Lord Siva

Lord Siva

Thursday 8 March 2012

பாலியல் கல்வியின் அவசியமும் அது பள்ளிகளில் அமைய வேண்டிய முறைகளும்


posted on  by muthukumar

பாலியல் கல்வி இப்போது பல கல்வியாளர்களாலும பெற்றோர்களாலும் சூடாக விவாதம் செய்யப்படும் விஷயம். நாற்பது ஐம்பது ஆண்டுகளு  க்கு முன்னால், நமது சமூ கம் ஆண் பெண்ணுடன் பேசு வதையோ பழகுவதையோ ஒரு பாவமான விஷயமாக க் கருதியது. ஆண் பெண்க ளுக்கென்று தனிப்பள்ளிகள், ஆசிரியர்கள் என்று இரு பிரி வினரையும் பிரித்தே வைத்திருந்தது. ஆனால் சமுதாயத்தில் கலாசார மாறுதல்களுக்கேற்ப ஆண் பெண் உறவுகளிலும் மிகப் பெரியமாறுதல்கள் ஏற்பட்டிருக்கி‎ன்றன. கல்வி நிலையங்களிலு ம் அலு வலகங்களிலும் ஆண் பெண் சகஜமாக வேற்று மையின்றிப் பழக வேண்டிய சூழ்நிலை ஏற்ப ட்டிருக்கிறது. ஊடகங்கள், இன்டர்நெட்டின் வளர்ச்சி போன்றவையும் இருபா லர்களுக்கிடையே ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியு ள்ளது.
விஞ்ஞான வளர்ச்சியின் பக்க விளைவாக, இன்றைய இளைஞர்க ளிடையே, பல புத்தகங்களும் ஊடகங்களும் திரைப் படங்களும்பாலுறவு பற்றிய மோகத்தைப் பரப்பி வருகின்றன. இதனால், இளம் வயதி லேயே பாலுறவு பற்றி முழுமையான அறிவு இல்லாமல் நமது இளைய சமுதாயம் தவறான பாதையை நோக் கிச் சென்று கொண்டிருக்கிறது. பாலி யல் நோய்கள், HIV/AIDS போன்ற உயி ரைக் குடிக்கும் வியாதிகள் பரவத்து வங்கிவிட்டன. இளைஞர்களுக்குப் பாலுறவு பற்றி போதிய அறிவு புகட்டி அவர்களைச் சரியான பாதை யில் இட்டுச் செல்வதன் மூலமே பாலியல் நோய்களற்ற, ஆரோக்கியமான சமு தாயத்தை உருவாக்கமுடியும். பாலியல் கல்வியின் அவசியத் தைப் பலரும் உணர்ந்தாலும் இதற்கு எதிர்ப்புக்களும் இருக்கத்தா ன் செய்கின்றன. இது தவிர இந்த அறிவை இளைஞர்களு க்கு எவ்வாறு கொடுப்பது, எந்த வயதில் துவங்க வேண் டும், பாடத் திட்டங்கள் எப்படி இருக்கவேண்டும், இப்படிப் பல கேள்வி கள். இது பற்றிய ஒரு சிந்தனைதான் இக்கட்டு ரை. இது எந்த வகையிலு ம் முழுமையானதல்ல.
செக்ஸ் பற்றி, அதன் அடையாளம், உறவுகள், அதன் நெருக்கம் பற்றிய அறிவினைப் பெற்று அதனால் ஒரு தெளிவு பெறுவதைத்தான் பாலியல் கல்வி என்று சொல்கிறோம். இந்தக் கல்வி, இளைஞர்கள் தங்களை உணர் ந்து, தங்களது தேவைகளை அறிந்து கொள் ளவும், அந்தத் தெளிவினால் பாதை மாறாது வாழ்க்கையில் உறுதியுடன் முன்னோக்கிச் செல்லவும் உத வும் என்று சொல் லலாம்.
