Lord Siva

Lord Siva

Saturday, 30 June 2012

குடலிறக்க பாதிப்புக்கு ஆளாவது, ஆண்களைவிட பெண்கள் தான் அதிகம்

ஆண்களைவிட பெண்கள் தான் குடலிறக்க பிரச்சனை பாதிப்புக்கு அதிகம் ஆளாகுகிறார்கள்.
பெண்கள் தாய்மை அடையு ம் காலங்களிலும், அளவுக் கு அதிகமாக எடை கூடும் காலங்களிலும் இந்த பாதிப் பு ஏற்பட அதிகம் வாய்ப்பு இருக்கிறது.
பொதுவாக ஒருவரது வயிற் றுப் பகுதியின் அடிப்புறச் சுவர், சில பகுதிகளில் நலிந் து, வலுவிழந்து காணப்படும்.
அவ்வாறு வலுவிழந்து காணப்படும் பகுதி வழியே சிறுகுடல் பிதுக் கிக் கொண்டு அல்லது துருத்திக் கொண்டு இறங்கி விடும். இதுவே ஹெர்னியா அல்லது குடலிறக்கம் என்று அழைக்கப்படு கிறது.
பெண்களுக்கு வயிற்றுப் பகுதியில் அறுவைச் சிகிச்சை செய்யப்படும் போது குடலிறக்கம் ஏற்பட அதிக வாய் ப்பு இருக்கிறது.
குறிப்பாக சிசேரியன் எனப்படும் மகப் பேறு கால அறுவைச் சிகிச்சை மற்றும் கர்ப்பப்பை நீக்கும் அறு வை சிகிச்சைக்குப் பிறகு சம்பந்தப்பட்ட பெண்களுக்கு இந்த பாதிப்பு ஏற்படு கிறது.
அடுத்ததாக பெண்களுக்கு வயது ஏற ஏற எடை கூடுவது இயற்கை யான ஒன்று. இப்படி எடை கூடுவது அவர்களது வயிற்றுப் பகுதியை பலவீனமாக் குகிறது.
ஒரு பெண் கருவுற்றிருக்கும் காலத்தில் மாதம் ஆக ஆக அவளது வயிறு விரிவடைகிறது. இது வும் வயிற்றுப் பகுதியை பலவீனமாக்கி வலுவி ழக்கச் செய்கிறது. இவ்வாறுதான் பெண்களுக்கு பெரும் பாலும் குடலிறக்கப் பாதிப்பு ஏற்படுகி றது.

