Lord Siva

Lord Siva

Tuesday, 10 July 2012

ந‌மது உடலில் உள்ள‍ பெருங்குடலில் இருந்து மலம் வெளியேறாவிட்டால் ஏற்படும் பாதிப்புகள்

சுத்தம் சுகம் தரும். இது சுற்றுப்புறத்திற்கு மட்டும் அல்ல, எமது உட லுக்கும் உள்ளும் புறமும் மிக மிக அவசியம். உடலை வெளிப்புறம் எவ் வாறு சுத்தமாக வைத்திருக்கிறோ மோ, அவ்வாறே உட்புறத்தி லும் கழிவு கள் சிரமமாக அகற்றப்படுமாயின் 95% நாம் நோய்த்தொற்று என்ற அபாயத்தி லிருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ள முடி யும்.
நாம் உண்ணும் உணவுகள் சத்துக் களாக கிரகிக்கப்பட்ட பின்னர் தேவை யில்லாத கழிவுகள் தினசரி வெளியேற் றப்படுகின்றன. இந்த கழிவுகளை நித் தம் அகற்றப் படவேண்டும் இல்லை யெனில் அவை விஷமாகி நம் உடம்பையே பதம் பார்த்து விடும் என் கின்றனர் மருத்துவர்கள். அதனால்தான் நித்தம் கழித்தல் அவசியம் என்கின்றனர் அவர்கள்.
21ம் நூற்றாண்டில் வாழும் நாம் எவ்வளவுக்கு எவ்வளவு விஞ்ஞான த்திலும் மருத்துவத்திலேயும் முன்னேற்றம் கண்டிருக்கின்றோமோ அதைவிட அதிவேகமாய் நோய்க ளும் முன்னேற்றம் அடைந்துள்ள ன என்பது கசப்பான உண்மையாகும். நமது உடலிலுள்ள கழிவுகள் வியர் வை, சிறுநீர், மலம் என்பனவற்றின் மூலம் அகற்றப்படுகின்றது. ஆயினும் முக்கியமான பெரும் நோய்களுக்கு காரணியாயிரு ப்பது பெருங்குடலில் அகற்றப்படாதிருக்கும் மலமும், அதனால் உருவாகும் டாக்ஸின் எனப் படும் நச்சுப் பொருளுமே ஆகும். டாக்ஸினால் நம் உடம்பில் உள்ள பல்வேறு பொருட்களும் படிப்படியாக பாதி ப்பிற்குள்ளாகின்றன.
உடம்பின் ஒவ்வொரு பகுதியையும் டாக்ஸின் பாதிக்கும் போது ஏற்படும் நச்சுத்தன்மையால் நமது ஆயுட்காலம் குறையும் வாய்ப்பு ஏற்படுகின்றது. இளமையிலேயே முதுமைத் தன்மை, மூட்டுப் பிடிப் புகளும் நோவும், வெளிறிய கண் கள், வெளிறிய தோல், மந்தமான செயற்பாடுகள் என நமது அன்றாட வாழ்க்கையிலிருந்து நாம் விடுப டுகின்றோம்.
உடம்பில் உள்ள கழிவுகள் வெளி யேற்றப்படுவது இயற்கையாகவே நடைபெற வேண்டும். நம்மை பாதுகாக்க ஓய்வின்றி உழைக்கும் நம் பெருங்குடலை நாம் பத்திரமாக வைத்திருக்க வேண்டுமெனில் அதற்கு சில பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்கின்றனர் நிபுணர்கள்.
உண்ணும் உணவை சரி யான நேரத்தில் சரியான அளவில் உண்ண வேண் டும். நன்றாக மென்று அரைத்து சாப்பிட வேண் டும். நாம் உண்ணும் உணவு தேவையான சத்து கள் அடங்கியதும், நார்ப் பொருட்கள் அடங்கியது மான உணவாக இருக்க வேண்டும்.
கண்ட எண்ணெயில் செய்த உணவுகளை உட்கொள்ளக்கூடாது. தர மான பொருட்களை மட்டுமே உண்ண வேண்டும். மேலும் நன் மை தரும் பாக்டீரியாக்களை அழிக்கக் கூடிய ரசாயனங்கள், நிற மூட்டி கள், சுவையூட்டிகள் போன்ற பொருட்களை தவிர்க்க வேண்டும். எனவே கழிவுதானே என்ற அலட்சியமாக இருக்காமல் தினசரி கழி வகற்றல் மூலம் உடலை இளமையாகவும் நோயற்றும் பாது காத் துக் கொள்ளவேண்டும் என்கின்றனர் நிபுணர்கள்.