இளைஞர்களுக்குப் பாலியல் கல்வி தருவதன் மூலம் அவர்கள் பாலியல் பலாத்காரங்கள், பால் வேறுபாடுகளால் இழைக்கப்படும் அநீதிகள், தேவையில்லாத கருத்தரிப்புக்கள், தவறான உடலுறவுகளால் ஏற்படும் நோய்கள், HIV, AIDS ஆகியவற்றிலிருந்து தங் களைக் காத்துக்கொள்ள முடியும். இந்தப் பாலியல் கல்வியின் உண் மையான நோக்கம், உடலுறவுக ளால் வரும் அவசியமற்ற, விரு ம்பாத கருத்தரிப்புக்களைத் தவி ர்ப்பதும், தவறான விளைவுக ளைப் போக்குவதும், பாலுறவால் ஏற்படக்கூடிய நோய்கள் வராமல் காப்பதும் தான். ஆண் பெண் உறவை மேம்படுத்தி ஒரு உயரிய நிலைக்குக் கொண்டு செல்வதற்கும் பாலியல் கல்வி பயன்படும். உண்மையான பாலிய ல் கல்வி என்பது இந்த நோக்கங்களை முழு மையாக நிறைவேற் றும் கல்விதான். இந் தக் கல்வி எது நல்லது, அல்லது கெட்டது என் று பகுத்தறிய உதவ வேண்டும். செக்ஸ், பாலுணர்வுகள் முதலியவற்றால் ஏற்படக்கூடிய சமூகப் பிரச்ச னைகளைப் பற்றியும் கருக்கலைப்பு, கருத்தடை போன்ற நுண்ணி ய விஷயங்களையும் உணர்ந்துகொள்ளப் பயன் பட வேண்டும்.
சமுதாய முன்னேற்றத்திற்கு உதவும் விஞ்ஞான வளர்ச்சிக ளால் சில பக்க விளைவுகளும் உண்டு. சில உடல்நலம் குறித்த பத்திரிகைகள் பாலியல் தொ டர்புகளால் ஏற்படக்கூடிய தீங்கு களையும் ஆபத்துக்களையும் வலியுறுத்து கின்றன. வேறு சில பத்திரிகைகளோ பாலியல் நட வடிக்கைகள் ஒரு மனிதனை எப்படி முழுமை பெற்றவனாக ஆக்குகின்றன என்று சொல்கின்றன. இப்படிப்பட்ட மாறுபட்ட கருத்துக்களால் இளைஞர்களிடம் குழப்பம் ஏற்படுவது இயற்கை.
செக்ஸ¤ம், பாலுணர்வும் மிகவும் நுண்ணியமான விஷயமாகக்கருதப்படுவதால் இதைப் பற்றிய கருத்துக்கள் சமூகத்தில் பல தட்டு க்களில் இருப்பவர்களிடையே வே றுபடுகின்றன. பாலுணர்வுக ளைச் சுற்றியுள்ள கலாசார, ஒழுக்கக் கட்டுப்பாடுகளைப் பற்றி அறிந்து கொள்ள இளைஞர்கள் ஆர்வம் காட்டுகிறார்கள். அவர்கள் கருச் சிதைவு, திருமணத்திற்கு முன் உடலுறவு, கருத்தடை சாதனங்க ள், ஓரினச்சேர்க்கை போன்ற விஷயங்கள் பற்றி விவாதிக்கவும் பேசுவதற்கும் ஒரு களம் இவர்களுக்கு அம¨ந்தாலொழிய ஒழுக்க, மத ரீதியான கலாசாரக் கட்டுப்பாடுகள் பற்றி முழுமை யாக அறிந்து கொள்ள இயலாமல் போகும்.
பாலியல் கல்வி கற்றுத்தரும் ஆசிரியர்களுக்கு இவைகள் பற்றித் தனிப்பட்ட கருத்துக்கள், நம்பிக்கைகள் இருக்கலாம். இந்தத் தனி ப்பட்ட எண்ணங்கள் அவர்கள் கற்றுத் தரும் கல்வியில் பாதிப்பு ஏற்படுத்தக் கூடாது. அவர்கள் இவை இரண்டையும் பிரித்துணர வேண்டும். சொல்லிக் கொ டுக்கும் ஆசிரியர், கல்யாணத்திற்கு முன்னால் உடலுறவு கூடாது என்ற கொ ள்கை உள்ளவராக இருக்கலாம். அவரது இந்த சொந்தக் கருத்து, ஆபத்தி ல்லாத பாலுறவு பற்றியும், கருத்தடை கள் பற்றியும் சொல்லிக் கொடுப்பதில் தடைக்கல்லாக இருக்கக் கூடாது. பாலு றவு பற்றிய கல்வியில் பொது ஒழுக்கம் பற்றிய தங்கள் கருத்துக்களை மாண வர்களிடையே ஆசிரியர்கள் திணிப் பது தோல்வியையே தரும்.