சோகம் ஏற்படுத்தும் உடலியல் பாதிப்புகள்

Posted On June 30,2012,By Muthukumar
தன் துணையை இழந்த மறு வினாடியே உயிர் துறந்து இறந்துபோகுமாம் அன்றில் பறவை! இது ஒருவர் மற்றவர் மீது வைத்திருக்கும் உள்ளார்ந்த அன்பு அல்லது காதல் எவ்வளவு உண்மையானது, வலிமையானது என்பதை உணர்த்த சுட்டிக் காட்டப்படும் உதாரணங்களில் ஒன்று. இந்த உன்னதமான பண்பு பறவை இனத்துக்கு மட்டுமல்லாது மனிதர்களுக்கும் உரியது.
உதாரணமாக, காதலர்களில் ஒருவர் இறந்த துக்கம் தாளாமல் மற்றொருவர் இறந்துபோவது அல்லது கணவன்மனைவி இருவரில் ஒருவர் இறந்தால் மற்றொருவர் இறந்துபோவது குறித்த செய்திகளையும், சினிமாக் காட்சிகளையும் நாம் பார்த்திருப்போம்.
இந்தக் கூற்று எவ்வளவு உண்மையானது, இதற்கான அறிவியல் ரீதியிலான காரணங்கள் என்ன, ஒருவரின் இழப்பு மற்றொருவரின் உயிரை பறிக்கக்கூடிய அளவிற்கு வலிமையானதா போன்ற பல்வேறு சந்தேகங்களும், கேள்விகளும் நம்மில் பலருக்கும் இருக்கக்கூடும். ஆனால் அவற்றுக்கான விடைகள் மட்டும் இதுவரை தெரியவில்லை என்பதுதான் நிதர்சனம்.
ஆனால், இதேபோன்ற கேள்விகளுக்கான விடையைத் தேடி ஆய்வுகளை மேற்கொண்ட இங்கிலாந்து நாட்டின் பிர்மிங்காம் பல்கலைக்கழக ஆய்வாளர்களுக்கு ஆச்சரியமான ஆனால் ஆதாரப்பூர்வமான ஒரு மருத்துவ உண்மை தெரியவந்திருக்கிறது.
அது என்னவென்றால், அன்புக்குரிய ஒருவரை இழப்பதால் ஏற்படும் துக்கமானது உடலின் நோய் எதிர்ப்புச் சக்தியின் குறிப்பிட்ட பாகங்களை செயலிழக்கச் செய்து விடுகிறது. இதனால் பாக்டீரியா தொற்றுகளை எதிர்த்து போராடும் உடலின் நோய் எதிர்ப்பு திறன் குறைந்து விடுகிறது. விளைவு, பல்வேறு தொற்று நோய்கள் ஏற்பட்டு உடல் நலிந்து மரணம் நிகழ்கிறது என்று விளக்குகிறார் மூத்த ஆய்வாளர் பேராசிரியர் ஜேனட் லார்டு.
குறிப்பிட்டுச் சொல்வதானால், ரத்தத்தில் உள்ள நியூட்ரோபில் எனப்படும் ஒருவகை வெள்ளை ரத்த அணுக்கள் பாக்டீரியா தொற்றுகளான நிமோனியா போன்றவற்றை எதிர்க்கும் வேலையைச் செய்கின்றன. ஆனால் ஒருவருடைய இழப்பினால் உண்டாகும் துக்கம் ஏற்படுத்தும் மன உளைச்சலும், மனச்சோர்வும் நியூட்ரோபில்களின் செயல்பாட்டினை பாதிக்கின்றன. இதனாலேயே பாக்டீரியா தொற்றுகளுக்கு எதிரான உடலின் நோய் எதிர்ப்புத் திறன் குறைந்து விடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
முக்கியமாக, இந்த வகையான துக்கத்தினால் ஏற்படும் விளைவுகள் வயதானவர்களை அதிகப்படியாக பாதிக்கிறதாம். ஏனென்றால், பொதுவாக துக்கத்தினால் உண்டாகும் விளைவுகளைச் சரிசெய்யும் திறனுள்ள ஒரு ஹார்மோனை உடல் உற்பத்தி செய்கிறது. ஆனால், இந்த ஹார்மோனை உற்பத்தி செய்யும் திறன் வயதாக வயதாக குறைந்து போகிறது. இதனாலேயே வயதானவர்கள் ஆரோக்கியமானவர்களாக இருந்தாலும்கூட துக்கத்தின் விளைவுகள் அவர்களை மிகவும் அதிகப்படியாக பாதிக்கிறது என்கிறார் பேராசிரியர் லார்டு.
இந்த ஆய்வுக்காக, 65 வயதுக்கு மேற்பட்ட வயதுடைய 48 ஆரோக்கியமான மனிதர்
களின் நோய் எதிர்ப்புச் சக்தி மற்றும் ஹார்மோன் அளவுகள் பரிசோதிக்கப்பட்டன. இவர்களில் பாதிப் பேர் ஆய்வுக்கு முந்தைய 12 மாதங்களில் தங்களின் ஆருயிர் துணைகளை இழந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஆய்வின் முடிவில் ஆரோக்கியமானவர்களுடன் ஒப்பிடுகையில், துணையை இழந்தவர்களின் ரத்தத்தில் உள்ள நியூட்ரோபில்களின் பாக்டீரியா எதிர்ப்பு திறன் வெகுவாக குறைந்திருந்தது தெரியவந்தது. மேலும், மன உளைச்சலுக்கு காரணமான கார்ட்டிசோல் எனப்படும் ஹார்மோன் அளவுகள் அதிகரித்திருந்ததும் கண்டறியப்பட்டது.
கார்ட்டிசோல் ஹார்மோன் நியூட்ரோபில் களின் செயல்பாடுகளைப் பாதித்து அவற்றின் செயல்திறனைக் குறைத்துவிடும் என்பது இதற்கு முந்தைய ஆய்வுகளில் கண்டறியப்பட்டிருக்கிறது. ஆனால், பெரும்பாலான இளைஞர்களின் உடலில் கார்ட்டிசோலுக்கு எதிராக செயல்படும் ஞிபிணிகி எனும் மற்றுமொரு ஹார்மோன் சுரப்பதால், இழந்த எதிர்ப்புச் சக்தியை அவர்கள் மீண்டும் பெற்றுவிடுகிறார்கள். ஆனால், வயதாக வயதாக ஞிபிணிகி ஹார்மோன் உற்பத்தி குறைந்து போவதால், துக்கத்தால் இழந்த எதிர்ப்புச் சக்தியை வயதானவர்களால் மீண்டும் பெற முடிவதில்லை. இதனால் நோய்வாய்ப்பட்டு அதிகப்படியாக பாதிக்கப்படுகிறார்கள் என்கிறது உயிரியல்.
இது ஒருபுறமிருக்க, இடுப்பு முறிவினாலும் இம்மாதிரியான ஹார்மோன் பிரச்சினைகள் ஏற்படுகிறது என்பதும் இந்த ஆய்வில் தெரியவந்துள்ளது. இதன்மூலம், 80 வயதுக்கு மேலானவர்கள் இடுப்பு முறிவினால் பாதிக்கப்பட்ட ஒரு வருடத்துக்குள் இறந்துபோவதற்கான காரணம் கண்டறியப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Friday, 29 June 2012

