Lord Siva

Lord Siva

Sunday, 29 March 2015

ஆண்களின் விதைப்பையில் உண்டாகும் வலிகளும் அதற்கான காரணங்களும்!



பல ஆண்களுக்கு தங்களது உடல்சார்ந்த விஷயங்களில் போதிய அடிப் படை அறிவுக்கூட இல்லாமல் இருந்து வருகின்றனர். மேலும் அடிப்படை அறிவு இருக்கும் ஒரு சிலரும் அலட்சியமாக
இருந்து விடுகின்றனர். தன் உடலில் உள்ள ஆண்குறியின் கீழுள்ள‍விதைப்பையை பற்றிய ஒரு சில அடிப்படை விஷயங்க ளைத் தெரிந்து, வலியோ அல்ல‍து வேறு ஏதேனும் அறிகுறிகளோ தென்படும் போதே அந்நோய்களை ஆரம்பத்திலேயே கிள்ளி எறிந்து விடவேண்டும்.
ஆனால் இன்றைய  பெரும்பாலான ஆண்கள் தங்களின் அந்தரங்க பகுதியில் ஏதேனும் பிரச்சனை இருந்தால், அதனை மருத்துவரிடம் சொல்ல பெண் களைவிட ஆண்கள் அதிகளவில் தயங்குகின்றனர். நிறைய ஆண்களுக்கு விதைப்பையானது அவ்வப் போது வலிக்கும்.
ஆனால் அப்படி வலிப்பதற்கான காரணங்கள் தெரியாது. மேலும் வலித்தாலும் அதனை மரு த்துவரிடம் சொல்லி, அதற்கான காரணத்தை தெரிந்துகொள்ள தயங்கி மறைக்கின்றனர். ஆனால் ஆண்களுக்கு விதைப்பையானது வலிக்கிறது என்றால் அதற்கு பல காரணங்கள் உள்ளன. அந்த காரணங்கள் என்னவென்று தெரிந்து, அதனை சரியான நேரத்தில் சரிசெய்யாவிட்டால், பெரும் பிரச்ச னையை சந்திக்கக்கூடும். குறிப்பாக விதைப்பைகளை இழக்க நேரிடும். எனவே விதைப்பையானது வலிக்க ஆரம்பித்தால், உடனே சற்றும் தயங்காமல் மருத்துவரை சந்தி யுங்கள்.
அதிலும் விதைப்பையானது சிலநேரங்களில் இருமலி ன் போதும் வலிக்க ஆரம்பிக்கும். அப்படி எப்போதும் இருமலின் போது வலித்தால், அதற்கு காரணம் ஹெர் னியாவாக இருக்கலாம். ஒருவேளை உட்கார்ந்து எழும் போது, விதைப்பையானது பாரமாக இருப்பது போன்று இருந்தால், விதை ப்பையில் உள்ள நரம்புகள் பருத்து உள்ளது என்று அர்த்தம். இதுப்போன்று விதை ப்பையில் வலி எடுக்க பல காரணங்கள் உள்ளன. இங்கு அவற்றில் சில காரணங்கள் பட்டியலிடப்பட் டுள்ளன.
வெரிகோசல் கட்டி
நீங்கள் எழுந்து நிற்கும் போது உங்கள் விதைப்பையானது பாரமாகவும், உட் கார்ந்திருந்தால்தான் நன்றாக உள்ளது என்பதுபோல் உணர்கிறீர்களா ? அப்படி யெனில் உங்களின் விதைப்பையில் உள்ள இரத்த நாளங்களானது பருத்து ஆங்காங்கு நரம்பு முடிச்சுக்கள் அதிகம் உள்ளது என்று அர்த்தம். இப்படி விதை ப்பையில் முடிச்சுக்களானது அதிகரித் தால், வலியானது அதிகரித்து, கஷ்ட மான சூழ்நிலையை ஏற்படுத்தும்.
காயங்கள் மற்றும் இரத்தக்கசிவு

எப்போதுதாவது உங்களின் விதைப்பையில் பலத்த அடிக்கு உள்ளாகியிருந்தால், சில நேரங்களில் அவ் விடத்தில் காயங்களுடன், இரத்தக் கசிவுகளும் ஏற் படும். எனவே அந்நேரத்தில் மருத்துவரிடம் போதிய சிகிச்சையை எடுத்துக் கொண்டு, நன்கு ஓய்வு எடுக்க வேண்டும்.
ஹெர்னியா
ஹெர்னியா என்பது வெட்டுக்காயம் உள்ள இடத்தி லோ அல்லது ஏதேனும் இணையும் இடத்திலோ புதிதாக ஒரு திசு வளர்வதைக் குறிக்கும். அதிலும் உங்களுக்கு அந்தரங்கப் பகுதியான விதைப்பையில் வலி இருந்தால், உங்களின் விதைப்பை உடலுடன் இணையும் இடத்தில் புதிதாக ஒரு திசு வளர்ந்திருக் கும். எனவே அவற்றை கவனித்து தாமதிக்காமல் உட னே அதனை அறுவை சிகிச்சைசெய்து அகற்றி விடுவது நல்லது.
சிறுநீரக கற்கள்
உங்களக்கு சிறுநீரக கற்கள் இருந்தாலும் விதைப்பையா னது வலிக்க ஆர ம்பிக்கும். எனவே அதனை கவனித்து, அதனை சரிசெய்ய முயலுங்கள்.
விரைச்சிரை திருகுதல்
சிலநேரங்களில் அலறும் வண்ணம் வலி யானது எடுத்தால், அதற்கு காரணம் விந்து தண்டானது திருகியிருந்தாலோ அல்லது விதைப்பைக்கு செல்ல வேண் டிய இரத்தமானது தடைப்பட்டிருந்தா லோ தாங்க முடியாத வலியை ஏற்படுத் தும். இந்நிலையில் உடனே மருத்துவரை சந்திக்கா விட்டால், உங்களின் ஒருவிதையை இழக்கக்கூடும்.
விரைமேல் நாள அழற்சி 