படிக்கும் இளைஞர்களுக்கு உடலுறவு பற்றிய விளக்கங்களையும் அதனால் ஏற்படக்கூடிய விளைவுகளையும் எடுத்துச் சொல்லி அவர்களாகவே அது பற்றித் தெளிந்து ஒரு முடிவுக்கு வரச் சேய்வதுதான் உண்மையான பாலியல் கல்வி. உடலுறவு ஏற்படுத்தும் உணர்ச்சிகள், மற்றவரது உடல், மன உணர்ச்சிகளுக்கு ம் எண்ணங்களுக்கும் தர வேண்டிய மதி ப்பு – இவைகள் பற்றியும் சொல்லித் தரு வதாக இருக்க வேண்டும். இளைஞர்கள் பால் வேறுபாடுகள் பற்றி உணர இந்தக் கல்வி வழி செய்ய வேண்டும்.
அடுத்த படியாக, பாலியல் கல்வி, எத்த கைய உறவுகள் எண்ணங்களை பலப்ப டுத்தக் கூடியது என்று இளைஞர்கள் தாங் களே தீர் மானிக்கும் வகையில் அமைய வேண்டும். அவர்கள் பாலுறவில் அச்சுறு த்தல், தவறான அணுகுமுறைகள், மற்ற வர்களது பலவீனத் தைத் தனக்கு சாதகமாகப் பயன்படுத்துதல் முதலிய முறைகள் இனிமையான உறவுகளை எப்படிப் பாதிக்கும் என்பதை உணரும் படியாக அமைய வேண்டும்.
இளைஞர்கள் செக்ஸ் பற்றிப் பல்வேறு முறைகளில் தெரிந்துகொள்கிறார்கள். அவற்றில் சில சரி யான தகவல்களைக் கொடுக்கும் வேளையில், சில சாதனங்கள் பாலுறவு பற்றிய தவறான கருத் துக்களைப் பரப்புகின்றன. அதனால் செக்ஸ் பற்றிய கல்வியைக் கொடு க்குமுன்னால், மாணவர்களிடை யே பாலுறவு பற்றிய தவறான கரு த்து இருந்தால் முதலில் அதைப் போக்க வேண்டும். பாலியல் கல்வி படிப்பவர்கள் சிலர், கருத்தடைச் சாதனங்களால் பயனில்லை என் றோ அல்லது HIV/AIDS போன்ற நோய்கள் குணப்படுத்தக்கூடிய வைதான் என்றோ தவறான கருத்துக்கள் கொண்டி ருக்கலாம். இதுபோன்ற தவறான கருத்துக்களை முதலில் அவர்களது மனதிலிருந்து நீக்க வேண்டும். இளைஞர்கள் கீ¢ழே கொடுக்கப்பட்ட விஷ யங்கள் பற்றி நன்றாக அறிந்திருப்பது அவ சியம்:
பாலுணர்வு வளர்ச்சி (Sexual development)
இனப்பெருக்கம்
கருத்தடை
உறவுகள்
இளைய சமுதாயத்தினர் அவர்கள் வயதிற் கு வரும்போது உடலி லும், மன அளவிலும் ஏற்படும் மாற்றங்கள், கருத்தரித்தல், கருத் தடை, குடும்பக் கட்டுபாடு, உடலுறவு மூல மாகப் பரவும் வியாதி கள், HIV/AIDS பற்றித் தெரிந்துகொள்ள வேண்டும். எந்த விதமான கருத்தடைச் சாதனங்கள் உள்ளன, அவை எப்படி வேலை செய்கி ன்றன, அவைகள் எப்படி உபயோகப் படுத்தப் படுகி‎ன்றன, எந்தக் கருத்தடைச் சாதனங்கள் சிறந் தவை, அவைகளை எப்படிப் பெற முடியும் என்பது பற்றி அறிந்திரு த்தல் நலம். இவை பற்றி ஆலோ சனைகளை சமுதாயத்திலும், தேசிய அளவிலும் எப்படிப் பெற லாம் என்பதையும் அவர்கள் தெ ரிந்திருக்க வேண்டும்.