உயிர் மூச்சு!

Posted On June 29,2012,By Muthukumar
இரும்புத் துண்டு ஒன்றைத் திறந்தவெளியில் போட்டு வைத்தால் அது காற்றுப் பட்டுத் துருப்பிடிக்கிறது. காற்றில் உள்ள ஆக்சிஜன் என்ற பிராணவாயுவும், இரும்பும் சேர்வதால் ஏற்படும் இரும்பு ஆக்சைடையே நாம் துரு என்கிறோம். இவ்வாறு ஆக்சிஜனுடன் சேர்வதற்கு `ஆக்சிடேஜன்' என்று பெயர். இது ரசாயன மாற்றமாகும்.
காற்று என்பது ஒரு கலவைப் பொருள். ஆக்சிஜன், நைட்ரஜன், நீராவி, கரியமில வாயு எனப்படும் கார்பன்-டை-ஆக்சைடு ஆகியவற்றின் கலவையே காற்று. ஆனால் துரு என்பது கூட்டுப் பொருள். இரும்பும், ஆக்சிஜனும் சேர்ந்து புதுப் பொருளே உண்டாகிவிடுகிறது. எனவே இதை ரசாயன மாற்றம் என்கிறோம். செல்களில் இத்தகைய ரசாயன மாற்றங்கள் தொடர்ந்து நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. `ஆக்சிடேஷன்' என்பது செல்களில் ஏற்படும் ரசாயன மாற்றங்களில் முக் கியமானதாகும். நாம் இந்த ஆக்சிடேஷனுக்குத் தேவையான ஆக்சிஜனை நமது மூச்சு மண்டலத்தின் மூலம் பெறுகிறோம்.
செல்களில் ஏற்படும் ரசாயன நிகழ்வுகளில் கார்பன்-டை-ஆக்சைடு உண்டாகிறது. இதை உடலிலிருந்து வெளியேற்ற வேண்டும். மூச்சு மண்டலம் இதற்கு வாய்ப்பாக அமைகிறது.
மனிதனின் உயிர், மூச்சிலே அடங்கியிருக்கிறது என்பது முற்றிலும் உண்மை. நாம் உள்ளே வாங்கும் காற்றிலிருந்து ஆக்சிஜன் ரத்தக் குழாய் வழியாக உடல் முழுவதற்கும் கிடைக்கிறது. வெளியே விடும் மூச்சு மூலம் கார்பன்-டை-ஆக்சைடு வெளியேறுகிறது. ஒருவரது குரல் வளையைப் பிடித்து நெருக்கி இந்த சுவாச நிகழ்ச்சி நடைபெறுவதைத் தடுத்தால் அவர் சில நிமிடங்களில் இறந்துவிடுவார்.
ஆக்சிஜன் வேண்டும் என்பதற்காக நாம் சுவாசிப்பதாக பொதுவாக எண்ணலாம். ஆனால் உண்மையில் சுவாச நிகழ்ச்சிக்குத் தூண்டுகோல், கார்பன்-டை-ஆக்சைடை வெளியேற்ற வேண்டிய நிர்ப்பந்தமே.
அது எப்படி என்பதைப் பார்க்கலாம். செல்களில் உற்பத்தியாகும் கார்பன்-டை-ஆக்சைடை ரத்தம் எடுத்துச் செல்கிறது.
கழுத்தின் மேற்புறத்தில் கபாலக் குழியின் அடியில் உள்ளதும், மூளையின் ஒரு பகுதியுமான முகுளத்தின் செல்கள், அசுத்த ரத்தம் பட்டவுடன் தந்திச் செய்தி அனுப்புவதைப் போல நரம்பு மூலம் மார்பைச் சுற்றியுள்ள தசைகளுக்குச் செய்தி அனுப்புகிறது. உடனே அந்தத் தசைகள் சுருங்குகின்றன. அதனால் விலா எலும்புகள் மேலே தூக்கப்படுகின்றன. உதரவிதானம் கீழே இறங்குகிறது. மார்பு எலும்பு முன்னே தள்ளப்படுகிறது.
மொத்தத்தில், மார்பு அறை விசாலமடைந்து, நுரையீரல்கள் விரிகின்றன. காற்று உள்ளே செல்கிறது. பிறகு மார்புத் தசைகள் தளர்கின்றன. விலா எலும்புகள் தாழ்கின்றன. உதரவிதானம் மேலே செல்கிறது. மார்பு எலும்பு பின்னடைகிறது. மார்பு அறை சுருங்குகிறது. இவ்வாறு முறையாக, உட்சுவாச, வெளிச்சுவாச நிகழ்ச்சி நடைபெறுகிறது. கார்பன்-டை-ஆக்சைடு முகுளத்தைத் தூண்டுவதே சுவாசத்துக்குக் காரணம். ஆக்சிஜன் தேவை என்பதால் நாம் மூச்சு விடவில்லை. நமது செல்கள் கார்பன்-டை-ஆக்சைடை உற்பத்தி செய்வதால் நாம் சுவாசிக்கிறோம்.
வழக்கமாக, வயது வந்தோர் இரவும் பகலும் நிமிடம் ஒன்றுக்கு 18 முறை மூச்சை இழுத்து வெளியே விடுவார்கள்.
ஓடி விளையாடும் சிறுவர்கள் ஆழமாகவும், விரைவாகவும் சுவாசிப்பதைக் கண்டிருப்பீர்கள். அதன் காரணம் என்ன தெரியுமா? ஓடும்போது செல்களின் ரசாயன நிகழ்வும் துரிதமாக நடைபெறுகிறது. எனவே அதிகமாக கார்பன்-டை-ஆக்சைடு உற்பத்தியாகிறது. அதனால் முகுளத்தின் செல்கள் அதிகமான தடவைகள் செய்தி அனுப்புகின்றன. எனவே சுவாசத்தின் வேகம் அதிகரிக்கிறது.
வாய் வழியாக சுவாசிப்பது சரியா? அது தவறு. காரணம், அதன் மூலம் தூசும் உள்ளே சென்றுவிடும். ஆனால் அதிகமான மூச்சுக் காற்றுத் தேவைப்படும்போது இயல்பாகவே வாய் வழியாகவும் சுவாசிக்கிறோம்.

