்களுக்கு இருக்கும்.
சிலநேரங்களில் சுகப்பிரசவத்தின்போது குழந்தை யை வெளியேற்ற பெண்கள் கொடுக்கும் அழுத்தத்தினால், குழந்தையின் தலை வெளியே வரும்போது, பிறப்புறுப்பின் தசையை கிழித்துக்கொண் டு வெளிவரும்.
இதனால் பிறப்புறுப்பில் காயம் ஏற்பட்டு, அதிகப்படி யான வலியை ஏற்படுத்தும். அதிலும் சிறுநீரை வெளி யேற்றும்போது தான் அதிகப்படியான வலியை உணர நேரிடும். கர்ப்பிணிகள் சிலரால் போதிய அழுத்தத்தைக் கொடுக்க முடியாததால், குழந்தையின் தலை வெளி வராமல் சிக்கிக் கொ ள்ளும்.
அப்போது மருத்துவர்கள், பெண்ணின் பிறப்புறுப்பை லேசாக வெட்டிவிட்டு குழந்தையைவெளியே எடுப்பார்கள். இதனால் தசை வெட்டுப்படு வதால், காயமானது அதிகமாகி வலியை உண்டாக்கும். அதிலும் இந்நிலைமை முதல் பிரசவத்தின் போதுதான் நிகழும் .
இத்தகைய நிலை உள்ள பெண்களுக்கு, காயமானது காய்வ தற்கு 1 மாதத்திற்கு மேல் ஆகும். இவையே பிறப்புறுப்பில் வலி ஏற்படுவ தற்கான காரணங்கள். சிசேரியன் பிரசவத்தை மேற் கொண்டவர்களுக்கு, பிறப்புறுப்பில் வலி ஏற்படுவத ற்கு பதிலாக, அடி வயிற்றில் வலி ஏற்படும்.
No comments:
Post a Comment