Lord Siva

Lord Siva

Thursday 25 August 2011

குழந்தையின் பிறப்புறுப்புகளை ஆரோக்கியமாக வைத்திருப்பதற்கான வழிகள்


குழந்தையின் பிறப்புறுப்புகளை ஆரோக்கியமாக வைத்திருப்பதற்கான வழிகள்

August 25,by muthukumarad

ஆண் குழந்தையின் பிறப்புறுப்பை ஆரோக்கியமாக வைத்திருப்பது எப்படி?


சோப்பு நுரையுடன் கூடிய தண்ணீரில் குழந்தையை குளிபாட்டாதீர்கள். அது காயும் போது அவர்களது பிறப்புறுப்பின் தோலில் எரிச்சலை உண்டாக்கும். உங்கள் ஆண் குழந்தையை குளிப்பாட்டும் போது அதன் பிறப்புறுப்பின் முன் தோலை மேலே ஏற்ற வேண்டாம். ஆண் பிறப்புறுப்பின் முன் தோலானது முழுமையாக தனியாக பிரிய பல மாதங்கள் ஆகும். சில குழந்தைகளுக்கு பல வருடங்கள் கூட ஆகும். ஆகவே அதை ஒன்றும் செய்ய வேண்டாம். அது தானாகவே சுத்தமாக இருக்கும். அதை சுத்தம் செய்வது என்று நீங்கள் ஆரம்பித்தால் அதனால் கெடுதல் தான் அதிகம்.

உங்கள் மகனுக்கு சுன்னத் (பிறப்புறுப்பின் முன் தோல் நீக்கப்படுவது) செய்யப்பட்ட பிறகு மென்மையான சோப்பு மற்றும் தண்ணீரை பயன்படுத்தி சுத்தப்படுத்தவும். சுன்னத் செய்யப்பட்டு சில நாட்கள் வரை உங்கள் மகனின் பிறப்புறுப்பு மிகவும் சிவப்பாக இருக்கும். அதிலிருந்து மஞ்சள் நிறத்திலான திரவம் வடியும். அது ஆறி வருவதற்கான அறிகுறி. எனவே கவலைப்பட வேண்டாம். ஆனால் பிறப்புறுப்பு தொடர்ந்து சிவப்பாக இருந்தாலோ, அதன் நுனி வீங்கியிருந்தாலோ, மஞ்சளாக புண்ணாகியிருந்தாலோ குழந்தையை உடனே டாக்டரிடம் எடுத்துச் செல்லுங்கள்.

பெண் குழந்தையின் பிறப்புறுப்பை ஆரோக்கியமாக வைத்திருப்பது எப்படி?


எப்போதுமே பெண் குழந்தையின் பிறப்புறுப்பை முன்பிருந்து பின்பாக துடைக்கவும். அப்போதுதான் குதத்திலிருந்து (ணீஸீus) கிருமிகள் எதுவும் பிறப்புறுப்பிற்கு பரவாது. முதல் சில வாரங்களுக்கு குழந்தையின் பிறப்புறுப்பு வீங்கியும் சிவந்தும் காணப்படும். வெள்ளையான அல்லது ரத்தம் கலந்த திரவம் குழந்தையின் பிறப்புறுப்பிலிருந்து வடியக் கூடும். இது சாதரணமான ஒன்றுதான். குழந்தை உங்கள் கர்ப்பத்தில் இருக்கும் போது அதற்கு உங்கள் ஹார்மோன்களுடன் ஏற்படும் தொடர்பே இதற்குக் காரணம். இது தொடர்ந்து இருந்தால் குழந்தையை டாக்டரிடம் எடுத்துச் செல்லுங்கள்.

No comments:

Post a Comment