உடல் எடை அதிகரிப்பதற்கு காரணம் மூளை வளர்ச்சி!

Posted On June 29,2012,By Muthukumar
மூளை வளர்கிறது என்றால் அறிவும் வளர்கிறது என்பதுதான் பொதுவான நம்பிக்கை. ஆனால் மூளையின் குறிப்பிட்ட பாகங்கள் தவிர்த்த பிற பாகங்களுக்கும் அறிவு வளர்ச்சிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்கிறது நரம்பியல்.
ஞாபக சக்திக்கு காரணமான ஹிப்போகாம்பஸ் எனும் மூளை பகுதியின் வளர்ச்சி அறிவு வளர்ச்சியுடன் நேரடித் தொடர்புடையது. ஆனால், நாற்றம் அல்லது வாசனை நுகர்தலுக்கு காரணமான ஆல்பாக்டரி பல்பு மற்றும் உறக்கம், உடல் வெப்பம், பசி, தாகம் போன்ற உடலியல் பண்புகளுக்கு காரணமான ஹைப்போதலாமஸ் போன்ற பகுதிகளுக்கும் அறிவுக்கும் ஒரு தொடர்பும் இல்லையாம்.
நியூரோஜெனிசிஸ் என்று அழைக்கப்படும் (மூளையிலுள்ள) நரம்புகளின் வளர்ச்சியே மூளை வளர்ச்சி எனப்படுகிறது. குழந்தைப் பருவம் முடிந்து, பருவம் எய்தி முதிர்ச்சி அடைந்த பின்னர் மூளை வளர்ச்சி நின்றுவிடும் என்ற ஒரு நம்பிக்கை பல வருடங்களுக்கு முன்பு இருந்தது. ஆனால் சமீபத்திய ஆய்வுகளில் குழந்தை பருவம் முடிந்த பின்னரும் மனிதர்களின் மூளையானது புதிய நரம்புகளை உற்பத்தி செய்து தொடர்ந்து வளர்கிறது என்பது உறுதி செய்யப்பட்டது.
உதாரணமாக, மூளையின் ஹிப்போகாம்பஸ் மற்றும் ஆல்பாக்டரி பல்பு ஆகிய இரு பகுதிகளில் மட்டும் புதிய நரம்புகள் தோன்றுவதைக் கூறலாம். இந்த வரிசையில், ஹைப்போதலாமஸ் பகுதியிலும் புதிய நரம்புகள் தோன்றுவது சமீபத்தில் கண்டறியப்பட்டது. இந்த நரம்புகளுக்கு டானிசைட்ஸ் என்று பெயர்.
ஆனால் இந்த பகுதியில் புதிய நரம்புகள் தோன்றுவதற்கான காரணம் என்னவென்று தெரியவில்லை!
ஞாபக சக்திக்கு காரணமான ஹிப்போகாம்பஸ், நுகர்தலுக்கும் காரணமான ஆல்பாக்டரி பல்பு பகுதிகளில் புதிய நரம்புகள் வளர வேண்டியது அவசியம். ஏனென்றால், ஹிப்போகாம்பஸ் பகுதியானது தினம் தினம் புதிய புதிய நினைவுகளை உருவாக்கி சேமிக்க வேண்டும். அதுபோலவே ஆல்பாக்டரி பல்பு பகுதி யானது புதிய புதிய வாசனை அல்லது நாற்றங்களை நுகர வேண்டும். இதற்கு புதிய நரம்புகள் அவசிய மாகிறது.
ஆனால், `மாற்றங்கள் இல்லாத தினசரி உடலியல் நிகழ்வுகளான உறக்கம், உடல் வெப்பம், பசி மற்றும் தாகத்துக்கு காரணமான ஹைப்போதலாமஸ் பகுதியில் புதிய நரம்புகள் வளர்வதற்கான காரணம் என்ன?' என்பது இதுவரை ஒரு புரியாத புதிராகவே இருந்தது.