Sunday, 1 July 2012

கண்கள் கவனம்

Posted On July 01,2012,By Muthukumar
நம்மில் பெரும்பாலானோர், சில மணி நேரமாவது, கம்ப்யூட்டர் முன் அமர்ந்து வேலை பார்ப்பதை வழக்கமாகவும், நம் வாழ்க்கைத் தேவையாகவும் கொண்டுள்ளோம். இது ஒரு உலகளாவிய நடைமுறையாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதனலேயே, நம் கண்கள், கம்ப்யூட்டர் சார்ந்து எப்படி இயங்குகின்றன, எந்த வகை இடையூறுகள் ஏற்படுகின்றன, அவற்றை எப்படி தடுக்கலாம் என்பது குறித்த ஆய்வுகள் அதிகம் மேற்கொள்ளப்படுகின்றன. இந்த ஆய்வுகள் கூறும் சில பயனுள்ள தகவல்களை இங்கு பார்ப்போம்.
1. கம்ப்யூட்டர் இடம்: முதலில் உங்கள் கம்ப்யூட்டர், கீ போர்டு மற்றும் டைப் செய்திட வைத்துள்ள அச்சடித்த தாள்களைச் சரியான இடங்களில் வைத்திட வேண்டும். உங்கள் கண்களிலிருந்து, கம்ப்யூட்டர் மானிட்டர், ஒரு கை அளவு தூரத்தில் இருக்க வேண்டும். உங்கள் கண்கள் பார்வைக் கோட்டிற்கு 20டிகிரி கீழாக இருக்க வேண் டும். இதே போல கை மணிக்கட்டு மற்றும் கால்கள் இருக்கும் இடங்கள், வசதியாக, வலி எதுவும் ஏற்படுத்தா வண்ணம் அமைத்துக் கொள்ள வேண்டும்.
2. ஒளி அமைப்பு: அறையில் ஒளி அமைப்பு பல நம் கண்களுக்கு பலவகையில் சோதனை களைத் தரும். அறை வெளிச்சமானது பரவலாக இருக்க வேண்டும். நேரடியாக உங்கள் மீதோ, கம்ப்யூட்டர் மீதோ பாயக் கூடாது. இதனால் ஒளி பிரதிபலிப்பு தடுக்கப் படும். அதற்கேற்ற வகையில் மானிட்டரின் வண்ணம் மற்றும் ஒளி தன்மை அமைக்கப்பட வேண்டும். நீங்கள் கண்ணாடி அணிபவராக இருந்தால், பிரதிபலிப்புகளைத் தடுக்கும் பூச்சுகளை உங்கள் கண்ணாடியில், கண் மருத்துவரின் பரிந்துரையின் பேரில் அமைத்துக் கொள்ளலாம். எனவே கண் மருத்துவரிடம் செல்கையில், நாளொன்றுக்கு சராசரியாக எத்தனை மணி நேரம் கம்ப்யூட்டரில் பணி புரிவீர்கள் என்று கூறவும். இப்போது இந்த மருத்துவர்கள், அதற்கேற்ற வகையில் உங்கள் கண்ணாடியினை வடி வமைப்பார்கள்.
3. 20:20:20 விதி: மானிட்டர் திரையைத் தொடர்ந்து பார்த்தவாறே பணி புரிந்து கொண்டிருந்தால், அதிக பட்சம் ஒவ்வொரு 20 நிமிட இடைவெளியில், தலையைத் திருப்பி, வேறு வகை ஒளியில் பொருட் களைப் பார்க்க வேண்டும். நீங்கள் பார்க்கும் பொருளும் 20 அடி தூரத்தில் இருப்பது நல்லது. இதனால் உங்கள் கண்களின் பார்வை குவியும் தூரத்தில் மாறுதல் ஏற்படும். இது கண்களுக்கு புத்துணர்வைத் தரும்.
பொதுவாக நிமிடத்திற்கு ஒருமுறை நாம் 12 முறை சிமிட்டுகிறோம். ஆனால் கம்ப்யூட்டரில் பணியாற்றுகையில், 5 முறை தான் சிமிட்டுகிறோம். இதனால் கண்களில் உலர் தன்மை ஏற்படுகிறது. எனவே கண்களை ஈரமாக்க தொடர்ந்து 20 முறை சிமிட்டவும்.
ஒரே இடத்தில், நாற்காலியில் அமர்ந்து வேலை செய்வதால், உடல் இயற்கைக்கு மாறான நிலையில் வலுக்கட்டாயாமாக அமைக்கப்படுகிறது. இதனால், ஒவ்வொரு 20 நிமிட இடைவெளியில், எழுந்து 20 அடிகள் எடுத்து வைத்துப் பின் திரும்ப பணியாற்ற வரவும்.
4.இதமான சூடு தேவை: கம்ப்யூட்டரில் பணியாற்றுகையில், கண்களில் சோர்வு ஏற்பட்டால், அமர்ந்து பணியைத் தொடங்கும் முன்னரும், பின்னர் அவ்வப்போதும், கரங்கள் இரண்டையும் இணைத்துத் தேய்த்துக் கொள்ளுங்கள். இளஞ்சூடு பரவிய பின்னர், அதனை கண்களில் ஒத்தி வைத்து எடுங்கள். இது ஒரு இதமான சூட்டைக் கண்களுக்குத் தரும். வெந்நீரில் நனைத்த துணியைக் கண் களில் ஒற்றி எடுப்பது போன்ற நிலையைக் கண்களுக்கு வழங்கவே இந்த ஆலோசனை. அப்படியே கரங்களைக் கொண்டு கண்களை 60 விநாடிகள் பொத்தி வையுங்கள். விநாடிகளை உங்கள் மனதிற்குள்ளாக எண்ணுங்கள். இதனால் புது உற்சாகம் கிடைக்கும்.
5. தண்ணீர் கொண்டு அடித்தல்: இடை இடையே எழுந்து சென்று, கண்களை மூடிய நிலையில், தண்ணீரை எடுத்து முகம் மீது அடிக்கவும். இதனால் கண்களுக்கும், உங்களுக்கும், முழுமையான புத்துணர்ச்சி கிடைக்கும்.
6. தேயிலை பைகள்: பயன்படுத்திய இரண்டு தேயிலை பைகள், அல்லது அந்த அளவில் மென்மையான மடிக்கப்பட்ட நனைக்கப் பட்ட துணியை, அலுவலகத் திற்குச் செல்கை யில் பிரிஜ்ஜில் வைத்து செல்லவும். பின்னர், அங்கிருந்து வந்த வுடன், அதனை எடுத்து, கண்களின் மீது சில நிமிடங்கள் வைத்திருக்க வும். இது வேலை மிகுதியால், கண்களில் ஏற்படும் சிறிய வீக்கத்தினைக் கட்டுப்படுத்தும்.
7. வைட்டமின்கள்: ஊட்டச்சத்து மிகவும் அவசியம். வைட்டமின் ஏ, சி மற்றும் இ ஆகியன உள்ள உணவுப் பொருட்களை அதிகம் எடுத்துக் கொள்ளவும். கேரட், தக்காளி, பழங்கள், வெள்ளரிக்காய் ஆகியவற்றை நறுக்கி அலுவலகத்திற்கு எடுத்துச் சென்று அவ்வப்போது சாப்பிடவும்.

