Lord Siva

Lord Siva

Saturday, 1 October 2011

நெய்யில் உள்ள மருத்துவ குணங்கள்

பாலை நன்றாக காய்ச்சி ஆறிய பின் அதில் சிறிதளவு தயிரை கலந்து மூடிவைத்து 6 அல்லது 8 மணி நேரத்திற்குப் பின் எடுத்துப் பார்த்தால் அது முழுவதும் தயி ராக மாறியிரு க்கும்.
இந்த தயிரில் சிறிது நீர்விட்டு மத்தால் கடை ந்தால் வெண்ணெய் தனியாக பிரிந்துவிடும். இதனை சட்டியில் இட்டு காய்ச்சும் போது அது உருகும். அதில் வெற்றிலை அல்லது முருங்கை இலையை போட்டால் நன் றாக பொரியும். நல்ல வாசனை உண்டாகும். பின் அதனை இறக்கி வடி கட்டி பத்திரப்படுத்திக் கொள்ளலாம். இவ்வாறு எடுக்கப்படும் நெய் யா னது வெகுநாட்கள் வரை கெடாமல் இருக்கும். இத்தகைய நெய்யில்தான் மருத்துவ குணங்கள் அதிகம் உள்ளது.
2000 ஆண்டுகளுக்கு முன்பே சித்த ஆயுர்வேத மருத்துவத்தில் நெய்யின் பயன்பாடு அதிகம் இரு ந்து வந்துள்ளது. மருத்துவக் குணம் வாய்ந்த மூலி கைகளில் உள்ள அணுக்களின் சுவர்களை ஊடுரு வக்கூடிய தன்மை நெய்க்கு இருப்பதால் இத்தகைய மருந்து தயாரிப்பில் நெய்யை அதிகம் பயன் படுத்துகின்றனர்.
மருந்துக்கள் கெடாமல் பாதுகாக்க நெய்யே சிறந்த பொருளாகும். நெய்யை ரசாயனம் என்று ஆயுர்வேத மருந் தாளர்களால் அழைக்கப்படுகிறது. ஏன் என்றால் முழு உடல் நலம் கொ டுத்து நீண்ட ஆரோக்கியத்தைக் கொ டுக்கும் குணம் நெய்க்கு உண்டு.
இதுபோல் சித்த மருத்துவத்திலும் மருந்துகளுக்கு துணைமருந்தாகவும், மருந்துகள் கெடாமல் பாதுகாப்பதற் கும் நெய்யையே பயன்படுத்தி வந்து ள்ளனர்.
ஒரு ஸ்பூன் நெய்யில் 14 கிராம் கொழு ப்பு சத்துக்கள் நிறைந்துள்ளது.
ஜீரண சக்தியைத் தூண்ட
நெய் வயிற்றில் உள்ள அமிலத்தன்மையை சமன் செய்து வயிறு மற்றும் குடல் பகுதியில் உள்ள மியூகஸ் லையனிங் பகுதி யை வலுவாக்குகிறது.
நெய்யில் உப்பு, லேக்டோஸ் போன்ற சத்துக்கள் கிடையாது. இதனால் பால் மற்றும் பால் பொருட் கள் ஒத்துக்கொள்ளாதவர்கள் நெய்யை உபயோ கித்துக்கொள்ளலாம்.
நெய் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. கேன்சர், வைரல் நோய் களை தடுக்கிறது.
நெய்யில் CLA – Conjulated Linoleic Acid உள்ளது. இது உடல் பரும னாவதைத் தடுக்கிறது.
அதுபோல் ஒமேகா 3 என்ற கொழுப்பு அமிலம் நெய்யில் உள்ளதாக அண்மையில் கண்டறிந்துள் ளனர்.
இது மூளைக்கு சிறந்த டானிக். 
நெய்யில் Saturated fat – 65%
Mono – unsaturated fat – 32%
Linoleic – unsaturated fat -3%
இத்தகைய மருத்துவக் குணம் வாய்ந்த நெய்யை உணவில் எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பதை அறிந்து கொள்  வோம்.
நெய் உருக்கி மோர் பெருக்கி….
அதாவது நெய்யை நன்கு உருக்கி சுடு சாதத்தில் சேர்த்து கலந்து சாப்பிட வேண்டும். நெய்யை உருக்கி சாப்பிடு வதால் உடலுக்கு குளிர்ச்சியைக் கொடுத்து உஷ்ண த்தைத் தணிக்கும்.
தோசை வார்க்கும் போது எண்ணைய்க்கு பதிலாக நெய் சேர்த்துக் கொள்ளலாம். நெய் சேர்த்த பட்சணங்களை உண் ணலாம்.
மலச்சிக்கலைப் போக்கும். வாத, பித்த, கபத்தின் சீற்றங்களைக் குறை த்து அதனதன் நிலையில் நிறுத்தி நோய்களின் தாக்கத்தைத் தடுக்கும்.
* ஞாபக சக்தியை தூண்டும்
* சரும பளபளப்பைக் கொடுக்கும்
* கண் நரம்புகளைப் பலப்படுத்தி கண் பார்வை தெளிவடையச் செய்யும்.
உடல் வலுவடைய
சிலர் எப்போதும் சோர்வுடன் உடல் வலுவில்லாமல் காணப்படுவார்கள். சிறிது தூரம் நடந்தால்கூட அவர்களு க்கு மேல் மூச்சு வாங்கும். உடனே அமர்ந்து விடுவார்கள். கால்கள் அதிக மாக வலிப்பதாகக் கூறுவார்கள். இதற்கு காரணம் உடலில் சத்தின் மையே…
வர்கள் தினமும் மதிய உணவில் நெய்யை சேர்த்து வந்தால் உடலு க்குத் தேவையான சத்துக்கள் கிடைக்கும்.
குடற்புண் குணமாக
குடற்புண் (அல்சர்) கொண்டவர்கள் பசி யின்மையால் அவதியுறுவார்கள். சரி யான நேரத்திற்கு உணவு சாப்பிடாமலு ம், அதிக பட்டினியாகவும் இருப்பவர் களின் வயிற்றில் ஜீரண அமிலங்கள் சுரந்து குடலின் உட்புறச் சுவர்களை புண்ணாக்கி விடுகின்றன. மேலும் வாயுக் கோளாறு உள் ளவர்களுக்கும், உணவில் அதிக காரம் சேர்த்துக் கொள்பவர்களுக்கும், மது போன்ற போ தை வஸ்துக்கள் உபயோகிப்பவர்களு க்கும், மன அழுத்தம் கொண்டவர்க ளுக்கும் குடல் புண்ணாகிவிடும். இத னால் வாயிலும் புண்கள் உருவாகி, ஒருவித நாற்றம் வீசும்.
இவர்கள் உணவில் நெய் சேர்த்து சா ப்பிட்டு வந்தால் குடலின் உட்புறச் சுவ ர்களில் உள்ள புண்கள் ஆறுவதுடன், சுரப்பிகள் பலப்படும். மலச் சிக்கல் நீங்கும். நன்கு ஜீரண சக்தியைத் தூன் டும்.