இந்த புதிருக்கான விடையைத் தேடிய அமெரிக்காவின் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக ஆய்வாளர் சேத் பிளாசாவுக்கு ஒரு பெரிய ஆச்சரியம் காத்திருந்தது.
மூளையின் ஹைப்போதலாமஸ் பகுதியிலுள்ள மீடியன் எமினென்ஸ் என்னும் பகுதியில் தோன்றும் புதிய `டானிசைட்' நரம்புகளே உடல் எடை அதிகரிப்பதற்கு காரணமாக இருக்கின்றன எனும் அறிவியல் உண்மைதான் அது!
அதிக கொழுப்புச் சத்து நிறைந்த உணவுகள் கொடுக்கப்பட்டு வளர்க்கப்படும் விலங்குகள் வயது முதிர்ச்சி அடைந்த பிறகு உடல் பருமன் மற்றும் செரிமானம் தொடர்பான பிரச்சினைகளால் பாதிக்கப்படும் என்பது முந்தைய ஆய்வுகளில் கண்டறியப்பட்டது. இதற்கு, ஹைப்போதலாமஸ் பகுதியில் நிகழும் நரம்பு வளர்ச்சி அல்லது நியூரோஜெனிசிஸ் காரணமாக இருக்கக்கூடும் என்று ஆய்வாளர் பிளாசா எண்ணினார்.
இந்த கூற்றிலிருக்கும் உண்மையை கண்டறிய, எலிகளுக்கு பிறந்தது முதல் தொடர்ந்து அதிக கொழுப்புச் சத்து நிறைந்த உணவுகள் கொடுக்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து, பல்வேறு கால இடைவெளிகளில் ஹைப்போதலாமஸ் பகுதியில் நரம்பு வளர்ச்சி நிகழ்கிறதா என்பது கண்காணிக்கப்பட்டது.
பரிசோதனையின் முடிவில், கொழுப்புச் சத்து கொடுக்கப்பட்ட மற்றும் கொடுக்கப்படாத இள வயது எலிகளின் நரம்பு வளர்ச்சியில் எந்தவித வித்தியாசமும் இல்லை என்று தெரியவந்தது. ஆனால் ஆச்சரியப்படும்படியாக, அதிக கொழுப்புச் சத்துள்ள உணவு கொடுக்கப்பட்ட வயதான எலிகளின் ஹைப்போதலாமஸ் பகுதியில் மட்டும் டானிசைட் நரம்பு வளர்ச்சியானது `நான்கு மடங்கு' அதிகரித்தது கண்டறியப்பட்டது. மேலும் இந்த எலிகள் அதிக எடையையும், அதிக கொழுப்பு படிவையும் கொண்டு இருந்ததும் தெரியவந்தது.
உடல் எடை அதிகரிப்பதற்கும், அதிக கொழுப்புப் படிவு உருவாவதற்கும் காரணம் என்ன என்பதை திட்டவட்டமாக நிரூபிக்க, அதிக கொழுப்புச் சத்துள்ள உணவு கொடுக்கப்பட்ட எலிகளின் மீடியன் எமினென்ஸ் பகுதியிலுள்ள டானிசைட் நரம்புகள் எக்ஸ்ரே கதிர்கள் மூலம் கொல்லப்பட்டன. இதன் காரணமாக, அந்த எலிகளின் உடல் எடையும், கொழுப்புப் படிவும் வெகுவாக குறைந்து போனது.
இதன் மூலம், உடல் எடை அதிகரிப்பதற்கும், அதிக கொழுப்புப் படிவு உருவாவதற்கும் ஹைப்போதலாமஸ் பகுதியில் நிகழும் அதிகப்படியான டானிசைட் நரம்பு வளர்ச்சியே காரணம் என்பது நிரூபணமானது என் கிறார் ஆய்வாளர் பிளாசா.

