Lord Siva

Lord Siva

Tuesday, 29 September 2015

அழகான தொப்புள்!



காலையில் எழுந்ததும் நமது உடலை தூய்மைப்படுதிக்கொள்ள‍ குளிக்கி றோம். அதேபோல் இரவிலும் நாம் குளிக்கிறோம். ஆனால் நாம் குளிக்கு ம்போது நமது தொப்புள்-ஐ
சுத்தம் செய்கிறோமா என்றால் அதுமிகப் பெரிய கேள்விக்குறிதான். ஏனென்றால், இன்றைய அவசரயுகத்தில்  ஏதோஉடலுக் கு சோப்புபோட்டோமா, தண்ணீர் ஊற்றிக் கொண்டு உடலை நனைத்தோமா இல்லா ம தொப்புளை சுத்த‍ம்செய்ய யாருக்கு நேரமிருக்கு என்று நினைக்காமல் நமது தொப்புளை அதிலும் பெண்கள், தங்களது தொப்புளை சுத்த‍மாக வைத்தி ருக்க‍ வேண்டியது அவசியத்தின் அவசியமாகவே கருதப்படுகிறது.
குளிக்கும்போது உடலை நன்றாக தேய்த்து சுத்தப்படு த்துவதுபோல் தொப்புள் பகுதியையும் சுத்த‍ம் செய்தா ல் அது  சுத்தமாவதில்லை. ஏனென்றால், அது வயிற் றுப்பகுதியில் ஒரு குழியாக இருப்பதால், அங்கு எளி தாக அழு க்கு தஞ்சம் அடைந்து விடுகிறது. இதனை நீங்கள் கவனிக்காமல் விட்டு விட்டால் உங்க தொப்பு ளுக்குள் கட்டிகள் ஏற்பட்டு அது புண்கள் ஏற்பட்டு அதன் மூலம் பல வியாதிகள் பரவ‌வும் வாய்ப்புள்ளது.
சிலர்தொப்புளுக்குள் கிடக்கும் அழுக்கை சுத்த ம் செய்வதாக நினைத்து நகத்தால் சுரண்டி எடுப்பார்கள். இவ்வாறு சுரண்டி எடுக்கும்போ து சின்ன நகக்கீறல்கள் ஏற்பட்டு, அதன்மூலம் மிகவும் மெல்லிய ரத்த‍க் கசிவு ஏற்பட்டால், அங்கே பாக்டீரியா எளிதாக‌ தொற்றிக்கொண்டு புண் மற்றும் சீழ் கட்டி ஏற் பட்டுவிட  வாய்ப்புகள் அதிகம். தொப்புள் பகுதியில் புண் ஏற்பட்டால் அது ஆறுவதற்கு வெகுநாட்கள் ஆகும். காரணம், புண் ஏற்பட்ட பிறகு தொப்புளை சுத்தம் செய்வதும் அந்த இடத்தில் வியர்வை படாமல் பாதுகாப்பதும்மிக மிக க் கடினம்.
பின்பு எப்ப‍டி தொப்புளை சுத்த‍ம் செய்வது எப்ப‍டி?
நாம் தினமும் குளிக்கும்போது, கடைசியாக நமது தொப்புளுக்குள் சோப்பு போட்டு நகம் இல்லாத உங்க ளது விரலால் கொஞ்சம் மெதுவாகவும் கவனமாகவு ம் அதேநேரத்தில் மிகவும் மென்மையாகவும் சுத்தம் செய்யுங்கள்.  மேலும் தலைமுடிக்குப் போடுகிற தர மான ஷாம்புவை சிறிது எடுத்து க்கொண்டு, அதை சிறிது  தண்ணீரில் கரைத்து தொப்புளுக்குள் ஊற்றி சில விநாடிகள் ஊற வைக்க வேண்டும். அதன்பிறகு காய்ந்த‌ பஞ்சு எடுத்து தொப் புளுக்குள் விட்டு நன்றாக ஈரம்போக‌ துடைத்து விடு ங்கள் இப்பொழுது பாருங்கள் உங்க தொப்புளுக்கு ள் அழுக்குகள் இருந்த இடம் தெரியாமல் போய்விடும். உங்க தொப்புளும் அழகாக காட்சி அளிக்கும்.

Vasiyam,Lovers problem,Class,Black Magic

ஆண் பெண் வசியம்,காதலர் வசியம்,குடும்ப தொல்லை நீக்க  ,தெய்வ சக்திகள் பெற,வசிய மை செய்முறை,யந்திரம் எழுதும் முறை,மாந்திரீகம்,தாந்த்ரீகம்,பரிகாரங்கள் , தன வசிய முறை,சொத்து பிரச்சனை,எதிரி தொல்லை நீங்க,பில்லி சூனியம் விலகவும் பயிற்சி அளிக்கப்படும்.
இடம் :சென்னை பல்லாவரம் .நாள் :11.10.2015.காலை  9 முதல்  மாலை 5 வரை.கட்டணம் Rs 4000 மட்டும்.மதிய உணவு,தேநீர் ,கையேடு,பேனா வழங்கப்படும். முன்பதிவுக்கு :8015262015.

     ஸ்ரீகாலபைரவர்பீடம்,,சேலம்.