உங்களின் விதைப்பையில் உள்ள விரைமேல் நா ளங்களானது பாக்டீரியா அல்லது வைரஸினால் தாக்கப்பட்டிருந்தால், அவ்விடத்தில் அழற்சி ஏற் பட்டு கடுமையான வலியை ஏற்படுத்தும். பொது வாக இந்த நிலையானது பால்வினை நோய்கள் அல்லது சிறுநீர் சார்ந்த தொற்றுக்களினால் ஏற்ப டும்.
விரைச்சிரை
சிதைவு விதைப்பையின்மேல் ஏதேனும் அடிபட் டால், அப்போது காயத்துடன், இரத்தக்கசிவு ஏற்ப டும். ஆனால் அதுவே கடுமையான அடியாக இருந் தால், விரைச்சிரையானது சிதைவுபட்டு, கடுமை யான வலியை ஏற்படுத்தும். எனவே எப்போதும் ஆண்கள் தங்களின் விதைப்பையை கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டும்.
ஸ்பெர்மடோசீல் 

ஸ்பெர்மடோசீல் என்பது நீர்க்கட்டியாகும். இந்த நீர்க்கட்டியா னது விதைகளுக்குபின்னால் உருவாகக்கூடியது. ஒருவேளை இந்த நீர்க்கட்டியானது மிகவும் பெரியதானால், விதைப்பை யானது பாரமாகி, வலியை ஏற்படுத்தும்.

பெண்களின் பிறப்புறுப்பில் ஏற்படும் வலிகளும் அவற்றிற்கான காரணங்களும்!



பெண்களுக்கு ஒவ்வொரு காலக்கட்ட‍தில் ஒவ்வொரு விதமான வலிகளை தங்களது பிறப்புறுக்களில் உணர்கிறார்கள். அந்த வகையில்
பிரசவத்திற்கு பின் பெண்களின் உடல் முழுவதும் வலியுடன் இருக்கும். இத்தகையவலிகள் குறைய குறைந்தது 2 முதல் 3   வாரத்திற்கு மேல் இருக்கும். அதிலும் பிரசவத்திற்கு பின், பிறப்புறுப்பில் ஏற்படும் வலிக்கு அளவே இருக்காது. இந்த வலியானது குழந்தை பிறப்புடன் தொடர்புடையது. இந்த பிறப்புறுப்பு வலி ஏற்படுவதற்கான காரண ங்கள் என்னவென்று பார் க்கலாம்..
சுகப்பிரசவத்தின்போது, குழந்தையை வெளியே தள்ளுவதற்கு அதிகப்படியான அழுத்தத்தை பெண் கள் தரவேண்டியிருக்கும். ஆகவே அதிகப்படியான அழுத்தத்தை பெண்கள் தருவதால், பிறப்புறுப்பில் வீக்கம் மற்றும் வலியானது சில வாரங்களுக்கு இருக்கும்.
சிலநேரங்களில் சுகப்பிரசவத்தின்போது குழந்தை யை வெளியேற்ற பெண்கள் கொடுக்கும் அழுத்தத்தினால், குழந்தையின் தலை வெளியே வரும்போது, பிறப்புறுப்பின் தசையை கிழித்துக்கொண் டு வெளிவரும்.
இதனால் பிறப்புறுப்பில் காயம் ஏற்பட்டு, அதிகப்படி யான வலியை ஏற்படுத்தும். அதிலும் சிறுநீரை வெளி யேற்றும்போது தான் அதிகப்படியான வலியை உணர நேரிடும். கர்ப்பிணிகள் சிலரால் போதிய அழுத்தத்தைக் கொடுக்க முடியாததால், குழந்தையின் தலை வெளி வராமல் சிக்கிக் கொ ள்ளும்.
அப்போது மருத்துவர்கள், பெண்ணின் பிறப்புறுப்பை லேசாக வெட்டிவிட்டு குழந்தையைவெளியே எடுப்பார்கள். இதனால் தசை வெட்டுப்படு வதால், காயமானது அதிகமாகி வலியை உண்டாக்கும். அதிலும் இந்நிலைமை முதல் பிரசவத்தின் போதுதான் நிகழும் .
இத்தகைய நிலை உள்ள பெண்களுக்கு, காயமானது காய்வ தற்கு 1 மாதத்திற்கு மேல் ஆகும். இவையே பிறப்புறுப்பில் வலி ஏற்படுவ தற்கான காரணங்கள். சிசேரியன் பிரசவத்தை மேற் கொண்டவர்களுக்கு, பிறப்புறுப்பில் வலி ஏற்படுவத ற்கு பதிலாக, அடி வயிற்றில் வலி ஏற்படும்.