வலிகள் தீர்க்க உதவும் வழிகள்

அலுவலக இருக்கையிலேயே கட்டிப்போட்ட கணக்காக உட்கார்ந் து இருப்பவரா நீங்கள்? உங்களுக்காகத்தான் இந்தக் கட்டுரை.
இருக்கையிலேயே அமர்ந்து இருப்பதன் முத ல் அபாயம் கழுத்து மற்றும் முதுகு வலி. இத்த கைய  வலிகளில் இருந்து மீள்வதற்கான வழி களைச் சொல்கிறார் நரம்பு சிகிச்சை நிபுணர் பேராசிரியர் எம்.மோகன் சம்பத் குமார்.
”பொதுவாக, கழுத்து எலும்பு சார்ந்து இருக்கிற தசை நார்கள், சதை , இணைப்பு திசுக்கள் இதி ல் ஏதாவது ஒன்றில் பிரச்னை என்றாலும் கழு த்தில் வலி வரும். இந்த வலி நான்கு விதமாக இருக்கிறது.  
நாற்காலியில் உட்கார்ந்துகொண்டு திரும்பத் திரும்ப சிரமம் எடுத் து பணிபுரியும்போது பாதி ப்பு ஏற்படும். அப்போது, வலி இருக்கிற மாதிரியான உணர்வு கழுத்து, தோள் பட் டை, பின் தலை இவற்றில் ஏதாவது ஒரு பகுதியில் இருக்கும். இதை கவனிக்க வில்லை என்றால், பிரச் னைதான். கழுத்தில் லேசா கவோ, குத்துகிற மாதிரி யோ வலி இருந்தால் அது தான் கழுத்து வலியின் ஆர ம்பம். கொஞ்ச நேர ஓய்வு எடுத்தால் அது சரியாகிவிடும்.
ஓய்வு எடுக்காமல் தொடர்ந்து பணி யாற்றும்பட்சத்தில் கழுத்து தசை இறுக்கமாகி, மறத்துப் போகும்.
இதை கவனிக்காமல் அஜாக்கிரதையாக இருந்துவிட்டால் வலி தொ டர்ந்து இருக்கும். ஓய்வு எடுத்தாலும் குறையாது. தசை மறத் துப் போய், கழுத்து தசை இறுக்கம் அதிகமாகும். இந்நிலையை நோ ய் முற்றிய நிலை என்று சொல்லலாம். கழுத்து மற்றும் முதுகு வலியுடன் கூடுதலாக தலைவலி, கண் வலி, பார்வை மங்குதல் போன்றவை ஏற்படவும் வாய்ப்பு இருக்கிறது!” என்றவர், நம்மை எப்படி சரி செய்துகொள்வது என்பது பற்றியும் விளக்கினார்.
”உடற்பயிற்சி என்கிறபோது கழுத்து தசை எதிர்ப்பு பயிற்சியை செ ய்ய வேண்டும். அதாவது, கழுத்து வலியால், பாதிக்கப்பட்டவ ரே கன்னத்தில் ஒரு கையை வைத்துக்கொண்டு எதிர் திசையில் தலை யைத் திருப்ப வேண்டும். மேலும், நெற்றியில் கையை வைத்து அழுத்திக்கொண்டு கழுத்தை முன் பின்னாக அசைக்க வேண்டும். கழுத்து தசையை உறுதிப்படுத்தக்கூடிய கையை மே லே தூக்குதல் – பக்கவாட்டில் தூக்குதல், தோள்பட்டையை அசைத்தல் மற்றும் தூக்குதல், கழுத்தை பக்கவாட்டில், முன் பின் பக்கமாக அசைத்தல் போன்ற பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும். ”கழுத்து வலி முற் றிய நிலையில், சரி செய்ய சிகிச்சை ஒன்றே வழி!  இப் போது எல் லா அலுவலங்களிலும் கம்ப்யூட்டர் முன்னால்தான் வேலை என் றாகி விட்டது. கம்ப்யூட்டர் முன் சரியான நிலையில் உட்கார்ந்து பணிபுரியாததால் முதலில் கழுத்து வலிப்பதுபோல் உணர்வு இருக் கும். இந்த நிலையில், உட்காருவதை தவிர்த்து, வீட்டில் படுத்து ஓய்வு எடுக்க வேண்டும். இவ்வாறு செய்தால் ஒரு வாரத்தில் சரி யாகிவிடும். இந்தப் பிரச்னை தொடர்ந்து வராமல் இருக்க கழுத்து தசை நார்கள், நரம்புகள், எலும்பை வலிமைப்படுத் தும் பயிற்சிக ளை செய்ய வேண்டும். அதிலும் குணம் கிடைக்கா விட்டால் பிசி யோதெரபி மூலம் வலி போக்கும் சிகிச்சை எடுத்துக் கொள்ளலா ம். கழுத்துப் பட்டை, பிரஷர், மஜாஜ், கதிர் இயக்க சிகி ச்சைகள் மூலமாகவும் சிகிச்சை எடுக்கலாம்!” என்றவரிடம், வலிகளைத் தவிர்ப்பதற்கான உடற்பயிற்சி முறைகளைக் கேட் டோம்.
இதில், சரியாகவில்லை என்றால் பிசியோதெரபி மருத்துவர்கள் மூலம் சிகிச்சை பெற வேண்டும்!” – பயம் நீக்கும் பக்குவங்களை இருக்கைப் பிரியர்கள் இனியாவது மேற்கொள்ளலாமே!

