Lord Siva

Lord Siva

Monday 22 August 2011

கர்ப்ப காலத்தில் கர்பிணிகள் ‘காப்பிய குடிக்கலாமா?

கர்ப்ப காலத்தில் கர்பிணிகள் ‘காப்பிய குடிக்கலாமா?

நமது நாட்டு மக்களிடம் நிலவி வரும் பழக்கங்களில் முக்கி யமானது, ‘உபசரிப்பு’! யார் வீட்டுக்கு வந்தாலும் ‘தண்­ணீர் குடிக்கிறீங்களா?’ என்று கேட்டபடி ஒரு செம்பைத் தூக்கி வருவார்கள். அடுத்து ‘காப்பி குடிக்கி றீங்களா?’ என்பார்கள். இது உண்மையி லேயே உபசரிப்பு என்ற நிலையிலி ருந்து இப்போது ‘சம்பிரதாயமாக’ மாறி விட்டது! ஆனாலும், வீட்டில் என்றா லும், வெளியில் என்றாலும், பலரும் சந்திக்கும் போது  ‘காப்பிதான் குடிக்கிறார்கள்’. தமிழ்நாட்டி லிருக்கும் டீ, காபி கடைகளே இதற்குச் சான்று! சாதார ணமாக, ‘காப்பி’ குடித்தால் பெரிதாக உடற்பாதிப்புகள் ஏற்ப டுவதில்லை. ஆனால், அதனை அள வுக்கு மீறி குடித்தால், ஒரு சில பாதி  ப்புகள் ஏற்படும்.
இதே போல, கர்ப்பிணி பெண்கள் அதி க அளவு ‘காப்பி’ குடித்தால் என்ன வாகும்?
கருச்சிதைவு பாதிப்பு ஏற்படும். குறை ப்பிரசவம் தோன்றும்; பல்வேறு உடற் பாதிப்புகளுடன் குழந்தை பிறக்கும் என்று பல கருத்துக்கள் நிலவின. காப்பியிலுள்ள ‘பாராசாந்தீன்’ என்ற பொருளே (PARAXANTHINE) கருவை பாதிப்பதாகக் கருதி னார்கள். காப் பியிலுள்ள ‘காஃப்பின்’ என்ற பொரு ளும் கேடு விளைவிப்பதாகக் கருதி னார்கள்.
‘காஃப்பின்’ என்ற பொருள் காப்பியில் மட்டுமில்லை.
‘டீ’ (தேனீரீலும்) உள்ளது. ‘கோலா’ வகை திரவங்களிலும், ‘சாக்லேட்களி லும்’ கலந்துள்ளது.    
எனவே ஒரு காப்பியை பருகாமல் இருந்தபோதிலும், மேற்கூறிய பான ங்களையும், சாக்லேட்டையும் உட் கொண்டாலும் அவர்களது உடலிலும் ‘காஃப்பின்’ உட்புகும்.
ஆனால் தற்போது நடத்தப்பட்ட ஆராய்ச்சியின் பயனாக, ஒரு நாளைக்கு 150 மில்லி கிராம் அளவிற்கு மிகுதியாகத் தொடர்ந்து காப்பியைப் பருகி வந் தால் தான், ‘கரு’ ஓரளவு பாதிக்கப் படலாம் என்று நிரூபிக்கப்பட்டுள் ளது.
எனவே, கர்ப்பிணிகள் முழுமையாக ‘காப்பியை’ நிறுத்த வேண்டிய அவ சியமில்லை. தேவைப்படும் போது, இடையி டையே ‘காப்பி’ குடிப்பதால் கண்டிப்பாக ‘கரு’ பாதிக்கப் படுவ தில்லை.
மேலும், ‘தலைவலி’ மாத்திரைகள் பலவற்றிலும் ‘காஃப்பின்’ உள்ளது குறிப்பிடத்தக்கது.
ஏனென்றால் மருந்தையும் கர்ப்பத்தையும் பற்றித்தானே பேசுகி றோம், ஏன் காப்பியை குறித்துப் பேச வேண்டு மென் று! இங்கு காப்பியிலுள்ள ‘காஃப்பின்’ என்ற பொருள் குறித்து தான் நாம் பேசியிருக்கிறோம். அது ஒரு மருந்து தான்!

No comments:

Post a Comment