பாலியல் கல்வியைத் துவக்குவ தற்கு எது சரியான தருணம்? சொல்லப் போனால் பாலியல் கல்வியை இளமையிலேயே, பருவமடைவதற்கு முன்பே ஆரம்பி க்க வேண்டும், சரியாக எப்போது ஆரம்பிக்க வேண்டும் என்பது படிக்கும் இளைஞனது உடல், மன அறிவு வளர்ச்சியையும் அவர்களது புரிந்துகொள்ளும் தன்மையையும் பொறு த்தது.
என்ன சொல்லிக் கொடுக்க வே ண்டும், அதை எப்படி சொல்லிக் கொடுக்க வேண்டும் என்பது அதை யார் சொல்லிக் கொடுக் கிறார்கள், எப்போது சொல்லிக் கொடுக்கிறார்கள் எந்தச் சூழ் நிலையில் சொல்லிக் கொடுக்கப்படுகிறது, படிக்கும் இளைஞன் என்ன தெரி ந்துகொள்ள விரும்புகிறான் என்பதைப் பொறுத்தது. நாட்களை வீணாக்காமல் இளமையிலேயே பாலியல் கல்வியைத் துவங்குவது அவசியம். அடிப்ப டையான விஷயங்களை முதலி ல் சொல்லிக் கொடுக்கலாம். உதாரணமாக சிறு வயதில், மனி தர்கள் எப்படி நாளுக்கு நாள் குழ ந்தைப் பருவத்திலிருந்து காலப் போக்கில் வளர்ச்சி அடைகிறார் கள். எப்படிக் குழந்தைகளாயிருந் து பெரியவர்களாகிறார்கள் போ ன்ற விஷயங்களை அடிப்படை யாக வைத்துப் பாலியல் கல்வியைத் துவக்கலாம். இது பருவ மெய்துவதைப் பற்றி விளக்கமாக சிறு பிராயத்திலேயே தெரிந்து கொள்ள அடிப்படையாய் இருக்கும். நம் உடலில் நோய்களைஉண்டாக்கும் கிருமிகளைப் பற்றியும் அவர்களுக்கு சொ ல்லிக் கொடுக்கலாம். இது பாலுறவால் தொற்றக்கூடிய நோய்களைப் பற்றிப் பின் னர் விளக் குவதற்கு உதவி செய்யும்.
பாலியல் கல்வி இளைஞர்க ளிடையே தேவையற்ற ஆர் வத்தைத் தூண்டி அவர்களைப் பாலுறவுகளைப் பரிசோதனை செய்து பார்க்கத் தூண்டுகிறது என்று சிலர் வாதிடுவதுண்டு. ஆனா ல் இவ்வாறு நடந்ததாக எந்த ஆதாரமும் இல்லை. இளவயதில் சொல்லப்படும் செய்தி அவர் களது மனதில் சுலபமாகத் தங்குகிறது. குழந்தைகளி டம் எதையும் பேசக் கூடாது என்ற மனப் பான் மையுடன் இல்லாமல் குழந்தைகள் நம் மைக் கேள்வி கேட்கும் போ து தெளிவுபடுத்துவது மிகவு ம் அவசியம். பெற்றோர்களு ம், ஆர்வலர்களும் இளைஞ ர்களிடம் செக்ஸ் பற்றியும் பாலியல் உறவுகள் பற்றியும் விவா திக்கலாம். பெற்றோர்களுக்குத் தங்கள் குழந்தைகளிடம் இது மாதிரி விஷயங்கள் பற்றிப் பேசுவதில் ஒரு தயக்கம் இரு க்கிறது. இது போன்ற தயக்க ங்களைக் கைவிட்டு, அதை ஒரு முக்கியத்தவம் வாய்ந்த ததாக, இளைஞர்களது பார் வையை விசாலப் படுத்துவ தாக, சமூகப் பிரச்சினைகளை த் தீர்க்கும் ஒரு கல்வியாக அணுக வேண்டும். இதற்கு