காய்கறிகள் வாங்கும்போது கவனிக்க‍ வேண்டியவைகள்

கடையில் காய்கறிகள் வாங்கும் போது கடைக்காரன் கொடுப்பதை கண்மூடித்தனமாக வாங்கி விட் டு வீண் அவஸ்தைப்படுவதை தவிர்த்து சில நிமிடங்கள் செல வழித்து நல்ல காய்களை தேர்ந் தெடுங் கள்.
* முருங்கைக்காய் மேலிருந்து கீழ்வரை ஒரே சீராக இருக்க வேண்டும்.
* அவரையில் விதைகள் புடைத் து வெளியே தெரிந்தால், அது முற்றல்.
* வெண்டைக்காய் நுனிப்பகுதி ஒடித்தால் பட்டென்று ஒடிய வேண் டும்.
* கீரை மஞ்சள் பூத்திருந்தால் அருகில்கூட செல்லாதீர்கள். அரைக் கீரை, முளைக்கீரை போன்றவற்றில் தண்டுகள் பெருத்திருந்தால் சுவையாக இருக்காது.
* வெண்மையாகவும், அழுத்தமாக வும் இருந்தால் மட்டுமே காலி ஃப்ளவரை வாங்குங்கள். பூத்து விரிந்திருந்தால் சுவை இருக்கா து .
* வெங்காயம், வாழைக்காய், மாங்காய் போன்றவற்றை வாங்கு ம்போது விரல்களால் அழுத்திப் பார்க்கவும். அழுந்தினால் வாங்க க் கூடாது. நூல்கோல், முள்ளங்கி, சுரைக்காய், சௌசௌ, பீர்க்கங் காய் போன்றவை அழுந்தினால் நல்லது என்று பொருள்.
* சிவப்பு நிறத்தில் இருந்தால் மட்டும் அது நல்ல கருணைக்கிழங்கு என்று அர்த்தம். சீக்கிரமாக வெந்து சூப்பர் சுவையாகவும் இருக்கும்.
* நன்றாகப் பழுத்த தக்காளிகளை விட, பாதி பழுத்த கெட்டியான தக்காளிகளே சுவையானவை.
* வாழைத்தண்டை கிள்ளிப் பாரு ங்கள். நார் தெரிந்தால் அது முற்ற ல், நூல் தெரிந்தால் ஓ.கே!
*சாதம் அல்லது டிபனுக்கு தொட் டுக் கொள்ளத்தான் காய்கறி என் று நினைக்காதீர்கள். அதுவும் சா ப்பாட்டில் மூன்றில் ஒரு பகுதியா க இருக்க வேண்டும். இன்னொரு பகுதி தண்­ணீர். மூன்றில் ஒன்று தான் சாதம் / டிபன்.