Lord Siva

Lord Siva

Monday 22 August 2011

ஈமச்சடங்கில் விநோதங்கள்

ஈமச்சடங்கில் விநோதங்கள் --எச்சரிக்கை – 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் மட்டும் காண்க•

மனிதனுக்கு பிறப்பு எப்படியோ அப்படித்தான் இறப்பும் ஒரு உலக நியதி.  பிறப்புக்கும் இறப்புக் குமான சிறு இடைவெளியில் வே ண்டுமானால் நம் வாழ்க் கையை நாம் தீர்மானித்துக் கொள் ளலாம். ஆனால் நம் தொடக் கமும் முடிவும் எப்படி என்பதை கடவுள் என்ற ஒருவர் தீர்மானிக்கிறாரோ இல்லையோ கண்டிப்பாக நாம் தீர்மானிப் பதில்லை! ஆனால், ஒரு மனிதனின் இறப்புக்குப் பின் அவனை என்ன செய்வது என் பதை அவன் சுற்றமோ, நட்போ தான் தீர்மானிக்கிறது. அதை நாம் ஈமச்சடங்கு/சவஅடக்கம் என்று சொல்கிறோம். அதாவது ஒரு மனிதனின் கடைசி நிமிட ங்கள் அவை! எனக்குத் தெரிந்தவரை ஒருவர் இறந்தபின் பெரும் பாலானோர் கேட்கும் கேள்வி “இவரை எறிப்பதா இல்லை புதைப்பதா? என்பதுதான்!
எறிப்பதும் புதைப்பதும்தான் பெருவாரியான மக்களின் வழக்கு (அவரவர் மதப்படி/குலப்படி) என்றாலும் மற்றுமோர் வழக்கமும் உண்டு, அதுதான் ஒரு ப்ரேதத்தை அப்படியே (காகம்/கழுகு, இன்னபிற விலங்குகளுக்கு இரையாகும்படி) விட்டுவிடுவது! சரி, இவை மூன்றும் நமக்கு தெரிந்தவதைதான். ஆனால் உலக வழக்கில் இவைதவிர்த்த இன்னும் பல வித்தியாசமான, சுவார ஸ்யம் கலந்த கடைசி நிமிடங்களும் உண்டு என்பதைத்தான் நாம் இந்தப் பதிவில் பார்க்க இருக்கிறோம்! என்ன, சற்றே மர்மம் நிறைந்த இந்த பயணத்துக்கு நீங்கள் தயாரா?

வாசகர்கள் கவனத்துக்கு: நீங்கள் 18 வயதுக்குட்பட்டவர் என்றால் மேலே படிக்காமலிருப்பது நல்லது! நன்றி.

அமைதியின் சிகரங்கள்! (Towers of Silence)

சோராஸ்ட்ரிய மக்களின் குல வழக்கப்படி, ஒரு பிணமானது தூய்மை யற்றது என்பதால் அது சுற்றுச்சூழலை பாதிக்கும் வண்ணம் எறிப்பதும், புதைப்பதும் முற்றிலும் தவறு என்பது அவர்களின் நம்பிக்கை! அதனால், இறந்தவர்களின் உடல்களை “அமை தியின் சிகரங்கள்” என்று சொல்லக்கூடிய, உயர்ந்த மலை முகடுகளில் அமைந்திருக்கும் இடங்களுக்கு கொண்டு சென்று, விலங்குகளும் பிற உயிரினங்களும் புசிக்கும் வண்ணம் விட்டு விட்டு வந்துவிடுகிறார்கள். பின்னர், சூரிய ஒளியில்  நன்கு உலர்ந்த, சுத்தமான எலும்புகளை சேகரித்து அதை எலுமிச்சை சாரில் கரைத்து வைத்துக்கொள்கிறார்கள்!