இளைஞர்களிடம் ஒரு நல்ல நெருக்கம் வைத்துக்கொண்டு நம்மிடையே அவர்கள் மனதிலுள் ளதைப் பரிமாறிக் கொள்வதற்கான பரஸ்பரம் நம்பிக்கையை வளர்க்க வேண்டும். நெதர்லாந்து போன்ற நாடுகளில் இத்தகைய மன ப் பான்மை இளைஞர்களிடையே பாலியல் பற்றிய ஒரு ஆரோக்கி யமான சிந்தனையைத் தோற்றுவி த்துள்ளது. இளைஞர்களின் வயது கூடும்போது அவர்களுக்குப் பாலுற வு பற்றி மேலும் தெரிந்து கொள்ள வாய்ப்புக்கள் சமுதாயத்தின் மூல மாகவும் ஊடகங்களின் மூலமாக வும் அவர்களது பள்ளிகளின் மூல மாகவும் கிடைக்கி‎ன்றன. ஆனாலு ம் குழந்தைகளுக்கு செக்ஸ் பற்றிய அறிவினை ஊட்டுவதில் பெற் றோர்களுக்குத்தான் பெரும் பங்கிருக்கிறது.
வீடுகளில் பெற்றோர்களிடம் இளைஞர்கள் மனம் விட்டுப்பேசித் தங்களுக்கு ஏற்படும் சந்தேகங்களை, கவலைகளைத் தீர்த்துக்கொள்ளலாம். இது ஒரு தொடர் கல்வி. பெற்றோர் களின் பங்கு அதிகமிருந் தாலும் பள்ளிகளுக்கும் மற் றும் பல சமூக நிறுவனங் களுக்கும் இந்தக்கல்வியை இளைஞர்களுக்கு அளிப்ப தற்கான பெரும் பொறுப்பு இருக்கிறது.
பள்ளிகளில் ஒரு பாடத் திட்டத்தை வைத்துக்கொண்டு அதன்படி, கல்வி தரப்படுகிறது. வேண்டிய தகவல்களை இளைஞர்களிடம்பகிர்ந்து கொள்ளப் பாடத் திட் டங்கள் போதுமான வாய்ப் பளிப்பதில்லை. பாலியல் கல் வி இளைஞர்களை சரியான முறையில் சென்றடைய வே ண்டுமானால் அவைகள் வே ண்டிய தகவல்களை அனை த்து இடங்களிலிருந் தும் பெற வேண்டும். பள்ளியில் நடப் படத்தப்படும் கல்வியில் பெற்றொர்களையும் ஈடுபடுத்த வேண்டும். ஆசிரியர்களும் பெற்றோர்களும் ஊடகங்களின் மூலமும் மற்ற சாதனங்கள் மூல மும் தாங்கள் பெறும் செய்திகளை இளைஞர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும். சில நாடுகளில் பாலியல் கல்வியை வலுப்படுத்துவற்கான முறைகளை இளைஞர்களிடமே கொ டுக்கிறார்கள். இதனால் அவர்கள் தே வைகளை அவர்களே உணர்வதோடு ஒரு ஈடுபாடும் ஏற்படுகிறது. பள்ளி களில் பாலியல் கல்வி அவசியம் என் ற எண்ணம் வேகமாகப் பரவி வருகி றது.
பாலியல் கல்வி பள்ளிகளில் எந்த முறையில் அமைய வேண்டும்?
அவை இளைஞர்களுக்கு முக்கியமாகக் கற்றுத்தர வேண்டியவை என்ன?
1. அது இளைஞர்கள் தவறான பாதையில் போவதைத் தடுக்க வேண்டும்.
2. மக்களிடையே உள்ள வேறு பட்ட பாலுறவு பற்றிய கருத்து க்களுக்கும் மனோ பாவங்களு க்கும் எது காரணம்?
3. பாலுறவு பற்றியும் அதனால் ஏற்படக்கூடிய பாதிப்புக்கள் பற்றியும் தெளிவான அறிவு.