ரெடிமேட் இதய உயிரணுக்களை கொடுக்கிறது புதிய ஸ்டெம் செல் ஆய்வு

Posted On June 29,2012,By Muthukumar


ஒவ்வொரு வருடமும் இதய நோய்கள் பல லட்சம் உயிர்களை பறித்துக்கொள்கின்றன. அதேசமயம், இதய நோய்களுக்கான சிகிச்சைகள் மற்றும் மருந்துகளைக் கண்டறியும் ஆய்வு முயற்சிகளுக்காக பல ஆயிரம் கோடிகள் ஒருபுறம் செலவாகிக் கொண்டுதான் இருக்கின்றன. ஆனாலும் இதுவரை இதய நோய்களுக்கான முழுமையான தீர்வு ஒன்றை காண முடியவில்லை.
இதயம் துடிப்பதற்கு காரணமான `கார்டியோ மயோசைட்' உயிரணுக்களை இதய நோய்கள் பாதிக்கின்றன. விளைவு, கார்டியோ மயோசைட் உயிரணுக்கள் இறந்து போகின்றன. இதனால் இதயத்தின் வேலையான ரத்த ஓட்டம் தடைபடுகிறது. இறுதியாக மாரடைப்பு ஏற்பட்டு இறப்பு நிகழ்கிறது.
இதனை தடுக்க அல்லது தவிர்க்க இரண்டு வழிகள் இருக்கின்றன. ஒன்று, இதய நோய்கள் எப்படி ஏற்படுகின்றன என்பதை பல்வேறு ஆய்வுகள் மூலம் கண்டறிந்து, அதற்கான மருந்துகள் மற்றும் சிகிச்சைகளை உருவாக்குவது. மற்றொன்று, பாதிப்படைந்த அல்லது இறந்துபோன கார்டியோ மயோசைட் உயிரணுக்களுக்கு மாற்றாக புதிய உயிரணுக்களை இதயத்துக்குள் பொருத்தி மீண்டும் அதனை இயங்கச் செய்வது. ஆனால் இந்த இரண்டு வழிகளுக்குமே மாற்று கார்டியோ மயோசைட் உயிரணுக்கள் அவசியம்.
இந்த பிரச்சினைக்கு செயற்கை ஸ்டெம் செல்கள் மூலம் ஒரு தீர்வு கண்டறியப்பட்டது. அதாவது, செயற்கை ஸ்டெம் செல்களில்இருந்து இதய உயிரணுக்களான கார்டியோ மயோசைட்கள் உற்பத்தி செய்யப்பட்டு பயன்படுத்தப்பட்டன. ஆனால் இந்த முயற்சியில் உள்ள பல்வேறு சிக்கல்கள் காரணமாக முழுமையான வெற்றி கிட்டவில்லை என்பதுதான் துரதிஷ்டம்.
உதாரணமாக, பல்வேறு வகையான வளர் ஊக்கிகள் மற்றும் புரதங்கள் கொண்டு, செயற்கை ஸ்டெம் செல்கள் கார்டியோ மயோசைட்களாக மாற்றப்பட்டாலும், இறுதியில் 30 சதவீதம் கார்டியோ மயோசைட்களே உற்பத்தியாகின்றன. மேலும், இவ்வாறு உற்பத்தி செய்யப்படும் கார்டியோ மயோசைட்கள், ஒன்றுக்கொன்று வித்தியாசமாக இருப்பதும் இதிலுள்ள ஒரு முக்கியமான பிரச்சினை.
இதுபோன்ற சிக்கல்கள் காரணமாக, இதய நோய்கள் தொடர்பான ஆய்வுகளை மேற்கொள்வதும், கார்டியோ மயோசைட் மாற்று அறுவை சிகிச்சை செய்வதும் இதுவரை முழுமையாக சாத்தியப்படவில்லை.