மர சவஅடக்கம்! (Tree Burials)

மரப்பெட்டியில் அடக்கம் செய்வது தெரியும், அது என்ன மர அடக்கம் என்கிறீர்களா?  உலகின் சில பண்டைய பழங்குடியினர் வழக் கப்படி, பிணங்களை சமபகுதியான பூமியில் புதைப்பதை விட, மிகவும் உயர்ந்த இடங் களில் சவஅடக்கம் செய்வதே பாதுகாப்பான, சிறந்த வழி என நம்புகிறார்கள்! ஆஸ்தி ரேலியா, ப்ரிட்டிஷ் கொலம்பியா, சைபீரியா நாடுகளைச்சேர்ந்த பழங்குடியினர் இவ்வழக் கத்தை கடைபிடிக்கின்றனர். அதா வது, பிணங்களை ஒரு துணியில் சுற்றி அதை ஒரு கொக்கியில் மாட்டி , உயரமான மரத் தில் தொங்கவிட்டுவிடுகிறார்கள்! என்ன கொடுமை சரவணன் இது?!

வைக்கிங் கப்பல் சவ அடக்கங்கள்! (Viking Ship Burials)

எட்டு முதல் பதினொன்றாம் நூற்றாண்டு வரை வாழ்ந்த, ஸ்கேண்டினேவியாவின் கடல் கொள்ளையர்களை “வைக்கிங்” என்று அழைக்கிறார்கள். அவர்க ளில் பெரும்பாலானோர் கடலி லேயே இறந்துவிடுவது வழக்க மாம்.  அப்படி இறப்பவர்களின் (செல்வந்தர்கள்) உடல்களை ஒரு பெரிய கப்பலில் வைத்து, அக்கப்ப லில் உணவு, ஆபரணங்கள், ஆயு தங்கள் ஆகியவற்றையும் நிரப்பி, சமயங்களில் சேவகர்கள், மற்றும் விலங்குகளையும் உடன் சேர்த்து, இறந்தவர்களின் இறப்புக்குப் பின்னான வாழ்வில் உதவும்படி இருக்கட்டும் என்று, இறுதியில் அந்த கப்பலை கடலுக்கு அனுப்பி வைப்பார்களாம்! ஆஹா…..இது நல்லா இருக்கே! குடுத் துவச்சவங்கெ?!

திபெத்தின் வான் சவ அடக்கம்! (Tibetan Sky Burial)

உங்களில் யாருக்காவது பறக்கும் ஆசை இருந்தால் (வாழும்போது அல்ல!?) முதலில் திபெத்து நாட்டுக்கு செல்லுங்கள்! ஆம், திபெத்து நாட்டில் ஒவ்வொருவரும் இறந்தபின், பிணங்களை நிலங்களில் புதைப்பதற்கு பதிலாக, மலை உச்சிக்கு (பறந்து சென்று?!) அனுப்பி வைக்கிறார்கள்! அப்படிச் செய்வதால், கழுகளுக்கு இரையாகிறது மனித உடல். அது மட்டுமல்லாமல், சமயங்களில் பிணங்களினுள்ளே பாலையும், மாவையும் கலந்து வைத்து அனுப்புவார்களாம். ஏனென்றால் அதை உண்ணும் கழுகுகள் , ஒரு துண்டு கூட மீதம் வைக்காமல் முழுமையும் உண்டு அவ்விடத்தை சுத்தமாக விட்டுச் செல்ல வேண்டுமென்பதற்காக! இதுக்கெல்லாம் இவிங்க…..ரூம் போட்டு யோசிப்பாய்ங்களோ??!

சிக்கிய சடலங்கள்! (Bog Bodies)

வட ஐரோப்பாவில், சேறும் சகதி யும் நிறைந்த பகுதிகளை கடக்கும் சுற்றுலாப் பயணிகள், சமயங்களில் அதில் சிக்கி இறந்து விடுவதுண்டு. அப்படி இறப்பவர் களின் உடல்க ளையே (அவ்வப் போது வேண்டு மென்றே, சில வயதானவர்களின் பிணங்களை இது போன்ற சேற்றில் புதைத்தும் விடுவார்களாம்!) சிக் கிய உடல்கள் என்று குறிப்பிடுகிறார்கள். அத்தகைய உடல் களை ஆய்வுக்காகவும் பயன்படுத்தியி ருக்கிறார்கள் ஐரோப்பியர்கள்!

