Posted on June 18, 2015 by Muthukumar
ஆண்குறிக்கு கீழே விதைப்பை அமைந்துள்ளது. மெல்லிய சதைவடிவில் சாதாரண நிலை யில் தொங்கிக் கொண்டிருக்கு ம் இந்த விதைப்பை, உணர்ச்சி வசப்படுகிறபோது, அதாவது விறைப்பு நிலையில், உடம்போடு ஒட்டிக் கொள்கிற மாதிரி
சிறிது சுருங்கி விடும். இதற்கு ள் இரண்டுவிதைகள் உள்ளன.
விதைப்பையின் வெளிப்புறம் சுருக்கம் சுருக்கமாக இருப்பது ஏன் தெரியுமா? பொதுவாக நமது உடம்பின் வெப்ப நிலை 98.6 டிகிரி ஃபாரன்ஹீட்டாகும். விதைப் பைக்குள் இருக்கும் விதை நன்கு வேலை செய்ய வேண்டும் என்றால், உடம்பின் வெப்ப நிலையை விட 3 முதல் 4 டிகிரி ஃபாரன்ஹீட் குறைவாக இருக்க வேண்டும். எனவேதான், உடம்புக்கு வெளியே பை போன்ற உறுப்பை படைத்து, அதற்குள் உடம்பி ன் பொது வெப்ப அளவைவிட குறை வான வெப்ப நிலையைப் படைத்து, அதில் விதைகளை வைத்திருக்கி றது இயற்கை.. என்ன அற்புதமான சிருஷ்டி !
விதைப் பைக்குப் போதுமான காற்று கிடைக்காமல் போகும் என்பதாலும், விதைப் பையின் வெப்பநிலை அதிகரி க்கும் என்பதா லும்தான், வெப்ப மண் டலப் பிரதேசங்களில் வசிக்கும் ஆண் கள் இறுக்கமான ஆடைகளைக் அணி யக் கூடாது என்று வலியுறுத்தப்படுகி றது. அப்படியில்லாமல் இறுக்கமான உடைகளைத் தொட ர்ந்துபயன்படுத்தினால், விதைப் பையின் வெப்ப நிலை உய ர்ந்து உயிரணுக்களின் தர மும், செயல்பாடும் பாதிக்க ப்படும் என்பது நிரூபிக்கப் பட்ட உண்மை. அதனால் தான் மருத்துவர்கள் 24 ம ணி நேரமும் உள்ளாடைக ளை அணியக்கூடாது என் றும், பருத்தி உடைகளும், தளர்வான உடைகளும்தான் உகந்தது என்றும் சொல்கிறார்கள்.
விதைப்பையில் இரண்டு விதைகள் உள்ளன. ஒவ்வொரு விதையும் ஒன் றரை அங்குல நீளம் ஒரு அங்குல அகலத்தில் நீள்கோள வடிவில் அமைந்திருக்கும். ஒவ்வொன்றின் எடையும் ஒரு அவுன்ஸ் (சுமார் 28 கிராம்) இருக்கும்.
இது பருவமடைந்த ஆண்களுக்கு! எல்லோருக்கும் இடது பக்கத் தில் உள்ள விதை எடை சிறிது கூடுதலாகவும், சிறிது கீழிறங்கியு ம் இருக்கும். இது ஏன் என்பதற் கான காரணத்தை மருத்துவ உல கம் இதுவரை கண்டுபிடிக்கவில் லை. ஆனால் யூகமாக, “நடக்கும் போது இரண்டு விதையும் இடிபடா மல் இருப்பதற்காகவும், அடிபட்டா ல் கசங்கி விடாமல் இருப்பதற்கா கவும் இப்படி அமைக்கப் பட்டுள்ள து” என்று சொல்லப்படுகிறது.
இந்த விதைகள், கரு உருவாக்கக் கூடிய உயிரணுக்களைத் தயார் செய்வது, ஆண் ஹார்மோன் எனப்படும் “டெஸ்டாஸ்டொரான்” (Testoste rone) தயாரிப்பது என இரு வேலைகளைச் செய்கிறது. கம்பீரமான குரல், மீசை, தாடி, அழகான தோற்றம், தசைகளின் வளர்ச்சி, செக்ஸ் எண்ணங்கள் அதற்கான தூண்டுத ல்கள் போன்றவை இந்த ஆண் ஹார்மோ னின் பரிசுதான்!
ஒவ்வொரு ஆணின் உடம்புக்குள்ளும் அடி வயிற்றில் இரண்டு சுரப்பிகள், பை மாதிரி அமை ந்திருக்கும். “செமினல் வெஸி க்கிள்ஸ்” எனப்படும் சுரப்பி, சர்க்கரை நீரைப் போன்ற ஒரு திரவத்தைத் தயார் செய்கிறது. இந்தத் திரவம் விந்தின் ஒரு ப குதியாகும். அடு த்து, “ப்ராஸ் டேட் கிலாண்ட்” என்பது சிறு நீர்பைக்குக்கீழ் அமைந்துள்ள து. இது “ப்ராஸ்டேட் ஃப்ளூய்டு” எனும் திரவத்தை உற்பத்தி செய்கிறது. இதுவும் விந்தின் ஒரு பகுதியாக மாறும்.
No comments:
Post a Comment