மலட்டுதன்மையை போக்க செயற்கை விந்தணு

மலட்டுதன்மையை போக்க செயற்கை விந்தணு

மலட்டுத்தன்மையால் பாதிக்கப்பட்ட ஆண்கள் குழந்தைபேறு இன்றி தவிக்கின்றனர். எனவே அவர்களின் இந்த குறையை போக்க விஞ்ஞானிகள் பல ஆய்வு களை மேற்கொண்டு வருகின்றனர்.
கியோபோ பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த ஜப்பான் கருத்தரிப்பு மைய நிபுணர்கள் சமீபத் தில் இதுகுறித்த புதுமையான ஆராய்ச்சியில் ஈடுபட் டனர்.
எலியின் கருவில் உள்ள ஸ்டெம்செல்களில் இருந்து தரம் வாய்ந்த திசு செல்களை ஆய்வ கத்தில் வைத்து தயாரித்தனர். அவற்றை மல ட்டு தன்மையுடன் இருந்த ஒரு எலியின் விரை பைக்குள் செலுத்தினர். அது இயற்கையானதை போன்று செயற்கையான விந்தணுவை உற்பத்தி செய்தது. அவற்றை எலியின் கரு முட்டையில் செலுத்தினர்.
இதை தொடர்ந்து உடல் நலத்துடன் கூடிய எலிக்குட்டிகள் பிறந்தன. என வே இதே முறையை மலட்டுத்தன்மை நோயில் சி க்கி தவிக்கும் ஆண்களின் உடலில் பய ன்படுத்தவும் நிபுணர்கள் முடிவு செய்துள் ளனர்.
இதன் மூலம் மலட்டுத் தன்மை பாதித்துள் ள ஆயிரக்கணக்கான ஆண்கள் பயன் பெற முடியும் என கருதுகின்றனர். இந்த சிகிச்சை முறை ஆண்களுக்கு வரபி ரசாதமாக இருக்கும்.

Tuesday, 27 September 2011

கொலஸ்டிராலும் இதய நோயும்








கொலஸ்டிராலைப் பற்றி தெரிந்து கொள்வதற்கு முன், லிப்பிட்ஸ் [lipids] என்றால் என்ன என்று பார்ப்போம்.நம் உடம்பில் உள்ள எல்லாவிதமான கொழுப்புகளுக்கும் பொதுவான ஒரு பெயர் தான் லிப்பிட்ஸ்[lipids].