நியான்டர்தால் மனிதர்களின் குகை சவ அடக்கங்கள்! (Neanderthal Cave Burials)

சுமார் 100,000 வருடங்களுக்கு முன்பு, பிணங்களை நிலத்தில் சவ அடக்கம் செய்யும் முறையை அறி யாத நியான்டர்தால் மனிதர்கள்,  பிணங்களை ஐரோப்பா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளின் நீண்ட குகைகளில் போட்டு விடுவார்களாம்! சில அகழ்வாராய்ச்சியாளர்களின் கூற்றுப்படி, நியான்டர்தால் மனிதர்கள், ஒருவரின் ஆத்மாவானது இறந்தபின் வேறு உலகத்திற்கு செல்ல ஏதுவான இடம் குகைகளே என்று நம்பி னார்களாம்!  நல்லாத்தான்யா கெளப்புறாங்க பீதிய?!

சவப்பதப்படுத்தல்! (Plastination)

ஜெர்மன் நாட்டு விஞ்ஞானி கந்தர் வான் ஹே கென் ஸின், பிணங் களின் பதப்ப டுத்தல் முறையில், பிணங் களை துண்டு துண் டாக வெட்டி பின் ஆய்வு களுக்கு ஏற்ற வாறு பல கோண ங்களில் வைத்து, பல  வேதியல் திரவங் களைக் கொ ண்டு அவற்றை பதப்ப டுத்தி விடுவார் களாம்! அப் படிப் பதப்படுத் தப்பட்ட பிணங்களை உல கில் உள்ள பல்வேறு அருங் காட்சியக ங்களுக்கு அனுப் புவார் களாம்! இங்க பாருய்யா!?

உறையவைத்து சவ அடக்கம்! (Cryonics) (18+)

ப்பொழுதும் வழக்கில் இருக்கும் இந்த வகையான சவ அடக்கத்தில், இறந்த வர் களின் உடல்களை உடனே திரவ நைட் ரஜன் என்னும் திரவத்தில் (-198 டிகிரி சென்டிக்ரேடு!) இறந்தவரின் உடல் மீண் டும் உயிர்ப்பெரும் நிலையை முழுமை யாக இழக்கும்வரை விட்டுவிடுவார்கள். இதுவே ஆங்கிலத்தில் க்ரையோனிக்ஸ் எனக் கூறப்படுகிறது!

மம்மி! (Mummification)

உலகத்தின் பிணங்களிலேயே மிகவும் பிரபலமானது எகிப்து நாட்டின் மம்மியாகத் தானிருக்கும்! மேல்தட்டு மக்களுக்கு மட்டுமே மேற்கொள்ளும் சவ அடக்க முறையான இந்த மம்மியை உருவாக்க,  இறந்தவர்களின் உடலில் உள்ள எல்லா பாகங்களையும் எடுத்து, (மூளையை மட்டும் மூக்கு வழியாக ஒரு கொக்கியை விட்டு இழுத்துவிடுவார்களாம்……யப்பா!?) பின்னர், வெற்றுடலை மரத்துகள்களைக் கொண்டு அடைத்து, இறுதியில் ஒரு வகையான நாற்றைக்கொண்டு உடல் முழுவதையும் இறுகச்சுற்றி விடுவார் களாம்! அப்படி  உருவாக்கப்படும் மம்மிக ளுக்குள்ளே அந்த ஆத்மாவானது இறப்பு க்குப் பின்னான வாழ்வுக்குள் பயணப் படுகிறது என்பதே எகிப்தியரின் நம்பிக்கையாம்!
என்னங்க, ஒரு திகில் படம் பார்த்த மாதிரி இருக்குமே? எனக்கும்தாங்க!  நம்மைச் சுத்தி இருக்குற உலகத்துல நமக்குத் தெரியாத எத்தனை மர்மங்கள்/ஆச்சரியங்கள் இருக்குப் பாருங்க.
இனிமே, “எங்கே செல்லும் இந்தப் பாதை…..யாரோ யாரோ அறிவார்” அப்படின்னு பாட வேணாமுன்னு நெனக்கிறேன். ஏன்னா, இப்பதான்  நமக்கு நல்லா தெரிஞ்சிபோச்சே, இந்த பாதை கடைசியில எங்கே போய் முடியுதுன்னு?!
நீங்க என்ன நெனக்கிறீங்க?

No comments:

Post a Comment