Lord Siva

Lord Siva

Sunday 21 August 2011

பிறந்த குழந்தைக்கும் வரும் மாத விலக்கு!

பிறந்த குழந்தைக்கும் வரும் மாத விலக்கு!

டாக்டர். ராஜ்மோகன் அவர்கள் ஓர் இணையத்தில் எழுதி வெளிவந்த கட்டுரை
பிறந்து சில நாட்களே ஆன பெண் குழந்தைகளுக்கு சிறித ளவு ரத்தம் பிறப்பு உறுப்பு வழியாக வரும். இது குறித்து பயம் கொள்ள தேவை இல்லை.
காரணம்:
குழந்தை வயிற்றில் இருக்கும் போது அம்மாவின் அத்தனை ஹர்மோன்களும் குழந்தைக்கு பிளாசெண்டா எனப்படும் நஞ்சு கொடி மூலம் குழந்தை க்கு  போய் க்கொண்டிருக்கும். குழந்தை பிறந்தவுடன் இவை அனைத்தும் நிறுத்தப்படுகிறது .
இந்த ஹார்மோன்களின் அளவு ரத்தத்தில் படிப்படியாக குறையும். எனவே இது ஒரு மினி மேன்ஸ்ட்ரோல் பீரியட் (tiny menstrual period) போன்ற நிலையை ஏற்படுத்தும். குழந் தையின் கர்ப்பப் பையில் இருந்து சிறிதளவு ரத்த போக்கு ஒரு சில நாள் நீடிக்கும்.
இதனால் குழந்தைக்கு வலி இருக்காது.
குழந்தையின் உடல் உறு ப்புகள் மற்றும் ஹார்மோ ன் அமைப்புகள் சரியாக வேலை செய்வதையே இது காட்டுகிறது. எனவே இது கவலைப்படக் கூடிய விஷயம் அல்ல. (சந்தோஷப் படக்கூடிய விஷயம் என்றும் கூறலாம்)
பெண் குழந்தைகளுக்கு மட்டுமே வரும்.
எல்லா பெண் குழந்தைகளுக்கும் வரும் என்று கூற முடியாது. வர வில்லை என்றாலும் கவலை கொள்ள தேவை இல்லை.
வைட்டமின் ‘கே’ அளவு சாதாரண மாக பிறந்த குழந்தைகளுக்கு குறை வாக இருக்கும். இதனாலேயே பிறந்த வுடன் ‘vit k’ ஊசி மூலம் போடப் படுகிறது. உதிரப்போக்கு அதிகமாக வோ அல்லது அதிக நாட்களோ இருந்தால் வைட்டமின் ‘கே’ போட்டுக்கொள்வது நல்லது.

No comments:

Post a Comment