ஆனால், `கவலை வேண்டாம், இனியெல்லாம் சுகமே' என்று சொல்லாமல் சொல்கிறார் அமெரிக்காவின் விஸ்கான்சின் மேடிசன் பல்கலைக்கழக பேராசிரியர் ஷான் பாலிசெக்.
அதற்கு காரணம், அவருடைய புதிய கண்டுபிடிப்பான, ஸ்டெம் செல்களில்இருந்து ரெடிமேட் கார்டியோ மயோசைட்களை உற்பத்தி செய்யும் சுலபமான, விலை குறைவான தொழில்நுட்ப உத்திதான்.
ஸ்டெம் செல் ஆய்வு என்பது ஒரு காஸ்ட்லியான சமாச்சாரம் மட்டுமல்லாது, மிக மிக சர்ச்சையானதும் கூட. ஏனென்றால், மனித சிசு ஸ்டெம் செல்களை ஆய்வுகளுக்காக பயன்படுத்துவது பல நாடுகளில் தடை செய்யப்பட்டு உள்ளது. ஆனால் ஒரு நோயாளியின் ஸ்டெம் செல்களைக் கொண்டு அவருடைய நோயை குணப்படுத்துவதற்கான ஆய்வுகள் மற்றும் சிகிச்சைகளை செய்து கொள்ள அனுமதி உண்டு.
இத்தகைய சூழலில், ஒரு நோயாளியின் ஸ்டெம் செல்களை எடுத்து, அவற்றை சோதனைக்கூடத்தில் வைத்து இயற்கையான கார்டியோ மயோசைட்களைப் போன்று செயல்படும் திறனுள்ள இதய உயிரணுக்களாக மாற்றியிருப்பதுதான், இந்த புதிய ஸ்டெம் செல் உத்தியின் விசேஷமே என்கிறார் பேராசிரியர் ஷான் பாலிசெக்.
ஸ்டெம் செல்களிலுள்ள `விண்ட்' எனும் ஒரு குறிப்பிட்ட ரசாயன சமிக்ஞையை, இரு வகையான வேதியியல் பொருட்களைக் கொண்டு குறிப்பிட்ட கால புள்ளிகளில் நிறுத்தி, பின் மீண்டும் இயங்கச் செய்வதன் மூலமே ஸ்டெம் செல்கள் கார்டியோ மயோசைட்களாக உருமாறுகின்றனவாம்.
இந்த புதிய தொழில்நுட்பத்தின் மூலம் சுமார் 80 சதவீதம் கார்டியோ மயோசைட்களை சுலபமாகவும், குறைவான செலவிலும் உற்பத்தி செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
சுலபமாக உற்பத்தி செய்யப்படக் கூடிய இந்த கார்டியோ மயோசைட்கள், இதய நோய்களுக்கான எண்ணற்ற புதிய மருந்துகளை பரிசோதிக்கவும், பழுதடைந்த இதயத்திலுள்ள செயலிழந்த கார்டியோ மயோசைட்களுக்கான மாற்று உயிரணுக்களாகவும் பெரிதும் உதவுகின்றன என்கிறார்கள் இதய வல்லுனர்கள்.
இம்மாதிரியான மருத்துவ முன்னேற்றங்களை பார்க்கும் போது எதிர்காலத்தில், `கார்டியோ மயோசைட் வாங்கலையோ, கார்டியோ மயோசைட்டு' என்று தெருவில் கூவிக் கூவி விற்றுக்கொண்டு வரும் அளவுக்கு இதய உயிரணுக்கள் மலிவாக கிடைக் கும் போலிருக்கிறது என்றே நினைக்கத் தோன்று கிறது.