Lord Siva

Lord Siva

Saturday 27 August 2011

11 வகை உணவு பதார்த்தங்களை தயாரிக்கும் சூப்பர்செப்

11 வகை உணவு பதார்த்தங்களை தயாரிக்கும் சூப்பர்செப்

அறிவியல் கண்டுபிடிப்புகளின் பயனாக மாவு அரைப்பதற்கு, துணி துவைப்பதற்கு என பல வேலைகளை பகிர்ந்து கொள்வதற்கு இயந்திர ங்கள் வந்து விட்டன. தற்போது சமையலறைக்கு வந்துள்ள புதிய வரவு சூப்பர்செப். வறுத்தல், கொதிக்க வைத்தல், வேக வைத்தல் என பல வேலைகளை செய்யும் இந்த நவீன கருவி ஏறத்தாழ 11 வகை உணவு பதார்த்தங்களை தயாரிக்கிறது. தேவையான சமைக்கும் பொருள்களை அதற்கென்று உள்ள பாத்திரத்தில் போட்டு விட்டு பட்டனை தட்டி விட் டால் போதும். சுமார் 45 முதல் 50 நிமிடங்களில் சுவையான உணவு தயா ராகி விடும்.
இதில் குறிப்பிடத்தக்க அம்சமாக 24 மணி நேரங்களுக்கு பின் சமையல் செய்ய வேண்டியதை முன்கூட்டியே புரோகிராம் செய்யும் வசதி உள்ள து. மேலும் உணவு தயாரானவுடன் அதனை வெளியே எடுக்காமல் விட்டு விட்டாலும் பொறுப்பாக நீண்ட நேரம் உணவை சூடாக வைத்து கொள் ளும் பணியை மேற்கொள்கிறது. சிறிய கிண்ணம், நீரை சூடாக்க பாத்தி ரம் மற்றும் சமையல் புத்தகம் ஆகியவற்றுடன் விற் பனைக்கு வரும் இதன் சிறப்பம்சங்களை பட்டியலிட்டால், தேவையல்லாத இடத்தை அடைக்கும் அதிகப்படியான பாத்திரங்களை சமைய லறையில் அடுக்க வேண்டாம். சமைத்து முடிக்கும் வரை அங்கேயே இரு க்க வேண்டாம். மேலும் இதன் வடிவமைப்பு எங்கும் கொண்டு செல்லும் வகையில் அமை ந்துள்ளது ஆகியவை குறிப்பிடத்தக்கவை ஆகும்.

No comments:

Post a Comment