4 தவறான பாலுறவால் ஏற்பட க்கூடிய பதிப்புக்கள், கருத்தடை சாதனங்கள், குடும்பக் கட்டுப்பாடு பற்றிய சரியான தகவல்கள்.
5 சமூகத்தினாலும், உடனிருப்பவர்களாலு ம் ஏற்படக்கூடிய அழுத் தங்கள்.
6. இளைஞர்களின் மனதில் பதியுமாறு பல விதமான முறைகளைக் கையாண்டு இளைஞர்கள் பாலியல் கல்வியின் அவசி யத்தை உணரச் செய்தல். இந்தக் கல்வி முறை இளைஞர்களுக்குப் பாலியல் கல் வி பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும், உடலுறவு கொள்ளும்போது ஏற்படக் கூடி ய ஆபத்துக்களைத் தவிர்த்துக் கொள்ள உதவும்.
7. பாலியல் பற்றி நன்கு அறிந்த அது சார்ந் த துறையிலிருப்பவர்களுடன் கலந்துரை யாடல்.
மேலே சொன்ன யாவுமே மிகவும் அவசியமானவை, ஒன்றுக் கொ ன்று தொடர்புடயவை. முக்கியமாக, பாலியல் கல்வி பாலியல் நல நிலையங்களுடன் நெருங்கிய தொடர்புடையவாய் இருக்கவேண்டும். இளைய சமுதாயத்திற் குப் பாலியல் கல்வி அவசியம் என்ப தை நன்குணர்ந்தாலும் அதை எவ் வாறு அவர்களுக்குப் பயன்தரும் வகையில் அளிக்க முடியும் என்று ஒரு முடிவுக்கு வருவது அவ்வ ளவு எளிதானதல்ல. பாலியல் கல்வி என் பது ஒரு முனைப்பட்டதல்ல. பலவே று தனித்தனிப்பட்ட செயல்களை ஒன்று சேர்க்க வேண்டும். அது மட்டு மின்றி இது உணர்வுபூர்வமான நுண் ணிய முறையில் அணுக வேண்டிய ஒரு கல்வி. இளைஞர்களின் மனோ பாவம், ஊடகங்கள், கற்றுக் கொடுக்கும் ஆசிரியர்களின் பங்கு, அவர்களின் தனிப்பட்ட எண்ண ங்கள், பெற்றோர்களின் ஒத் துழைப்பு, கற்றுக்கொள்பவ ரின் மனப்பக்குவம் போன்ற பல விஷய ங்கள் இந்தக் கல் வியில் அடங்கியிருக்கின் றன. சமூக நல நிலையங்க ளும் இதில் பெரும் பங்காற் ற முடியும். அரசாங்கத்தின் உதவியுடன் ஊடகங்கள் மூலமாகப் பாலியல் கல்வி யை நாட்டின் பல பாகங்களிலுமுள்ளவர்களுக்கு எளிதில் கொ ண்டு சேர்க்க முடியும். பாலி யல் கல்வியின் வளர்ச்சி மே லே சொன் னவர்களின் பங்களிப்பில் தான் இருக்கி றது. இதைத் தவிர, புதிதாக த் திருமணமான தம்பதிகள், ஒரினச் சேர்ர்க்கையினர் ஆகியோருக்கென்று தனியா க எவ்வாறு பாலுறவுகள் பற்றிய அறிவை அளிக்க முடியும் என்பதையும் சிந்திக்க வேண்டும். அகதிகள். அனாதை யாகத் தெருவில் திரிபவர்கள், சிறையிலிருக் கும் இளைஞர்கள். என்று பல விதமான பிரிவினர் களுக்கும் பாலுறவு பற்றிய விழிப்புணர்வை ஊட்டவேண் டும்.
இங்கே கூறப்பட்டவை பாலி யல் கல்விக்கு அடிப்படையாக இருந்தாலும் எல்லாப் பிரிவி னரையும் ஒருங்கிணைக்கும் கல்வியைத் தயார் செய்ய வே ண்டும். கொடுக்கப்படுகின்ற பாலியல் கல்வி எதிர் காலத்தில் ஒரு ஆரோக்கியமான சமுதாயத் தை உருவாக்குவதாக இருக்கவேண்டும்.

No comments:

Post a Comment