Monday, 31 August 2015

ஸ்ட்ரெச் மார்க்


பிரசவம் வரை வயிற்றில் உள்ள சிசுவின் ஆரோக்கியம் பற்றி கவலைப்பட்டு கவனத்துடன் இருக்கும் தாய்மார்கள், குழந்தை பிறந்த பிறகு, அதிகரித்த எடையைக் குறைப்பதிலும், வயிறு பெரிதானதால் ஏற்பட்ட தழும்புகளைப் போக்கவும் படாதபாடு படுகின்றனர்.
வலி மிகுந்த பிரசவத்துக்குப் பின், பெரிதான வயிறு மீண்டும் பழைய நிலைக்குச் சுருங்கும்போது, விரிவடைந்த சருமத்தில் வரி வரியாகக் காணப்படும் தழும்புகளே ஸ்ட்ரெச் மார்க். கர்ப்பிணிகள், உடல் எடையைத் திடீரென்று குறைத்தவர்கள், இளம் வயதில் கருவுற்றவர்கள், பாடி பில்டிங்கில் ஈடுபட்டு உடல் எடையைக் குறைத்தவர்கள், சீரற்ற ஹார்மோன் இயக்கங்களைக் கொண்டவர்களுக்கும் மரபியல் காரணங்களாலும் ஸ்ட்ரெச் மார்க் வரலாம். சருமத்தில் கொலஜன், எலாஸ்டின் என்ற புரதங்கள் உள்ளன. இவைதான் சருமத்தைப் பாதுகாக்கின்றன. வயிறு விரிவடைந்து மீண்டும் சுருங்கும்போது, டெர்மிஸ் (Dermis) படிமம் உடைக்கப்படுவதால், ஸ்ட்ரெச் மார்க் விழுகிறது. அதேபோல், நீண்ட காலமாக உடல் எடை அதிகம் இருந்து, திடீரென எடை குறையும்போது சருமத்தில் உள்ள டெர்மிஸ் படிமம், எலாஸ்டின், கொலஜன் போன்றவை உடைக்கப்படுவதால் தழும்பாக மாறுகின்றன.
ஸ்ட்ரெச் மார்க் மறைய…
கர்ப்பகாலத்தின் எட்டு ஒன்பது மாதங்களில் அதிகமாக ஸ்ட்ரெச் மார்க்ஸ் விழலாம். கருவுற்ற சமயத்தில் நான்கு மாதங்களுக்குப் பிறகு மருத்துவரால் பரிந்துரைக்கப்பட்ட கோகோ பட்டர் கலந்த மாய்ஸ்சரைசர் கிரீம்களை, ஒருநாளுக்கு நான்கு முறை பூசி வரலாம். இதனால், சருமத்தை ஈரப்படுத்திக்கொண்டே இருப்பதால் தழும்பாக மாறும் வாய்ப்புகள் 50 சதவிகிதம் குறைக்கப்படும். மேலும், சிலருக்கு ஸ்ட்ரெச் மார்க் விழாமல் இருக்கவும் வாய்ப்புகள் அதிகம். தொடர்ந்து கிரீம் பயன்படுத்துபவர்கள், குழந்தை பெற்ற பிறகு தழும்பு விழுந்தாலும், அது வெறும் பத்து சதவிகிதத் தழும்பாக மட்டுமே இருக்கும். அது காலப்போக்கில் கிரீம்களாலும், பயிற்சி செய்வதாலும் மறைந்துவிடும்.
சுயமாக எந்த கிரீம்களையும் வாங்கிப் பூசக் கூடாது. ஏனெனில், சில கிரீம்களில் ஸ்டீராய்டு கலந்திருப்பதால், அது கருவுற்ற சமயத்தில் சில பக்கவிளைவுகளை ஏற்படுத்தலாம். அதுபோல, ரெட்டினோயிக் ஆசிட் கிரீம் (Retinoic acid cream) என்ற சருமப் பூச்சை, கருவுற்ற சமயத்தில் பயன்படுத்தவே கூடாது. குழந்தை பெற்று பால் கொடுக்கும் சமயத்திலும், இந்த கிரீம்களைப் பூசக் கூடாது. திடீரென்று, உடல் எடை குறைத்து, ஸ்ட்ரெச் மார்க் தழும்புகள் வந்தால், அதற்கென சிகிச்சைகளை எடுத்துக்கொள்ளலாம். பிரசவமான இரண்டு மாதங்களுக்குப் பிறகு, சின்னச்சின்னப் பயிற்சிகளில் ஈடுபட வேண்டும். சிசேரியன் செய்த பெண்களும், நடைப்பயிற்சி, ட்ரெட் மில் போன்ற எளிய பயிற்சிகளில் ஈடுபடலாம். சரும மருத்துவரிடம் சென்று தரமான கிரீம்களை பூசிக்கொண்டு பயிற்சியும் செய்துவந்தால் ஸ்ட்ரெச் மார்க் மறையும்.
ஸ்ட்ரெச் மார்க் தடுப்பது எளிது!
கருவுற்றிருக்கும்போது நீர்ச்சத்து, நார்சத்துள்ள காய்கறிகளைச் சாப்பிடலாம்.
பாட்டி, அம்மாவுக்கு ஸ்ட்ரெச் மார்க் விழுந்திருந்தால், அதிகக் கவனம் எடுத்துக்கொள்வது அவசியம்.
நான்காவது மாதத்தில் தொடங்கி, குழந்தை பிறக்கும் வரை டாக்டர் பரிந்துரைக்கும் மாய்ஸ்சரைசர் கிரீம் பூசலாம்.
ஆக்வா, ஆலுவேரா, கிளசரின், ஓட் மீல் போன்ற பொருட்கள் கலந்த கிரீம்களைத் தேர்ந்தெடுத்துப் பூசலாம்.
பிரசவத்துக்குப் பிறகு, ஃபிட்னெஸ் பயிற்சி செய்தாலே, 50 சதவிகிதத் தழும்புகள் மறையும்.