எப்படி தண்ணீரும் எண்ணெய்யும் ஒன்றாக கலக்காதோ அது போல் லிப்பிட்ஸும்[எண்ணெய்],ரத்தமும் [தண்ணீர்] ஒன்றாக கலக்காது.அதனால் லிப்பிட்ஸ்புரதத்துடன்[protein]கலந்து லிப்போபுரோட்டீனாக[lipoprotein]மாறி ரத்ததில்கலந்துஅது தன்செயலைசெய்கறது.சரி.இப்ப,இங்கு,லிப்பிட்ஸுனாலும்,லிப்போபுரோட்டின் என்றாலும் ஒரே அர்த்தம் தான்.
இனி ரத்தத்தில் இருக்கும் லிப்பிட்ஸ் என்னென்ன என்று பார்ப்போம்.ரத்தத்தில் பல வகையான லிப்பிட்ஸ் இருக்கிறது.அதில் முக்கியமானதுஎன்றபார்த்தால்கொலஸ்டிராலும்.டிரைகிலிசரைட்ஸும்[triglycerides] தான்.முதலில் கொலஸ்டிராலைப் பற்றி தெரிந்து கொள்வோம்.
கொலஸ்டிரால் என்றால் என்ன? அது எங்கிருந்து வருகிறது என்று பார்ப்போம். கொலஸ்டிரால் என்பது ரத்தத்தில் கலந்திருக்கும் ஒரு வகை லிப்பிட்[lipid].இதை இரண்டு வகையாக பிரிக்கலாம்.முதலில் வருவது லோடென்சிட்டி லிப்போ ப்ரோட்டீன்[low density lipoprotein-LDL] அல்லது [bad ].இதுதான் நம் ரத்த குழாய்களில் படிந்து ஆத்திரோஸ்கிலிரோசிஸுக்கு [atherosclerosis] வழிவகுக்கிறது.
அடுத்து வருவது High density lipoprotein-[HDL]அல்லது .[GOOD CHOLESTEROL]இவ்வகை ,ரத்தக் குழாய்களில் கொழுப்பு படிவதை தடுத்து ஆத்திரோஸ்கிலிரோசிஸிலிருந்து நம்மை காக்கிறது.
கொலஸ்டிரால் எங்கிருந்து வருகிறது?
முக்கியமான திசுக்கள் மற்றும் ஹார்மோன்களின் உற்பத்திக்கு கொலஸ்டிரால் அதி முக்கியமாக தேவைப்படுகிறது. நம் உடலே கொலஸ்டிராலை உற்பத்தி செய்யும் திறன் பெற்றிருப்பதிலிருந்து இதன் முக்கியத்துவத்தை உணரலாம்.இப்படி நம் உடலினுள்ளே தயாராகும் கொலஸ்டிராலை endogenous கொலஸ்டிரால் என்கிறோம்.

வெளியிலிருந்து கிடைக்கும் கொலஸ்டிராலை ,அதாவது நம் உணவிலிருந்து கிடைக்கும் கொலஸ்டிராலை exogenous cholesterol என்கிறோம்.இவ்வகை முக்கியமாக வெண்ணெய்,நெய், மற்றும் பொருட்கள்,இறைச்சி வகைகள்,முட்டை[animal origin],மற்றும் தேங்காய்,எள்,கடலை,சூரியகாந்தி எண்ணெய் வகைகளிலிருந்தும் கிடைக்கிறது.[plant origin].

பொதுவாக நம் உடலின் ஆரோக்கியத்திற்கு கொழுப்பு சத்தானது சிறிதளவே தேவைப் படுகிறது.ஆனால் தவறான நமது உணவுப் பழக்க வழக்கத்தால் ,தேவைக்கு அதிகமான கொலஸ்டிரால் நம் ரத்தத்தில் கலந்திருக்கிறது. இந்த அதிகப்படியான கொலஸ்டிரால் தான் நம் ரத்தக்குழாய்களின் சிவர்களில் படிந்து,ஆத்திரோஸ்கிலிரோசிஸில் ஆரம்பித்து ,coronary artery disease ல் முடிந்து நமக்கு எமனாகிறது.

நம் ரத்தத்தில் கலந்திருக்கும் அதிகப்படியான கொலஸ்டிரால் நம் உணவிலிருந்து தான் வருகிறது.அதனால் நம் உணவில் கொழுப்புச்சத்தை குறைத்தால் ,நம் ரத்தத்தில் உள்ள கொலஸ்டிராலின் அளவும் குறைந்து ஆரோக்கியமான இதயத்துடன் வாழலாம்.